Friday, May 15, 2009

+2 தேர்வில் தோற்ற மாணவர்களுக்கு...

நீர் கீழே வீழ்வதை அருவி என்றும் ‘நீர்வீழ்ச்சி’ என்றும் சொல்கிறோம். அதே நீர்தான் மேலே இருந்துதான் விழுகிறது, என்றாலும் ‘மழை’ என்றும் அழைக்கிறோம். ஏன் என்று எப்பொழுதாவது யோசித்ததுண்டா தம்பிகளே? அது போலத்தான் சில நிகழ்வுகள் அதனதன் அளவில் பொருள் கொள்ளப்பட்டு வருகிறது.வரும். தேர்வும், அதில் தோல்வி என்று சொல்லப்படும் வார்த்தைகளும் அந்த அளவே...

மெக்காலே கல்வித்திட்டத்தின் மிச்ச எச்சமே இந்த எழவெடுத்த தேர்வுமுறை. வெற்றி பெற்றவர்கள் மட்டுமே கொண்டாடப்படுவதால் தோல்வியின் வலி தோற்றவனுக்குள் புதைந்து போகிறது. போகட்டும். தோல்வி என்று ஒன்றுமே இல்லை.. தள்ளிப்போடப்பட்ட வெற்றி தான் அது.

தாமஸ் ஆல்வா எடிசனின் கண்டுபிடிப்புகளும் வெற்றியும் கொண்டாப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வுலகில் அதற்கு முன் அவர் தோற்ற அத்தனை முயற்சிகளையும் மறந்துவிட்டே இருக்கிறது.அல்லது அந்த தோல்விகளைப் பற்றி நினைத்துப் பார்ப்பது கூட இல்லை.

தாமதிக்கப்பட்ட ஒவ்வொரு வெற்றியும் தோல்வியாகத்தான் சித்தரிக்கப்படுகிறது. பரவாயில்லை.

“இனி வாழ்வே இருண்டுவிட்டது. அவ்வளவுதான்” என்று யாராவது சொன்னால் ஒரு மெல்லிய புன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுங்கள். ஆனால் இரும்பு இதயத்தோடு. ஏனெனில் இங்கு தேர்வின் தோல்விக்கும் வாழ்வின் வெற்றிக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. நீங்கள் தோல்வியை சரியாக எதிர்கொள்ளும் பட்சத்தில்.

குற்றவுணர்வில் குறுகிப் போய்விடாதீர்கள். வாழ்வில் இஃது ஒரு நிகழ்வு. விழுந்தால் எழத்தான் வேண்டுமேயன்றி அழ அல்ல.

உலகம் எவ்வளவு பெரியது என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவு இருக்கிறது. ஒரு மெடிக்கல்ஷாப் ஓனரின் உலகம் அந்த 20க்கு 20 கடையளவுதான்.ஆனால் அங்கு வந்துபோகும் வாடிக்கையாளர்களின் உலகத்தின் அளவு மொத்தமும் அவரின் உலக அளவில் அடங்கும்.

உங்களைப் பொருத்தவரை இன்று இந்த தோல்வி மட்டுமே கண்முன் இருக்கும் உலகம்.உண்மை அதுவல்ல. அதன் பின் இருக்கும் மிகப் பெரிய வெற்றிகள் தான் உண்மையான உலகம். அதைப் பார்ப்பதற்கான பாஸ்போர்ட்தான்/பயணச்சீட்டுதான் இந்த தோல்வி என்று கூறப்படும் தாமதிக்கப் பட்ட வெற்றி.

எனக்குத் தெரிஞ்ச ஒருவர்... +2 ல சுமாரான மார்க் வாங்குனதால பி.இ. சேர முடியாம பிஎஸ்சி சேந்தாரு. அத முடிச்சுட்டு ஐஐஎம் இல் போய் எம்பிஏ படிச்சாரு. +2 வுல சுமார் மார்க் வாங்குன அவரு சில வருட இடைவெளியில் தன் முயற்சியால அகமதாபாத் ஐஐஎம்லேயே சீட் வாங்குனாரு.அவரோட என்ட்ரன்ஸ் எழுதுன எத்தினியோ பி.இ. படிச்சவுங்களுக்கு ஐஐஎம் இல் இடம் கிடைக்கல. வாழ்க்கை யாருக்கு எப்ப மாறும்னு சொல்ல முடியாது. ஆக தொடர் முயற்சி மட்டுமே பலன் தரும்.

இன்னும் நீங்கள் பெரிதும் விரும்பும் திரைத்துறையில் எத்தனை வித பாடங்கள்.. தோல்விகள்.. அதிலிருந்து மீண்ட வெற்றிகள்..

முன்னனி இதழ் ஒன்று விஜயின் முகத்தைப் பற்றி அப்பட்டமாக கேலிசெய்து எழுதியது. இன்று அதே இதழ் மாதமிருமுறை விஜயின் அட்டைப் படம் தாங்கி வருகிறது.விஜயின் விடா முயற்சியும் உழைப்பும் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்..

அஜித்.. எத்தனை வித தோல்விகள். முதல் பட முடிவிலேயே முதுகுத் தண்டில் ஆப்பரேஷன்கள். இனி அவ்வளவுதான் என்று அனைவரும் நினைத்திருந்த வேளையில் நிமிர்ந்தெழுந்தவர் அஜித். இன்று முக்கிய நாயகர்களில் அவரும் ஒருவர். இடர்களை இடறியதால்தான் இது சாத்தியமாயிற்று.

இப்படி இன்னும் இன்னும் எத்தனையோ தோல்விகள் வெற்றிகளாக மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. மொழிபெயர்க்க வேண்டியவர்கள் நீங்கள் தான்.

