Saturday, March 7, 2009

கமலும் ஆஸ்காரும் எழுத்தாளர்களும்

ஊடகங்களில் கமல் மற்றும் இளையராஜாவை கிண்டல் செய்து (காதில் புகை...) என்று எழுதுகிறார்கள்.

அவரவர் சக்தி நிலைத்து நிற்கும், வளம் பெரும், ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்....

RP ராஜநாயஹம் அவர்கள் எழுதியதை கமல் பற்றி R P ராஜநாயஹம் ப்ளாகிலும், ட்விட்டேரிலும் (எஸ்.எம்.எஸ் போல 140 எழுத்துக்கள் மட்டும் உபயோகிப்பது...) போட்டு அலசுகிறார்கள்....

ஆஸ்காரை முன் வைத்து எழுத்தாளர் ரவிச்சந்திரன் முருகன் (இங்கே அவர் ப்ளாக் இரா முருகன்) கமல் பற்றி இன்னும் ஒன்று கூட பேசவில்லை. ஆச்சிரியம்! கமலோடு அவர் ஏ வெட்நெஸ்டய் படம் (தலைவன் இருக்கின்றான்) செய்வதினாலா? அவர் மகன் ரவிச்சந்திரன் அஷ்வின் தமிழ்நாட்டிற்கு விளையாடும் ஒரு கிரிக்கெட் வீரர்.

கிரேசி மோகன் எப்போதும் போல நன்றாக ஜாலரா தான் தட்டுவார். சத்தம் ஊரை பிளக்கும்.

Friday, March 6, 2009

ஸ்ரீலங்காவில் ஆனந்தவிகடன் விற்றவர் கைது

ஸ்ரீலங்காவில் ஆனந்தவிகடன் விற்றவர் கைது!

என்ன கொடுமை இது சரவணன்?

இங்கே படியுங்கள்....

அவர்கள் செய்த தவறு, அங்கே சென்சார் இருப்பது தெரிந்தும், தன் நாட்டை கேவலமாக சித்தரிக்கும் (பர்மாவை போல ஒரு சட்டம்) இதழ்களை ஒழிக்கிறார்கள்.

இந்தியாவில் இப்படியா? ஒரு முறை எமேர்கேன்சி சமயத்தில், முதல் பக்கம் ஹிந்துவில் முழு கறுப்பாக வந்த ஞாபகம்... (தகவல், புகைப்படம் இருப்பின் தெரிவிக்கவும்).

***************

தமிழில் எழுதினால் எங்கேயும் பிரச்சனை தான் போல....

Wednesday, March 4, 2009

Attitude of Slumdog Millionaire Ashutosh

See these pictures and you know what I am talking about.... (c) Rediff website and their clickers.

Anil Kapoor, Ashutosh, Sanchita Choudhary, Dev Patel and Freida Pinto

The Slumdog kids

Ashutosh Lobo Gajiwala

Ashutosh and Tanvi


A star in the making! Good luck for the 10th std board exams (Mah.)

Tuesday, March 3, 2009

பாகிஸ்தானில் கொடுரம்

என்ன நடக்கிறது உலகத்திலே.... ஸ்ரீலங்கா விளையாட்டு வீரர்கள் தாக்குதல் மூனிக்கில் 1972 நடந்த (ஈரானியர்கள், இஸ்ரேலிய வீரர்களை சுட்டது) சம்பவத்தை நினைவூட்டுகிறது...

இந்திய டீம் அங்கு சென்று விளையாட வேண்டும் என்று இருந்தது, மாறி, ஸ்ரீ லங்கா டீம் சென்றது... விதி பாருங்கள்... தலை எழுத்து...

R P ராஜநாயஹம் எழுதுகிறார்... "இன்றைக்கு"

//ஏனோ அப்படி ஒருவேளை போயிருந்தால் ஒருவர் கூட உயிரோடு மிஞ்சியிருக்கமாட்டார்கள் என்று தான் யோசிக்கும்போது விபரீதமாக தோன்றுகிறது .//

Chills and Jitters.

எப்படியோ ஆறு கிரிக்கெட் வீரர்கள், குண்டடிப்படிருந்தாலும், உயிர் தப்பினார்கள்.

இன்னொரு பதிவு, நான் கண்டது....

பாகிஸ்தானில் ஸ்ரீலங்கன் கிரிக்கெட் டீம் மீது குண்டு வீச்சு

காட்டுமிராண்டிச் சமூகம்

//காட்டுமிராண்டிச் சமூகமாக இருக்கிறோம் நாம் // என்று எழுதுகிறார் பத்ரி.

இங்கே படியுங்கள்...

