Showing posts with label புனைவு. Show all posts
Showing posts with label புனைவு. Show all posts

Thursday, July 23, 2009

என் காதலி லதா

இன்று லதாவிற்கு கல்யாணம். என் அருமை காதலி அவள்.

என்னோடு ப்ளஸ் 2 படித்தவள். இருபத்தொன்பது வயதாகிறது!

பதினைந்து வருடம் பழக்கம். ஒரே பள்ளி. இருவரும் ஒன்றாக தான் பள்ளி செல்வோம்.

அவள் கொண்டு வரும் புளிக்காயச்சலும் தயிர் சாதமும், இன்னும் நாக்கில் ஊருகிறது. அம்மா செய்யும் பருப்பு துவையல் அவளுக்கு இஷ்டம்.

அவள் அப்பா ஒரு ப்ரோகிதர். பாவப்பட்ட குடும்பம் என சொல்லும் வீடு. எங்கள் தெரு அருகில் தான்... ஒட்டு உடைசல். புளியோதரை மனம். தேங்காய் வாசம்... என்னை அம்பி என்று அழைப்பார்கள். அவள் அம்மாவிற்கு தெரியும், என் காதல். விதி?

நன்றாக ஸ்லோகம் சொல்லுவாள். நிறைய மந்திரங்கள் எனக்கு கற்றுக்கொடுத்தாள். அதில் பிடித்தது... காயத்ரி மந்திரம்... இப்போ மன நிம்மதிக்கு உகந்த மந்திரம்.

என்னோடு நன்கு பழகியவள்.... மனதோடு ஒன்றியவள்...

படித்தால்... பி.எட் முடித்தவுடன் அரசாங்க பள்ளியில் உத்தியோகம் வந்தது. சில வருடங்களில் பெர்மனென்ட்.

நான் எந்த ஊரில் இருந்தாலும் , வீடு செல்லும் போது அவளை சென்று பார்ப்பேன்...

சென்ற மாதம் கூட அவள் பாடம் நடத்தும் பள்ளிக்கு சென்று பார்த்தேன். அவளுக்கு பிடிக்கும் என்று டர்கிஷ் அல்வா எடுத்து சென்றேன்!

முகம் வாடியிருந்தது... முகம் மலர்ந்தாள்.. "அப்பா எனக்கு கல்யாணம் பிக்ஸ் செஞ்சுட்டார்... மாப்பிள்ளைபிசிக்ஸ் வாத்தியார், பொள்ளாச்சியில். ப்ளஸ் 2 டுசன் வருமானமும் அதிகம்! "...

"டேட் இன்னும் முடிவாகலே.. ஒரு மாசத்திலே இருக்கும்... ஐ.டி. மாபிள்ளை இந்த காலத்திலே வேண்டாம்னு எல்லோரும் சொல்லிட்டா.. இதிலேயும் அப்பா ப்ரோகிதம் பண்றது நின்னுடும், நான் உங்களை கல்யாணம் செஞ்சா..."

விசும்பல்..

"அப்பாவையும் அம்மாவையும் பெங்களூர் அழைச்சுண்டு போவேள். ஆனா எங்க வழக்கங்கள், கலாச்சாரம்... சொந்தங்கள்.. எங்கு போய் நிக்கிறது? தம்பி வேறு வளர்ந்துட்டான். அடுத்த வருஷம் ப்ளஸ் 1. அவன் படிப்பு செலவு மாப்பிள்ளை எத்துண்டார்! "

விசும்பல்....

"நாமோ இனிமே சந்திக்க கூடாது.."

மீண்டும் விசும்பல்...

ஓடிவிட்டாள்.

மல்லிகை மனம் இன்னும் இருந்தது.

மறக்காமல், கையில் நான் கொடுத்த பொட்டலத்தை எடுத்துக்கொண்டு சென்றாள்..

*

ஒரு வாரம் கழித்து என் மொபைல் சிணுங்கியது... லதா தான்.

"ஜூலை 23 கல்யாணம் ... ராமேஷ்வரத்திலே. ப்ரோகிதம் பண்ண போறார். பெரிய சாமியாரெல்லாம் வாராலாம். சூரிய கிரகணத்துக்கு அடுத்த நாள். நல்ல நாளாம்... நாங்கோ இருக்குறே லாட்ஜ் அட்ரெஸ் எஸ்.எம்.எஸ் பண்ணிடுறேன்...வரியாடா ஷங்கர்?"

"ஹும்.. பாக்குறேன்.. " என் குரல் கணகணத்தது...

கால் கட்.

*

அடுத்த மாதம் ஊருக்கு போகும் போது பார்க்கவேண்டும்!