இது முடிவல்ல.. இறுதியும் அல்ல. ஆனால் முடிவெடுக்க வேண்டிய இடம். ஆம்.. இனி எல்லாம் வெற்றி மட்டுமே என்ற உறுதியுடன் மீண்டும் உழைக்க வேண்டிய தருணம்.

ஏதோ ஒரு காரணத்தினால் இப்படியான நிகழ்வு. மிக நன்றாகப் படித்திருந்தும் தொண்டைவரை இருந்த வார்த்தைகளை பேனாவின் முனையில் இறக்கமுடியாமல் போயிருக்கக்கூடும். வீட்டின் அன்றாடப் பிரச்சனைகளில் தொலைந்து போயிருக்கக்கூடும். தேர்வன்று மட்டுமே படிக்கவேண்டிய கடைசி நிமிட ஞானம் கைகொடுக்காமல் போயிருக்கக் கூடும்.. எதுவாயினும்..இன்று நடந்த நிகழ்வை ஒரு சிறு தோள்குலுக்கலில் தட்டி விடுங்கள்.ஏனெனில் இந்த மிகப் பெரிய உலகம் உங்களின் விரல் சொடுக்கிற்காக காத்திருக்கிறது.

மீண்டும் உழையுங்கள்.. மீண்டு வாருங்கள்.. நிறைய சாதிக்க வேண்டி இருக்கிறது நீங்கள்.காத்திருக்கிறோம்.

இது முடிவு என்று முடிவெடுத்துவிடாதீர்கள். ஆரம்பம்...

முயற்சியை விடாதீர்கள்.. விடாமுயற்சிதான் மனவலிகளை போக்கும் வழி.

*******

இது வரை நீங்கள் படித்த பதிவை எழுதியவர் நர்சிம். காபிரைட் , டீரைட் அவுருதே. நாலு பேர் படிக்கணும், ஒரு காலத்திலே அப்படிங்கற நல்லெண்ணம் தான். :-)

*******

நர்சிம்

நீங்கள் எந்த வருடத்திய ஐ.ஐ.எம் பேட்ச்? எந்த ஊர்?

மிக நல்ல பதிவு.

ப்ளாகர்கள் ஒன்று கூடி ப்ளஸ் ௨ தேறிய மாணவர்கட்க்கு (அதுவும், ஏழை) உதவ ஒரு த்ரெட் போடுங்க. கரக்டான கோர்ஸ் போன்றவை. எங்கே டொனேசன் குறைவு அப்படின்னு... இப்படிபல..

பெண் சிசு கொலை பற்றி ஒரு விளம்பரம்

உறையவைக்கும் விளம்பரம். ஆங்கிலத்தில் ...
டைம் கிடைத்தால் தமிழ்படுத்துகிறேன்.

(தமிழ்மணத்திற்கு நன்றி, இன்று முதல் எனது ப்ளாக் அங்கு லிஸ்ட் ஆகிறது!)

Thursday, May 14, 2009

வாக்குறுதிகள் நிறைவேறுமா ?

இந்த பதிவில் படம் பார்த்து கவிதை சொல்லுங்க - 2 ஒரு படம் இருந்துச்சு. அதுக்கு ஒரு கவிதை எழுதிப்பார்த்தேன்...
அவீங்க வந்துட்டு போனாங்க
வாக்குறுதி எல்லாம் கொடுத்தாங்க
இன்னும் அடுத்த தேர்தல் வரும் வரைக்கும்
நாம் காத்திருக்கணுமா?

வோட்டு போட்டாச்சு

எங்க ஊருக்கு போய் நான் வோட்டு போட்டாச்சு. நல்ல வேலை வோட்டர் லிஸ்டில் பேரு இருந்துச்சு.....

என்ன நேற்று இரவு லேண்ட்மார்க்கில் ஜெப்ரி ஆர்ச்சர் கூட்டம் போக முடியலே.

கடைசி வரை போவோமா என்று தெரியவில்லை. லீவு எடுப்பது பிரச்சனையை இல்லே. புது ப்ரோஜக்ட் ஒன்னு என்னோடு முயற்சியிலே வந்துச்சு. அதனாலே பாஸ் என் மீது அன்பை பொழிகிறார்.

செவ்வாய் இரவு, பத்து மணிக்கு நண்பன் ஒருவரோடு, அவர் காரில் சேலம் வரை பயணம். அவர் மனைவி மற்றும் குழந்தை பின் சீட்டில் தூங்கிவிட்டனர்.

அவரும் வோட்டு போட தான் சென்றார். இரண்டு மணிக்கு பை பாஸ் ரோட்டில் இறக்கி விட்டார். எனக்கு உடனே ஊருக்கு பஸ் கிடைத்தது, ஆறு மணிக்கெல்லாம் வீட்டில்.

அம்மாவுக்கு ஒரே ஆச்சிரியம். "போன் கூட பண்ணலே" என்றார். இருந்தாலும் ஒரு சந்தோசம். எங்கள் சொந்தக்காரர் தே.மு.தி.க கட்சி சார்பில் போட்டியிடுகிறார். சனிக்கிழமை ரிசல்ட் தெரியும். வெள்ளி இரவு டிக்கட் புக் செய்தாகிட்டது. தமிழ்நாட்டு மக்கள், புதிய மாற்றம் வேண்டும் என்பார்களா?

