Saturday, September 19, 2009

நியூ யார்க் இந்தியா திரும்புதல்

நிறைய வேலை. சில மணி நேரம் தூக்கம் குறைவு. எப்படியோ நியூ யார்க் வேலைகள் கொஞ்சம் உசாராக முடித்துள்ளோம்.

அதனால் பதிவுகள் குறைவு. :-)

நாளை, ஞாயிறு மதியம் வரை கொஞ்சம் ஊரும் சுற்றி பார்க்கணும்.

அதனாலே இந்தியா திரும்பிய பிறகு, செவ்வாய்க்கிழமை பெரிய பதிவு போடுகிறேன். நியூ ஜெர்சியில் சில விஷயங்கள் நண்பர்கள் ப்ளேன் செய்துள்ளார்கள்! :-)

நியூ யார்க்கிலிருந்து ஞாயிறு இரவு ப்ளைட். ஐந்து மணிக்கு நண்பர்கள் ஏர்போர்ட் டிராப் செய்வார்கள்.

Thursday, September 17, 2009

நியூ யார்க் வேலை

இரண்டு நாட்களாக, நல்ல வேலை.

அருமையாக பொழுது கழிந்தது. நானும், அமெரிக்கன் அக்சென்ட் போட்டு பேசுகிறேன், என்னையறியாமல்!

மாயாவும், மிகவும் நுட்பமாக உதவுகிறார்... அமெரிக்கர்களிடம் நேரில் நடந்துக்கொள்வது ஒரு தனி கதை....

வால் ஸ்ட்ரீட் கம்பனிகள் ஒன்பது மணிக்கு வேலை ஆரம்பித்து, ஐந்துக்கு முடிவடையும். பிறகு எல்லோரும் வீட்டுக்கு ஜூட்.... ( சில இந்திய வம்சா வழியினர் நேரம் கடந்து ஆறு மணிக்கு செல்கிறார்கள் ... ஒருவரை கேட்டேன்... ட்ராபிக் குறையும், என்றார்! )

ஆம் இங்கு சப்வே கதை தனி. சில லெவல்கள் ( அடுக்குகள் ) பல லயின்கள்... ஒரு நிமிசத்திற்கு ஒன்று என பறக்கிறது!

****

செவ்வாய் இரவு எம்பயர் ஸ்டேட் பில்டிங் சென்றேன். தனியாக தான். அருமை. கிங் காங் என்ற படத்தில் காண்பித்த மாதிரி இல்லை. கண்ணாடி கூண்டு புதுசு. காற்று காதில் அடிக்கவில்லை. நல்ல வியு... லைட் மழை...

காசு தான் பிடுங்குகிறார்கள்... சொல்ல மறந்தேன்.. அந்த ஊரு லிப்ட் படு ஸ்பீட்.

லன்ச் ஆபீஸில் வந்தது! பல வகை... நாங்கள் ( மாயா உட்பட இருப்பதால், அவர்களே ஆர்டர் செய்கிறார்கள், நிறைய வேலை நடக்கணுமே! )

இரவு டின்னர் பக்கத்தில் ஒரு மெக்டோனால்ட்ஸ் சென்றேன். வெஜ்ஜி பர்கர் உண்டு. ப்ரைஸ், கோக் மற்றும், ஒரு சாலட் பர்கரும் வாங்கினேன். ஐந்து டாலரில் திருப்தி. நிறைய இந்தியர்களும் கருப்பர்களும் இருந்தார்கள். ஒரு வித அமைதி... எல்லோருக்கும் பயம் போல. நிறைய ஸ்ட்ரீட் லைப்பர்ஸ் பார்த்தேன்...

அறை மணி நேரம் ஜிம் சென்று நடந்தேன். ஷவர் செய்துவிட்டு இந்தியா கால்... தூக்கம்...

****

புதன் முழுதும் நல்ல வேலை.

ஜேக்சன் ஹைட்ஸ் சப்வே மூலம் - யு.என் அருகில் சப்வே - கிராண்ட் சென்ட்ரல் ஸ்டேசன் - க்வீன்ஸ் வழி... 3,4,5,6,7 லயின்ஸ்... என்னமோ பா.. பிச்சைக்காரர்கள் சப்வேயில்.. பயமாக இருந்தது.

