Saturday, August 8, 2009

உரையாடல் போட்டியும் என் கதையும்

என்னுடைய உன்னை கொல்ல வேண்டும் கதையை உரையாடல் போட்டிக்கு அனுப்பினேன்.

படித்தார்களா என்று தெரியலே?

நிச்சயம் படிச்சிருக்கமாட்டாங்க?

ஏன்னா , இங்கே படியுங்க... ( சே... என்னை செலக்ட் பண்ணலே )

"சிறுகதைப் போட்டி முடிவுகள்"

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!

பரிசு ஏன், எப்படி, எதுக்குன்னு ஒரு விவரம் இல்லே?

எனக்கு பரிசு இல்லே? நிஜமாவே அழுகை வருது! முதல் முறை கதை எழுதினேன். அந்த முப்பத்தி ஏழில் இருக்கா?

( ஒரு கிண்டல் - என்ன வெற்றி பெற்ற பாதி பேர், நடுவர்களின் நண்பர்களா? சில பேர் ஏற்கனவே பதிவுலகில் பிரபலம் வேறே... என் கதையை பப்ளிஷ் பண்ணுங்க ப்ளீஸ்! )

Thursday, August 6, 2009

ஒரு நண்பரின் பதிலுரை

நான் இப்படி எழுதியதற்கு.... நண்பர் சொல்லுகிறார்

//அமெரிக்காவில் டெஸ்டிங்க் வேலை வாங்குவதும் எளிதல்ல// :-)

அப்படிதான் ஏற்கனவே அங்கு இருக்கும் நம் நண்பர்கள் சொல்லுவார்கள். அவர்கள் மனைவிமார்களை அங்கு வேலை செய்ய வைக்க இது எளிய வழி!

மற்றவர்கள் அங்கு வந்துவிட்டால் ப்ராப்ளெம். எங்களுக்கே இப்போ ரிசசென். எதுக்கு நீங்க வரீங்க?

என் ஆண் நண்பர்கள் அங்கு கல்யாணம் செய்து சென்றவுடன் மனைவிகளுக்கு ( திறமை இருந்தால் தான்.. டிகிரீ..) உடனே வேலை வாங்கி கொடுக்கிறார்கள், குறைந்த பட்சம் அறுபதாயிரம் டாலர்கள் சம்பளம்.

அப்புறம் இன்னும் ஒன்று, பே ஏரியாவில் வயர்லேச்ஸ் நெட்வர்க் ஆட்கள் தேவை என்று எவ்வளவு விளம்பரங்கள் மான்ச்டரில் இருக்கு தெரியுமா? நான் வேறு எஸ்.ஏ.பி. படித்துவிட்டேன், பெருஞ்செலவுடன். அதனால், அந்த வழியில் போகவேண்டும்.

நானும் கம்ப்யுட்டர் சாப்ட்வேர் துறையில் பத்து ஆண்டுகள் குப்பை கொட்டிவிட்டேன். அந்த அனுபவத்தில் சொல்லுகிறேன். (என் சொந்த கருத்து தான்...திணிக்கவில்லை.. )

http://www.linkedin.com/in/rajusundaram

Link with me...

பெங்களூரும் திருவள்ளுவரும்

நான் தமிழ்நாட்டுக்காரன்.

பெங்களூரில் திருவள்ளுவர் சிலை வைப்பது குறித்து மகிழ்ச்சி.

சென்னையில் சர்வஞனா சிலையும் வருகிறது.

இரு மாநில முதல்வர்களும் திறக்கிறார்கள்.

சரி பெங்களூரில், ஏதாவது மொழி பிரச்சனை வேண்டும் என்று திரிந்துக்கொண்டு இருக்கும் வட்டாள் கூட்டம் நினைத்தால் பயம் தான்.

ஊர்வலத்திற்கு தடை போட்டுளார்கள். இருந்தாலும் கலவரம் வரும் அபாயம் இருக்கு.

