சிறு வயது முதல் என் மாமா ( இப்போது மனைவியின் அப்பா ) என்னை அழைத்தது ரவுஸ்பாண்டி. திண்டுகல்லில் இது பிரபலம் ஆன இழிகுரிசொல்.
அந்த மாமா என் கல்யாணத்திற்கு பிறகும் என்னை சிலசமயம் ரவுஸ்பாண்டி என்றே கூப்பிடுகிறார். என்ன செய்வது?
சென்ற வாரம் சென்னையில் மாமாவும் அத்தையும் விசா வாங்கிக்கொண்டு அமெரிக்கா ( நியூ ஜெர்சி - நெவார்க் ) வந்து ... சேர்ந்தார்கள். சென்னையிலிருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ். மூன்று மாதங்கள் இருக்க ப்ளேன்.
அவர் அங்கலாயித்துக்கொண்டது "ஒரு தமிழ் நாயும் என்னோடு தமிழில் பேச மாட்டேன்கிறார்களே!". நான் சொன்னேன் "எல்லாம் பாசக்கார நாய்கள். பக்கத்தில் கூட வரமாட்டார்கள். ஆம்வே, எவான் தவிர எந்த ஒரு விசயதிர்க்குமுதவ மாட்டார்கள்.. ". மேலுமவரிடம் சொன்னேன், சில பணக்கார தமிழ் ப்லாகர்களிருக்கிறார்கள். ஆன்லயினில் பேசினால் போச்சு! ( நாய் என்று அவர் விளித்தது ஒரு அன்பு தான் தமிழ் தோழர்களே ).
மிஸ் செய்வது - தினத்தந்தி. அதுவும் இன்டர்நெட்டில் பார்க்கிறார்!
***
ஞாயிறு மதியம் வந்தவர்கள், இரண்டு நாட்களாக தூங்கு தூங்கி எழுந்தார்கள்.
நானும் சுமனாவும் வேலைக்கு சென்று வீடு திரும்பும் வரை எங்கேயும் நகரவில்லை. :-) குளிர் வேறு. சென்னையிலேயே திக்க்லேதர் ஜெகட்ஸ் வாங்கி வந்தார்கள்.
புதன் கிழமை, இரவு மடாவன் மாலுக்கு ( ஷாபிங் சென்டர்) அழைத்து சென்று அங்கு உணவு சாப்பிட்டோம். கமண்ட்ஸ் ஒன்றும் அவர் சொல்லவில்லை. ரொம்ப நிறைய தராங்க என்றார். அதுதான் எல்லாம் வெயிட் அதிகம் போல என்றார். மே மாதம் கடைசி வரை இருப்பார்கள்.
தம்பிக்கும் மே மாதம் 15/16 கல்யாணம். கே விசாவில் வருகிறான். இன்னும் ஒரு மாதம் ஆகுமாம். அவன் டிகிரி வேறு கொஞ்சம் சிக்கலில் இருக்கு.அசைஞ்மன்ட் மார்க்ஸ் என்டராகவில்லை. அலைகிறான். அம்மாவிற்கு விசா எடுத்தாகிவிட்டது. அப்பாடா பெரிய விஷயம். தமிழில் பேசி சாதித்து உள்ளார்கள். மூவருக்கும் பத்து வருடம் மல்டிபிள் என்ட்ரி.
இப்போதெல்லாம் ஈசி போல இருக்கே? இங்கே ரிசெசன், அவிங்க வந்தால் காசு கிடைக்கும்... :-)
***
நானும் சுமனவும் கார் லைசன்ஸ் எடுத்து விட்டோம். பத்து வருடம் பழைய சிறிய கொரொல்லா டொயோட்டா ஒன்று வாங்கியுள்ளேன்.
எப்படியோ மே மாதம் லாங் டிரைவ் போகணும். தம்பியும் டல்லாசில் இருக்க போகிறான். அம்மாவும் ஆறு மாதம் இங்கே இருக்க ப்ளேன். பார்ப்போம் எப்படி போகிறது என்று.
மனைவிக்கு காய்ச்சல். ஒரு நாள் சம்பளம் இருக்காது சொன்னார்களாம். சரி சரி வருடம் சிக் லீவு நாலு நாள் இருக்கே. பெர்சனல் லீவு பத்து நாள். பேசுவோம்.
இன்று நானும் வீட்டிலிருந்தே வேலை செய்கிறேன். அதனால் தான் இன்டர்நெட்டு. ப்ளாக் கலக்கல். டிவிட்டரில் வேறு சில மெச்செஜஸ் போட்டேன்.
