Friday, March 4, 2011

இன்டர்நெட்டில் துக்ளக்

நெட்டில் சுட்டது.... யாரோ பெயர் தெரியாத பெரும் மனிதர் எழுதியிருப்பார் போல! ( குரங்கு படம் போட்டிருக்கார் டிவிட்டரில் )

ஹாய் தலைவா -

லாங் டைம் ரீடர், பர்ஸ்ட் டைம் லெட்டர் ரைட்டர். உங்க எல்லா எழுத்தையும் தேடித்தேடிப்படிகிறேன். உங்க ப்ளாக்க்கும் நீங்க எழுதின சில நாவல்கள் கட்டுரைகள் தவிர எல்லாத்தையும் வாசிச்சிடுவேன். உங்க ப்ளாக் வந்து நாளுக்கு ஒரெழுத்து வாசிக்காம காலைக்கடனே கிடையாது. நீங்க அப்டேட் பண்ணாத அன்னிக்கு என் பல்ஸ் பப்பலப்பலஸ் ஆகி எகிறீடுது. ஆனா நீங்க சமிபத்தில் துக்ளக்கில் எழுதுவதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. என்ன சமாதானம் சொன்னாலும் என்னால் ஏத்துக்கவே முடியலை! ஏன்?

- வாரணேஷ்
மடகாஸ்கர், ஆப்ரிக்கா

பதில்:

நான் தூங்கி எட்டேமுக்கால் நாள் ஆகிறது. மடகாஸ்கர் கவிஞர் யான்-யோசேப் ரப்பியர்வெலோ (இதை ஜின் ஜோசப் ராப்பியர்வேல் னு தமிழ்ல ஒருத்தர் மொழி பெயர்த்திருக்கார், அவரென்ன ராப்பிச்சையா எடுத்தார்?) எழுதிய கள்ளிச்செடின்ற கவிதைதான் ஞாபகம் வருது. Lepers in finery of flowers. பூந்தோட்டத்தின் ஊடே குஷ்டரோகிகள். ப்ரெஞ்சு காலனிய அடிமைத்தனத்தில் மாட்டியிருந்த மக்களின் நிலையை கவிதை வழியே வலியுடன் வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழ் இலக்கிய சூழல் அப்படிதான் இருக்கிறது. குஷ்டரோகிகளுக்கு மத்தியில் ஒரு பூச்செடி. மனம்பிறழ்ந்தவர்களுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருப்பதை போல உணர்கிறேன். என்னுடைய கலகம் காதல் இசை புத்தகம் படித்திருக்கிறீர்களா? என் புத்தகங்களை நானே தெருத்தெருவாக போய் வித்து கொண்டிருக்கிறேன். இதற்கு நான் கும்பி காட்டி விந்தே வித்துக்கொண்டிருதிருக்கலாம். போன வாரம் இப்படித்தான் ஹமீதுக்கு ஒரு கட்டுரையை மூச்சுவாங்க தட்டச்சிக்கொண்டிருந்தேன். 25 நிமிடத்தில் அடித்து ஹமீதின் இமெயிலுக்கு அனுப்பிவிடவேண்டும். இல்லையானால் இந்த பாலாய் போன தேசத்தில் மின் இணைப்பு அறுந்துவிடும். ஹமீது ஏற்கனவே 78 டெக்ஸ்ட் மெஜேஜ் அனுப்பி இருந்தார். அதை நான் எண்ணிகூட பார்க்கவில்லை. இந்த வேதனையில் ஜோரோவுக்கு முப்பது நிமிசங்கள் தாமதமாய்தான் அதற்காய் ப்ரத்யேகமாய் அமெரிக்காவில் இருந்து தருவித்த உணவளிக்க முடிந்தது. முன்பு ப்ரான்ஸிலிருந்து தருவித்த உணவுகள் ஜோரோவுக்கு ஒத்துக்கொள்வதில்லை. மூன்று நாட்கள் கடுமையான வயிற்றுப்போக்கு, வெட்ரேரியன் தாமஸ் டையக்னோஸ் செய்துவிட்டு ஆர்கானிக் உணவுகளையே ஜோரோவுக்கு வழங்க வேண்டும் என்று ப்ரிஸ்க்ரிப்ஷனும் ஆராயிரத்துக்கு பில்லும் கொடுத்துவிட்டார். என் இலக்கியத்துக்காக ஒரு வாயில்லா பிராணி முப்பது நிமிடங்கள் காலதாமதமாய் உணவருந்த வேண்டியுள்ளது. உங்களுக்கு இது புரிகிறதா? எத்தகைய சூழலில் தமிழ் எழுத்தாளன் வாழவேண்டியுள்ளது என்று எண்ணிப்பார்த்திருக்கிறீர்களா?

சரி உணவு வைத்துவிட்டு வந்து பார்த்தால் மேசையில் காகிதங்கள் தீர்ந்துவிட்டது. ஒரு குயர் காகிதம் என்ன விலை என்று என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா? பல பத்திரிக்கைகளுக்கு எக்ஸிக்யூட்டிவ் கோல்ட் பாண்ட் ஏ4 காகிதத்தில்தான் எழுதி அனுப்பவேண்டியுள்ளது. கையிலோ பணமில்லை. என்ன செய்தேன் தெரியுமா? பழைய வாரப்பத்திரிக்கை, நாளிதழ்களின் ஓரத்தில் நுணுக்கி நுணுக்கி எழுதினேன். இந்த கடிதத்தைக்கூட அப்படித்தான் எழுதினேன். இப்படியே 9 நாட்கள் காகிதம் வாங்கக்கூட காசில்லாமல் வீட்டில் இருந்த நாளிதழ்களில் எல்லாம் நுணுக்கி நுணுக்கி எட்டேமுக்கால் நாட்களாய் எழுதி கொண்டிருக்கிறேன். என் கை விரல்கள் கிரணிப்பபழம் போல வீக்கம் கண்டுள்ளது.

இப்போது சொல்லுங்கள் நான் ஏன் துக்ளக்கிற்கு எழுதக்கூடாது என்று?

3.4.11

3:39 a.m.