***

அம்மாவை அழைத்து வந்த தம்பி ஞாயிறு இரவு கிளம்பிவிட்டான். அவனுக்கும் சேட்டிங் செய்த ஒரு பணக்காரி கல்யாணம் செய்துக்கொள்வது பற்றி வருத்தம். இருந்தாலும், டெக்சாசில் இருக்கும் ஒரு பெண்ணோடு, நல்ல பழக்கம் என்கிறான். ஆந்திர பெண்ணாம். ரெகார்ட் செய்த வீடியோ கூட காட்டினான். ஊர் பேர் விலாசம், பொன் நம்பர் எல்லாம் வேறு கொடுத்துள்ளாள். டிடெக்டிவ் ஆள் வைத்து விசாரிக்கலாம்! அவளும் செய்திருப்பாள். எனக்கும் இரண்டு மூன்று முறை, சில பேங்க் கிரெடிட் கார்ட் வேண்டுமா என்று கேட்டு, மொபயிலில் போன் வந்தது. குடும்ப விபரம் எல்லாம் கேட்டார்கள். ஒழுங்காக பதில் சொன்னேன். என் கம்பெனி அட்மின் அக்கவுண்ட் பாஸ்வோர்டு தவிர மற்ற எல்லா விபரம், என் கம்பெனியில் ஷேர் விபரம் உட்பட கூறினேன்! :-) பார்ப்போம்.

***

நண்பர் சரவணோடு நேற்றும் ஒரு பெண், தான் தான் இன்போசிஸ் மூர்த்தியின் மகள் அக்ஷதா என்று சேட்டிங் செய்கிறாளாம்! அவளுக்கு தெரியாது, நிஜ பெண்ணின் கல்யாண நியூஸ். அவளை மடக்க "ஒரு ப்ராப்ளம், சில லட்சங்கள் வேண்டும் என்று கேள்", என்றேன். கேட்டுள்ளான்... அதன் பிறகு சேட்டில் ஆள் காணோமாம்! எஸ்கேப்பு!

திருமண நியூஸ் பேப்பர் லின்க்ஸ் அனுப்ப சொன்னேன். இன்று தெரியும் குட்டு. :-)

***

இன்று காலை எங்கள் கம்பெனியில் இலவசமாக ட்ரெயினி எடுக்கிறோம் என்று சொன்னதற்கு, இரண்டு மூன்று வருட எக்ஸ்பீரியன்ஸ் ஆட்கள் எல்லாம் ( சாப்ட்வேர் தான்! ) வந்திருந்தார்கள் .... என்னை பொருத்த வரை ஒன்றும் தேறவில்லை. இவன் சொந்தம், அவன் சொந்தம், பாஸுக்கு சொந்தம் என ஐந்து ஆட்கள் எடுத்தோம்! இப்படிதாங்க சாப்ட்வேர் கம்பெனிகள் எல்லாம் நடக்குது. :-) அப்புறம் சரியான ட்ரெயினிங் பூட்காம்ப் நடத்தினால் நன்று!

***

நாற்பது லட்சம் அளவில் ஒரு இரண்டு பெட்ரூம் ப்ளேட் வாங்கும் எண்ணம் வந்துள்ளது. அம்மாவிற்கும் அந்த வீடு பிடித்தது, கட்டிமுடிக்கும் தருவாயில் உள்ளது. இன்னும் சில லட்சங்கள் தேவை, அட்வான்ஸ் கொடுக்க. என்ன செய்வது தெரியவில்லை.

***

வெள்ளி மதியம் சேலம் வழியாக ஊருக்கு கிளம்புகிறேன், அம்மாவோடு... இனி அடுத்த செவ்வாய் காலை தான் திரும்புகிறேன். கல்யாணம் நிச்சயம் என்று போகிறது வாழ்க்கை. இன்று வரை நான் ஒரு முடிவும் எடுக்கவில்லை! :-)

Tuesday, August 4, 2009

பதிவுலக போதையும் மன வாழ்க்கையும்

இந்த பதிவை முதலில் படியுங்க. நிஜமா நீங்க படிக்க வேண்டிய பதிவுங்க.

பதிவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை

அப்புறம் நான் போட்ட கமன்ட்.

:-)

என்ன சொல்றதுன்னு தெரியலே!