ஏழு மணிக்கு தனி ஆளாக, ஒரு இந்தியன் பப்பே சென்றேன்... மட்டன் பிரியாணி ஒரு கட்டு கட்டிவிட்டு.. ( திண்டுக்கல் மாதிரி வராது ) .. கொஞ்சம் சுற்றி ... அழகான ஏரியா. ( குப்பைகளுடன்! இந்தியா பீலிங்க்ஸ்... )

நாடோடிகள், நினைத்தாலே இனிக்கும் மற்றும் ஃக்விக் கன் முருகன் டிவிடி வாங்கினேன். சுப்ரமணியபுரம் கிடைக்கவில்லை. ஒரு கலக்சன் தான்! டாலரில் என்னங்க விலை சொல்றது! ரூபாயில் சொல்லுங்க என்றேன். எவன் கேட்கிறான்... இண்டியா கூப்பிட ஒரு நிமிடத்திற்கு ஐந்து செனட்டில் ஒரு காலிங் கார்ட். ஏசியா கார்ட்ஸ்.

நிறைய இல்லீகல் இருப்பார்கள் போல... ஒரு இந்தியன் மாமா ஆள் வந்து வேசி விசயம், பீப் ஷோவிற்கு அழைத்தான். சாரி சொல்லிட்டேன்! இந்த தொழில் உலகும் முழுதும் இருக்கும் போல...

சில தெலுகு நடிகர்கள் பார்த்தேன். சூடிங்காம்! ஒரு நமஸ்தே வைத்து விட்டு, எட்டு மணிக்கு, பயத்தோடு, சப்வே பிடித்து.... ரூம் சென்று தினமும் நடக்கும் இந்தியா கால்...

கையில் மொபையில் இருந்ததால் நிம்மதி ( ஞாயிறு அன்றே ஸ்ரீநிவாசன் கொடுத்தார், இந்த ஞாயிறு வரை கையில் இருக்கும்.. )

இரவு மொபயிலில் ஒரு கால் மூன்று மணியிருக்கும், இந்திய டைம் பன்னிரெண்டரை! நேதேர்லேண்ட்ஸ் ப்ராஜக்டில் ஒரு ப்ராப்ளம். அதை சால்வ் செய்துவிட்டு, தூக்கம் வரவில்லை. கொஞ்சம் நேரம் தமிழ் ப்ளாக்ஸ் மேய்ந்தேன். அப்படியே நான்கு மணிக்கு ... பிறகு எட்டு மணிக்கு அலாரம் வைத்துவிட்டு தூங்கினேன்.

ஆபிஸ் இங்கிருந்து ( ஹோட்டல் ) ஒரு பத்து பதினைந்து நிமிட நடை தூரம் தான்....

****

இந்த வெள்ளியும் இரவு வரை வேலை இருக்கலாம்... அதனால் மாயா வீட்டு டின்னர் கேன்சல். சனி இரவு முடிந்தால் அங்கு செல்வேன்!

சனி காலை ஹோட்டல் காலி செய்துவிட்டு... சுதந்திர தேவி சிலை செல்ல வேண்டும். கொஞ்சம் கிரீன்விச் வில்லேஜ் ஏரியாவில் நடக்கணும். முடிந்தால் நண்பர் சாயந்திரம் ப்ரிஜ்வாடர் கோவில் கூட்டி செல்வார். அப்படியே, முடிந்தால் பிரின்ஸ்டன்.......

:-)

நியூ யார்க் சுற்றுதல்

சனிக்கிழமை, நண்பர்கள் என்னை அழைத்து ஊர் சுற்றி பார்க்க செல்கிறார்கள்...

நியூ யார்க் பற்றி நிறைய படித்ததால், எதோ ஒன்றிவிட்ட ஊர் மாதிரி இருந்தது.

ஒன்று மட்டும் சொல்லவேண்டும்.... திறமை இருந்தால் மதிக்கும் ஊர் இது. அமெரிக்கா. அவர்களும் பஞ்சம் பொழைக்க வந்தவர்கள் தான்?

அப்புறம் என்னுடைய திறமை, முழு கவனத்துடன் வேலை செய்வது, அலாதியாக இருந்தது. பெங்களூரில் சரியான தொந்தரவு இருக்கும், வேலைக்கு டென்சன் தான்! குடைச்சல் பேர்வழிகள், போன்கால், சத்தங்கள்.... இங்கு சத்தம் போட்டு பேசுவதை நீங்கள் பார்க்க முடியாது... அதனால் தான் அமேரிக்காவில் முன்னேற்றம் சூப்பர் போல ( அவனவன் வேலையை நன்றாக பார்த்து கம்பெனிக்கு லாபம் ஈட்டுகிறார்கள் )! இந்திய மாறுமா? எல்லாம் இந்த ஒன்றுக்கு ஐம்பது என்ற கணக்கு தான், விளையாடுது! ( டாலருங்க )... அரசியல், யூனியன், ரவுடியிசம் இப்படி பல சங்கதிகள்...

