Monday, February 8, 2010

ஜோதிடம் உண்மையா பொய்யா?

ஜாதகத்தில் ஒவ்வொரு வீட்டின் அதிபதிகள் யார்?
எல்லோருக்கும் பொதுவா?

ஒரு வீட்டின் அதிபதி இன்னொரு வீட்டில் இருப்பது புரிகிறது.

ஆனால், சில ராசி கட்டங்களில் இரண்டு மூன்று கிரகங்கள் இருந்தால், பவர் எப்படி இருக்கும்?

என் அப்பா சொல்வார் "ஜோசியத்தால் பரிகாரம் செய்து கெட்டவர்கள் தான் அதிகம்" ( திண்டுக்கல் பழமொழி )

அப்படியானால் ஜோதிடம் எப்படி உபயோகத்தில் கொள்வது?

2 comments:

  1. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. தங்கள் தந்தை சொல்லும் அப்படியே!
    அதைக் கடைப்பிடித்து வாழ்வில் நம்பிக்கை வைத்து முன்னேறுங்கள்.
    என் தந்தை கூறுவார். "பிறக்கேக்க முடமானால்; பேய்க்குப் பார்த்துச் சரிப்படாது"
    அத்துடன் சென்ற ஞாயிறு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரபான; சோதிடம்
    அறிவியலா?; அறிவீனமா? எனும் நிகழ்ச்சியையும் பார்க்கமுயலவும்.
    சோதிடர்கள் எவ்வளவு பொய்யர்கள்; வார்த்தை யாலம் போடுபவர்கள் என்பதைப்
    புரிவீர்கள்.
    மனதை அலை பாய விடாதீர்கள். இவர்களிடம் ஒரு தடவை மாட்டினீர்களோ?
    மீள விடமாட்டார்கள்.
    "வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும்
    வந்த துன்பம் எது என்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை.
    எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.
    நமக்கு வந்த துன்பம் உலகில் சிறியது; நாம் பெற்ற இன்பம் உலகில் பெரியது என
    நினைக்கப் பழகுங்கள்.
    உலகில் சந்தோசமான மனிதர் நீங்கள் தான்.
    செருப்பில்லாத நாம்-காலில்லாதோரைப் பார்த்து ஆறுதல் கொள்வோம்.

    ReplyDelete
  2. வரும் முன் காப்பது தான ஜோதிடத்தின் முழு பலன், உபயோகம். விழப்போகும் குழி அளவு தெரிந்தால், அதற்கு தகுந்த மாதிரி நீங்கள் தயார் செய்து கொள்வீர்கள் அல்லவா? எந்த காலத்தில் ஒருவரின் முயற்சி அளவு அதிக பலன் கொடுக்கும் என்பதும்ஜோதிடத்தின் உபயோகம். நீங்கள் உங்களை நல்ல நிலையில் தயார் செய்து கொள்வீர்கள்.
    பழைய தவறுகளை அலச இது ஒரு சமயம். அதன் காலத்தில் தவறு நேர வண்ணம், எப்படி தடுப்பது என்பது மனம் சொல்லிக்கொடுக்கும்.

    ஜோதிடம் தெரிந்தவர்கள், தங்கள் நேரத்தினை விலை மதிக்க முடியாத அளவு உதவி செய்ய வேண்டும். ஓசியில் டைம் வேஸ்ட் செய்பவர்களை தவிர்க்க பணம் சார்ஜ் செய்வது தவறில்லை. சொந்த அனுபவம்எனக்கு.

    ஆனால் சிலர் கல், மாணிக்கம், ருத்திராட்சம் அணிந்தால் பெரிய பணக்காரன் ஆவீர்கள் என்று சொல்வது முட்டாள்தனம்! ( விற்பவர்கள் தான் பணக்காரர் ஆகிறார்கள் ). நம்பிக்கை மட்டும் கொடுத்தால், குறைந்த விலையில் எத்தணை மோதிரம் வேண்டுமானாலும் அணியுங்கள்.

    ஊரில் சிக்கன்குனியா இருந்தால், வீட்டில் கொசுவர்த்தி சுருள் , ஹோமியோ மருந்து என்ற நாடுவது போல தான், ஜோதிடத்தை நாட வேண்டும்.

    ReplyDelete