Tuesday, November 19, 2013

Sachin Says Thanks You

Here is a auto generated autograph picture of Sachin I got based on a tweet I sent to BCCI with hashtag #ThankYouSachin.


Saturday, June 29, 2013

படித்ததில் பிடித்தது : கூத்து , அமேரிக்கா ரிடர்ன்ஸ்..

வெளிநாட்டுக்கு போயிட்டு வந்துட்டு , நம்ம ஆளுக பண்ணுற கூத்து ...

இதையும் படிங்க முதலில் ...  விஜயஷங்கர் எழுதியது!

You are a Desi if இப்போ நம்ம கதை

அமேரிக்கா ரிடர்ன்ஸ்.. (1) கையில மினரல் வாட்டரை வச்சிக்கிட்டே திரியிவாங்க… (அவங்க சுகாதாரமா இருக்காங்களாம்!)

(2) வெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு லக்கேஜ் கொண்டு வந்த பேக்கில் உள்ள ஸ்டிக்கரை 4 மாசம் ஆனாலும் கிழிக்க மாட்டாங்க.. (10 லட்ச ரூபாய் லாட்டரி சீட்டு போல, பத்திரமா வச்சிக்கிட்டு என்ன பண்றாங்களோ?)

(3) கேபின் லக்கேஜ் பேக்கை, நம்ம ஊரு ரோட்டுல உருட்டிக்கிட்டு அல்லது தள்ளிக்கிட்டு போறதுக்கு முயற்சி செய்வாங்க.. (நம்ம ஊரு ரோட்ல கார் ஓட்டுறதே, சர்க்கஸ் சாகசம் மாதிரி.. இதுல இதுவேறயா?)

(4) குளிக்கவே தேவையில்லாத மாதிரி சென்ட்டு, டியோட்ரன்ட், பாடி ஸ்பிரே அடிச்சிகிட்டு அலையறது (பக்கத்துல நின்னு பேசறவங்களுக்கே.. மறுநாள்தான் அந்த வாசனையே போகும்னா பாத்துக்கோங்க!)

(5) கையேந்தி பவன்ல கூட கிரிடிட் கார்டை எடுத்து நீட்டுவாங்க… (மப்புல இல்ல, மேகம் தெளிவா இருக்கும்போதே!)

(6) சுத்தத்தை பத்தி அடிக்கடி மறக்காம விவேக் போல பேசிகிட்டே இருப்பாங்க. ரோட்டு கடையில டீ சாப்டுட்டு, கப்பை கரைக்டா குப்பதொட்டியிலதான் போடுவேன்னு அடம் பிடிப்பாங்க! (வீட்டுல சாப்பிட்ட தட்டை எடுங்கப்பா முதல்ல..)

(7) எதைவாங்கினாலும் டாலர்லே யோசிச்சி “ஹேய்.. சாப்பாடு 2 டாலர்ஸ்தான்!, வாவ்.. மட்டன் கிலோ 10 டாலர்ஸ்தான்”னு ராமானுஜன் ரேஞ்சுக்கு கணக்கு பண்ணுவாங்க.. (ஆடம் ஸ்மித் கூட, புக் எழுதும்போது இப்படி யோசிச்சருக்க மாட்டாரு!)

(8) தும்மலோ.. கொட்டாவியோ.. வந்தா முடிச்சிட்டு “எக்ஸ்சூஸ் மீ!” ன்னு சொல்றது… (அப்படி சொல்லும்போது நாம அவங்கள வடிவேலு ரேஞ்சிலதான் பார்போம்ங்கறது வேற விசயம்!!)

(9) “செளக்கியமா”ன்னு கேக்காம.. “ஹாய்”ன்னு சொல்றது, “லட்ச”த்துக்கு பதிலா.. “மில்லியன்ல” சொல்றது, தயிருக்கு பதிலா.. “யோகர்டு”ன்னு சொல்றது, “ஹய்வே”க்கு பதிலா “ஃப்ரீவே”ன்னு சொல்றதுன்னு பீட்டருக்கே பீஸா குடுக்குற ரேஞ்சிக்கு பிரிப்பாய்ங்க! (இந்த பாயின்ட் பெங்களூர் வாசிகளுக்கும் பொருந்தும்!)

(10) சாப்பாட்டுல காரம், மசாலா அயிட்டங்களை தவிர்ப்பது. சாப்பிடறப்பவோ.. இல்லனா, சாப்ட்டு முடிச்ச அப்புறமோ.. கண்டிப்பா “கோக்கோ (அ) பெப்சியோ” இருக்கனுமுன்னு அடம்புடிக்கிறது! (சுகாதாரம்..சுகாதாரம்ன்னு சொல்லிட்டு, டாய்லெட் ஆசிட்டை குடிங்கடே!)

(11) சாதா ஹோட்டலுக்கு சாப்பிட போயிட்டு.. “தாபா இருக்கா, அலா கார்ட் மட்டுமா, ஃபப்பே சிஸ்டம் இல்லியா, குபாக்/குணாஃபா உண்டா” ன்னு சப்ளையருக்கு கொலவெறியை கெளப்புறது! (வீட்ல இதெல்லாம் கேட்டா, சுடுதண்ணியை சுட வைப்பாங்கன்னு தெரிஞ்சிதான்.. ஹோட்டல்ல இந்த அலப்பரை!)

(12) வந்த ஏர்லைன்ஸ் பத்தி…  சீட்டு சரியில்ல, ஜன்னல் பக்கத்துல உக்காரமுடியல, ஏர் ஹோஸ்டஸ்  முக்கு சப்பை, ஒரு பாட்டால் மட்டும் தான் கொடுக்கிறாங்க ... கஞ்சப்பசங்க.. சாப்பிட சரியா ஒன்னும் குடுக்கலைன்னு வந்து சேர்ந்துட்டு ஒரு வாரமா கொறை சொல்லிகிட்டு சுத்துறது.. (யப்பா.. பணம் டிராவல் பண்றதுக்கு மட்டும்தான், ஃபிளைடையே உங்க பேருக்கு எழுதி வைக்கல!)

(13) கடைசியா ஆனா நங்குன்னு ஒன்னு…

எதை சொல்ல வந்தாலும்.. “இப்படிதான் அமேரிக்கால…”, ன்னு ஆரம்பிப்பாங்க!!…

படித்ததில் பிடித்தது - இங்கே பதிவாக பகிரப்பட்டுள்ளது

Saturday, April 6, 2013

சித்தர் பாட்டு

ஊரிலுள்ள மனிதர்காள் ஒரு மனதாய்க் கூடியே
தேரிலே வடத்தையிட்டு செம்பைவைத்து இழுக்கிறீர்
ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை
பேதையான மனிதர் பண்ணும் பிரளிபாரும் பாருமே!

- சித்தர்   பாட்டு 

நக்கீரனில் கண்ட பாடல் இது.

என்ன உண்மை நிறைந்த உலகம் இது.

என்னால் எனக்கு உதவி செய்த மனிதருக்கு ஒரு உதவியும் செய்ய முடியவில்லை.

Monday, January 21, 2013

விஸ்வரூபம்
நண்பர் ஒருவரிடம் இருந்து வந்த கட்டுரை இது. நான் எழுதியது அல்ல.

