Friday, September 4, 2009

தமிழன் ஒரு விளக்கம்

என் ப்ளாகை படித்த ஒரு கேனையன் - தெலுங்கு மொழி பேசும் ஆள் என்றால் கேவலம் என்று நினைக்கிறார் போல. ( போலி டோண்டு கோஷ்டியாக இருக்கும்னோ? ) தமிழ்நாட்டில் பிறந்தவன் தமிழன் இல்லையா? இந்தியாவில் பிறந்தவன் இந்தியன் என்கிற மாதிரி. அப்புறம் புதுச்சேரியில் பிறந்தவனை என்னவென்று சொல்லுவது?

இதற்கு தான் என் ப்ளாகின் தலைப்பில் "தமிழனாய் ஒரு பங்களிப்பு!"

அப்போ விஜயகாந்த், நெப்போலியன் , புதுச்சேரி வைத்தியலிங்கம் ( நாயக்கர் இன மக்கள் ) எல்லாம் என்ன தமிழர் கிடையாதா! அவர்களிடம் நேரில் சென்று சொல்லிப்பாருங்கள்... என்ன நடக்கும் தெரியும்!

இசை வேளாளர் கூட தெலுகு தாய்மொழி கொண்டவர்கள் என்று என் அம்மா சொல்லுறாங்க! யாரை குறிப்பிட்டு சொல்கிறேன் என்று தெரிந்திருக்கும்.

ரொம்ப பிரிவினைவாதம் ஜாஸ்தி பார்க்கிற ஊரு, இடம் தமிழ்நாடு தான்.

ஜாதி மதம் இனம் கூட்டம் நண்பர்கள் மொழி என்று பாகுபாடுஎவ்வளவு காலம் ஆனாலும் இந்திய முன்னேற வழி வகுக்காது! மைன்ட் இட்.

இலங்கை இனப்பிரச்னை ஒன்று தான் இப்போ ஒற்றுமையை வழி வகுக்கும் போல இருந்தது. இந்த ப்ளாக் உலகில்..... அதுவும் கெடுத்து விடுவார்கள்... குட்டின பொறப்பு அலாக!

உவ்வே...

ஆந்திர முதல்வர் ஒய்.ராஜசேகர ரெட்டி மரணம்

ஆந்திர முதல்வர் ஒய்.ராஜசேகர ரெட்டி மரணம்! இது சேதி. ஹெலிகாப்டர் மலையில் மோதி உயரிலந்தார்! அவரது குடும்பத்திற்கு அனுதாபங்கள்.

என்னை போல தெலுகு தாய்மொழி ஆள். என்னை போலவே கன்னடமும் பேசுவார் என தெரியுது... இங்கே படியுங்கள் தெரியும்.. அவர் படித்த குல்பர்கா MRMC காலேஜில் தான் என் அக்கா டென்டிஸ்ட் ஆக படித்தார். ( 60% மார்க்குக்கு ராமசந்த்ராவில் கிடைக்கும்? ) :-) என் பாசின் சொந்தம், அவர் பெண் எடுத்த வகையில்.

மக்களுக்கு 2004 முதல் நல்லது செய்தாராம்! இப்போது வருத்தங்கள்.

***

குடும்ப சொத்து போல அவர் மகன் ஜெகன் மோகன் ரெட்டி இப்போது அறுபத்தியேழு எம்.எல்.ஏக்களுடன் முதல்வர் ஆக முயற்சி எடுக்கிறார். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.

நிறைய எஸ்.எம்.எஸ் ஜோக்குகள் செல்கின்றன. பாவம் காங்கிரஸ் கட்சி.

ஆந்திராவில், ஹைதராபாத்தில் முற்றிலும் கடைகள் மூடப்பட்டு, அநியாய விலைக்கு எல்லாம் விற்கப்படுகின்றன என்று தெரிகிறது! மோர்னிங் என்பதை கடைஅடைப்புக்கு உபயோகிக்கும் கேனையர்கள்!

***

YSR இன்டர்நெட்டில் - மறைந்த விவரங்கள் அதிகம். கிறிஸ்டியன் என்று இப்போ தான் தெரியும். மனைவி விஜய லக்ஷ்மி ஹிந்துவாம். அதனால் திருப்பதிக்கு போவாராம்!

***

YSR இன் மகள் ஷர்மிலா எங்க ஏரியாவில் தான் வாழ்கிறார். இது சேதி. சில முறை பூட் டேய்சில் பார்த்த ஞாபகம்!

***

கர்நாடக சுரங்க சுரண்டல்கள் கும்பல் மூன்று மினிஸ்டர் ரெட்டிகளும் YSR குடும்ப நிறுவனத்தில் பங்கு. நாற்பத்தியேழு கோடிக்கு தலை கிரீடம் செய்தார்கள் ஏழுகொண்டலவாடாவிர்க்கு!

***

நக்சல்கள் ஏரியாவில் எதற்கு ப்ளைட் செல்ல வேண்டும்? அவர்கள் ஷ்டின்கரில் அடித்திருக்கலாம் அல்லவா? அதனால் தான் ஒரு மெஸ்ஸெஜும் செல்லவில்லையா? இது வரை ஆப்கானில் ஷ்டின்கரில் அடிபட்டு இறந்தவர்கள் நாலாயிரத்திற்கு மேல். எதிரிக்கு எதிரி நண்பனாம்.

வருத்தங்கள்.

Tuesday, September 1, 2009

உன்னை போல் ஒருவன் ட்ரெயிலர்


ஹிந்தியில் வந்த A Wednesday படத்தை தழுவி, தமிழ் படுத்தி ( படாத படு பட்டு ) ஒரு வழியாக வருகிறது உன்னை போல் ஒருவன்!

கமல் மிகவும் இளமையாக ( அவர் வயதிற்கு ) தெரிகிறார். :-)

மோகன்லாலின் தமிழ் கொல்லுகிறது!

நிறைய சீன்ஸ், கொஞ்சம் காமடி என்று சேர்த்திருப்பார்கள். டையலாக்ஸ் கொஞ்சம் வித்தியாசமாக தெரிகிறது... பன்ச் டையலாக்சுக்கு குறைவிருக்காது!

விவேக் காமடி, வடிவேல் காமடி இடைசெருகல் இருக்கும்? சின்ன ஊரிலே ஓட வேண்டாமா?

அப்புறம், ஒரு குத்து பாட்டு, ரெண்டு சோக பாட்டு இருக்கும்.

அப்புறம், அந்த தீவிரவாதிகள் சாவுக்கும், கமலுக்கும் ஒரு லிங்க் வைத்திருப்பார்கள். லக்ஷ்மிக்கு ஒரு ஹோம் மினிஸ்டர் வேடம்.

Will it work? I am just a stupid common man!