அப்புறம் எழு மணிக்கெல்லாம், கியுவில் நின்று வோட்டு போட்டேன். அப்புறம் தான் டிப்பன்....எங்கள் ஏரியாவில் ஒரு எழுபது பர்சன்ட் வோட்டு விழுந்திருக்கும். சுற்றி தேர்தல் நிலவரம் பார்த்தேன். லோகல் காங்கிரஸ் ஆள், இரண்டு மூன்று டாக்சி அனுப்பி, பிரியாணி சப்பளை செய்தார்... ( அவீங்க ஆட்களுக்கு )

ஜெயலலிதா கட்சி மீது எல்லோருக்கும் கோபம். தலைமை பொறுப்பில் இருப்பவர், நன்றாக இருந்தால் தானே நாடு உருப்படும்? கொள்ளை அடிப்பதில் தான் எல்லோருக்கும் விருப்பன். கமலஹாசன் சொல்கிறார், பால்டிக் ஒரு லிப் சர்வீஸ். கரக்ட் தான்.

வீட்டில் தம்பி கம்ப்யுட்டரில் சில ட்விட்டர் மெச்செஜ் போட்டேன். ஆபிஸ் கூப்பிட்டு என் டீம் வேலை பற்றி விசாரித்துவிட்டு, ரெஸ்ட் தான். அலைச்சல்...

மதியம் அருமையான சாப்பாடு. பிறகு தூக்கம் என போயிற்று... சாயந்திரம் எழுந்து நண்பர்களை பார்த்துவிட்டு, சிலர் வேலை இல்லாமல் பெங்களூரில் வீட்டை காலி செய்து விட்டு, இங்கு அப்பா அம்மாவோடு இருக்க வந்துவிட்டனர். லோகல் கோர்ஸ் ஏதோ செய்கிறார்கள். எம்.பி.ஏ படிக்கிறார்கள். கல்யாணம் செய்ய முயற்சிக்கிறார்கள்.

நானும் எஸ்.ஏ.பி கோர்ஸில் இது வரை ஐந்து லட்சத்திற்கு மேல் செலவு செய்துவிட்டேன். எப்படியாவது, நல்ல வெளிநாட்டு வேலை கிடைக்கும் என நம்புகிறேன். கையில் ஒரு பைசா சேமிப்பு இல்லை.

அடுத்த மாதம் சிங்கபூர் வேலை விசயமாக செல்ல வேண்டும். அப்போது, அங்கு ஜாப் முயற்சி செய்ய வேண்டும்.

எட்டு மணிக்கு கோழி குழம்புடன் தோசை. பத்து மணி பஸ்ஸில் டிக்கட் கிடைத்தது. மடிவாலாவில் காலை ஆறு மணிக்கு இறங்கினேன். ( சரியான நேரம் ) ... ரூமிற்கு சென்று (நண்பனை டிஸ்டர்ப் செய்து! ) படுத்து விட்டேன்.ஒன்பது மணி ஆயிற்று எழ, அவசரமாக குளித்து, அப்படியே சிவ சாகரில் இரண்டு இட்லி ஒரு வடை ஒரு காபி என டிப்பன் முடித்து, ஆபீஸில் வந்து உட்காரும் போது மணி பத்து. ஆபிஸ் ரூமிலிருந்து நடை தூரம் தான்..


*****************

சரி இன்று காலை எக்சிட் போல் ரிசல்ட் எல்லாம் பார்த்தேன். தி.மு.காவிற்கு கொஞ்சம் குடைச்சல் போல.

காங்கிரஸ் மட்டும் மத்தியில் ஆட்சியில் வரவில்லை என்றால், மீண்டும் தமிழகத்தில் தேர்தல். என்.டி.ஏ வின் கையில் இரட்டை இலை! அது தான்!

***************

இங்கே வேலை நிதானமாக போகிறது.

ஐந்து நிமிடம் முன் தான் பாஸொடு ஒரு சிறு மீட்டிங்.

பாஸும், ஸ்டாக் ஆப்சன் மற்றும், ஒரு வருடம் அப்புறம் ரிடன்சன் போனஸ் குடுக்கிறேன் என்று லெட்டர் கொடுத்தார். நன்றி! நன்றி!

Tuesday, May 12, 2009

Azam Khan distributing my nude photos: Jaya Prada

Azam Khan distributing my nude photos: Jaya PradaWhat kind of person would do this? Very very bad.

Rampur is getting hot.

I havent heard anything, lately.

தமிழ்நாட்டு தேர்தல் முடிவு

இட்லிவடை குழுமத்தின் பதிவு படித்தேன்...

"தேர்தல் 2009 - 40 தொகுதி யாருக்கு ?"


என் கமன்ட்

வோட்டுக்கள் எப்படி விழுந்துள்ளன, சென்ற தேர்தலை விட. வோட்டுக்கள் ஒவ்வொரு கட்சிக்கும் எவ்வளவு மாற்றம்? மொத்த வோடுக்களில் எவ்வளவு ஸ்விங் (சென்ற முறை பதிவானவை, இந்த முறை விழுந்தவை)? டி.எம்.டி.கே பெற்ற வோட்டுக்களால் எவ்வளவு லாபம்/நஷ்டம் தி.மு.கவிற்கு? கோவையில் கொங்கு பேரவை ( 12 தொகுதிகள் ) பெற்ற வோட்டுக்கள் எவ்வளவு - Rs 50 கோடி செலவுசெய்கிறார்கள்...?

சரி யார் அந்த பெரியவர், உங்களுக்கு இந்த தேர்தல் விவரிப்பு ( செபாலாஜி ) கொடுத்தது? லக்கி லுக் (அவர் பதிவில் இந்த மாதிரி தான் இருந்தது... )?

சரி டி.எம்.டி.கே முன்னேறிய தொகுதிகள், மற்றும் 2011 எலெக்சன் சமயம் பாதிக்கும் தொகுதிகள் எவை எவை என்பதை எழுதவும்...