அதை அப்படியே தருகிறேன்!

***

இது நெட்டில் சுட்ட கட்டுரை. மதத்தின் பெயரை சென்சார் செய்துவிட்டேன். ஒருவரின் மதத்தின் விடுதலை புரட்சி இன்னொருவருக்கு தீவிரவாதம்!

எழுதியவர் பெயர் வேண்டாமே? அவருக்கு மிக்க நன்றி. அவர் வலைதளத்தின் மிரட்டலுக்கு பயந்து கட்டுரையை எடுத்து விட்டாராம்.

என் சொந்த கருத்துகளையும் சில இடங்களில் இடைச்செருகல் செய்துள்ளேன். எனக்கும் பயமாக தான் இருக்கு. வாழ்க வளமுடன்

***

ஒருவர் யூ டியூப்  மட்டும் பார்த்தால்போதும், அந்த மதத்தின்  பெயரால் நிகழும் கொடூரங்களை ஆயிரக்கணக்காகப் பார்க்கமுடியும்.

மத புத்தக வரிகள் பின்னணியில் ஒலிக்க கழுத்தை அறுக்கும் காட்சிகள். அவை எதிரிகளால் உருவாக்கப்பட்டவை அல்ல. மதந்ம்பிக்கைக்காக உயிரையும் விடத்துணிபவர்கள் எடுத்து வெளியிடும் உண்மைக்காட்சிகள்!

அது வன்முறை மதம் என்றும்  தீவிரவாத மனநிலை கொண்டவர்கள் என்றும் பிறர் அஞ்சச்செய்யும் காட்சிகள் அவையே. பிரச்சாரங்களோ சினிமாக்களோ அந்த எண்ணத்தை உருவாக்கிவிடமுடியாது.

எல்லா மதங்களும், எல்லா கொள்கைகளும், எல்லா பற்றுகளும் வெறியாக மாறும்போது கொலைக்குத்துணிகின்றன. விதிவிலக்கு என்றால் சமண மதம் ஒன்றை மட்டுமே சொல்லவேண்டும்  (மஹாவீராய நமஹ, புத்தம் சரணம் கச்சாமி).

ஆனால் இன்னொரு மதத்தின் வேத புத்தக வாசகம் ஒலிக்க ஒருவரின் கழுத்தை அறுக்கும் காட்சியை நாம் காணமுடியாது.

அப்படியென்றால் பிரச்சினை எங்கே இருக்கிறது? நடுநிலை கொண்ட எந்த மதத்தவரும் எளிதில் ஊகித்துவிடக்கூடியதுதான். அந்த மதத்தை தீவிரவாதவெறிக்கு கருவியாக்குபவர்களே அதை செய்கிறார்கள். அதற்கு பிறரை பழி சொல்வதில் பொருளே இல்லை.

அந்த வகை தீவிரவாதத்தை கண்டிப்பதும், அதிலிருந்து தங்கள் ஆன்மீகத்தை பாதுகாத்துக்கொள்வதுமே எந்த மதத்தைச்சேர்ந்தவருக்கும் சவாலாக இருக்கமுடியும். ( பிழை இருந்தால் மன்னியுங்கள் )

ஆனால் அந்த மத அமைப்புகள் அந்த தீவிரவாதத்துக்கு எதிராக குரலை எழுப்புவதில்லை. ஆனால் அவர்கள் ஒருங்கிணைப்பு எல்லோரையும் மிகவும் ஆசிரியப்படுதுகிறது அதற்கு பிறர் நன்றி சொல்லவேண்டும் அந்த பாடம் படிப்பதற்காக!

ஒருவனே தேவன். ஒரே குலம், இது தான் அந்த மதத்தின் கோட்பாடு. இதே மாதிரி பல மதங்களும் அதீச்டுகள் ரேசனளிச்டுகள் போன்றோர் இருக்கிறார்கள். உலகில் ஒரு சதவிகிதம் இருப்பார்களா?

ஆனால் அந்த மதத்தில் பிரிவுகள் பல உண்டு என்று விக்கிபீடியா மூலம் அறிகிறேன்.

அவர்களின் அடிப்படைவாத நோக்கு ஆன்மீகத்தை ஒரு பொருட்டாக நினைப்பதே இல்லை. மாறாக அவர்கள் தங்களை வேட்டையாடப்படுபவர்களாக கற்பனைசெய்துகொள்கிறார்கள். என்ன விதத்தில் இது நியாயம்?

அமெரிக்கர்கள் எண்ணெய் / கனிம வளம் இருக்கும் இடத்தில பொய்கள் கூறி ஆக்கிரமிப்பு செய்கிறார்கள். ஒரு நாட்டின் தலைவரையும் தூக்கில் இட்டார்கள். யார் இருகிறார்கள் கேட்க அவர்கள் கையில் அணுகுண்டு இருக்கே! அமெரிக்கர்கள் மாதிரி ஒரு பயங்கரவாத நாடு எங்கும் இருக்க முடியாது எவன் கையிலும் துப்பாக்கி சிறு குழந்தைகள் சின்னாபின்னமாக சுட்டு கொள்கிறான் ஒருவன். வேலையை விட்டு தூக்கினால் வீட்டிலிருந்தோ, வெளியில் இரவல் வாங்கியோ வந்து பயர் செய்த ஆபிசரை சுடுகிறான். அதற்கு தான் வேலைகளை மாடு மாதிரி உழைக்கும் இந்திய , சீன, ஆசிய சமுதாயத்திற்கு அவுட்சோர்சிங் என்ற முறையில் அனுப்புகிறார்கள்.  டாலருக்காக நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு ( மன்னியுங்கள் மீண்டும் ஒரு முறை ) எட்டு மணி நேர வேலைக்கு பதினாறு மணி நேரம் உழைக்கிறார்கள். இதற்கும் அந்த நாட்டில் 1776 தொடங்கி 2008 இல் தான் வேறு நிறத்தவர், அடிமைகளாக இருந்த சமூகத்தை சேர்ந்தவர் (மேலே எழும்பி விட்டார்கள் என்று ஒரு குறியீடாக) ஜனாதிபதி ஆகிறார்!

தொடர்ச்சியாக, அதைக்கொண்டு தங்களுடைய எல்லாவகையான குரூரங்களையும் நியாயப்படுத்திக் கொள்கிறார்கள்.தொடர்ந்து எதிரிகளைக் கண்டுபிடிக்கிறார்கள். அவர்களுக்கெதிராக கொந்தளிக்கிறார்கள்.

அந்த மதத்தின் அமைப்புகளின் தலைவர்கள் தொடர்ந்து தங்கள் சமூகத்திற்கு ஒரு ஃபோபியாவை உருவாக்கியளித்துக்கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றம், சட்டம், பொதுவான மனிதாபிமானம், மாற்றுமதத்தினரின் நல்லெண்ணம் எதிலுமே தங்களுக்கான பாதுகாப்பு இல்லை என உணரும்படிச் செய்கிறார்கள். அந்த குல மக்கள் ஒன்றுபட்டு இந்த அமைப்புகளுக்க்கும் அதன் தலைவர்களுக்கும் கீழே அணிதிரள்வதே ஒரே வழி என நினைக்கச்செய்கிறார்கள். ஏற்கனவே சொல்லியதைப்போல, இதில் மத அரசியல் இல்லை!

