Thursday, June 18, 2009

தூரம் கொஞ்சம் தான்

நாங்கள் வேலை செய்யும் ஆபிஸ் இருப்பது கொஞ்சம் தூரம் தான்.

ஆம்ஸ்டேர்டம்....

ஹோட்டலில் இருந்து நேற்று சாயந்திரம், ஒரு சிறு வீட்டிற்கு இடம் மாறினோம். பெனுலக்ச்பான் என்ற இடம். பென்ஸ் என்கிறார்கள். அப்பாடா கொஞ்சம் இடம் உள்ளது... முதல் மாடி வீடு. வேலை இடத்திற்கு செல்ல ( 5.5 km ) என்ன பஸ் பிடிக்க வேண்டும், தினமும். பக்கத்தில் ஸ்டோர் இருப்பதால் எல்லாம் கிடைக்கிறது.... இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள், அரபிகள் இந்த ஏரியாவில் இருக்கிறார்கள்.

முதலில் அரிசி வாங்கி, சமைத்து.... தயிர் ஊறுகாய் வைத்து சாப்பிட்டோம்! வெளியே விலை மிகவும் அதிகம். இங்கு லன்ச் என்பது ஸ்னேக் மாதிரி, கொஞ்சமா சாப்பிடுகிறார்கள். ஒரு சாண்ட்விச் தான்! அப்புறம் நொறுக்ஸ்.... ஜூஸ். அது நமக்கு கட்டுபடி ( பில்லிங்.. ) ஆகாது. விலையும் கூட!

இங்கு மெயின் ஏரியாவில், கேசரி கொடுக்கிறார்கள் ஹரே ராம ஹரே கிருஷ்ணா ஆட்கள். டொனேசன் கட்டாயம் கேட்கிறார்கள். எல்லாம் போதையில் அருகில் படுத்து கிடக்கிறார்கள்.

போலீஸ சைக்கிளில் செல்கிறார்கள். இங்கு தொழில் டூரிசம், செக்ஸ் விற்பனை.. ட்ரக்ஸ் பற்றி யாரும் கண்டுக்கொள்வதில்லை. விற்றால் தான் கேசாம். அடித்தால் தவறில்லை என்றார் லோகல் ஒருவர்!

கிரிகெட் பற்றி கொஞ்சம் தெரிந்துள்ளது இங்குள்ளவர்களுக்கு. ஹாலந்து டீம், டி-௨0 வேர்ல்ட் கப்பில் ஆடியதை கவனிக்கிறார்கள். இந்திய தோற்றத்தை பார்த்து உச்சு கொட்டுகிறார்கள். ஒன்று கவனித்தேன், பூட்பால் மாதிரி கிரிக்கெட் மீது இங்கு மோகம் இல்லை. இங்க்லேண்டிலும் அப்படித்தானாம்!

சனி ஞாயிறு லண்டன் செல்லலாம் என்றால், இங்கு வந்த விசா செல்லாது. செங்கண் விசா லண்டனுக்கு பயன்படாது. ஆனாலும் அவர்கள் யுரோ உனியனில்... கண்செலேட்டை கொஞ்சம் நேரம் முன் அழைத்துப்பார்த்தேன், ஒரு இந்தியர் தான் பேசினார். இந்தியாவில் தான் விசா வாங்க வேண்டும் என்றார். ( என்ன கொடுமை இது? )

அறை மணி நேரம் ப்ளைட் தான் இங்கிருந்து. அதற்கு போக, இந்தியா ( பத்து மணி நேரம் ) சென்று விசா வாங்குவதா?

நானும் ரவியும், இந்த ஏரியாவை, வெள்ளி இரவு முதல் திங்கள் காலை வரை சல்லடை போட்டு, ஊர் சுற்ற முடிவு செய்துள்ளோம்.