அப்புறம் ப.ஜ.க மற்றும் சரத்குமார், கார்த்திக் கட்சி வோட்டுக்கள், எவ்வளவு தூரம் டி.எம்.டி.கே பெற்று வலுவான அணி அமைத்திருக்கலாம் என்றும்எழுதலாம்!

எனக்கு என்னவோ, என் நண்பர்கள் கூறும் விவரம் வைத்து பார்த்தால், விஜயகாந்த் கட்சி குறைந்த பட்சம் 15 தொகுதிகளில் வெற்றி பெரும் போல உள்ளது. அங்கு அ.தி.மு.க கூட்டணி மூன்றாம் இடம் தான். ( ப. ம. க போட்டியிடும் இடங்கள் அனைத்திலும் டி.எம்.டி.கே வெற்றி என்று சொல்கிறார்கள்! )

********

விஜயகாந்த் கட்சியின் ( டி.எம்.டி.கே ) எடை - பலம் குறைத்துப்போடுகிறார்களோ என்று தோன்றுது..... எனக்கு தெரிந்த வரை மதுரையிலும் சரி, கோவையிலும் சரி, நன்றாக வேலை செய்கிறார்கள். மதில் மேல் நிற்கும் வோட்டர்கள் தான் அவர்களுக்கு ( சென்ற முறை 8.6% ) இன்னும் கொஞ்சம் அதிகமாக.... 15% வரை வரும் அளவு உண்டு எனத்தோன்றுது...

மீண்டும் கலைஞர் கூட்டணிக்கு நாற்பதா?

தமிழ்நாட்டில் எல்லோரும் வோட்டு போடுங்கள்! நல்லவர்களுக்கு!

படித்தேன், ரசித்தேன்

படித்தேன், ரசித்தேன். ;-)

"செல்வா கொடுத்த அல்வா ……(எதைப்) பற்றியும் பற்றாமலும் .... (12th May '09)"


நடுத்தர வர்க்கம் பற்றி, நல்ல லயிப்பு... சரி மும்பையில் ஆப்சயிட் வேலை என்ற பெயரில் எஸ்ஸெல் வேர்ல்ட் செல்லும் வழக்கம் இன்னும் உண்டா? (ஐ.டிக்கு இது மிகவும் பொருந்தும்...).. பெங்களூரில் இந்த கொடுமை இன்னும் இருக்கு, என்ன ரெசெச்சன், என்ன எகனாமி, ஒன்னும் தேறாது! செலவு செய்தால் தான் வேலை ஓடுது என்கிறார் என் பாஸ்...

***********

இனோவேடிவ் பில்ம் சிடி மற்றும் வோண்டேர் லா உண்டு... அப்பப்போ மைசூர்...இல்லே ஜேட் கார்டன்... இல்லே நந்தி ஹில்ஸ்... இல்லே ஓல்ட் மெட்ராஸ் ரோடு டாபா...

************

இன்னொரு பதிவு.... வோட்டுக்கள் (தமிழ்மணம் மற்றும் தமிழிஷ் பற்றி..)
"தமிழிஷ் ஓட்டு நம்பகமானதா?"

என்னுடைய கமன்ட்...

"தமிழ்மணம் மற்றும் தமிழிஸால் நல்ல நண்பர்கள் கிடைப்பார்களா இல்லை எழுத்துக்கள் மட்டும் பாபுலர் ஆக மட்டுமா? ( அதிக வோட்டு விழுந்து என்ன பயன் என்ற கேள்வியின் மரூ இது.. )"

நான் என் பதிவை எந்த தொகுப்பு தளத்திலும் இணைக்கவில்லை (தமிழ்மணம் மற்றும் தமிழிஷ் ஓட்டுக்கள் வாங்க ) ...சில தளங்களில் ஆடோமேடிக்காக வருவது தெரியும்...

**************
பெங்களூர் விஷயம்..

நாளை ( மே 13 7 PM ) கருடா ஜெயநகர் மாலில், லேண்ட்மார்க் நடத்தும் ஜெப்ரி ஆர்ச்சர் நேர்காணலுக்கு செல்வீர்களா?

தமிழ் நூல்கள் லைப்ரரி போல எங்கு கிடைக்கிறது?

Monday, May 11, 2009

Something on IPL that I laughed about, serious

Something on IPL that I laughed about, serious...

This has to be copied as is and reproduced (!) here , (1) being short and (2) looses steam clicking on to advt. riddled pages of cricinfo ( pun intended!)...

*******

Plug and play

Ten things commentators will be shafted for shilling next year


1. "That was a Tide of a dive by Gibbs at gully. Boy, those clothes will need a Tide wash."

2. "The umpire has just declared that a Dunlop Spectrawide. Tough call, if you ask me. It didn't look all that Dunlop Spectrawide from here."

3. "Another Levis Skinny Leg-bye is added to the total. Great Levis Skinny Leg running between the wickets by the batsmen."

4. "Clipped away just wide of mid-off for a quick Radio One single."

5. "Nicely glanced away to fine-leg for a Match.com couple."

6. "Ooh, that was a poor bit of fielding that resulted in the batsmen coming back for 3 Mobile runs when all they should have got was a Match.com couple."

7. "After that Big TV No Name ball from Munaf, it's time for a brand-free hit."

8. "That's been driven through the Gap Inc for a Borders boundary."

9. "Good Housekeeping ball from Warne. It pitched just outside the Crabtree Switches off stump. Timex watchfully CPM left alone by the batsman."

10. "A wild Sensex swing from Yusuf Pathan that connects for another DLF Maximum!"