***

இரவு ஒன்பது முதல் பத்தரை வரை இந்தியாவில் கால் செய்து அங்கு நடக்கும், வேலைகளை கவனித்துவிட்டு... சென் ஹோசெவில் இருக்கும் நண்பரோடு பேசிவிட்டு, எங்கள் சித்தி பய்யன் இருக்கும் டெக்சாசில் ( ஹூஸ்டன் ) ஒரு கால் செய்துவிட்டு... கணினி, இன்டர்நெட்... தூக்கம்.

நான் காலிங் கார்டில் கூப்பிட்டேன், உடனே கட் செய்துவிட்டு, அவர்கள் கூப்பிட்டார்கள்... எல்லோரும் அப்படிதானா?

என் ரூமில் ப்ரிஜ்ஜில் குடி ஐடம்ஸ் வைத்திருக்கிறார்கள். நான் தொடுவதில்லை! கோக் கேன் இரண்டு டாலராம். வெளியில் தெருவில் இருக்கும் வெண்டிங் மெசினில் ஐம்பது சென்ட்ஸ்! ஸ்நேக்ஸ் கூட நான் வாங்கி வந்த குட்டே பிஸ்கட்ஸ் தான்!

பதினோரு மணி வரை கொஞ்சம் இந்த ப்ளாக் டைப் செய்தேன்... காலையில் எழுந்து இன்னும் கொஞ்சம் திருத்திவிட்டு அப்லோட் தான்... தூக்கம் வரும் வரை ....கொஞ்சம் நேரம் பிரபல பதிவர்களின் ப்ளாகை படித்தேன்....

***

ஜெயமோகன் மலாவி ஆனந்திற்கு இப்படி முக்கியத்துவம் கொடுத்து பதிலுரை எழுதுவது ஏனோ எனக்கு பிடிக்கவில்லை. சரி சாருவிற்கு ஆனந்த் மேல் என்ன கோபம்? இருவரையும் படிக்கும் ஓபன் வாசகன் நான்.

ஹம்... இலக்கியம் படிக்க என்னவெல்லாம் செய்து சேர்த்து படிக்கவேண்டும்?

***

நான் எழுதிய நியூ யார்க் பதிவுகளை படித்து நிறைய் பேர் கமன்ட் போடுவார்கள் என்று நினைத்தேன். மூன்றே கமண்ட்ஸ்! :-(

Tuesday, September 15, 2009

நியூ யார்க்: மாயாவும் நானும்

நேற்று பெடேரர் தோற்றார். நானும் நியூ யார்க்கில் ஒரு வாரம் தான் இருப்பேன். ப்ளேன் செய்தது போல வரும் ஞாயிறு இரவு ஒன்பது மணி ப்ளைட்டில் இந்திய திரும்புகிறேன்.

நியூ யார்க் நகரம் வளைந்து நெளிந்து இல்லாமல், நேர் சீர் வரிசையில் இருக்கு. தனியாக டைம்ஸ் ஸ்கொயர் வரை சென்று வந்தேன். செவன்த் அவனியு 42ண்டு வீதியில், ஒரு பர்கர் கிங்கில் சிக்கன் வாபர் கம்போ மீல்ஸ் டின்னருக்கு, ஆறு டாலரில் ஒக்கே. அங்கு தனியாக நடக்க பயம் ஒன்றும் இல்லை. மடியில் கணம் இல்லை. நிறைய கறுப்பின ஆப்ரிக்கன்ஸ். அதுவோ காரணம்?

வேலை செய்வதில் இந்தியாவை கம்பேர் செய்தால் அமேரிக்காவில் சோகம். படு சோம்பேறிகள். எங்கள் ஊரில் பெருமாள் கோவில் ஒன்றில், அருகில் சாப்பிட்டு விட்டு தூங்கும் சிலர் பார்ப்பேன். இங்கே தூக்கத்திர்க்கு பதிலாக ஒரே குறிக்கோள், வேலை மட்டும் தான். மற்றவர்களிடம் பேச்சு இல்லை. அதுவும் கலர் கலரோடு சேர்க்கிறது! எந்நேரமும் வேலையில் இருந்து பயர் ( டிஸ்மிஸ் ) செய்யப்படலாம் என்ற காரணமா தெரியவில்லை.