கிட்ஸ் தோசை மிக்ஸில் ப்ரேக்பாஸ்ட் தோசை தேங்காய் சட்னி என்று போகிறது...
***
இந்த நியூ யார்க் ப்ராஜக்ட் முடிந்தவுடன் சூபர்வேல்யு கம்பெனி ப்ராஜக்ட் ஜூனில் டெலிவரி ஆரம்பிக்கும். மூன்று மாதம் சென் ஹோசெவில் இருக்கணும். இப்போதே என் பாஸிடம் பேசி வைத்தேன் ... வாரா வாரா நேவார்கிற்கு ஒரு ரிடர்ன் டிக்கட் வேண்டும். ஐந்து மணி நேர டைரக்ட் ப்ளைட். உங்களுக்கும் மூன்று நாள் ஹோட்டல் பில் கம்மி என்று. ( வீடு எடுக்க சொல்வார், தெரியும் ... ஈசி ) அம்மா சுமனாவோடு இருப்பார்கள். ஜூலை லாங் வீகேன்டிற்கு அவர்கள் இருவரும் அங்கு வர இப்போதே டிக்கட் பார்க்கணும்.
மனைவுக்கு இங்கு இரண்டு வருடம் ப்ராஜக்ட். எனக்கும் அதுவரை டைம். பார்ப்போம், ஏப்ரிலில் எச் ஒன்று பி விசா அப்பளை செய்து, அக்டோபர் ஒன்று ஸ்டார்ட் டேட்டில். எகனாமி பிக்கப் ஆகிவிட்டது என்கிறார்கள். நன்றாக இருந்தால் சரி.
சென்ற வருடம் ஐ.டி. கணக்கு இங்கு சுமணா பையில் செய்ய வேண்டும். மூன்று மாதம் ( சுமார் ) 7 ஆயிரத்து இருநூறு டாலர் டேக்ஸ் கட் பண்ணி, டேக்ஸ் மூன்றாயிரம் என டபிள்யு 2 சொல்லுது ... என நிறைய டேக்ஸ் கட்டாகியுள்ளது. எல்லாம் திரும்பி வருமாம். இருவர் டேக்ஸ் ஐ.டி. போட்டு அனுப்பனும். :-) எல்லாம் புதுசா இருக்குங்க. (
மட்டமான சம்பளங்க டாடா கம்பெனி கொடுப்பது ... பாரீன் என்று வாயை தொறந்தது போட்டு மக்கள் இங்கே கம்மி சம்பளத்திற்கு வருவதால் அவர்கள் இப்படி லாபம் செய்கிறார்கள்... அப்புறம் சம்பளம்
இந்தியாவில் தனி ஆயிரம் டாலருன்னு வையுங்க...
ஆக மொத்தம் வருடம்
அறுபதாயிரம் என்று கணக்கு வேறு!)-
அவ்வளவு தான் வாங்கிக்கொண்டு எப்படிங்க இங்கே குடும்பத்தோட இருக்கிறது -
ஆண்கள் ஹவுஸ் ஒய்ப்போடு, குழந்தைகளோடு?
வாடகையோடு மாசம் ரெண்டு பேருக்கு இரண்டாயிரம் வேண்டும். அதனால் தான் இரண்டு வருடம் மேல் ஒரு ட்ரிப் வராங்க... )
மாதம் டேக்ஸ் போக ( பிக்கா, மெடிகேர், பெடரல், ஸ்டேட் டேக்ஸ் ) எனக்கு ஐந்தாயிரம் டாலர்கள் சம்பள செக் வருது. ஆயிரம் தான் கட். மொத்தம் கட் பண்ண வேண்டிய டேக்ஸ் கட்டே பண்ணலே... எங்கேயோ மிஸ்டேக் இருக்கு. இந்தியாவில் வேறு சம்பளம் உண்டு. கரக்டா இங்கே கட்டனும். இந்தியாவில் யோசிப்போமா?
சம்பளம் பற்றி சொன்னோம். கேட்டுக்கொண்டார். (அவர் வந்தவுடன் என்னிடம் நான்காயிரம் டாலர் கொடுத்து பேங்கில் போட்டு வைக்க சொன்னார் - செலவுக்குஆகும்! நல்ல மாமா ... )
இப்படி எல்லாம் டாலரில் பணம் பார்த்தால் இந்திய வருவது கஷ்டம் என்கிறார் மாமா. அவுரு தான் ரவுஸ்பாண்டி!
( சாரி ரொம்ப நாள் தமிழ் டைப் பண்ணலே ...அது தான்... வெட்டி டைம் )