வீரபாண்டியனுக்கு ஒரு சல்யுட்

மதுரையை சேர்ந்த வீரபாண்டியன், ஐ.ஏ.எஸ்.தேர்வில் 53 வது இடம் பெற்றார்.
வாழ்த்துக்கள். அவருடைய பெற்றோருக்கு வணக்கங்கள். அவர் அப்பா பாத்திரம் விற்பவர். அவர் அம்மா ஒரு கூலி வேலை ( கூட்டுகிற வேலை ) செய்கிறவர். அவர் தம்பி வீரமணி, சினிமா தொழில் அஸ்ஸிஸ்டன்ட் ஆர்ட் டைரக்டர் ஆக உள்ளார்.


மேலும் ஒரு தகவல், அவர் ஒரு புரோட்டா கடையில் வேலை பார்த்து (வறுமை!) படித்தார்.

யாராவது வாசகர்கள், அவர் விலாசம் கொடுத்தால், அக்கா வீட்டுக்கு மதுரை செல்லும் பொது ( அவர் ட்ரெயினிங் ஜெயின் செய்ய இன்னும் ஒரு மாதம் உள்ளது ) சந்திக்க ஆவல். நன்றி.

நிச்சயம் அவர் நல்ல வேலை செய்து சமுதாயத்தை முன்னேற்றுவார் என நம்புகிறேன்.

நானும் - சில வருடங்களுக்கு முன் ஒரு முறை ..எஸ். தேர்வில் மெயின் எக்ஸாம் வரை சென்றேன்... செலக்ட் ஆகவில்லை... (இன்டர்வியு கால் கூட வரவில்லை)

Sunday, May 10, 2009

கண் கலங்கினேன்கண் கலங்கினேன் இந்த நடனம் மற்றும் பேச்சை பார்த்து.

*************

ஜெயலலிதா பிரதமர் ஆகி, வந்தால் தான் தமிழ் ஈழம் வரும் போல உள்ளதா?

ஒரு பதிவும் பெண்களும்

இந்த பதிவு என்னை கோபப்பட வைத்தது... ஆண்கள் இப்படியா?

பாலபாரதி எழுதிய பெண் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கையும், மே-10க்கான அழைப்பும்..

*******************

வலை உலகில் இருக்கும் என் தோழி ஒருவர் எழுதி இருந்த மடலின் சில பாகங்களை மட்டும் உங்களின் பார்வைக்கு வைக்கிறேன்.
******
”…ஆமாம்.. பாலா.. நீங்கள் கேட்டிருந்த படி கொஞ்ச நாட்களாக எழுதாதற்கு மன வருத்தம் தவிர வேறு காரணம் எதுவும் இல்லை. depression அதிகமானதால்தான் உங்களின் இந்த மடலுக்கு கூட மிகத் தாமதமான பதிலை எழுதுகிறேன்.

குழந்தையை வேறு school-ல் சேர்க்க வேண்டும். அதற்கு அட்மிஷனுக்காக அலைந்து கொண்டும் இருக்கிறோம். வலையுலகில் எனக்கு உங்களைப் போலவே வேறு சில ஆண் நண்பர்கள் உண்டு என்பது உங்களுக்குத் தெரியும். அதில் எல்லோரும் உங்களைப் போல நேர்மையாக மனதில் பட்டதை சொல்லிவிடும் தைரியத்துடனும், உண்மையாகவும் இருப்பதில்லை. :(

——— பதிவரின் பதிவுகளை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இரண்டொரு முறை சந்திப்புகளில் கூட வந்திருக்கிறார் அவர். உங்களைப் போன்றே அவரும் வலை உலகின் மூலம் அறிமுகமானவர் தான். ஆனால்.. பன்மையில் ஆரம்பத்தில் அழைக்கத்தொடங்கியவர்.. பிறகு ஒருமையில் விளிக்கத்தொடங்கினார். நான் பெரியதாக எடுத்துக்கொள்ள வில்லை. அவரும் மணமானவர் என்பதால் கொஞ்சம் தைரியமாகவே அவரிடம் பேசி வந்தேன்.

அங்குதான் என் தவறு தொடங்கியது. :( உள்மனதில் மிக மோசமான வக்கிரமான எண்ணங்களோடுதான் அவர் பேசி வருகிறார் என்பதை அப்போது நான் அறியவில்லை.

forward mail-களாலும், இரட்டை அர்த்த ஜோக்குகளையும் மெயிலாக மட்டுமின்றி s.m.s-ஆகவும் அனுப்பத் தொடங்கினார். நானும் நாசூக்காக இதெல்லாம் எனக்குப் பிடிக்கலை என்று சொல்லிப் பார்த்தேன். பாவி விடுவதாக இல்லை. தொடர்ந்து அவனுடைய தொல்லைகள் எல்லை மீறத் தொடங்கின. ரொம்ப torture பண்ணத் தொடங்கினான். மிகவும் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்கள் அவனிடமிருந்து வரத் தொடங்கியது. பல நாட்கள் தூக்கம் இல்லாமல் அழுது இருக்கிறேன். வெளியில் யாரிடமும் சொல்ல முடியாத நிலைவேறு. பெண்ணாக பிறப்பதே பாவமா பாலா. அவனுக்கு நான் பதில் அனுப்புவதை நிறுத்தி விட்டேன்.