கென்னடி சொன்னதது போல பியர் ஆப் தி பியர்! (பயத்திற்கான பயம்) அவர்களை வழி  நடத்துகிறது. 2001 முதல் உலகெங்கும்  பிறருக்கு மிகுந்த வலி. சிறு தீவு நாடுகளின் அமைப்புகள், மத சார்பு இல்லாதவர்களை அந்த நாட்டவர்களே அழித்துவிட்டனர். அமைதி வழி எங்கே இருக்கு? காந்தியம் என்பது கேட்ட இங்கிலாந்து ஆட்சியாளர்களை இப்போது பார்க்க முடியாது. அவர்களே பாக்லாண்டு தீவை கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்

அந்த மாதிரி உலக அரசியலின் ஆளுமையின் விளைவே கமல்ஹாசனின் சினிமா விஸ்வரூபத்துக்கு எதிரான சில  அமைப்புகளின் போராட்டம். இது லோகல் அரசியல் அல்ல. ஆளும் கட்சியின் சூழ்ச்சி என்கிறார்கள் சிலர். இருக்கவே முடியாது. அவர்களுக்கு ஒருவரின் படத்தை தடை செய்வது தான் வேலையா?

விஸ்வரூபம் அதன் இப்போதுள்ள வகையில் உலக  தீவிரவாதத்துக்கு எதிரான படம் என்பதில் ஐயமில்லை. ஆனால் அது கொள்கைவிளக்கப்படம் அல்ல. சாதாரண சண்டை சாகசப்படம். அத்தகைய படங்களுக்கு உலகளாவியப் பொது எதிரி தேவை என்பதனால் தீவிரவாதம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அப்படி தான் தமிழ் படங்களில் உள்ள ரவுடிகள், அரசியல்வாதிகள், காற்பறேட்டுகள் எதிரிகளாக சித்தரிக்கப்ப்படுகிரார்கள்.

ஏன் என்றால் இந்தியாவிலும் , விஸ்வரூபம் திரையிடப்படும் பல நாடுகளிலும் சென்ற காலங்களில் தீவிரவாத அமைப்புகள் நேரடியான தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன. ஆகவே மக்களுக்கு அவ்வமைப்பைப்பற்றி தெரியும். ஜேம்ஸ்பான்ட் படங்களைப்போல வேறு அதிநவீன எதிரிகளை இங்கே முன்வைக்கமுடியாது.ஜனங்களுக்குத் தெரியாது. ஆப்கானில் நடக்கும் கதையில் அந்த ஊரின் பெரும்பான்பையான மதம் கட்டப்படுகிறது.

[எதனால் தீவிரவாதம் என்று சொல்கிறேன் என்றால் அந்த தீவிரவாதிகள் அப்படி தங்களை அடையாளப்படுத்திக்கொள்வதனால்தான்]

நிறம் அல்லது மறைமுக குறியீடாக ஒரு ஜாதி (தமிழ் படங்கள்) அல்லது அதைப்போல தனியடையாளம் கொண்ட ஒரு சாராரையோ எதிரிகளாக காட்டும் வணிகப்படங்கள் வழக்கமாக அந்த தனியடையாளம் கொண்டவர்களில் ஒருவரையே நாயகனாகவோ துணைநாயகனாகவோ வைப்பது வழக்கம்.

அந்த மதத்தின் சேர்ந்தோர் சில கொடுமைக்கூடமைப்புகள் (உதவுபவர் ஒரு இந்திய வம்சாவளியினன் - பெயர் வேறு மதத்தை குறிபிடுகிறது  - சூட்கேஸ் ந்யுக்ளியர் பாம் செய்து கொடுக்கிறான்) எதிரிகளாக காட்டும் விஸ்வரூபம் அவற்றை எதிர்த்துப்போராடும் நாயகனையும் அதே மதத்தவனாக காட்டுகிறது. அதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.


அதாவது அவர்கள் மொத்தமாக தீவிரவாதிகள் அல்ல, வெகு சிலரே தீவிரவாதிகள்... ஆக இருக்கக்கூடும் , நல்ல ஆள் அந்த மதத்தவனாக இருந்தாலும் , இந்த கதை மூலம்,  அவர்களை எதிர்ப்பான் என்கிறது.

ஒரு குழந்தை சுதந்திரமாக டாக்டருக்கு படிக்க ஆசைப்படுகிறான். அதை அவன் தந்தை நிராகரித்து, தீவிரவாதி ஆக வேண்டும் என்கிறான்.  மூச்சு பிரச்சனை என்று வைத்துக்கொள்வோம். சரி அவர்களின் உடலை பாதுகாக்க சில ஆட்கள் வேண்டுமே? அதில் அவர்கள் மதத்தினர் இருந்தால் நல்லது தானே? கேள்விகள் கேட்கவில்லை படத்தில். மறைமுக குறியீடு தான். மேலும் அமெரிக்கர்கள் பெண்கள் குழந்தைகளை சுடமாட்டார்கள் என்று சொல்லுவது, மனித நேயம். இதில் வேறு வகை அமெரிக்க கிண்டல் குறியீடு தான் என்பவர்கள் கவனிக்க வேண்டும்.

சரி அவர்கள் எந்த தொழில் செய்து சம்பாரிக்கிறார்கள்? அதை சரியாக காட்டவில்லை. இல்லையென்றால் இதுவும் ஒரு மறைமுக குறியீடா? எண்ணெய் / கனிம வளம் இருக்கும் நாடுகள் சேர்ந்த ஆட்சியாளர்கள் / மக்கள் தான் அவர்களுக்கு கப்பம் கட்டுகிறார்கள் என்று வைத்துக்கொள்ள வேண்டுமா

ஆக, வழக்கமான வணிகசினிமா மரபுப்படி எடுக்கப்பட்ட வணிகசினிமாதான் விஸ்வரூபம். அதற்கு அரசியல் நோக்கங்களோ உள்திட்டங்களோ ஏதுமில்லை. கமலுக்கு வேறு வேலை இல்லையா? அவருக்கு 58 வயதாகிறது! அப்படி இருந்திருந்தால் இந்நேரம் ஒரு கட்சியில் இணைந்து பெரிய பதவிக்கு வந்திருப்பார்.

விஸ்வரூபம் ஒரு ‘ஹைடெக்’ இந்திய ஜேம்ஸ்பாண்ட் படம். அவ்வளவுதான். பார்க்கும்போது எதிரி நம்பகமாக இருக்கவேண்டும் என்பதற்கு மேல் அது உத்தேசிக்கவில்லை. இந்த படத்தை தமிழ்நாட்டின் கதை களத்தோடு ஒத்துப்போகாது.
 
ஆகவே அதற்கு எதிரான இப்போதைய எதிர்ப்பு என்பது மிக நியாயமற்றது என்றே தோன்றுகிறது. அதை முடிவு செய்ய வேண்டியது சென்சார் போர்டும், நாட்டின் ஆட்சியாளர்கள் தான்.

அது ஒரு கருத்துப்பிர்ச்சாரம் என்று கொண்டாலேகூட அக்கருத்தை சொல்லக்கூடாது என தெருவிலிறங்கி போராடுவதும் ‘சட்டம் ஒழுங்கு குலையும்’ என்று அரசையும் மக்களையும் மிரட்டுவதும் மிகத்தவறான முன்னுதாரணங்கள்.