நேற்றிரவு, கடைக்கு ( மால் ) போன சமயம், சில ஸ்ரீலங்கன்சை பார்த்தேன்! ஹோட்டல் தவிர எட்டு மணிக்கு எல்லாம் மூடிவிடுகிறார்கள், சட்டமாம்!

ஆமாம், ஒரு இந்தியனை பார்த்தால், இன்னொருவர் ஏன் முகம் திருப்பி செல்கிறார்கள்? ( என் வேலையை கெடுக்க இன்னொருவன் இங்கு வந்துவிட்டான் என்றா? )

****

வீடு இரண்டு பெட்ரூம், இரண்டு டாய்லேட் ( அது ஒரு வித்தியாசம், இங்கு! ). ஒரு வாரம் ஹோட்டல் சார்ஜிர்க்கு, ஒரு மாதம் வீடு! ;-)

அம்ச்டேல்வீன் என்ற இடத்தில் இருக்கும், ஆபிசிலிருந்து, சுமார், பதினைந்து நிமிடத்தில் ... பெனுலக்ச்பான். மிஸ்சிசிப்பி என்ற தெரு... கூகிள் மேப்சிலும் வருது... தூரம் கொஞ்சம் தான்



View Larger Map

Tuesday, June 16, 2009

ஆம்ஸ்டேர்டம் வந்தாச்சு

,நேற்று காலை மும்பையில் விசா வாங்கிவிட்டு, நண்பர் ரவியோடு ஹாஜி அலி தீவிற்கு சென்றேன். பிறகு ரேய்மொண்ட்ஸ் கடை தேடி நரிமன் பாயின்ட் ஏறிய அருகில் எனது பட்ஜெட்டில் சூட் வாங்கினோம்.

மதியம் ஹோட்டலிலே சாப்பாடு. கொஞ்சம் ரெஸ்ட். பாஸ்போர்ட் ட்ராவல் எஜன்ட் ஐந்து மணிக்கு வாங்கி வருகிறேன் என்று சொன்னதால், வெயிட் செய்தோம். கூடவே, ப்ளைட் டிக்கட்டும் ( கே.எல்.எம் அதிகாலை 1 மணி ) ஆளுக்கு இருநூறு டாலரும் கொண்டு தருவதாக ஏற்பாடு. பாஸ் பில் செட்டில் செய்துவிடுவார்!

ஆள் சுமார் ஆறு மணிக்கு தான் வந்தார். எங்கேயும் செல்ல முடியவில்லை. அதுவரை இமெயில் மற்றும் லக்கேஜ் இரு முறை செக் செய்தோம். இருபது கிலோ லிமிட் என்பதால், ஆளுக்கு நான்கு பிஸ்கட் பேக்கட் மட்டும் தான் அதிகம் எடுத்து சென்றோம்.

ஏர்போர்டில் கோட்டுக்கள் மாட்டிக்கொண்டு தான் சென்றோம், வெயிட் குறையும்... நல்ல வேலை, யாரும் எங்களை தமாசாக பார்க்கவில்லை. ஒரு மரியாதையை தான் கண்டோம். ப்ளைட்டும் கோட்டை வங்கி இறங்கும் முன் திருப்பி தந்தார்கள், பணிபெண்கள் ( இந்தியர்? )...

*****

மும்பை இண்டர்நேசனல் ஏர்போர்ட்டில் எல்லோரும் மாஸ்க் போட்டு வேலை செய்துக்கொண்டு இருக்கிறார்கள். கவர்ன்மன்ட்டும் வெளிநாடு போகாதே என்கிறார்கள்.

வேறு என்ன செய்வது, வேலை!

*****

ப்ளைட்டில் மூன்று நன்கு மணி நேரம் தூக்கம். அவ்வளவு தான். இரண்டு முறை நல்ல சாப்பாடு மற்றும், ப்ரேக்பாஸ்ட் தந்தார்கள். சில நேரம் தமிங்கலத்தில் இந்த போஸ்ட் டயிப் செய்துக்கொண்டு இருந்தேன். சில மெயில்களும், எங்கள் ப்ராஜக்ட் விஷயங்கள் குறித்து கொஞ்சம் அப்டேட்டும் ஜரூராக நடந்தது.