நேற்று காலை பத்து மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய வேலை பதினோரு மணிக்கு ஆரம்பித்தது. அவர்கள் திங்கள் காலை மீட்டிங் முடித்து விட்டு எங்களை சந்தித்தார்கள். ஒரு வாரம் மட்டும் தான் நான் இங்கு இருப்பேன்...

இன்னொரு வாரத்திற்கு, சார்ஜ் கொடுக்கமாட்டார்கள். அதனால் தான். மாயா மட்டும் தான் இங்கு வந்து செல்லுவார் கொஞ்ச காலம்.... அக்டோபரில் நான் இங்கு வரும் வரை. அது தனி கதை! ( ப்ராஜக்ட் இல்லாவிட்டால் என்ன செய்வது? ).

நான் டெம்ப்ளேட் எல்லாம் ப்ரேபேர் செய்து, அவர்கள் கொடுத்த ப்ராஜக்ட் விஷயங்கள், பகுதி வாரியாக பிரித்து வைத்திருந்தேன். எப்படியெல்லாம் எங்கள் வேலை ( இந்தியாவில் ) அவர்கள் நிலைமையை சுலபமாக்கும் என்று ஒரு மணி நேரம் விவாதம்! நாங்கள் புரிந்துக்கொண்டு ஒரு கோட் கொடுத்தால் தான், இங்கு வந்திருக்கிறோம்!

நான் பேசியதை எல்லாம் காதில் வாங்கினார்களா தெரியவில்லை. லன்ச் டைம் பிட்சா சாப்பிட்டுக்கொண்டு, சைனீஸ் உண்டுக்கொண்டே டிஸ்கசன். நம்ம ஊர் சாம்பார் எல்லாம் இதுக்கு ஒத்து வராது! மே பி அலுமினியம் டப்பாவில் பிசிபேலே பாத் ஒக்கேவா?

மாயா இங்கிருப்பது ஒரு வகையில் எனக்கு வேலை சுலபம் ஆக்குது... ஒரு பெண் வேலையில் இருப்பது கொஞ்சம் வேலையை சுலபமாக்கும். மரியாதையாக, வழிகிறார்கள். மாயா மணமான பெண் அல்லவா? அவர் நன்றாக அமெரிக்கன் அக்சென்ட் போட்டு பேசுகிறார்கள். ஆந்திர பாஸ் சும்மா சொல்லக்கூடாது, பிசினஸ் தெரிந்தவர்! நிறைய கற்றுக்கொள்கிறேன்!

சீனிவாசன் நேரில் வரப்போவதில்லை! தேவையானால் போன் கால் மட்டும் தான்.... எங்களுக்கு ப்ரொஜெக்ட் பிடித்து கொடுத்த பிரதீப் சிங் மட்டும் வந்தார்! ( சர்தார்ஜி, தலைபாகை வைத்திருக்கிறார், அதிகமான பிசினஸ் ஞானம்? ) வெள்ளி மதியம் மூன்று மணிக்கு வேலை முடிந்தவுடன், தங்கியிருக்கும் ஹோட்டலில் இருக்கும் கான்பரன்ஸ் ரூமில் ஒரு மீட்டிங்...

ஐந்து மணி யு.எஸ். ஓபன் பார்க்க எல்லோரும் செல்லலாம் என்றார்கள். எனக்கு டிக்கட் இல்லை. செல்லவில்லை! :-( அதனால் மூன்றரைக்கு கடை சாத்திவிட்டோம். நான்கு மணிக்கு கிளம்பி மாயாவை, பென் ஸ்டேசனில் ட்ராப் செய்து விட்டு ( நடை தூரம் தான் - நியூ ஜெர்சிக்கு அம்ட்ரேக் ட்ரெயின் - நம்ம ஊரு எக்ஸ்பிரஸ் மாதிரி ) ஹோட்டல் திரும்பினேன். மாயா இரு பிள்ளைகளுக்கு அம்மா. நாற்பதை தொடும் வயது... முதல் மகள் இப்போது பதினொன்றாம் வகுப்பு. இரண்டாம் மகள் ஒன்பதாவது... மாயா வீட்டில் இருந்தபடி வேலை செய்கிறார். தேவையானால், க்ளையண்ட் விசிட். வெள்ளி இரவு டின்னர் மாயா வீட்டில் என்று சொல்லியுள்ளார். நண்பர் வீடு பக்கம் தான்.