கொஞ்சம் ஓவரா எழுதிட்டீங்க போல?

நீங்க சொல்றத பார்த்தால், கல்யாணத்துக்கு அப்புறம் எழுதிறதெல்லாம் மூட்டை கட்டி வைக்கணுமா?

அப்போ எழுத்தாளர்கள் எல்லாம், வீட்டிலே பர்மிசன் வாங்கிட்டு தான் எழுதனுமா?

அது தான் விடிய விடிய எழுதறாங்களா? அரசாங்க உத்தியோகத்தில் போய் உட்கார்ந்துக்கிட்டு, மத்தியானம் நல்லா தூங்கலாம்!

சரி ஒரு க்வேச்டியன், அந்த தங்கச்சியும் ஒரு ப்ளாக் எழுதலாம், தன் நிலைமை பற்றி. அப்பவாவது புருஷன் தெரிஞ்சிகிட்டும். அப்புறம் கம்ப்யுட்டர் கத்துகிட்டால், வேலைக்கு போகலாம் ( அமேரிக்காவில், டெஸ்டிங் தொழில் ஈசி )... பணம் வந்தவுடன் ஜாலியா சுத்தலாம். பல நாடுகள் பார்க்கலாம்....

இண்போசிஸ் நாராயண மூர்த்தி மகளுக்கு கல்யாணம்

இண்போசிஸ் நாராயண மூர்த்தி மகள் அக்ஷதா மூர்த்திக்கு ( என்னை விட மூன்று வயது சிறியவர் ) தன் கூட படித்த ஸ்டேன்போர்ட் க்ளாஸ்மேட் ரிஷி சுனக்கோடு கல்யாணம்!

ஆகஸ்ட் 30 பெங்களூரில். பெரிய அளவில் நடக்கும் என்கிறார்கள். எங்கே என்று தெரியவில்லை.



ரிஷி சுனக் பிரிட்டிஷ் சிட்டிசன் (படத்தில் இடது கோடி, அக்ஷதா வலது கோடி - பார்க்க அவர் அம்மா மாதிரி இருக்கிறார்). குழந்தைகள் நல காப்பு சேரிட்டி பண்ணுகிறாராம். மச்சக்காரர்!

மணமக்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

***
எனக்கு நாராயண மூர்த்தி குடும்பம் பற்றி ஒன்றும் தெரியவில்லை. இன்று காலை என் ரூம் மேட சரவணன், நான் சேட்டிங் செய்துக்கொண்டிருந்த பணக்காரி கல்யாணம் செய்கிறாள் என்று சொன்னதில் இருந்து விவரம் தேடுதல் ஆரம்பம்... ( சரியான உடான்ஸ் பார்டி போல! )

Monday, August 3, 2009

புத்தம் புது காலை

புத்தம் புது காலை இன்று ஏழு வாரங்கள் கடந்த பிறகு, நான் என் அலுவலகத்தில்! :-) எல்லோருக்கும் வாங்கி வந்த சாக்லேட்ஸ். என் பாசுக்கு ஒரு சிறு கிப்ட். ( ஐஸ் ஐஸ் பேபி ).

என் மேஜையை (கேபின் - கதவு வைத்தது) கான்பரன்ஸ் ஆக உபயோகித்துள்ளனர்.

நல்ல வேலை, என் லெட்டர்ஸ் அனைத்தும் நண்பர் ஒருவர், எடுத்து வைத்திருந்தார். சில பல ஸ்பேம்.

ஆண்லயினில் கிரெடிட் கார்ட் பில் கட்டிவிட்டேன். அதனால் விட்டது தொல்லை. கொஞ்சம் கூட கார்டல் எக்ச்பென்ஸ் செய்யலே!

பாஸிடம் நல்ல பேர். அங்கு ஆகும் செலவுகள், வரும் வருமானம் பார்த்து, இன்னும் ஐந்து யுரோ ஜாஸ்தி கொடுத்தார் ஒரு நாளுக்கு. பரவாயில்லை.

இன்னும் ஆறு வாரத்தில் இரு நண்பர்களும் ஆம்ச்டேர்டேமில் இருந்து திரும்புவார்கள். அதற்குள் எல்லா வேலையும் முடிந்திருக்கும்.