ஏழு மணிக்கு ப்ளைட் இறங்கியது. ஆம்ஸ்டேர்டம் அவ்வளவு சுத்தம் இல்லை! சில நிமிட தூரத்தில் தான் ஹோட்டல். இங்கே விசா செக்கிங் போன்றவை, பாஸ்போர்ட்டில் ஒரு சீல் தான்! இனி யுரோபில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.

ஊருக்கு கால் செய்தோம். மேட்ரிக்ஸ் மொபையில் எடுத்து வந்தேன். லோகல் காலிங் கார்டு தேட வேண்டும். ரூமில் இன்டர்நெட் ப்ரீ என்பதால், ஸ்கைப் பொன் வேலை செய்தால், தினமும் ஊருக்கு பேசலாம். ட்ரை செய்ய வேண்டும்.

இப்போது மிகுந்த களைப்பு. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துவிட்டு, லோகல் டைம் பன்னிரண்டு மணிக்கு க்ளையண்ட் ஆபீஸில் ஆஜர் ஆக வேண்டும். நடக்கும் தூரம் தான்.

நாளை முதல் காலை எட்டு மணிக்கெல்லாம் அங்கு வேளையில் இருக்க வேண்டும்! :-) சனி ஞாயிறு மட்டும் லோகல் இடங்களை பார்க்கணும்.

வேலையை பொறுத்து இரண்டு அல்லது மூன்று வாரத்தில் நான் கிளம்பிவிடுவேன். ரவிக்கு அடுத்த வாரத்திற்குள் குறைவான ரெண்ட்டில் ஒரு ரூம் எடுத்து தர வேண்டும். அவர் விசா முடியும் செப்டம்பர் 12 அன்று தான் கிளம்புவார்.

Sunday, June 14, 2009

மும்பை மேரி ஜான்

அழகான மும்பை. இது ஒரு சுகானுபவம். நிறைய முறை வந்திருக்கிறேன். இது தான் முதல் தடவை, பீச்சுக்கு போய்விட்டு, நன்றாக பார்க்கும் சாட் எல்லாம் அடித்துவிட்டு, எட்டு மணிக்கு சிறு டின்னர் சாப்பிட்டுவிட்டு, இப்போ கம்ப்யுட்டர் முன்...

முதலில் திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு ஒரு டாக்சி வைத்துக்கொண்டு, நானும் அம்மாவும் தம்பியும், காலையில் அக்கா வீட்டிற்க்கு வந்து விட்டோம். அம்மாவும், தம்பியும் இரவு வீடு திரும்புவார்கள்.

**********

நாளை காலை விசாவிற்கு எழு மணிக்கு க்யு நிற்க வேண்டும். எஜன்ட் வருவான், இருந்தாலும், அங்கு முதல் 25 ஆளாக இருக்க வேண்டும். ஆறு மணிக்கே எழுந்து கிளம்ப வேண்டும்.

மழை வரலாம். குடை கையில்! நாளை மதியம், விசா ஒக்கேவானவுடன், சூட் வாங்கிவிடுவேன்.

**********

இதை "டாவின்சி கோட் ஸ்புப்" படித்தவுடன், சிரிப்பு தாங்கவில்லை.

சிலர் திருந்தமாட்டார்கள்!

**********

சென்னை வழியாக மும்பை வந்திறங்கினேன். வந்தவுடன், நண்பருடன் பீச். வெகு அருகில். நண்பர் ரவி, மதியம் இங்கு வந்துவிட்டதால், ஹோட்டல் சீவின்ட் அருகில் என்னவெல்லாம் கிடைக்கிறது என்று பார்த்துவிட்டார். பிரபலமான கவர்மென்ட் ஆஸ்பத்திரி ( நானாவதி? ) இங்கு உள்ளது.

;-)