இந்தப்போராட்டத்தின் விளைவுகள் என்ன? விஸ்வரூபம் போன்ற ஒரு படத்தை உண்மையில் தடைசெய்யமுடியுமா என்ன?

இப்போதே பல மொழிகளிலும், தமிழில் வேறு ஊர்களிலும், இணையத்தில் இல்லீகலாக டொரெண்டில் தினம் அதைப்பார்க்கிறார்கள்.

இன்று ஓடும்படம் என்பது மக்கள் அரங்குக்கு வந்து பார்க்கும்படம். ஓடாத படம் என்பது வீட்டில் பார்க்கும்படம். எல்லா படத்தையும் எல்லாரும் பார்க்கிறார்கள். சென்ற வருடத்தில் எத்தனை படங்கள் ஹிட் ஆகின? தியேட்டர் வந்து தானே வசூல் ஆனது? சென்னை தவிர வெளியூர்களில் அதிக பட்ச கட்டினம் 50 ரூபாய் மட்டுமே ஆனால் முதலாளிகள் மூன்று நான்கு மடங்கில் விற்று 50 ரூபாய் டிக்கட் மட்டுமே கையில் கொடுத்து லாபம் பார்கிறார்கள் என்கிறார்கள் சிலர் இணையத்தில். இதுவும் கடந்து போகும்.


விஸ்வரூபத்தை அப்படிப் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? சர்வதேச தீவிரவாதிகளாக சில குழுக்களையும் இந்தியாவில் குண்டுவைத்து நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த பாகிஸ்தானை சேர்ந்த சில குழுக்களையும்  எதிரிகளாக காட்டும் ஒரு படத்தை ஏன் அந்த மதத்தவர் எதிர்க்கவேண்டும் என்றே நினைபபர்கள் இல்லையா?

இந்த அமைப்புகள் அந்த தீவிரவாத அமைப்புகளுடன் தங்களை அடையாளம் கண்டுகொள்கின்றனவா, அவர்களுக்காக பரிந்துபேசுகின்றனவா என்று எண்ணுவார்கள்? இருக்காது. நல்லவர்கள் என்றும் நல்லவர்களே

இன்று அந்த அமைப்புகள் சொல்வதைப்போல விஸ்வரூபம் அவர்களைப்பற்றி பிறர் தவறாக எண்ண வழிவகுக்கும் என்ற கோணத்தில் பார்த்தால் இந்த எதிர்ப்புப்போராட்டம் அதைவிட பலமடங்கு தீவிரமாக அதை நிகழ்த்திவிட்டது என்பதே உண்மை.

தமிழகத்தில் கோவை குண்டுவெடிப்புக் காலகட்டத்தில் உருவான வெறுப்பை ( எத்தனை சாவுகள் ) விட உக்கிரமான வெறுப்பை இப்போது காண்கிறேன்.
காரணம் தமிழ்மக்கள் பிற அனைத்தையும் விட சினிமாவைக் கூர்ந்து கவனிப்பவர்க்ள்.

தமிழக அரசையே அவர்கள் மிரட்டுகிறார்கள், நிர்வாகத்தை பிணைக்கைதியாக வைத்திருக்கிறார்கள் என்ற எண்ணமே பிற மக்களிடம் உள்ளது. இந்த அவநம்பிக்கையும் காழ்ப்பும் தமிழ்ச்சமூகத்திற்கு நல்லது அல்ல. ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட சமூகம் தான் அந்த கட்சியில் மேலோங்கி நிற்கிறது என்கிறார்கள் சில பத்திரிக்கைகள்.


இன்று அவர்கள் என்ன செய்யலாம்? படம் வெளியாவதை அனுமதிப்பதுதான் முறை. இந்தியாவின் சட்டமும் பொதுத்தணிக்கையும் அதை அனுமதிக்கிறது அதைத்தடுக்க அவர்களுக்கு உரிமை இல்லை. இத்தனை தூரம் பிரச்சினை முற்றிவிட்டதனால் பேச்சுவார்த்தை மூலம் அதற்குரிய சமரச முடிவை எட்டுவது நல்லது. அது தான் கமல் படம் போட்டு காட்டுகிறாரே? தேவையானவற்றை கட் பண்ணுங்கள்

 அதன்பின்னரும் இந்தபப்டம் அவர்களைப்பற்றிய தவறான பிரச்சாரத்தை முன்வைக்கிறது என்று எண்ணினால் அதை அம்பலப்படுத்தி அதி தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபடலாம். அவர்கள் பற்றி  இப்படம் உருவாக்கும் சித்திரம் எப்படி தங்களுக்கு உவப்பானதாக இல்லை என்பதை விளக்கலாம். அதுதான் ஜனநாயக முறை

அந்த  சமூகம் என்றும் நம் சமூகத்தின் பொதுமனதுக்கு அன்னியமானது அல்ல. எல்லோரும் இந்நாட்டு மக்களே. எதோ ஒரு காரணத்தினால் மதம் மாறியுள்ளார்கள். அதற்கு தலை வணங்குவோம் நம்பிக்கை பற்றியது அல்ல இந்த படம்.

கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் இன்று தங்களை அன்னியப்படுத்திக்கொண்டாலும் இந்தியர் அப்படி கருதவில்லை என்பதே உண்மை. இல்லாவிட்டால் மூன்று பங்குகள் ஆகி இருக்குமா பாரத கண்டம்?

 இங்கே ஆத்மார்த்தமான ஒரு அந்த மத நண்பர் இல்லாத இந்துக்கள் மிகமிக அபூர்வம். ஒவ்வொருவரும் அந்த நண்பரை அடிப்படையாகக் கொண்டே யோசிக்கிறார்கள்.

தீவிரவாதிகள்  ஆப்கனில் குண்டுவைப்பதனாலோ அல்லது  இங்கே வந்து குண்டு வைப்பதனாலோ நம்மருகே வாழும் அம்மதத்தினர் நம் எதிரிகளாக ஆவதில்லை. நாளை நம் பிள்ளைகளும் அவர்களின் பிள்ளைகளும் சேர்ந்துதான் இங்கே வாழவேண்டும். அது தான் காலத்தின் கட்டாயம். உலக நியதி.


இந்த உணர்வைக் குலைக்கும் அரசியலைப்பற்றிய கவனம் நமக்குத்தேவை. அது தீவிரவாதத்துடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் அடிபப்டைவாதக் குழுக்களின் அரசியல். அவர்களை அந்த சமூகத்தின் அடையாளமாக முன்வைக்கும் ஊடக அரசியல். உலக அளவில் இருந்து எடுத்து வைக்கப்படும் சான்றுகள் மேல் அடிப்படைவாதம் என்ற கொள்கை மூலம் உருவானது தான்.


இந்தவகையான போராட்டம் ஏதோ அவர்கள் தனியாக நடத்துவது மட்டுமே என்ற வகையினால பேச்சுகளும் காதில் விழுந்தன. இந்தியாவில் வாய்ப்பு கிடைத்தபோது மற்ற மதத்தினரும்  சில மத அமைப்புகளும் அடிதடியில் இறங்கியிருக்கின்றன. சில மத அடையாள சின்னங்களை அழித்துள்ளனர். 1992 இல் நடந்த கொடுரம் எல்லோருக்கும் இன்றும் பதைபதைப்பு ஏற்படுத்துது!


