Friday, March 5, 2010

நான் கடவுள்

நான் கடவுள்
என்று சொல்லி
விவாதம் செய்கிறார்கள்
பதிவுலக மக்கள்

வரம் கொடுத்தேனா ?
ஊரை ஏமாற்றினேனா?
நடிகைகளோடு சல்லாபித்தேனா?
அரசியல்வாதிகளுக்கு
சொத்து சேர்க்க வழி தான் கொடுத்தேனா?

இல்லை இல்லை
நான் செய்த தவறு
தினமும்
விலை மலிவு என்று
வாங்கிய காட்டிய
காவி வேட்டி செய்யும் வேலை!

( ஆனால் உள்ளே போடும்
கோமணம்
கெல்வின் களையின் தான்
தெரியுமில்லே? )

கடவுளும் வரமும்

என்ன வரம் வேண்டும்?
என்றார் கடவுள்.
அதுகூடத் தெரியாத நீ
என்ன கடவுள்?

ஓர் பி. ஏ வச்சுக்க...
ஆமா...
இல்லே...
நித்தியானந்தர் கிட்டே கேளு
அதான்யா ராஜசேகரன்
புட்டு புட்டு வைப்பான்
கேட்காமல்
வரமும் கொடுக்கலாம்....

பத்திரம்..
அப்புறம் ரம்பா மேனகா ஊர்வசி
எல்லோரும் அவன் பின்னால்
ஓடிப்போயிடுவாங்க...
தமிழ்நாட்டிலே இருந்தில்லே
இந்திரலோகத்திலே இருந்து!

மற்றொன்று...
காசிலைன்னு கவலை வேண்டாம்
சுருட்டற வழி தெரியும்
சொல்லிக்கொடுப்பான்
வேறு கிரகத்திற்கு கொடுக்கலாம்!

சில சமயம் நம் மக்கள் இருக்கும்
வெளிநாட்டு போருக்கு கூட
காசு கொடுக்கலாம் என்பான்
ஹவாலா ரூட்டு
வேண்டாம் கடவுளே
நம் நாட்டை மட்டும் பார்!

கடவுளே
கடவுள்
திருந்த
வரம் கொடு!

Thursday, March 4, 2010

சாமியார்கள் ஏன்? எதற்கு? எப்படி?

சுஜாதா ஏன்? எதற்கு? எப்படி? புத்தகத்தில் காசு பிடுங்கும் சாமியார்கள் மற்றும் குருக்கள் பற்றிய கேள்விக்கு பதில்அளித்துள்ளார். இப்போது நடக்கும் நித்தியானந்தர் பற்றி பார்க்கும் போது மனது வெதும்புகிறது....

இதோ இங்கே பாருங்கள்....
கேள்வியும் பதிலும்...

கேள்வி : ரமண மகரிஷி, ராமகிருஷ்ணர், சத்யசாயி பாபா, ஓஷோ, மாதா அமிர்தானந்தமயி என்று எந்த ஆன்மீக அமைப்பை எடுத்துக்கொண்டாலும் உலகெங்கும் கிளைகள். படிக்காத மற்றும் படித்த டாக்டர்கள், இஞினீயர்கள், வெளிநாட்டவர்கள் போன்ற லட்ச கணக்கான மக்கள் கூட்டம். இதென்ன... மாஸ் ஹிஸ்டீரியாவா அல்லது மாஸ் ஹிப்னாடிஸமா?

பதில்: இவை அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பது Domino effect என்ற சங்கதி அருகருகே இருக்கும் டாமினோக்களில் ஒன்றை தள்ளிவிட்டால் மற்றது தொடர்ந்து விழுமே... சைக்கிள் ஸ்டாண்டில் கூட பார்த்திருப்பீர்கள். அந்த வகைதான் இந்த இயக்கங்கள் பிரபலமடைவதும்! யாரோ ஒருத்தர் தனக்கு நிகழ்ந்த நல்லதைச்சொல்ல, அவர் மற்றொருவருக்குச் சொல்ல... மெள்ள மெள்ள அது தேச அளவுக்கு ஏன், உலகளவுக்கு விரிகிறது.