அடுத்த ப்ராஜக்ட் தேட வேண்டியது தான்.

அமெரிக்காவில் இருந்து ஒரு ஈ.ஏ.ஐ. ப்ராஜக்ட் வருதாம். பாசும் நியூ யார்க்கில் அல்லது வாஷிங்கடனில் ஆபிஸ் திறக்க ஆயுதம் செய்கிறார். பார்ப்போம். இன்னும் பத்து புது முகங்கள் ஆபீஸில் வரும்.

Sunday, August 2, 2009

வரும் மழையில்

பன்றி காய்ச்சல் என்பதை யாரும் டெஸ்ட் பண்ணுவதில்லை பெங்களூரு ஏர்போர்ட்டில் . கொடுமை. நாற்பத்தைந்து நாட்கள் கடந்தும், ஒன்றும் கண்டுக்கொள்வதில்லை? ஒரு பாரம் மட்டும் பில் செய்கிறார்கள். யாரவது, சளி, காய்ச்சல் இருந்தால், செக் செய்ய ஒரு ஒரு டாக்டர் இருக்கிறார்.

நேற்று அதிகாலை தான் ஏன் கம்பெனி நண்பர் ரவியோடு வேலை செய்ய இன்னொருவர் வந்தார். அவருக்கு எல்லாம் ஏற்பாடு செய்து வைத்திருந்தேன். உடனே நான் புறப்பட்டேன்.

இன்று காலை தான் வந்து இறங்கினேன். மும்பையில் சில மணி நேரம். மலை தூவானம்! கச்டம்சில் அள்ளுகிறார்கள். லஞ்சமாய் கொட்டுது. சாப்ட்வேர் ஆள் என்று எழுதி ஒட்டியிருக்கும் போல, கேவலமாக பார்கிறார்கள்!

தம்பியும் அம்மாவும் ரூமில் வந்து இருந்தார்கள். பத்து மணிக்கு வீட்டில் அம்மா கையால் உப்புமா. அமிர்தம்! :-)

சரவணனுக்கு வாயெல்லாம் பல். சில பல சீக்ரட் கிப்ட் அவனுக்கு. ( ரூம் மேட் ). டிஜிடல் கேமரா கொஞ்சம் கம்மி விலையில் ( 80 யுரோ ) கிடைத்தது. 10 எம்.பி. 4 GB ஸ்கேன் டிஸ்க் உட்பட. நல்ல விலை தான்! ( இங்கே எழாயிரம்! )

ஆம்ஸ்தெர்டெம்ல் நல்ல பல சாக்லேட்ஸ் கிடைத்தது. நாளை அலுவலகத்தில் அனைவர் வாயிலும் பாலாக (!) இருக்கும்.

களைப்பில் பேசிக்கொண்டே தூங்கிவிட்டேன், இப்போ தான் எழுப்பினார்கள். சிக்கன் குழம்பு கம கமக்குது!

ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய புத்தகம் கிடைக்கபெற்றேன். இப்போது தூங்கி எழுந்தவுடன் படிக்கிறேன்.

"கல்யாண்ஜியின் முன்னுரையோடு “மழை வரும் பாதையில்..”"

புத்தகம் கிடைக்கும் இடம்: (Rs 70/- MO)

vamsi books
19, T.M.saroan
Thiruvannamalai

***

கல்யாணம் ஏகதேசம் முடிவு செய்த மாதிரி தான். பிறகு எழுதுகிறேன். இந்த ஜோதிடம் அல்பாயுசு செவ்வாய் போன்ற விசயங்களை ஆழ்ந்து பார்க்க வேண்டும். அம்மா நம்புகிறார்கள்!

மன ஒற்றுமை தான் முதலில் வேண்டும். இப்போ பார்த்து வைத்திருக்கும் பெண்ணும் என்னை மாதிரி ஹிந்தி தெரியாதவள். ப்றேஞ்சாவது தெரிந்திருக்கவேண்டும். கீழை நாட்டு பின் நவீனத்துவங்கள் படிக்க வசதி.

நன்றி!