Thursday, June 4, 2009

முயற்சி திருவினையாக்கும்

இங்கே இருக்கு படம்...

படம் பார்த்து கவிதை சொல்லுங்க - 5



முயற்சி திருவினையாக்கும்
உதயசூரியனைப்பாருங்கள்
எண்பத்தாறு வயதாம் அவருக்கு
பல கோடி வருடங்களுக்கு சமம்

சிறு சிறு நட்சத்திரங்களும்
அவரவர் இடத்தை அடையும்
இங்கு மக்களும் நாடாளும்
விதத்தில் பங்கு கிடைக்கும்

கோபம் கொண்ட சிறு பெண்
தன் கனலை காட்டுது
உன் தணலால் அப்பெண்ணை
அரவணைத்து காப்பாற்றிடுவாய் அய்யா!

Wednesday, June 3, 2009

நான் ரசித்த சிறு சிறு கதைகள்

சுஜாதா எழுதிய 'சிறு சிறு கதைகள்' என்னும் புத்தகத்தில் படித்தது- 2 வார்த்தைகளில் கதை எழுதலாமாம். அவர் சில உதாரணங்களை கொடுத்து உள்ளார். அவை....

தலைப்பு: கரடி வேஷம் போட்டவனின் கடைசி வார்த்தைகள்
கதை: ஐயோ சுட்டுடாதே!

தலைப்பு:2050ல் குழந்தை
கதை: தங்கச்சின்னா என்னம்மா?

தலைப்பு: வசந்தாவின் கணவன்
கதை: சுசீலாவோடு எப்படி?

இது நெட்டில் சுட்டது. இமெயிலில் எனக்கு வந்தது. நண்பர் நாராயணன் அனுப்பியது!

1) தலைப்பு: மாமியாரின் கோபம்
கதை: பொண்ணு பொறந்திருக்கு!

2) தலைப்பு:காதல் கசக்குதய்யா!
கதை: "இந்தாங்க.... invitation."

3) தலைப்பு: முடிவு
கதை: "மச்சி, ஊத்திகிச்சுடா!"

4)தலைப்பு:கனவுகள்
கதை: வேலை போச்சு!

5) தலைப்பு: திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
கதை: "யாரும்மா இவரு?"


------

அட்டகாசம்!

Tuesday, June 2, 2009

உணவில் என்ன பிரிவினை

என் ஆந்த்ரா நண்பர் வீட்டிற்கு ஒரு சனிக்கிழமை சென்றேன். அவர்கள் எனக்கு மதிய உணவில் மாமிசம் பரிமாறினார்கள். எங்கள் வீட்டில் இது மாதிரி இல்லை. இருந்தாலும் ஒரு குறுகுறுப்பு. சரியா தவறா? உணவில் என்னபிரிவினை? முதலிலேயே அவரும் கேட்கவில்லை! பரிமாறிய பின் வேண்டாம் என்று சொன்னால், ஒரு மாதிரி இருக்கும்.

பின்னொரு சமயம், இதை பற்றி நண்பரிடம் சொல்லிவிட்டேன். அவரும் கண்டுக்கொள்ளவில்லை.

********

ஸ்வாமி ஓம்காரும், பதில் சொல்லியிருக்கிறார்.

திரு ராஜூ,

மாமிசம் சாப்பிடவேண்டும் சாப்பிட வேண்டாம்.. இவை தான் நாம் எடுக்க வேண்டிய முடிவுகள்.

ஒரு உயிரை பலிவாங்க நாள் கிழமை தேவையில்லை. உருவாக்கவே நாள்கிழமை பார்க்கவேண்டும்.

---- அருமையான பதில் ------ நன்றி!

Monday, June 1, 2009

தெய்வம் நின்று கொல்லும்

இரண்டு வாரம் முன்பு.

ஏர் பிரான்ஸ், நண்பர் ஒருவர் யுரோப் வேலை முடித்து விட்டு, பாரிஸ் வழியாக இந்திய திரும்புகிறார். டெக்னிக்கல் ஸ்னேக் என்பதால், 55 இந்தியர்களை தவிர, மற்றவர்கள் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டனர். இந்தியர்களுக்கு நாமம். குடி தண்ணீர், உணவு மற்றும் உறைவிடம் இல்லை.

அதில் ஒரு ஆன்மீகவாதியும் இருந்திருக்கிறார்.

*********

ஒரு வாரம் முன்பு.

ஏர் பிரான்ஸ், இன்னொரு நண்பருக்கும் அதே கதி. அதே அளவு இந்தியர்கள் கொடுமை. விசா இல்லையாம், ஒன்றும் செய்ய முடியாது. ஏர்போர்டில் தான் தங்கள்... அவர்கள் ஒன்றும் கொடுக்க வில்லை. குடி தண்ணீர், உணவு இல்லை.

அதில் ஒரு பாதிரியாரும் அடக்கம்.