தீபா மேத்தாவின் வாட்டர் படத்திற்கு எதிராக சில அமைப்புகள் நிகழ்த்திய வன்முறையையும் ( விதவை மறுமணத்தை ஆதரித்து எடுக்கப்பட்ட படம், அந்த பழைய நாட்களின் அதிக கோரங்களை எடுத்துக்காட்டிய படம்  ) நாம் முன் நின்று பேசும் அதே மதத்தை சேர்ந்த ஒரு ஓவியருக்கும்  எதிரான தாக்குதலையும் நாம் மறந்துவிடமுடியாது. அவர் வேறு நாட்டில் வாழ்ந்து தானே இறந்தார்? அதே மதத்தை சேர்ந்த ஒரு எழுத்தாளரையும் இன்னும் கொள்கிறேன் என்று ஒரு கூட்டம் துரத்துகிறது. சென்ற முறை ஜெய்பூரில் அவர் எழுதிய புதிய புத்தகம் படிக்கப்பட்ட போது நம் டிவி சேனல்கள் மக்கள் கருத்தை கொண்டு எதிர்த்தன அல்லவா அதேபோல மிகச்சில அமைப்புகள் சேர்ந்து டாவின்சி கோட் படத்தை நிறுத்தியதையும் நினைவுகூறலாம். எனேன்றால் அவர்களிடம் மிகுந்த பண பலம் உண்டு. மாற்று கருத்துக்கு இடம் இல்லை. அவர்கள் சொல்லும் விதத்திலேயே கருத்துக்களால் தினிக்கப்படுகிறோம். முக்காவாசிபேர் அவர்கள் மதசாயலில் நடத்தப்படும் பள்ளிகளிலேயே தான் பயில்கிறோம் இன்னமும்?

 அன்று அந்த வன்முறைகளைக் கண்டித்த அதே உணர்வுடன்தான் இப்போதும் கருத்துரிமைக்கு எதிரான இன்றைய மிரட்டலையும் கண்டிக்கவேண்டியிருக்கிறது. அது தானே இது? இது தானே அது?

தடைகளை தாண்டி விஸ்வரூபம் தமிழ்நாட்டில் வெளிவரும் என்று நினைக்கிறேன். ( மேலும் ஒரு லேட்டஸ்ட் அப்டேட்: தமிழ்மொழி பேசும் பாண்டிச்சேரியில் தமிழில் வந்துவிட்டது. ) உலகம் எங்கும் சக்கைபோடுபோடுகிறது

சினிமாத்தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை தமிழ்சினிமாவின் மிகநவீன முதன்மைப்படம் விஸ்வரூபம் தான் என்று சொல்கிறார்கள். 100 கோடிகள்  செலவு செய்து எடுக்கப்பட்டபடம் லாபம் இல்லாவிட்டாலும் மக்கள் கமலுக்கு நஷ்டத்தை கொடுக்க கூடாது! அதில் வேறு எந்த மாற்றுகருதுக்கும் இடமில்லை ! அவ்வகையில்  விஸ்வரூபம் ஒரு பெரும்பாய்ச்சல், ஒருசாதனை என்கிறார்கள் நிபுணர்கள்.

ஆம், அதுவும் தமிழின் வெற்றிகளில் ஒன்றுதான்.

ஒன்று கூடி வாழுவோம். நண்பர்களாக இருக்கோம். இனியும் இருப்போம் ஜெய் ஹிந்த்!

Wednesday, October 24, 2012

Chinmayi and my interactions

My first interaction with Chinmayi happened with me posting on her blog.

I found her down to earth and bit comical in her replies.

++++++++

Raju has left a new comment on the post "Loved this....!":

Nice. Sorry to ask this, are you hitched already or waiting to be arranged? Celebrity, might get such questions.

Chinmayi Sripada has left a new comment on the post "Loved this....!":

This post was just for laughs. It does not mean I do not believe in the sanctity of marriage. I think its a beautiful thing to happen.
Raju: Quite easy is it not to say I am a celebrity so its OK for anyone to ask me question of a personal nature? :) 

++++++++

Raju has left a new comment on the post ""You cannot have the cake and eat it too". I can u...":

Please try Sweet Chariot next to Marry Brown at Lakhani Plaza. I used to see TD, Bhanupriya, Kushboo frequents there. Pineapple pastry is the best.

Of course, all the pastries at McRennett (near Greams Road & Lloyds Road) seems to be fine and yummy.

If you don't mind local stuff (low cost), I have had nice puffs, and strawberry cake in Lloyds road, opp Gee Gee Springs.

Chinmayi Sripada has left a new comment on the post ""You cannot have the cake and eat it too". I can u...":

Thanks everyone.
I dont like the pastries at Coffee Day, But yes cake walk is by far the best, not close to the Taj Cake shop though
I think the GRT one is also below par. But then all that is a matter of perception. Sweet Chariot is OK. Shall try Sweet chariot in Bangalore. As for the ones abroad, I shall wait for the right time :)
Sarada: My mom does. Do mail me. But conditions apply. 

Tuesday, October 23, 2012

Chinmayi and Tamil Tweeting

சின்மயி மற்றும் தமிழ் டவீடுலகம் மாறுதலில் உள்ளது .பொறுப்பாக இனி டைப் அடிக்கும்  தமிழ் டிவிடுலகம் .

நானும் சமாதானமாக மக்கள் இருக்கணும் என்றே முன்னொரு போஸ்ட் போட்டேன் ( சின்மயி அம்மா பத்மாசனி அவர்கள் எழுதிய டிவிட்லான்கர்)

ஒருவரை பொதுவில் எழுத்து மூலம் திட்டுவது நாகநீகம் இல்லாத செயல் !

இன்ப்ளுஎன்ஸ் வைத்து சிலரை அரஸ்ட் செய்ய வைப்பது ( அதுவும் இரண்டு அரசாங்க ஊழியர்களாம்  - அதுவும் ஒருவர் திருப்பூரில் கலக்டரை நன்கு அறிந்தவர் ஆளும் கட்சியின் அதிகார பலம் உள்ளவர், மற்றவர் பெரிய அதிகார கும்பலை அறிந்து வைத்துள்ளவர்  - இணையம் மூலம் அறிந்தது  )   அநியாயம். அம்மா ஆட்சியில் எதுவும் நடக்கும்

அப்புறம் மற்றவர்கள் எல்லாம் யார்? இரண்டு மூன்று யு.எஸ் ஆட்களையும் தடவுயல் நிபுணர்கள் கண்டுபிடிக்கணும் ஆண்டவரே

குஷ்பூவை கிள்ளிய ஆட்களை கண்டுபிடிக்கத போலீஸ்காரர் ஆட்கள் பாவம் எழுத்து தடுக்கி பயில்வான்களை அரஸ்ட் பண்ணி என்ன ஆக போகுது

நான் யாரையும் சப்போர்ட் பண்ணலே . நோட் தா பயின்ட்  ஒபாமா !