பிறகுதான் தெரிந்தது, வலையுலகில் மேலும் சில பெண்களிடமும் இது போலவே வரம்பு மீறி அவன் நடந்து கொண்டிருக்கிறான் என்பது. சென்னையில் உங்கள் நண்பர்கள் சிலர் child abuse-க்கு எதிராக மருத்துவர்களை அழைத்து கூட்டம் நடத்தப் போகிறார்கள். முதலில் எதிர்படும் எல்லாப் பெண்களிடமும் வக்கிர குணத்தோடு அலையும் அந்தப் பதிவர் மாதிரியான நபர்களுக்கு தகுந்த treatment கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள். வயது வந்த பெண்களிடமும் abuse செய்யாமல் இருக்க வகுப்பெடுங்கள்.”இப்படியாக நீளும் மடலில் இருந்து சில வரிகளை மட்டுமே எடுத்துப் போட்டிருக்கிறேன். இது போதும். இதற்கு மேல் இந்த கடிதம் சொல்ல வந்த விஷயத்தை நான் தனியாக எதுவும் விளக்கிக் கூற வேண்டாம். பாதிக்கப் பட்ட அந்தப் பெண் பதிவர் யார் என்பதோ, பாதிப்புக்குள்ளாக்கிய அந்த வக்கிர குணமுடைய ஆண் பதிவர் பற்றிய விவரங்களும் இங்கு ஆராயப் பட வேண்டியவை அல்ல. ஆனால் இக்கடிதத்தை இங்கே பகிர்வதற்குக் காரணம், மற்ற பெண் பதிவர்கள் தங்கள் புகைப்படம், குடும்ப விஷயங்கள், தொலைபேசி எண் போன்ற தகவல்களை சக ஆண் பதிவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் முன் ஒரு முறைக்கு இரு முறை நன்றாக யோசித்துக் கொள்ளுங்கள் - அது நானாகவே இருந்தாலும் சரி.

வரும் ஞாயிறு கிழக்குப் பதிப்பக மொட்டை மாடியில் நடக்கும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை எதிர்கொள்வது பற்றிய பயிற்சி முகாமுக்கு அவசியம் எல்லோரும் வாங்க. விபரத்திற்கு தோழன் நர்சிம் பதிவை பாருங்கள்..

http://www.narsim.in/2009/05/10.html

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
Filed under : அனுபவம், சமூகம்/ சலிப்பு, பதிவர் சதுரம் ;-))
28 Responses to “பெண் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கையும், மே-10க்கான அழைப்பும்..”

1.
புருனோ May 8th, 2009 at 8:37 pm

//சக ஆண் பதிவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் முன் ஒரு முறைக்கு இரு முறை நன்றாக யோசித்துக் கொள்ளுங்கள் - அது நானாகவே இருந்தாலும் சரி.//

ஆனாலும் இது நக்கல்.
2.
சென்ஷி May 8th, 2009 at 8:42 pm

:-(((

என்னத்த சொல்ல… இவனுங்கள பீயில மிதிச்ச செருப்பெடுத்து அடிச்சாத்தான் புத்தி வரும்ன்னு தோணுது…
3.
yaathirigan May 8th, 2009 at 8:42 pm

Just now was speaking with a friend about Women’s need to maintain annonimity in Web .. be it blogger/orkut/twitter…etc..
4.
சென்ஷி May 8th, 2009 at 8:45 pm

//சென்னையில் உங்கள் நண்பர்கள் சிலர் child abuse-க்கு எதிராக மருத்துவர்களை அழைத்து கூட்டம் நடத்தப் போகிறார்கள். முதலில் எதிர்படும் எல்லாப் பெண்களிடமும் வக்கிர குணத்தோடு அலையும் அந்தப் பதிவர் மாதிரியான நபர்களுக்கு தகுந்த treatment கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள். //

ரிப்பீட்டே…

தல இவனுங்களுக்கு சும்மா ஆபரேசன் ஷகிலா படம் காட்டுறதெல்லாம் சரிப்பட்டு வராது. பேசாம மைனர் குஞ்சு ட்ரீட்மென்ட் கொடுக்கறதுக்கு ஏற்பாடு செய்ங்க..

…..த்தா கெட்ட வார்த்தை இங்க அடிக்கக்கூடாதேன்னு பார்க்குறேன் :-((
5.
வால்பையன் May 8th, 2009 at 8:50 pm

இரக்கம் காட்டாமல் தூக்கி உள்ளே போடுங்க!

அப்படியே விட்டா எல்லோரிடமும் தொடருவான்!
6.
DrDeva May 8th, 2009 at 8:52 pm

உங்களுக்கு பின்னூட்டம் போட பயோடேட்டாவே கேக்குதே!!
7.
DrDeva May 8th, 2009 at 8:56 pm

சரிதான்!!
பெண் பதிவர்கள் தங்கள் புகைப்படம், குடும்ப விஷயங்கள், தொலைபேசி எண் போன்ற தகவல்களை சக ஆண் பதிவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் முன் ஒரு முறைக்கு இரு முறை நன்றாக யோசித்துக் கொள்ளுங்கள் - அது நானாகவே இருந்தாலும் சரி.///

யாரிடமும் அநாவசிய பெச்சு வேண்டாமே!1
8.
கானா பிரபா May 8th, 2009 at 9:03 pm

:( வலையுலகமே எல்லோருடனும் கண்ணியமாக நட்புடன் பழகக்கூடிய இடமா இருந்தது, இங்கேயும் விஷமா :(
9.
முத்துலெட்சுமி May 8th, 2009 at 9:13 pm

மிக வருத்தமான விசயம்.. பெண்கள் எங்கேயும்
கவனமாக இருக்கவேண்டிய கட்டாயத்தை இங்கேயும் மறந்துவிடவேண்டாம் என்பதற்கு இக்கடிதம் உதாரணம்..
பல பெண்கள் எழுதுவதை குறைத்தது இப்போது மிகவும் உறுத்துகிறது.பெயரை மறைத்து பெண் என்பதையே மறைத்து எழுத வர வேண்டிய கட்டாயம் நிச்சயம் கேவலமான ஒன்று ..
10.
TheKa May 8th, 2009 at 9:16 pm

Guys, just use your instinct before you interact to make friendship with… experience is all what we do need.