இவற்றின் ஆதாரமான இயக்கு சக்தி மனிதன். என்னதான் இஞினீயரோ, டாக்டரோ, வெளி நாடோ, உள் நாடோ, தன் பிறப்பு ‍ இறப்பைப் பற்றி தெளிவில்லாமல் இருப்பதும் மரணத்துக்குப் பின் என்ன? என்கிற கேள்வி ‍ பதில் அளிக்காமலேயே இருப்பதும்தான். இந்த uncertainity - நிச்சயமின்மை அவனை இம்சிக்கிறது. ஏதாவது ஆணியில் தன் நம்பிக்கையை மாட்டிவைக்க விரும்புகிறான். முழுக்க முழுக்க பகுத்தறிவு வாதமும் ஏன் ஏன் என்கிற முடிவில்லாத கேள்விகளும் அவனுக்கு பிடிக்கவில்லை. ஓர் எல்லைக்கு பிறகு, கேள்வி கேட்காமல் நம்பவே விரும்புகிறான். அந்த எல்லை ஆளுக்கு ஆள் மாறுபடும். ஓர் எளிய மனதுக்கு தெருக்கோடி பிள்ளையாரில் துவங்கி, அண்ட சராசரங்களையும் பிரபஞ்ச விசைகளையும் ஆராய்ந்த ஐன்ஸ்டைனுக்கு இறுதியில் God என்ற ஓர் எளிய வார்த்தை தேவைப்பட்டிருக்கிறது. ஸ்டீபன் ஹாக்கின் போன்றவர்கள் கூட Determinism பற்றி பேசும் போது. ஆரம்ப கணத்தில் ஓர் எல்லையற்ற சக்தியைச் சொல்ல வேண்டியிருந்தது. தெருக்கோடி பிள்ளையாரா இல்லை க்வாண்டம் இயற்பியலா இடையில் எத்தனையோ... மகான்கள். எல்லோருக்கும் பகுத்தறிவுக்கான எல்லை உண்டு.

என்னைப் பொறுத்தவரை இந்த நம்பிக்கைகளால் நல்லது நிகழும் வரை போனால் போகட்டும் போகிறது நம்பிவிட்டுப் போகட்டும் என்று விட்டு விட வேண்டியதுதான். ;-)

Wednesday, March 3, 2010

நித்யானந்தரை பற்றி சாரு

நித்யானந்தரை பற்றி சாருவிற்கு நான் எழுதிய கடிதம்

29 September 2009

வணக்கம் சாரு.

நீங்கள் நித்யானந்தர் பற்றி எழுத ஆரம்பித்தவுடன் எனக்கு தெரிந்துவிட்டது - ஒரு புத்தகம் மொழிபெயர்ப்பில் அல்லது அனுபவத்தில் வரும் என்று. கடவுள் என்பவர் ஏன் ஜிலேபி பையித்யமாக இருக்க வேண்டும்? எங்கள் வீட்டிற்கு சில சமயம் வந்த போது ( அப்பா போலீசில் இருந்தவர் ) கேட்டு சாப்பிட்ட ஒரு பலகாரம்! சுவாமியும் சமாதி நிலையும் அப்படிதானா?

அரசியல்வாதிகளுக்கும் சாமியார்களுக்கும் உள்ள லிங்க் உங்களுக்கு தெரிந்திருக்கும். நல்ல ரியல் எஸ்டேட் பிசினஸ் அந்த ஆசிரம ஏரியாவில் நடக்கும். தங்கம் மற்றும் கணக்கில் டேக்ஸ் கட்டாமல் இருக்கும் பணம் புரளும் ( எல்லாம் பக்தர்கள் கொடுத்தது என்று - அதை மீண்டும் அந்த அரசியல்வாதியின் குடும்பத்திற்கு வெள்ளையாக சென்று சேரும் ) - உதாரணம் - திருமலைகோடி தங்க கோவில்.