Monday, September 14, 2009

கல்யாணம் கச்சேரி

பதிவுகள் நிறைய நீளமாக போய்விட்டன... கொஞ்சம் வெட்டி இன்னொரு பதிவாக போடுகிறேன்...

அம்மா சொன்ன பெண்ணையே கல்யாணம் செய்ய முடிவு. :-) பழைய பதிவுகளை பாருங்க , இந்த மாதம் இறுதியில் ரெஜிஸ்டர் கல்யாணம் ( போட்டோஸ் உட்பட எடுப்போம் ) அப்புறம் விசா அப்பளை செய்யணும்! கல்யாணம் செய்த பின்னால், நானும் எல் 2 விசாவோடு ( பியன்செவுக்கு ப்ரின்செடனில் ஒரு வருடம் ப்ராஜக்ட் அக்டோபர் மாதம் முதல் ) இங்கு வந்து, கம்பெனிக்கு ஒரு ஆபிஸ் திறந்தால், இருந்தால் இருக்கலாம், இல்லாவிட்டால், எப்படியோ பெங்களூருவில் கொஞ்ச காலம் ஓட்டனும்!

சரி புரட்டாசி மாதம் கல்யாணம் செய்யலாமா கூடாதா? கோவிலில் வைத்து செய்யலாம் என்று சொல்லுகிறார், என் மாமா. விஜய தசமி அன்று நல்ல முகூர்தமாம்!

இப்போவே பாஸ் சொல்லிட்டார், சம்பளம் அதிகம் எதிர்பார்க்காதே! என்று.

***

ரின் சோப் பார் கொண்டு வந்தேன். அதனால் உள்ளாடைகளை துவைத்து உலர்த்த பயம் இல்லை. ஹேங்கரில் காய போட்டுவிட்டேன்! ஐயர்ன் பாக்ஸ் இருக்கு! ஷர்ட் பேன்ட்ஸ் துவைக்க முடிந்தால் சரி. நிச்சயம் ஹோட்டலில் முடியாது, சரியான காசு! ஹோட்டல் அருகில் ஒரு லாண்டரோமெட் இருக்கு. ஐந்து டாலரில் ஒரு லோடு வேலை முடியும்! சலவைக்கு கவலை இல்லை.

***

இங்கே எவனை பார்த்தாலும், "ஹாய்" சொல்லுகிறார்கள். பழக்க வழக்கம்!

இப்போ தான் சச்சின் டெண்டுல்கர் சென்சுரி அடித்ததை வெப்பில் பார்த்தேன்! ஸ்ரீலங்காவிற்கு எதிராக இது எட்டாவது சதமாம்.

காலை ஒரு டோனட்டும் காபியும் தான் ப்ரேக்பாஸ்ட். அப்படியே ஒரு ஆப்பில் கடித்துக்கொண்டேன். மதியம், வயிற்றுக்கு சேருகிற மாதிரி உருப்படியாக ஏதாவது சாப்பிட்டால் ஆயிற்று!

தினமும், மூன்றிலிருந்து ஐந்து மணி நேரம், க்ளையண்ட் சைடில் இருவர், எங்களோடு செலவு செய்து ரேகொயர்மேன்ட்ஸ் சொல்லுகிறார்கள் என ப்ளேன். எங்கு சாப்பிட அழைத்து செல்ல வேண்டுமோ!

பத்து மணிக்கு தான் முதல் மீட்டிங். அதனால், கொஞ்ச நேரம் ப்ளாகில் மேய்கிறேன்.

நியூ யார்க் வந்தாச்சு 2

இதை முதலில் படியுங்க... நியூ யார்க் வந்தாச்சு

தொடர்ச்சி....

பாஸ் வேர்க்க விருவிருக்க, அவர் மொபயிலில் எதோ பேசிக்கொண்டு இருந்தார். அவர் வருடம் ஒரு முறை குடும்பத்தோடு அமேரிக்கா வருபவர், சோ நோ ப்ராப்ளம்! மேட்ரிக்ஸ் கார்ட் வாங்கியிருந்தார்.