Sad though!
11.
ஆயில்யன் May 8th, 2009 at 9:16 pm

நட்பும் பகிரும் இடமாக பதிவுலகம் நீடித்திருக்க இது போன்ற நபர்களின் செயல்களை தடுத்து நிறுத்திடுதல் மிக அவசியம்!

ஈனப்பிறவிகளை எளிதில் அடையாளம் கண்டு மற்ற பதிவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் தகவல்களை பகிர்ந்துக்கொள்வதன் மூலமும் இது போன்ற ஈனச்செய்ல புரிவோரை அகற்றிவிடமுடியும்!
12.
dharumi2 May 8th, 2009 at 9:23 pm

என்ன சொல்றதுன்னு தெரியலை, பாலா.

சிலரால் எத்தனை பேருக்கு கெட்ட பெயர். //வலையுலகமே எல்லோருடனும் கண்ணியமாக நட்புடன் பழகக்கூடிய இடமா இருந்தது,// இதை முழு மனதாக நினைத்தது உண்டு. இங்குமா இப்படி?
13.
மங்கை May 8th, 2009 at 9:27 pm

ம்ம்ம்…

// மற்ற பெண் பதிவர்கள் தங்கள் புகைப்படம், குடும்ப விஷயங்கள், தொலைபேசி எண் போன்ற தகவல்களை சக ஆண் பதிவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் முன் ஒரு முறைக்கு இரு முறை நன்றாக யோசித்துக் கொள்ளுங்கள் //

அதான்…இதுவே தீர்வு… அப்படி பட்டவர்களை சொல்லி ஒன்னும் ஆகப்போவதில்லை..

பகிர்விற்கு நன்றி
14.
சந்தோஷ் May 8th, 2009 at 9:31 pm

பாலா,
இது ரொம்ப நாளா நடந்துகிட்டு வருகின்ற ஒரு மேட்டர், நானும் ரொண்டு ஒரு பதிவர்களிடம் கேள்விப்பட்டு இருக்கிறேன்.. அவங்களுக்கு தனியாக நான் சொன்னதும் இது தான் தேவையில்லாத விஷயங்களை தேவையில்லாதவர்களிடம் பேசாதிங்க முக்கியமா குடும்ப விஷயங்களை.. அதே தான் எல்லாருக்கும்..

சும்மா இதை இப்படியே விடாமல் அந்த மாதிரியான நல்லவங்களை புகைப்படத்துடன் பதிவுகளில் போட்டால் தான் அடங்குவானுங்க..
15.
ச.முத்துவேல் May 8th, 2009 at 9:34 pm

கொஞ்சம் பாலியல் எழுத்தாக இருக்கும் ஒரு கவிதையை எழுதிவிட்டு(ஆனால், நல்ல கவிதை) என் வலைப்பூவில் இடுவதற்கே தயங்கி நாட்களை கடத்திக்கொண்டிருக்கிறேன். காரணம், பெண் பதிவர்களை சங்கடப்படுத்துமோ என்பதுதான். வலையுலகம் படித்தவர்கள் , சிந்தனையாளர்கள் புழங்கும் இடம். இங்குமா கயவாளித்தனம் ? Nonsense.
16.
அறிவே தெய்வம் May 8th, 2009 at 9:35 pm

நட்பு என்ற வார்த்தையை களங்கப்படுத்துவோரை
அடையாளம் காட்டுங்கள். எல்லோரும் இணைந்து ஒதுக்கித்தள்ளி விடலாம்
17.
ஜ்யோவ்ராம் சுந்தர் May 8th, 2009 at 9:37 pm

உங்களுடைய இந்தப் பதிவிற்கு என்னுடைய கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நிச்சயம் அந்த ஆண் பதிவர் உங்களுக்குத் தெரிந்தவராகத்தான் இருப்பார், அவரிடம் நேரிடையாகப் பேசுவதை விட்டுவிட்டு, இப்படி எழுதுவது பெண் பதிவர்களை காப்ரா படுத்துவதைப் போல் உள்ளது :(

இல்லையென்றால், இதைத் தவிர வேறு என்ன நடந்து விட முடியுமென்று நினைக்கிறீர்கள்?
18.
Kaattaaru May 8th, 2009 at 9:46 pm

அட என்னங்க இது! தைரியமா இருக்க வேண்டாமா? அப்படி ஒரு ஆள் உங்க கிட்ட தவறா பேசினா… வெளி உலகுக்கு கொண்டு வாங்க. உங்க கிட்ட ப்ரூஃப் இருக்கா இல்லையான்னு யாரும் கேட்க போறதில்ல. ஆனா ஏன் கோழைத்தனமின்னு எனக்கு புரியல. எது உங்களை வெளி வர விடாது தடுக்குது? இன்னொரு நண்பரிடம் இப்படி போய் சொல்லுவதற்கு தைரியம் இருக்குதுல்ல. அதுவே நீங்க வெளிப்படையா தோலுரித்தால்… அடுத்த ஆளுக்கு தைரியம் வருமா இது போல் நடக்க? முதல்ல நீங்க முக்காடை விலக்குங்க. எல்லாம் சரியா நடக்கும்.
19.
kuppan_yahoo May 8th, 2009 at 9:47 pm

நீங்கள் எழுதி உள்ளவை போன்றுதான் பெரும்பாலும் நடக்கின்றன.