*******

இன்று

ஏர் பிரான்ஸ் விமானம், 216 பேசஞ்சர்களுடன் ரியோவிலிருந்து (12 க்ரூ), பாரிசுக்கு பயணம். சுமார் இந்திய நேரம் 11.30 AM அளவில் ப்ளைட் அட்லாண்டிக் ஓசன் மீது காணவில்லை... யுரோப்பை நெருங்கும் சமயம்.

பிழைத்திருந்தால் மிக மிக நன்று. பிரார்த்திக்கிறேன். இல்லாவிட்டால், இறந்தவர்களுக்கு என் அஞ்சலிகள். அவர்கள் மீது குற்றமில்லை. ஆயுசு அவ்வளவு தான்.

ஏர் பிரான்ஸ்?

நீதி - துர் எண்ணம் கொண்டவர்கள் நடத்தும் நிறுவனத்தில், சேவை பெறக்கூடாது!

கல்யாணம் நிகழ்வு

விக்னேஷ்வரி எழுதிய ஒரு பழைய பதிவை படித்துக்கொண்டு இருந்தேன்.

"எனது திருமண நிகழ்வு"

நான் போட்ட கமன்ட்... இந்த விஷயம், ரொம்ப கஷ்டம்.

கேக்கணும் ஒரு விஷயம், இப்படி மணிக்கணக்கில் உட்கார்ந்து மேக்கப் போட்டுக்கொண்டால், கால் ஆப் நேசூர் எண்ண செய்வார்கள் பெண்கள்?

பின்குறிப்பு - எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை, அக்காவின் கல்யாணத்திற்கு இப்படிப்பட்ட விஷயம் எங்களூரில் இல்லை. வீட்டில் டிப்பன், காலை கோவிலில் தாலி, மீண்டும் மதியம் வீட்டில் சாப்பாடு, அப்புறம் மதுரைக்கு கிளம்பிட்டாங்க. சிம்பிள்.

உங்கப்பா பத்தி எழுதலே?

*****

எங்கக்கா கல்யாணத்தில் எங்கப்பா தான் அழுதார். என்னமோ தெரியலே, தமிழ்நாட்டில் பெண்களை கல்யாணம் செய்து வைத்தால், அப்பாக்கள் அழனும் போல? அதுக்கப்புறம், அவர் காலமாயிட்டார். ரொம்ப வருஷம் ஆச்சு.


********

அப்பா ஞாபகம். மனசு சரியில்லே. மதியம் சரியாக லன்ச் இல்லே. ஒரு பேல் பூரி மட்டும்... இரண்டு மணி மீட்டிங் இருந்தது. இப்போ வயிறு கடா மூடா. டீயோடு ஒரு பப்ஸ் அடிக்கவேணும். பியூன் ஒருவர் தான் எங்களுக்கு. வாங்கிவர சொல்லணும்.

கல்யாணம் ஆயிட்டால், இந்த மாதிரி வத்தப்போட வேண்டியதில்லே?

What Programmers say, when something is not working

20. That’s weird….

19. It’s never done that before.

18. It worked yesterday.

17. How is that possible?

16. It must be a hardware problem.

15. What did you type in wrong to get it to crash?

14. There is something funky in your data. OR It’s a data problem, not a program problem.

13. I haven’t touched that module in weeks!

12. You must have the wrong version.

11. It’s just some unlucky coincidence.

10. I can’t test everything!

9. THIS can’t be the source of THAT.

8. It works, but it hasn’t been tested.

7. Somebody must have changed my code.

6. Did you check for a virus on your system?

5. Even though it doesn’t work, how does it feel?

4. You can’t use that version on your system.

3. Why do you want to do it that way?

2. Where were you when the program blew up?

And the Number One Thing Programmers Say When Their Programs Don’t Work:

1. It works on my machine.

இது எங்க ஏரியா

இது எங்க ஏரியா

சும்மா தான், காலையிலே, ஒரு ஸ்டார்ட். எங்கிருந்து வரேடா னு ஒருத்தர் கேட்டார். விகிமேப்பில் போட்டு காட்டிட்டேன். எப்படி?

********

டெக்னாலஜி கொஞ்சம் ஜாக்கிரதையாக யூஸ் பண்ணனும்...

********

எப்படியியொ இந்த மாசம், சம்பளம் செக் வந்தாச்சு. ஏப்ரில் மாச சமபளம், கம்பெனி ஸ்டாக் ஆகிவிட்டது. வேலை இருந்த வரை லாபம் தானே?

********

ரூம் மேட சரவணன், இன்னைக்கு காலையிலே, எங்க ஹாலில் இருக்கும் விநாயகருக்கு பெரிய மாலை போட்டான். அந்த சிலை வந்த கதை அப்புறம்.