எழுத்துரிமை, பேச்சுரிமை, எரிப்புரிமை

நமது கான்ஸ்டிடுசன் கொடுக்கும் உரிமை, பேச்சு, சிறுவர்களுக்கு படிப்பு, எந்த மதத்தை வேண்டுமானாலும் தழுவலாம்... போன்றவை உள்ளன.... முக்கியமாக ஓட்டுரிமை, நாம் வேண்டுபவர்களை ஆள தேர்ந்தெடுக்க!

இப்போது நூறு நாட்கள் (கொடிய) வேலை மூலம், அரசியல்வாதிகள் பணம் சாப்பிடுகிறார்கள். சிலர் ஒரு ருபாய் அரிசி கொடுக்கிறார்கள்... சில மாநிலங்கள் மகளிருக்கு பல சேவைகள், உதவிகள், மையங்கள் அமைக்க்ரிஆர்கள்... நன்று.

சில சமயம், இந்தியாவில் அமைதி நிறைய உள்ளது போல தான் தோன்றுகிறது.

எழுதி எதற்கு கிளர வேண்டும்?

Elections and India

Now there is a chance for these Politicians to redeem themselves. How will the business react? What would be the stock market reactions? Now with a huge deficit, and no more sops to be announced in Petrol or Excise duties and a falling rupee, a real strong government is needed.

Elections have been announced for the Indian Parliament, from April 16th to May 13th, and results to be declared on May 16th (Saturday, Vaishak month beginning)... Parliament will convene on June 1st and the biz will start on June 2nd. The new full budget would be unveiled within a month, unless the new finance minister is going to Holiday in the USA for the July 4th...

Let us look at the dates of elections.

There are 5 phases (inclusive April 22nd for Manipur).

April 16 (Thursday)
April 23 (Thursday)
April 30 (Thursday)
May 7 (Thursday)
May 13 (Thursday)

Note the very good planning by CEC Mr N Gopalswami. Excellent, way, such that the electiosn are conducted on a working day, such that people are around in their domicile to vote (741 million voters, next to China) if not weekends would draw less crowds.

The voting begins at 7 AM and ends at 5 PM. I hope my employer gives me enough time in the morning or let me go out early to vote.

************

Now let us look at UPA, which still runs strong with a new found partner SP. Score 276 / 543. Will they retain it? (now that TMC has come in, add another 15 more in WB)

NDA with RLD (Ajit Singh) might garner 200 based on the linguistic, religion, casteist votebanks.

The third front with CPI, CPM, ADMK, TDP and others (JDS, et al) might garner about 65.

It will be interesting to note, who would win, or if hung parliament, whether Third Front would emerge to run again?

Monday, March 2, 2009

நான் கடவுள்

ஒரு நல்ல விமர்சனம் இது....

நான் கடவுள்

நான் எழுதிய கமன்ட்...

//படத்தில் வசனங்கள் நிஜமாகவே நன்றாக இருந்தன. ஜெயமோகனுக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வரப் பிரார்த்திக்கிறேன்.//

சாமி கும்பிடாதவர் பிரார்த்தித்தால், சாமி கேட்குமா? ;-)

ஜெயமோகன் விடாமல் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி ( தொப்பி தொந்தி விகடன் மறக்கவில்லை போல) ... இப்போ ரஜினி .. அப்புறம் சின்ன பசங்க போடுற ஆட்டம் ( சிம்பு?) என்று சாடுவது, நல்லாவே இல்லை.

***********

என்னுடைய ஆளுமை.... இது ஒரு மட்டமான படம். கலை கேளிக்கை.

இளையராஜா தெரியவில்லை, படத்தோடு ஒன்றிவிட்ட பாடல்கள்.

கிறிஸ்டியன்களை சாடுவது, பெண்களை (குருட்டு கோழி?) இழிவுபடுத்துவது... மலைக்கோட்டை (கோவில்) மேலே சாமி பாடல் ஒலிபெருக்கி கம்பனி ரஹீம் என்று இருப்பது, ஒரு வித ஹிந்து மோனோ சாடிஸ்டிக் நிலைமையை காட்டுகிறது. மேலும் விக்ரமாதித்யன் கடவுளை 'தேவடியா பையன்' என்று சொல்வது வசனமா?

R P ராஜநாயஹம் எழுதிய தளையசிங்கத்திற்கு தொழுகை என்ற பதிவை படித்துப்பாருங்கள், ஜெயமோகனை பற்றி தெரியும்.

இந்த சினிமா உலகம் கொடியது போல? அவரவர் வழியில் எல்லோரும் சென்று வாழட்டும்.

Truth ever triumphs.

லசந்த விக்ரமதுங்கவின் மரண சாசனம்

லசந்த விக்ரமதுங்கவின் மரண சாசனம்

நல்ல மொழி பெயர்ப்பு. நன்றி சுந்தரராஜன் .