Friday, June 26, 2009

அடுத்த பதிவு நூறாவது பதிவு

என் அடுத்த பதிவு நூறாவது பதிவு! நன்றிகள்.

http://imageworldz.com/graphics/image/thanks-10-97168.jpg

ஆதரவு கொடுத்த நெஞ்சங்களுக்கு கோடானகோடி வலைதள வாசகர்க்கு அனேக நமஸ்காரங்கள்.

என்னை எழுத தூண்டிய நண்பர்களுக்கு, குறிப்பாக விஜய், ரமேஷ், சரவணன், ரவி மற்றும் பலர், மிக்க நன்றிகள்! அப்புறம் அடிக்கடி வந்து கமன்ட் போட்ட அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

பரவாயில்லை கிட்டத்தட்ட நான் நூறு பதிவுகள் ஒரு ஆறு மாதத்தில் எழுதிட்டேன்!

ஆறாயிரம் முறை எனது ப்ளாக் இது வரை படிக்கப்பட்டு இருக்குங்க.

நல்ல விஷயம் தான்!

சைட்

விக்னேஷ்வரி பதிவில் ஒரு கமன்ட் போட்டேன்.... சைட் பத்தி எல்லாம் எழுதியிருந்தாங்க...

//
என்னங்க ஆம்பிள பையன் மாதிரி சைட் பத்தி எல்லாம் பேசறீங்க... :-)

அச்சம் , மடம் மற்றும் நாணம் எல்லாம் எங்கே...

ஒ எல்லாத்தயும் பாத்துட்டீங்களா?

:-)

அப்புறம் காலேஜிலே தட்டு தடுமாறி எப்படியோ பர்ஸ்ட் கிளாஸ் வாங்கியாச்சு!
//

அப்புறம் அதுக்கு கோபமா ( எனக்கு தெரியலையேப்பா!) ஒரு பதிலும் போட்டிருந்தாங்க.

***

நான் தான் எப்படியோ.... அடிச்சு பிடிச்சு படிச்சு... அப்புறம் காலேஜிலே தட்டு தடுமாறி எப்படியோ பர்ஸ்ட் கிளாஸ் வாங்கியாச்சு!

என் வாழ்க்கையிலே சைட் வம்பே இல்லீங்க! கோவைலே காலேஜு ரொம்ப ரொம்ப ஸ்ட்ரிக்ட். எனக்கு தெரிஞ்சு லேபிலே பொண்ணுங்களோடு பேசின (கடலை) ஆளுங்க எல்லாம் லேபிலே "கப்" கொடுத்தாங்க!

தப்பி தவறி "உன்னை கொல்ல வேண்டும்" அப்படின்னு ஒரு கதை, வாழ்க்கையிலே முதன் முதலில், எழுதிட்டேன். யாருக்கும் பிடிச்சிருக்காது! அந்த உரையாடல் போட்டிலே, நான் ரூ.1500/- ஜெயுச்சிட்டால், அழுதிருவேன்!

ஆயிரம் பேர் ( அதுக்கும் மேலே )அந்த கதை மட்டும் விசிட் பன்ன்யிருக்காங்க, ஸ்டேட்கவுண்டேர் சொல்லுது!

மைகேல் ஜேக்சன் மரணம்

உலகின் மிக பிரபலமான மைகேல் ஜேக்சன் நேற்று மரணம அடைந்தார். அவருக்கு வயது 50. சில நாட்களாக நோய் வாய்ப்படிருந்தது, நீங்கள் அறிந்ததே. அவரின் நிற வெறி ( வெள்ளையாக ) உலகின் நகைப்புக்கு ஆளானது.

மைகேல் ஜேக்சன் மரணம் அடைந்தாலும் அவர் எல்லோர் நெஞ்சிலும் இருப்பார்.

சில வருடங்களுக்கு முன், அவர் முஸ்லிமாக மதம் மாறினார்.




அந்த மூன் வாக்கை யார் மறக்க முடியும்!

உலகின் ஒரு நடனப்புயல், மைகேல் ஜேக்சன் தான்!

இந்திய சினிமாவில், எத்தனை பேர் தான் அதை காப்பி செய்திருப்பார்கள்?

***

இன்று தமிழ் விஜய் டிவியில் "யார் அடுத்த பிரபு தேவா!" ( இந்தியாவின் மைகேல் ஜேக்சன் ) நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு என்பது குறிப்பிடத்தக்கது!