Monday, February 1, 2010

இறை நிலை இயற்கை

இயற்கை
இறை நிலை
இரண்டும் ஒன்று தான்
எனக்கு கல்யாணம்
நடந்தவுடன்
மனைவியோடு தெரிந்தது
கெட்ட விசயமில்லை
அனுசரித்துப்போவது....
வேண்டுவதை தருவது
கேட்பதை கொடுப்பது
அம்மாவிடம் கிடைப்பது
எல்லாம் கொடுக்கும் வரம்
மனைவியிடம் கிடைப்பது
கேளா வரம்!
புரிந்தவர்கள்
பாக்கியசாலிகள்

***

கடும் குளிரில்
நேரடி வேலையில்லாமல்
வேலைக்காக வேளையில்
ரேசிசம்
ஜிங்கோயிசம்
மெகார்த்தியிசம்
எல்லாம் செய்யும் அமெரிக்கா
சோசியலிசம் மட்டும்
விட்டு வைப்பது ஏன்?

அட போங்கையா
ஹைட்டியிலும் கடை விரித்தால்
பெட்ரோல் கிடைக்குமோ என்னவோ
இல்லை கூபாவை
மிரட்டி பணிய வைக்க
இன்னொரு மேற்கிந்திய கூடாரமா?

***

இறை நிலை
உணர்த்தும்
ஒவ்வொருவரின்
புருவத்தின் மத்தியில்
இருக்கும் வரை!

1 comment:

  1. அமெரிக்கா சென்றவுடன் ஒரே கவிதை மாயம் தான். குளிரா?

    ReplyDelete