கஷ்டகாலம், எங்கப்பன் (போலீஸ்கார் தான் ) இப்போ இல்லே ... ஹி ஹி இன்ப்ளுயன்ஸ் ரொம்ப கீது. யுஎஸ் சிடிசன்ஷிப் சீக்கிரம் வருது .

மறப்போம் மன்னிப்போம் என்பதே உலக நியதி . சின்மயி அம்மா மாறுபட  மாட்டீர்கள்  அல்லவா

எந்த ஜாதியாக மதமாக இருந்தாலும் இது தான் போதனை செய்யப்படுது

வாழ்க வளமுடன்.

பின்குறிப்பு : இது என்னை கவர்ந்த டிவிட்லான்கர்(கள்) !  நன்றி தோட்டாஜி!

ஆல்தோட்டபூபதி (@)

Posted Monday 22nd October 2012 from Twitlonger

ஹாசினி அம்மா, தங்கள் கவனம் தந்தததுக்கு நன்றிகள். ஒரு தாயின் மன நிலையில் இந்த இக்கட்டான நிலைமையை புரிந்து கொண்ட உங்கள் நல்லுள்ளத்திற்கு நன்றி. ரேவதி போன்ற ஒரு புத்திசாலி பெண்ணையும் காண முடியாது. நான் கண்ட வரை பரிசல் அவர்களை போல நாகரீகமானவர் இல்லை, பின்பொரு நாள் எல்லாம் விளங்கும். அவர் பிரச்சனைகளை தீர்க்க அலுவல்களுக்கு இடையே போராடியது நான் நன்கறிவேன். உங்களின் நல்ல உள்ளத்திற்கு மிக்க நன்றிகள். இனி எல்லாம் நன்மையில் நடக்கட்டும். அன்பிற்கும் புரிந்துகொண்டமைக்கும் பெருந்தன்மைக்கும் நன்றிகள். தக்க உதவிகள் செய்யும் ரமேஷ் சாருக்கும் நன்றிகள்.

ஆல்தோட்டபூபதி (@)

Posted Monday 22nd October 2012 from Twitlonger
சகோதரி சின்மயி அவர்களுக்கு வணக்கங்கள். உங்களுக்கு என்னை தெரியுமா என தெரியவில்லை. இதுவரை உங்களுடன் பேசியதில்லை, அதனால் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உங்கள் குரலின் இனிமையை ரசிக்கும் ஒரு கடைக்கோடி ரசிகனால் வைக்கப்படும் ஒரு வேண்டுகோளாய் நினைத்து வாசியுங்கள். இந்தச் சமுதாயத்தால் வளர்ச்சி பெற்று வரும் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னால் இயன்ற அளவு சமுதாயம் வளரவும் பங்களிப்பு தரவேண்டும் என்ற நம்பிக்கை உடைய நீங்கள், வெறும் ஒரு தனி மனிதனின் குடும்பத்திற்காகவும் அந்த பச்சிளம் குழந்தையின் புன்சிரிப்புக்காகவும் தயவு கூர்ந்து பெரிய மனதுடனும், பெருந்தன்மையுடனும் அவர்களை மன்னித்தருள வேண்டுகிறேன். ஒரு அன்பான தாயாரால் வளர்க்கப்பட்டு, வார்த்தைக்கு வார்த்தை அவரின் அன்பையும் அரவணைப்பையும் பற்றி புகழ்ந்து சந்தோஷப்படும் ஒரு மகளான உங்களுக்கு நிச்சயம் இந்த பச்சிளம் பெண் குழந்தையின் பரிதவிப்பு புரியும் என நம்புகிறேன். ஒரு விளையாட்டில் ஜெயித்த நான்கு லட்ச ரூபாயை குழந்தைகள் நல அமைப்பிற்கு நன்கொடையாக கொடுக்குமளவு நல்ல நெஞ்சம் இருக்கும் உங்களால் நிச்சயம் இன்னமும் ஒரு பிறந்தநாள் கூட கொண்டாடாத இந்த குழந்தைக்காக ( http://t.co/P7rSUEiT , http://t.co/NH27qc77 , http://t.co/RmhzARw2) மிக மிக பெருந்தன்மையும் நீங்கள் வளர்ந்த உயர்ந்த முறையையும் காட்டி மன்னிதருளலாம். இது போல ஒவ்வொருவர் வீட்டிலும் இன்னமும் உலகத்தை அறியா குழந்தைகள் இருக்கலாம், வயதானவர்களும் இருக்கலாம். ஒருவரின் செயலுக்காக எல்லோரும் பாதிக்கப்பட வேண்டுமா என கொஞ்சமே கொஞ்சம் யோசியுங்கள்.

உங்களின் வார்த்தைகளின் மூலம், உங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் மன உளைச்சலும், பெரும் மன வருத்தமும், இறுக்கமும், கால விரயமும் புரிந்துக்கொள்ள கூடியது. உண்மையில் ஒரு சக மனிதனாக அதற்கு வெட்கமும் வேதனையும் படுகிறேன். நிச்சயமாய் அது மறக்க கூடியது இல்லை, ஆனால் உங்களை போன்ற பெருந்தன்மையான ஆளுமைகளுக்கு அது மன்னிக்க கூடியது தான். புகாரின் பேரில் இருக்கும் அந்த ஐந்து / ஆறு நபர்ககள் செய்ததை நியாயப்படுத்த நான் இதனை எழுதவில்லை. அதில் எந்நாளும் எனக்கு உடன்பாடும் கிடையாது. அதில் சிலருடன் (இருவர்) பழகி இருப்பதாலும் இதனை எழுதவில்லை. ஏன், உங்களின் மனதை புண்படுத்தியதற்கு பொதுவிடத்தில் மன்னிப்பு கேட்கவும் வைக்க கூட எனக்கு தோன்றுகிறது.ஏன், ஒரு ஆணாக நானே கூட கேட்கலாம்.

நான் இந்த வேண்டுகோளை வைப்பதற்கும் எழுதுவதற்கும் காரணம், நானும் ஒரு ஒன்னரை வயது பெண் குழந்தையின் தகப்பன் என்பதால், ஒரு குழந்தையின் தேடலும் ஆசையும் விளையாட்டும் புன்சிரிப்பும் தவிப்பும் எப்படி இருக்கும் எதை நோக்கி இருக்கும் என்று அறிந்த ஒரு சக சகோதரனாய் தான் இந்த வேண்டுகோளை வைக்கிறேன். இந்த வேண்டுகோளை பரிசீலிக்கவும், நிராகரிக்கவும், பதில் அளிக்காமல் விடவும் உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் உங்களின் பெருந்தன்மையால் அவர்களை மன்னித்தால், அது அவர்களை மட்டும் மன்னித்தது இன்றி, அவர்களின் குடும்பத்தையும் காப்பாற்றிய அழியா புகழ் உங்களை வந்து சேரும். இரண்டு நிமிடம் மட்டும் என் வேண்டுகோளுக்கு ஒதுக்கி, நல்ல முடிவை எடுங்கள். உங்களை போன்ற படித்தவர்களுக்கு நிச்சயமாய் தெரிந்திருக்கும் ' இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண / நன்னயஞ் செய்து விடல்'