ஒருவர் தனக்கு தானே சிலை வடித்துக்கொண்டு, மற்றவர்களை கும்பிட வைப்பது என்ன சூத்திர தர்மம்? மாயாவதியும் அதை தானே செய்தார்? குருக்களிலெல்லாம் குரு தக்ஷிணாமூர்த்தி சொன்னது - உயிருள்ளவர்களை சிலை வடித்து கும்பிடாதே! என்னை பொறுத்தவரை அவர்கள் நார்ஷிஷிச்டிக் சைகொபாத்ஸ்.

மாதா பிதா குரு தெய்வம் என்று சொல்வார்கள். இதை சொல்லியவர், தெய்வத்திற்கு முன்னால் குரு என்பதை - சாமியார்கள் துஷ்ப்ரயோகம் செய்வார்கள் என தெரிந்திருக்காது!

நீங்கள் வேதாத்ரி மகரிஷி சொல்லிக்கொடுத்த குண்டலினி யோகம் பற்றி படியுங்கள், பிடடியில் நடப்பது அதன் ஒரு பாகமே! சரி சாமியாருக்கு எதற்கு பட்டு மெத்தையும், பெரிய பங்களாவும்?

மேலும் வரம் நிகழ்ந்தது என்பது - அற்புதங்களை பரப்பும் ஒரு மாய கட்டுவித்தையே. ஒரு டேடாபேஸ் வைத்து, கேட்ட வரம், நடந்தது என்ன எனபதை விலா வாரியாக யாரும் சொல்ல இயலாது! பைசா இல்லாமல் இந்த உலகில் ஒரு சுண்டைக்காயும் இல்லை, புண்ணாக்கும் இல்லை!

இதையும் படியுங்கள் நின்னைச் சிலவரங்கள் கேட்பேன்...!

என் தம்பியும் மூன்று வருடங்களாக நித்யானந்தரிடம் சென்று வரம் கேட்கிறான். திருவண்ணாமலை அல்லது பெங்களூரு - பிடடி வந்து செல்ல காசு தான் செலவு. அவர் இஷ்டப்பட்ட மாதிரி வெளி நாட்டு வேலை வரவில்லை... இன்னும் பிற!

உங்கள் குமுதம் குடும்பம் பேட்டியும் அருமை! ஒன்று தெரியுமா தன்னை சாத்தான் என்று கூறிக்கொள்பவனே தெய்வம்! ஏன்? எந்த மனித பிறவியும் தன தவறை, ஒப்புக்கொண்டதில்லை. ரீசன் இருக்கும்!

சரி வரம் கேட்கும் சூட்சமம் ஒன்று சொல்லட்டுமா?

என் குடும்பத்தில் எப்போதும் சந்தோஷம் நிலவ வேண்டும். அதற்கு தேவையான ஆரோக்கியம், நிரந்தர தொழில் மற்றும் அழகான ஒரு சொந்த வீடு வேண்டும்!
- இதை தான் என் அப்பா எனக்கு சொல்லிக்கொடுத்து, தினம் எனது பிரேயரில் நான் கேட்பது -

--
Raju Sundaram
Bangalore
http://pitbuzz.blogspot.com
"Words once spilled cannot be taken back!"

Monday, March 1, 2010

பனி மழை

பனி மழை எங்கும் பொழியுது
குளிரால் மனம் வாடுது
உடலும் நடுங்குது
பச்சை நோட்டுக்களை
தேடி வந்த தமிழார் நாங்கள்
குளிரென்ன பனியென்ன
எதுவும் ஒக்கே
எங்கள் பணி வெள்ளைக்காரருக்கு
பணி செய்து கிடைப்பதே
கூடிய சீக்கிரம் சம்மர் வருமே
ஒரு நாள் விடிவு மலரும்
எங்கள் வாழ்வில் விடிவெள்ளி வரும்
நல்ல பேன்க் பேலன்ஸ்
இருந்தால் வாழ்வு சுபிச்சமாகும்
ஆபிசில் உருப்படியா வேலை
செய்தால் பசியும் மறந்திடும்