பெரும்பான்மையான பதிவர்கள், சாட்டர்கள் நல்லவர்களாக இருந்தாலும் அவர்கள் நண்பர்கள் தெரிந்தவர்கள் மூலமாக இந்த பெண்களின் புகைப்படம், தொலைபேசி எந்கல் தவறானவர்களிடம் சென்று விடுகிறது.

அதுவும் திருமணம் ஆகாத மிகவும் இளம்பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.,

குப்பன்_யாஹூ
20.
மங்கை May 8th, 2009 at 9:48 pm

இன்னொன்று பெண்கள் பயந்தால் வேலைக்கு ஆவாது… முகமூடிய கிழிக்கனும்…
21.
நா ஜெயசங்கர் May 8th, 2009 at 10:00 pm

//புகைப்படம், குடும்ப விஷயங்கள், தொலைபேசி எண் போன்ற தகவல்களை சக ஆண் பதிவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் முன் ஒரு முறைக்கு இரு முறை நன்றாக யோசித்துக் கொள்ளுங்கள் - அது நானாகவே இருந்தாலும் சரி.//

ஆமாம் சொல்லிட்டாரு எங்க தலயே! இதையும் மீறி எங்க தலகிட்ட தொலைபேசி எண்ணை கொடுத்திட்டு! தல அப்பிடி பேசினாரு! இப்படி பேசினாருன்னு ரவுசு பண்ணா எங்க சங்கத்து ஆளுங்க சொம்மா விடமாட்டோம்ன்னு சொல்லிக்கிறேன்…

நா ஜெயசங்கர்
பா.க.ச
22.
viji May 8th, 2009 at 10:10 pm

oosi idam kudukama nool nulaiyathu.

tannudaiya nilalaga iruntaalum, mutalil nambida koodathu. aalam ariyamal kaalai vitatthu avarin kutram. intha vishyathil antha aanai mathum kurai kooriyathu tavaru.

more over, when she felt he is wrong. she can ignore him. she no need to reply his sms or emails at first. definately he will continue send few times. after awhile he will start feel tired and stop the hell.

Thank you
23.
Raja May 8th, 2009 at 10:12 pm

சைக்கோவா இருப்பான் போலிருக்கு.

பெண்பதிவர்கள் என்றில்லை ஆண் பதிவர்களாகவே இருந்தாலும் தேவையற்ற தனிப்பட்ட தகவல்கள் எதையும் இணையம் மூலம் அறிமுகமானவர்களுக்கு அளிப்பதற்கு முன் நிறைய யோசிக்கத் தான் வேண்டும். பெண்கள் இன்னும் கூட அதிகமாய் யோசிக்க வேண்டும்.. லூசுப்பயலுக அதிகமா நடமாடற இடமாப் போச்சு :-(
24.
Raja May 8th, 2009 at 10:15 pm

I know the name of the person you’re talking about. He is always like that only. We need to inform his wife
25.
யட்சன் May 8th, 2009 at 10:16 pm

பாதிக்கப்பட்டவர், பாதித்தவர்….விஷயத்தத கிசு கிசு பாணியில் செய்தியாக போட்டுவிட்டீர்கள்.

இப்ப சென்னையில் இருக்கிற அத்தனை பெண்பதிவர்கள் மற்றும் மணமான ஆண்பதிவர்கள்….எல்லோர் பெயரும் அலசப்படும்.

இதுக்கு பேசாம அந்த வக்கிர பதிவரின் பெயரை போட்ருக்கலாம். அவர் அனுப்பின எல்லாத்துக்கும் ப்ரூஃப் இருக்கும் போது எது உங்களை தடுக்குது…

என்னவோ போங்க…நான் கூட சென்னையில இருக்கற மணமான ஆண் பதிவர்தான்…
26.
அதிஷா May 8th, 2009 at 10:56 pm

பெண்பதிவர்களுக்கான எச்சரிக்கைக்கும் . மே 10க்கான அழைப்புக்கும் என்ன சம்பந்தம்.

தனித்தனியா போட்ருக்கலாம்லண்ணா!
27.
நான் ஆதவன் May 8th, 2009 at 11:02 pm

அந்த புறம்போக்குக்கு நேரடியாக சாட்டையடி வார்த்தைகளை கொடுத்திருக்கலாம்…

இந்த பதிவு பெண் பதிவர்களுக்கு எச்சரிக்கை உணர்வுகளை தூண்டினாலும் புதிதாக எழுத வரும் பெண் பதிவர்களுக்கு பயத்தையும் தரும்
28.
அக்னிபார்வை May 8th, 2009 at 11:07 pm

///ஜ்யோவ்ராம் சுந்தர் May 8th, 2009 at 9:37 pm
உங்களுடைய இந்தப் பதிவிற்கு என்னுடைய கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நிச்சயம் அந்த ஆண் பதிவர் உங்களுக்குத் தெரிந்தவராகத்தான் இருப்பார், அவரிடம் நேரிடையாகப் பேசுவதை விட்டுவிட்டு, இப்படி எழுதுவது பெண் பதிவர்களை காப்ரா படுத்துவதைப் போல் உள்ளது

இல்லையென்றால், இதைத் தவிர வேறு என்ன நடந்து விட முடியுமென்று நினைக்கிறீர்கள்?

/////

பாலா அண்ணன் அந்த பதிவருக்கு பாடம் புகட்டியிருப்பார் என் நம்புகிறேன்… இல்லையென்றால் புகட்ட வேண்டும் என வேண்டுகிறேன்.. .. இல்லையெண்ரால் அந்த பெண் பதிவர் பட்ட துன்பங்களை இத்த்னை நாளுக்குள் எத்த்னை மற்ற பதிவர்கள் துன்பபட்டிருக்கிறார்களோ? இனி எத்தனை பேர் துன்பபடபோகிறார்களோ.