( இந்த வேண்டுகோளை பற்றி விவாதிக்கவோ, பெரிது படுத்தவோ நான் விரும்பவில்லை. ஏனினில் இது முழுக்க முழுக்க உங்கள் விருப்பத்தையும் உரிமையையும் சார்ந்தது.மீண்டும் சொல்கிறேன், இந்த வேண்டுகோளை பரிசீலிக்கவும், நிராகரிக்கவும், பதில் அளிக்காமல் விடவும் உங்களுக்கு உரிமை உண்டு. இதனை உங்கள் இருவரை ( / ) தவிர யாருடனும் பேசவும் விவாதிக்கவும் நானும் விரும்பவில்லை )

PS : Please dont think that am negotiating with sentiment(s), am just writing this by considering and believing you as a real peace lover. And importantly, am requesting you and not forcing you ;) Blesses and wishes ;)

சரஸ்வதி பூஜை

சரஸ்வதி பூஜை என்பது ஒரு அர்த்தமற்ற பூஜை. கல்வியையும், தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி அதற்கு சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜை செய்தால் கல்வி வரும் வித்தை வரும் என்றும் சொல்லி நம்மை பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முயற்சியில்லாமல் சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு,நாம். அந்தசாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்து பெரிய படிப்பாளிகளாகிக் கொண்டு நம்மை
படிப்பு வர முடியாத மக்குகள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

முதலாவது சரஸ்வதி யெனும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால் அது பார்ப்பனர்களின் புராணக்கதைகளின் படியே மிக்க ஆபாசமானதாகும்.

சரஸ்வதி உற்பவக்கதை

அதாவது சரஸ்வதி என்கிற ஒரு பெண் பிரமனுடைய சரீரத்திலிருந்து உண்டாக்கப்பட்ட பிறகு, அவளுடைய அழகைக்கண்டு அந்த பிரமராலேயே மோகிக்கப்பட்டு அவளுடன் இன்பமனுபவிக்க அவளை அழைக்கையில் அவள் பிரமனை தகப்பன் என்று கருதி, அதற்கு உடன்படாமல் பெண் மான் உருவெடுத்து ஓடவும், பிரமன் தானும் ஒரு ஆண் மான் உருவெடுத்து அவளைப் பின் தொடர்ந்து ஓடவும், சிவன் வேடன் உருவெடுத்து ஆண் மானைக் கொல்லவும், பிறகு சரஸ்வதி அழுது சிவபிரானால் மறுபடியும் உயிர்ப்பிக்கச் செய்து பிரமனுக்கு மனைவியாக சம்மதித்ததாகவும் சரஸ்வதி உற்பவக்கதை சொல்கிறது.

அதாவது பெற்றெடுத்த தன் தகப்பனையே மணந்து கொண்டவள் என்று ஆகிறது. தங்கள் கையில் இருக்கும் பணத்திலும் ஒரு பாகத்தை செலவு செய்து, போதாவிட்டால் கடன் வாங்கியும் செலவு செய்வதைவிட இதனால் யாதொரு நன்மையும் ஏற்படுவதாகச் சொல்வதற்கே இல்லாமல் இருக்கின்றது.

ஆயுதத்தை வைத்து பூசை செய்து வந்த, நம் நாட்டு அரசர்கள் கதி என்னவாயிற்று? ஆயுதத்தை வைத்து பூசை செய்தேயறியாத வெள்ளையன் துப்பாக்கி முனை கண்டிடவில்லையா?

சரஸ்வதி பூஜை செய்யும் வியாபாரிகளில் ஒரு வியாபாரியாவது சரஸ்வதிக்குப் பயந்து பொய் கணக்கு எழுதாமலோ, தப்புநிறை நிறுக்காமலோ, குறைஅளவு அளக்காமலோ இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? அதுபோலவே, கைத் தொழிலாளிகளும் தங்கள் ஆயுதங்களிடத்தில் வெகுபக்தியாய் அவைகளை சந்தனம், குங்குமம், பொட்டு வைத்து போட்டுவிழுந்து கும்பிடுவார்களே தவிர ஒருவராவது நாணயமாய் நடந்து கொள்கின்றார்கள் என்றாவது அல்லது அவர்களுக்கு தாராளமாக தொழில் கிடைக்கின்றது என்றாவது சொல்வதற்கு இல்லாமலே இருக்கின்றார்கள்.

அதுபோலவே, புத்தகங்களையும், பென்சிலையும் கிழிந்த காகிதக் குப்பைகளையும் வைத்து சந்தனப் பொட்டு இட்டு பூசை செய்கிறார்களே அல்லாமல், காலோ கையோ பட்டுவிட்டால் தொட்டு கண்ணில் ஒத்திக் கும்பிடுகின்றார்களேயல்லாமல், நமது நாட்டில் படித்த மக்கள் 100க்கு 5 பேர்களுக்குள்ளாகவே இருந்து வருகின்றார்கள். இவ்வளவு ஆயுத பூசை செய்தும், சரஸ்வதி பூசை செய்தும், இவ்வளவு விரதங்கள் இருந்தும் நமது அரசர்கள் கதி என்னவாயிற்று? நமது வியாபாரிகள் நிலை என்ன? எவ்வளவு பேர் நஷ்டமடைந்து வருகிறார்கள். நமது தொழிலாளர்கள் தொழில் இல்லாமல் பிழைப்புக்காக வேறு நாட்டிற்குக் குடிபோகின்றார்கள்?

அது நிற்க, வருடா வருடம் சரஸ்வதி பூசை செய்துவரும் நம் நாட்டில், நம் மக்களில் 5 பேர்களே படித்திருக்கிறார்கள். அதிலும், சரஸ்வதியின் இனத்தைச் சேர்ந்த பெண்களில் ஆயிரத்திற்கு ஒன்பது பேரே படித்திருக்கிறார்கள். இதன் காரணமென்ன?

நாம் செய்யும் பூசைகளை சரஸ்வதி தெய்வம் அங்கீகரிக்கவில்லையா? அல்லது சரஸ்வதி தெய்வத்திற்கும் பிரமனால் உண்டாக்கப்பட்ட பிறகு அவளுடைய அழகைக் கண்டு, அந்த பிரமராலேயே மோகிக்கப்பட்டு அவளுடன் இன்பமனுபவிக்க அவளை அழைக்கையில் அவள் பிரமனை தகப்பன் என்று கருதி, அதற்கு உடன்படாமல் பெண் மான் உரு வெடுத்து ஓடவும், பிரமன் தானும் ஒரு ஆண் மான் உருவெடுத்து அவளைப் பின்தொடர்ந்து ஓடவும் சிவன் வேடன் உருவெடுத்து ஆண்மானைக் கொல் லவும், பிறகு சரஸ்வதி அழுது சிவ பிரானால் மறுபடியும் உயிர்ப்பிக்கச் செய்து பிரமனுக்கு மனைவியாக சம்மதித்ததாகவும் சரஸ்வதி உற்ப வக்கதை பெற்றெடுத்த தன் தகப் பனையே மணந்து கொண்டவள் ஆகிறது.

