Friday, July 10, 2009

அறுபத்தொன்று

இந்த பதிவை பார்த்தேன்... எனக்கு சில விஷயங்கள் ஞாபகங்கள் வந்தன...

"அதென்ன அறுபத்தொன்று....?"

அறுபத்தொன்று என்பது பெண்களின் நாள் தள்ளிபோவதை கணக்கு வாய்த்த ஒன்று. இரண்டு மாதம் என்றால் குழந்தை நிச்சயம். எங்கள் ஊரில் சொல்ல கேள்விப்பட்டுள்ளேன்! ( அந்த நாளில் கேலண்டர் எல்லாம் இல்லே... நிலாவை வைத்து முன் பின் கணக்கு தான் போடுவார்கள் )

***

அதை பிற்காலத்தில் நாற்பத்தியேழு நாட்கள் என்று டாக்டர்கள் குழந்தை கன்பர்ம் செய்ய உபயோகித்தார்கள்... ஒரு சினிமா கூட வந்தது!

***

பெண்ணுக்கும் நிலவுக்கும் எவ்வளவு சம்பந்தம்?

கவிஞ்சர்கள் எல்லாம் நிலவை வைத்து தான் பெண்கள் வர்ணனை செய்வார்கள்.

ஆங்கிலத்தில் "வூ" என்று சொல்லுவார்கள்.

குறுந்தொகையில் பெண்ணை நிலாவை ஒப்பிடும் பாடல்கள் எத்தனை?

Thursday, July 9, 2009

காசு பிடுங்கும் சாமியார்கள்

விஜயஷங்கர் அவர்கள் எழுதிய இந்த பதிவு படித்தேன்...

"சில நினைவுகள், மாயை"

அருமை... சிந்திக்க வைக்கும் மாயை.

இந்த காசு பிடுங்கும் சாமியார்களை நம்பாதீங்க! இந்த ஆளை எங்க அம்மாவும் ( அப்பா கூட ) வீட்டிற்கு கூட்டிட்டு வந்து தங்க உருத்திராட்சம் எல்லாம் கொடுத்திருக்காங்க.

நாமக்கல்லிலே விறகு பொறுக்கிட்டு இருந்த பையன், இப்போ ஆஹா இந்த நிலைமையில்? எல்லாம் கலி காலம் தான் பாஸ்! யாரோ ரெண்டு மூணு பேர் கூட சேர்ந்து சில ஸ்லோகங்களை படிச்சுட்டு... ரொம்ப தான் உடான்ஸ்...

அப்புறம் அந்த பிட்டி இடம், கோவில், லோகல் கிராமத்திலிருந்து அகப்படுதப்பட்டது... திருப்பி கேட்டால், கூட இருக்கும் ரவுடிகள் அடித்து துவைத்து விடுவார்கள்! பாவம். இப்போ அந்த ஊர் பெரிய மனுசர், கான்பிடண்ட் க்ரூப் என்று ரியல் எஸ்டேட் கம்பெனி வைத்திருக்கிறார்! தெலுங்கு ஆள். எங்க பாஸுக்கு சொந்தம்... ரொம்பவும் பயப்படுகிறார்! சாமியார் பாவம் வேண்டாமென்று!

இன்னும் கொஞ்சம் மோசமான விஷயம், டாய்லெட் தவிர... வெளிநாடுகளில் இருந்து வரும் பாரினர்களுக்கு கஞ்சா, மாவா போதை சப்பளை.... ஈசியாக அங்கு உள்ளே யாரும் நுழைய முடியாது! ஒரு விஷம ஏரியா... கோட்டை போல. மாட்டிகிட்ட வெளியே வர முடியாது.

ஒரு முறை நானும் நண்பரும் அங்கு சென்றோம். ஐந்தாயிரம் கொடுத்து ஈ.எஸ்.பி கோர்ஸ் எடு என்று ( கிரெடிட் கார்ட் ஒக்கே ) நிறைய வற்புறுத்தல்....

பிட்டி ஆலமரம், கோவில் நன்றாக இருக்கும்! சுயம்பு என்று சொல்லி ஒரு கல்லை காட்டியிருப்பார்களே...