Thursday, August 27, 2009

செந்தில்நாதன் அறுவை சிகிச்சை வெற்றி

இன்று (27 ஆகஸ்ட் 2009) சிங்கப்பூர் நேரம் காலை 8 மணிக்குத் தொடங்கிய VAD Fixing அறுவை சிகிச்சை மாலை 3:30க்கு வெற்றிகரமாக முடிவடைந்து செந்தில் இப்பொழுது நலமாக உள்ளார். செந்தில்நாதன் நலமுற பிரார்த்தித்த, உதவிய, உதவிக்கொண்டிருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள் பல.

செந்தில்நாதன் நலம் குறித்த பதிவு

***

அவர் ஒரு விடியோ பதிவு போடுவார் என நம்புகிறேன்.

இந்தியாவிற்கு நலமோடு திரும்பி வர வேண்டுகிறேன்!

***

இறைவனுக்கு நன்றி!

ஞாநி கோலம்: வீடு தேடி வரும் நல்ல விஷயம்

நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா?

அதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.

கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078 நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.

Wednesday, August 26, 2009

பிழைக்க தெரிந்தவர்கள்

ஐ.டி. துறையில் மடமடவென்று மேலே செல்பவர்கள் அதிகம். அதே போல் கிழே விழுபவர்கள் அதிகம்.

திறமை இருந்தும் வேலை இல்லாதவர்கள் அதிகம். ரிசச்சென் என்ற பெயரால் அதிக சம்பள ஆட்களை நீக்கியதை என் கம்பெனியிலேயே பார்த்துள்ளேன்.

Nepotism and Cronyism is there to the core.

நானே மூன்று வருடம் எக்ச்பீரியன்சில் வாங்கும் (அதிகபட்சம்) சம்பளத்தை பத்து வருட சர்வீச்சில் வாங்கிக்கொண்டு வாழ்கிறேன். இதற்கு புரிதல் அவசியம்!

பிழைக்க தெரிந்தவர்கள் நிறைந்தது ஐ.டி. துறை. ( கவனமாக நடந்து கொண்டால் )

அப்புறம், நீங்கள் மறுத்த உதவிகள் செய்வது போல், ஐ.டி. வேலையில் தூக்கி அடிக்க பட்டவர்களுக்கு உதவலாமா?