மற்றொரு கதை சரஸ்வதியின் உற்பவத்தை குறித்து மற்றொரு கதையின்படி சரஸ்வதி பிரம்மாவுக்கு பேத்தி ஆகிறது அதாவது பிரம்மா ஒரு காலத்தில் ஊர்வசியின் மீது ஆசைப்பட்ட போது வெளியான இந்திரியத்தை ஒரு குடத்தில் விட்டு வைக்க, அக்குடத்திலிருந்து அகத்தியன் வெளியாக அவ்வகத்தியன் சரஸ்வ தியைப் பெற்றான் என்று சொல்லப் படுகிறது. இதனால் பிரம்மனுக்கு சரஸ் வதி மகன் வயிற்றுப் பேத்தி ஆகிறாள்.

எனவே, சரஸ்வதியின் பிறப்பும், வளர்ப்பும், நடவடிக்கையும் பார்ப்பன புராணப்படி மிக்க ஆபாசமும் ஒழுக்க ஈனமும் ஆனதாகும்.

நிற்க, இந்த யோக்கியதையுடைய அம்மாளை மக்கள் எதற்காக பூசை செய்கிறார்கள் என்பது இதைவிட மிகவும் வேடிக்கையான விஷயமாகும். அதாவது சரஸ்வதி வித்தைக்கு அதிபதியான தெய்வமாதலால் வித்தையின் பயன் தொழிலென்றும், தொழிலுக்கு ஆதாரமானது ஆயுதங்கள் என்றும் கருதிக்கொண்டு சரஸ்வதி பூசை என்றும் ஆயுத பூசை என்றும் ஒரு நாளைக் குறித்துவைத்துக் கொண்டு அந்த நாளை விடுமுறையாக்கி வைத்துப் பூசை செய்கிறார்கள்.

இந்தப் பூசையில் அரசன் தனது ஆயுதங்களையும் வியாபாரி தனது கணக்குப் புத்தகங்கள் தராசு, படிக்கல், மரக்கால், படி, உழக்கு, பெட்டி முதலியவைகளையும், தொழிலாளர்கள் தங்கள் தொழில் ஆயுதங்களையும் இயந்திர சாலைக்காரர்கள் இயந்திரங்களையும், மாணாக்கர் புத்தகங்களையும், குழந்தைகள் பொம்மைகளையும், தாசிகள் தங்கள் ரவிக்கைகள் சேலை களையும், வாத்தியக்காரர்கள் தங்கள் வாத்தியக் கருவிகளையும் மற்றும் இதுபோல் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் இலட்சியத்துக்குப் பிழைப்புக்கு ஆதாரமாக வைத்திருக்கும் சாமான்களை வைத்து பூசை செய்கிறார்கள்.

இதனால் அந்த தினத்தில் தொழில் நின்று அதனால் வரும் வரும்படிகளும் போய், பூஜை, ஓய்வு முதலிய ஆடம் பரங்களுக்காக விரதங்கள் இருந்தும் நமது அரசர்கள் கதி என்னவாயிற்று? நமது வியாபாரிகள் நிலை என்ன? எவ்வளவு பேர் நஷ்டமடைந்து வருகிறார்கள்! நமது தொழிலாளர்கள் தொழில் இல்லாமல் பிழைப்புக்காக வேறு நாட்டிற்கு குடிபோகின்றார்கள்? நாம் செய்யும் பூஜைகளை சரஸ்வதி தெய்வம் அங்கீகரிக்க வில்லையா? அல்லது சரஸ்வதி தெய்வத்திற்கும் இந்த விசயங்களுக்கும் ஒன்றும் சம்பந்தமில்லையா? அல்லது சரஸ்வதி என் கின்ற ஒரு தெய்வமே பொய்க் கற்பனையா? என்பவைகளாகிய இம் மூன்றில் ஒரு காரணமாகத்தான் இருக்க வேண்டும்.

என்னைப் பொறுத்த மட்டில் இவை சுத்த முட்டாள்தனமான கொள்கை என்பதே எனது அபிப்பிராயம். வெள்ளைக்கார தேசத்தில் சரஸ்வதி என்கின்ற பேச்சோ கல்வி தெய்வம் என்கிற எண்ணமோ அறவே இல்லை.

அன்றியும் நாம் காகிதத்தையும் எழுத்தையும் சரஸ்வதியாய் கருதி தொட்டு, கண்ணில் ஒத்திக் கொண்டும் வருகிறோம். நமக்கு கல்வி இல்லை ஆனால் வெள்ளைக்காரன் மல உபாதைக்குப் போனால் சரஸ்வதியைக் கொண்டே மலம் துடைத்தும் அவர்களில் நூற்றுக்கு நூறு ஆண் பெண் கள் படித்திருக்கிறார்கள். உண்மையில் சரஸ்வதி என்ற ஒரு தெய்வமிருக்கு மானால் பூசை செய்பவர்களை தற்குறிகளாகவும் தன்னைக் கொண்டு மலம் துடைப்பவர்களை அபார சக்திவாய்ந்த அறிவாளிகளாகவும் கல்விமான்களாகவும் செய்யுமா என்பதை யோசித்துப்பாருங்கள்.

யுத்த ஆயுதம் கைத்தொழில் ஆயுதம் வியாபார ஆயுதம் ஆகியவை உண்மையிலேயே சரஸ்வதி என்னும் தெய்வ அம்சமாயிருக்குமானால், அதை பூசை செய்யும் நாடு அடிமைப்பட்டும், தொழிலற்றும் வியாபாரமற்றும், கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கவும், சரஸ்வதியை கனவிலும் கருதாதும் சரஸ்வதி பூசை செய்கிறவர்களைப் பார்த்து முட்டாள்கள், அறிவிலிகள், காட்டு மிராண்டிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நாடு சுதந்தரத்துடனும், தொழிலாளர் ஆதிக்கத்துடனும் இருக்க முடியுமா என்பதையும் யோசித்துப்பாருங்கள்.

இந்த பூசையின் மூலம் நமது முட் டாள் தனம் எவ்வளவு வெளியா கின்றது பாருங்கள்.

ராஜாக்கள் கொலுவிருப்பது, பொம்மைகள் கொலுவிருப்பது, சாமிகள் கொலுவிருப்பது, இதற்காக மக்கள் பணம் செலவு செய்வது, நேரம் செலவு செய்வது, அறிவு செலவு செய்வது பத்து லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு பொம்மைகள், சந்தனம், குங்குமம், கற்பூரம், சாம்பிராணி, கடலை பொரி சுண்டல் வடை, மேளவாத்தியம், பார்ப்பனர்களுக்கு தட்சனை சமாராதனை, ஊர்விட்டு ஊர்போய் ரயில் சார்ஜ் ஆகிய இவை எவ்வளவு செலவாகிறது.

இவை எல்லாம் யார் வீட்டுப் பணமா? நாட்டின் செல்வமல்லவா? ஒரு வருடத்தில் இந்த ஒரு பூஜையில் இந்த நாட்டில் செலவாகும் பணமும் நேரமும் எத்தனை கோடி ரூபாய் பெறுமானது என்று கணக்கு பார்த்தால் மற்ற பண்டிகை, உற்சவ புராணிய அர்த்தமற்ற சடங்கு என்பவைகளின் மூலம் செலவாகும் தொகை சுலபத்தில் விளங்கிவிடும். இதை எந்தப் பொரு ளாதார இந்திய தேசீய நிபுணரும் கணக்குப்பார்த்ததே இல்லை.

தந்தை பெரியார் - “விடுதலை” 13.10.1950