Sunday, May 31, 2009

இரண்டு முட்டையும் ஒரு வெங்காயமும்

நானும் என் ரூம் மேட் சரவணனும், இந்த சமையல் கலை பழக, சனி / ஞாயிறு தான் எடுத்துக்கொள்வோம். எங்கள் ரூம் என்பதை விட, இது சிங்கிள் போர்சன் வீடு என்றே சொல்ல வேண்டும். ஐந்தாயிரம் வாடகையும், ஐம்பதாயிரம் அட்வான்ஸ். கல்யாணம் செய்த பின், இன்னும் ஒரு நல்ல இடத்திற்கு மாற வேண்டும்!

காலையில் எழுந்தவுடன், இரண்டு கிலோமீட்டர், நடைபயிற்சி ( அதை ஏன் கேக்குறீங்க, குளிர் வேற!) முடித்தவுடன்... சூடாக, ஒரு காபி. அரை லிட்டர் பால் ரூ. 10/- ( காபி தூள், சக்கரை, மாதம் ஒரு தடவை வாங்குவோம்.), பக்கத்து கடைக்காரன், எப்போதும் வைத்திருப்பான்.

இந்த வீடு வந்தவுடன் கேஸ் கனெக்சன், பாரத் கேஸில் இரண்டு சிலிண்டர் வாங்கிவிட்டேன் - பக்கத்து தெருவில் தான். வாடகை அக்ரீமன்ட் காபி ஒன்று போதும்.... பி.டி.எம் பர்ஸ்ட் ஸ்டேஜ். இரண்டு மாதத்திற்கு ஒரு சிலிண்டர் செலவாகுது. இதற்கும் எப்போதாவது தான் சமையல். சிலிண்டர் ஆர்டர் செய்து விட்டு, அதை வாங்க, நடை நடப்பது ஒரு பெரிய கதை - டெலிவரி ஆள், ரொம்ப படுத்துவான் - ஆபீஸில் இருக்கும் சமயம்! ஒரு மாடி படியில் ஏற வேண்டுமாம், பதினாறு ரூபாய் அதிகம் வாங்கிக்கொள்வான். ஊரில் அம்மா இரண்டோ நாலோ கொடுப்பார்கள்..

அம்மா வீட்டிற்க்கு வரும் போது, நன்றாக சமைத்துப்போடுவார்கள். அதுவும் ஒரு அட்வான்டேஜ் தான்!

சரி, இன்றைய பிரேக் பாஸ்ட் இப்படி ... (ஹோட்டல் சாப்பாடு கதை வேறு)

இன்று முட்டை விலை ரூ. 3/-.

வெங்காயம், கிலோ ரூ. 10/-.

மாடர்ன் பிரெட் ஒரு லோப் ரூ. 16/-

சரி எதுக்கு விலை எல்லாம்? ஒரு ஹிஸ்தொரிக்கல் ரெகார்ட் தான். சரியாக இரண்டு வருடத்தில் 50% ஜாஸ்தி.

இரண்டு முட்டையும், ஒரு பெரிய வெங்காயம் 100 கிராம். வாங்கிக்கொண்டு, ரூமை அடைந்த போது, காலை பத்து.

ஸ்டவ்வை பத்த வைத்து , தோசை கல் வைத்தேன்.

கல் காய்ந்தவுடன், முட்டை உடைத்து, கட் பண்ணி வைத்து இருந்த வெங்காயத்தை போட்டு, கொஞ்சம் உப்பு காரம் சேர்த்து கலக்கி ஊற்றினால், ஆம்லெட் ரெடி. என்ன ஒரு ஸ்பூன் எண்ணெய் வேண்டும்!

ப்ரெட் டோஸ்ட் செய்து, சாண்ட்விச்சாக சாப்பிட அருமை. என்ன ஊறுகாய் அல்லது சாஸ் கூட வேண்டும்.

மிச்சம் இருந்த பாலில் மீண்டும் ஒரு காபி!

நல்ல ப்ரேக்பாஸ்ட்.

பக்கத்து ஹோட்டலில், இதே ஐடங்கள், இரண்டு பேருக்கு ஐம்பது ரூபாய் ஆகும்.

******

அடையாறு ஆனந்த பவனுக்கு சென்று மதியம் ப்ளேட் மீல் வாங்கிக்கொண்டோம். கூட இரண்டு ரஸ மலாய். ( இதுக்கு ஒரு பிரியாணியே வெட்டியிருக்கலாம்... )

டின்னருக்கு, ரூமிற்கு ஒரு நண்பர் வருவதால், இரண்டு சிக்கன் பிரியாணி, சிக்கன் கேபாப் வாங்கி வர வேண்டும்!

நாங்கள் சிக்கன் பிரியாணி செய்த கதை ஓர் தனி பதிவாக!

*****

அடுத்த வாரம் அம்மா வருகிறார்கள், சேலம் வரை பஸ், பிறகு, மதியம் 4 மணி ட்ரெயின். எட்டு மணிக்கு கண்டோன்மெண்டில் போய் கூட்டி வர வேண்டும்.

இங்கு இப்போ வெக்கை இல்லாததால், ஒரு வாரம் இருந்து விட்டு போவார்கள்.