Tuesday, February 9, 2010

சூப்பர் சாங்

தமிழ்படத்தில் வரும் இந்த பாடல் தான் இந்த வருடத்தின் ஸூபர் ஹிட்டு!



ஒ மஹாசீயா ....

***
எப்படி இந்த ஐடியா?

தமிழ் பாடல்களில் எப்போதும் வரும் புரியாத சந்தங்களை கொண்டு ஒரு அழகான கோர்வை!

அற்புதம், பாடல் ஆசிரியர், இந்த மல்லிமாலை ( பாடல்களால் ) தொடுத்ததற்கு.

தெலுகு பாடல்கள் ராகங்களின் சுகந்தங்கள்

ஈழ நண்பரோடு ஈமெயிலில் ஒரு சிறு விவாதம்...

என் பதில்...

தெலுகு ஒரு மதுர மொழி. தியாகராஜா கீர்த்தனைகள், தெலுகில் இருப்பதற்கு காரணமே - ராகங்களின் தன்மையை கூட்டுவதாக இருந்திருக்கின்றது..... என் தாய்மொழி என்பதால் மட்டும் இல்லை!

என் அக்கா கர்நாடக சங்கீதம் பயின்றவர். அவர் சொல்ல கேட்டது....

இப்போது பெல்லி ராஜ் பாடிய பாடல் - கண்கள் இரண்டால் - "ரீதகவுளை ராகம் " அதுவே தெலுகு பாடல் ஆக இருந்திருந்தால் - வரிகளில் "ப" "பா" போன்ற சாந்த சுத்தங்களில் விரிவாக இருக்கும். சுகம்.

***

விஷயம் தெரிந்தவர்கள் ஒரு விரிவான பதிவு போடுங்களேன்!

Monday, February 8, 2010

ஜோதிடம் உண்மையா பொய்யா?

ஜாதகத்தில் ஒவ்வொரு வீட்டின் அதிபதிகள் யார்?
எல்லோருக்கும் பொதுவா?

ஒரு வீட்டின் அதிபதி இன்னொரு வீட்டில் இருப்பது புரிகிறது.

ஆனால், சில ராசி கட்டங்களில் இரண்டு மூன்று கிரகங்கள் இருந்தால், பவர் எப்படி இருக்கும்?

என் அப்பா சொல்வார் "ஜோசியத்தால் பரிகாரம் செய்து கெட்டவர்கள் தான் அதிகம்" ( திண்டுக்கல் பழமொழி )

அப்படியானால் ஜோதிடம் எப்படி உபயோகத்தில் கொள்வது?