ஐந்து நிமிடம் பேசியிருப்பார்... அப்போது நேரம் மதியம் ஒரு மணி. இந்தியாவில் இரவு பத்தரை. மகளுக்கு உடல் நிலை சரியில்லையாம், எக்சாம் வேறு. அதனால் கொஞ்சம் டென்சன் என்றார்!

கிரீன் சானல் வழி சென்றோம். அங்கு பாஸ் தம்பி நின்றிருந்தார். பாஸ் எப்போதும் போல நியூ ஜெர்சி சென்று தங்குவார். டாலர் கவரை கொடுத்து விட்டேன். என் கையில் இன்னொருவரின் இரண்டாயிரம் டாலர் கேஷ். பயம்!

எங்கள் கம்பெனி டைரக்டர் சீனிவாசனும் அங்கு இருந்தார். அவர் தான் என்னை ஹோட்டலில் கொண்டு செல்ல ஏற்பாடு. நாற்பது நிமிஷ டிரைவ். முன் சீட்டில் தூங்கிவிட்டேன். ஹோட்டலில் செக்கின் செய்ய அவர் கார்ட் ஸ்வயிப் செய்தார். என் பாஸ்போர்ட் காபி எடுத்து வைத்துக்கொண்டார்கள். ( நெதேர்லாண்ட்சில் இப்படி இல்லை, பாஸ்போர்ட்டை ஜஸ்ட் ஒரு பார்வை ).

ரூம் சென்று விட்டு, குளித்து விட்டு வெளியில் ஒரு டெலியில் சாண்ட்விச் காபி. ரெஸ்ட் எடுத்தால், ஜெட் லாக் தீராது என்று அவரோடு, நியூ ஜெர்சி பயணம்!

வழியெங்கும் லிங்கன் டணலில் இருந்து ஜெர்சி சிடி சைடு செல்லும் வரை வேடிக்கை பார்த்தேன்... மீண்டும் தூங்கிவிட்டேன். அங்கிருந்து அரை மணி நேரம். அவர் வீடும் பாஸ் தம்பி வீட்டு அருகில் தான். முதலில் அங்கு அழைத்து சென்றார். வடை பாயசம் கிடைத்தது. அப்போது தான் தெரிந்தது அவர் ஏ.டி. & டி கம்பெனியில் கன்றேக்டராக வேலை செய்துகொண்டே இந்த பிசினஸ் செய்கிறார். ( எங்கள் கம்பெனியில் ஷேர் ஹோல்டிங் பார்ட்னர் )

பிறகு பாஸ் வீடு சென்றோம். அங்கு ஒரு சிறிய அறை, தம்பியின் ஆபிஸாம்! தூக்கம் வேறு கண்ணை கட்டியது. காபி குடித்து குடித்து வயிறு வேறு கலக்கியது. பாத்ரூம் சென்றாலும் கழுவ இடம் இல்லை. திஸ்ஸு பேபர் தான்!

பிறகு பிசினஸ், யு.எம்.எல் டெம்ப்ளேட் பற்றி பேசினோம். ஒரு வாரத்தில் என்னவெல்லாம் முடிக்க முடியும் என்று பேசினோம். அவர் முதல் நாளும் கடைசி நாளும் வருவதாக சொனார். நானும் பாஸும் முதல் நாள் முழுதும் இருப்போம். அப்புறம் பாஸ், வாஷிங்க்டன் டி.சி. செல்கிறார், இன்னொரு ப்ராஜக்ட் விசயமாக. வியாழன் வந்து விடுவார். வெள்ளி வேலை முடியுமா? தெரியவில்லை.

அப்புறம், சர்ப்ரைசாக, மாயா என்ற பெண் வந்தார். மணமானவர்! அமெரிக்கன் மாதிரி டிரெஸ்ஸிங். எங்கள் கம்பெனிக்கு காண்ட்ரேக்ட் செய்ய அவர் ஒரு வாரம், எங்களோடு (!) இருப்பார். பிசினஸ் அனலிஸ்டாம்.

அங்கு செய்யும் வேலையை, ஒரு டாகுமெண்டாக கொடுத்தால், சில ஆயிரம் டாலர்கள் மினிமம் கியாரண்டி வேறு! நாங்கள் வந்து போகும் செலவு, மாயா சம்பளம் உட்பட! பத்து பேரோடு எப்படியோ மூன்று மாதத்தில் இந்த ப்ராஜக்ட் முடிக்கலாம். பிறகு இன்னொரு வெர்சன், அவர்கள் விருப்பப்பட்டால்! ( மாயாவும் அதுவரை இங்கு கோ ஆர்டினேடராக இருக்கலாம் ).

***

இரவு பாஸ் தம்பி வீட்டில் டின்னர், ஆந்திர சாப்பாடு... காரமாக.. ஏழு மணிக்கு. குழந்தைகள் சிறிது தெலுங்கு பேசினார்கள்! எட்டு மணிக்கு சரியான தூக்கத்தில் ஹம்ப்டன் இன் வந்தேன். தூங்கியவன், காலை ஐந்து மணிக்கு அலாரம் வைத்தது அடிக்க எழுந்தேன். இப்போ ஜெட்லாக் இல்லை... மதியம் பார்ப்போம்!

எப்படியோ இங்கு வேலை இரண்டு வாரமாகிவிடும் என தெரிகிறது! ஐயோ அப்பா ஹோட்டல் சாப்பாடு கொல்லும்! இன்றிரவு முடிவு செய்வோம்.

இந்த வால் ஸ்ட்ரீட் கம்பெனி மார்கெட்டிங் ஆள் திங்கள் எட்டு மணிக்கு வருவதாக சொல்லியிருக்கிறார்! ரெடியாகி, ப்ளாக் டைப் செய்தபடி வெயிடிங்.

இங்கே இன்டர்நெட் படு சூப்பர்! ஸ்பீட். ஐயா ஜாலி ஜாலி!

நியூ யார்க் வந்தாச்சு

நியூ யார்க் இறங்கும் போது தூரத்தில் சுதந்திர தேவி சிலை தெரிந்தது. என்னவோ மனதுக்குள், ஒரு வறுமை. போன ஜென்ம தொடர்போ? ட்வின் டவர்சை காணவில்லை... அதனாலா? எட்டு வருடம் முன் தகர்க்கப்பட்ட நினைவு வேறு வந்து தொலைத்து!

நியூ யார்க் இறங்கும் முன், ஐ 94 பார்ம் பில்லப் செய்தோம். வெள்ளைக்கலர். மனசெல்லாம் வெள்ளை என்ற பாட்டு தானாக ஞாபகம் வந்தது! உலகில் ஒவ்வொருவரும் அமெரிக்காவை காண வாழ்க்கையில் ஒருமுறையேனும் வரத்துடிப்பார்கள் என்று அமெரிக்கா போகணுமா என்று எழுதிய சுவடு சங்கர் ஞாபகம் வந்தார்!

க்ளையண்ட் கொடுத்த பேக்ஸ். ஆளுக்கு ஒரு காப்பி. ஹோட்டல் ரிசர்வேசன் எனக்கு. அவருக்கு அவர் தம்பி லெட்டர். இருவரும் பேசி வைத்த மாதிரி, வேறு வேறு லையின். எதுக்குங்க வம்பு?

ஒரு கருப்பு மொட்டை தலை செக்கிங் ஆபிசர் ( ஷாருக்கான் சம்பவம் நினைவில் வந்தது! ) என்னை ஏற இறங்க பார்த்தார். சிரித்தார்! " இஸ் திஸ் யுவர் பர்ஸ்ட் டைம் ஹீர்? "... மீண்டும் புன்சிரிப்பு.. " எஸ் சார் " விறைப்பாக பதில் சொன்னேன். மறக்காமல் சிரித்து வைத்தேன்.

கைரேகை செக்கப், போட்டோ பிடிப்பு, விசாரிப்பு. இரண்டு முறை, இது பிஸ்னஸ் ட்ரிப் தானா என்று கேள்வி வேறு. ஆம் என்றேன். கோட்டு சூட்டு வேறு போட்டிருந்தேன்! ( எதுக்குங்க இப்படி தொல்லை? ) கடைசியில் " யு லுக் லைக் ஏ மூவி ஸ்டார்! " என்று சிரித்தபடி ஆறு மாதம் இருக்க சீல் அடித்து கொடுத்தார்! " தேங்க்ஸ், அப்பிரிசியேட் இட்! " என்று சிரித்த படி கச்டம்சில் பெட்டி எடுக்க வந்தேன். அங்கு...

அடுத்த பதிவில் தொடரும்...

(முந்தைய பதிவு நியூ யார்க் கிளம்புதல் படித்தீர்களா? )

நியூ யார்க் கிளம்புதல்

பெங்களூருவில் கிளம்பும் போது அங்கு ஞாயிறு அதி காலை ஆனது. சனி இரவு மெயில் எல்லாம் செக் செய்தவுடன், வீட்டிலிருந்து இரவு பத்து மணிக்கு, அம்மாவும், தம்பி மற்றும் ரூம் மேட சரவணனுடன் டாக்க்ஷி பயணமாக பெங்களூரு இண்டர்நேசனல் ஏர்போர்ட்.! சரமாரியாக ஓட்டினார், டேக்சி ட்ரைவர்! பயம்... வழியில் நிறைய அடிபடல்கள்... எக்சிடன்ட்ஸ்.. பதினோரு மணிக்கு ஏர்போர்ட் வாசல். திருவிழா கோலம்... பிக்கப் செய்ய வந்த கூட்டம் அதிகம்! கொஞ்ச நேரம் பேசிவிட்டு, பிரியாவிடை... டாடா பாய் சொல்லிவிட்டு செக்கின் கவுன்ட்டர் போக இன்னும் அரை மணி நேரம்...

முதல் முறை தொலை தூர பயணம். கோவை ஷரோன் சாப்ட்வேரில் வேலை செய்யும் போது சிங்கப்பூர் வழியாக, மெல்போர்ன் ஆஸ்த்ரேலியா சென்ற போது, சென்னை வழியாக சென்றேன். ஒரு சனி திண்டுக்கல் சென்று விட்டு, ஊரிலிருந்தே, மதியம் டாக்சி மூலம் சென்னை ஏர்போர்டுக்கு சென்று விட்டு, அம்மாவும் தம்பியும் திரும்பினார்கள்.

***

பெங்களூரு விட்டு கிளம்பியதும், ஒரு மணி நேரத்தில் ஒரு சிறு ஸ்நாக் / டின்னர் கொடுத்தார்கள்.

உயரமான ஜெர்மன் பெண்கள். பெரிய பெரிய சைஸில்... இருந்தார்கள். நம்ம ஊர் பெண்கள் ஷார்ட் அண்டு ஸ்வீட். :-)

அப்புறம், இறங்கும் ஒரு மணி நேரம் முன், எங்களை ( என் பாஸு ) எழுப்பி ஒரு கவிக் சேண்ட்விச். நான் கொடுத்த ஸாலில் போர்த்திக்கொண்டு தூங்கிவிட்டேன்! டிவி பார்க்கவேயில்லை. The Ugly Truth. அந்த கருமத்தை எவன் பார்ப்பான். பாஸும் பேச்சு தொந்தரவு கொடுக்கவில்லை. ( ப்ளைட் கிளம்பும் போது இரண்டாயிரம் டாலர் இருக்கு கவரில், நியூ யார்க் இறங்கியதும் கொடுத்துவிடு என்றார்! ஒருவர் கையில் இரண்டாயிரத்து ஐநூறுக்கு மேல் கரன்சி எடுத்து செல்ல கூடாது! )

ப்ரேன்க்பர்டில் இரண்டு மணி நேரம் வெயிட்டிங். அங்கு லோகல் டைம் காலை 10.35 இக்கு நியூ யார்க் கனக்சன். ஐந்து நிமிடம் முன்பாக கிளம்பியதாக ஞாபகம்! பாசொடு இது இரண்டாவது பயணம். சைலண்டாக, படுத்துவிட்டார். சாப்பிடும் நேரம் மட்டும் எழுந்தார். ஜெட் லாக் குறைய இது வழி போல!

இனி இது ப்ளைட்டில் இறங்குவதற்கு முன் எழுதியது ( ஆங்கில மூலம் தமிழிஸில். அப்புறம் தமிழ் படுத்த ப்ளாகரில் ரொம்ப கஷ்டம் )

***

அம்மாவும் தம்பியும் நடு இரவு ஒரு மணி அளவில் வீடு திரும்பினார்களாம்! டாக்சிக்கு போக வர, 800 ரூபாய் தான், அங்கு ஒரு அறை மணி நேரம் வெயிட்டிங்.

ஞாயிறு மதியம், கே.பி.என் பஸ்சில் சேலம் வழியாக திண்டுக்கல் இரவு சேர்ந்திருந்தார்கள்.

இப்போது கூட தம்பிகூட ஒரு விண்டோவில் சேட் செய்கிறேன்.