Thursday, July 23, 2009

தாய்மை

லதானந்த் அவர்கள் எழுதிய தாய்மை பதிவு படித்தேன்....

நாங்கள் சிறு வயதில் நாய் வளர்த்தது ஞாபகம் வந்தது.

அந்த பதிவில் நான் இட்ட கமென்ட்....

//உண்ணொரு ஆண் குட்டி பேர் வெக்கிரதுக்கு முந்தியே செத்துப்போச்சு! காரணம் நெம்ப வேதனையானது.//

?? என்ன ஆச்சு?

இப்போவெல்லாம் வெடினரரி டாக்டர் தான் பிரசவம் பாக்குறாங்களா?

எங்க ஊரிலே, குட்டி போட்டப்புறம் தான் வெடினரரி டாக்டர் கிட்டே கொண்டுப்போனோம்!

ரெண்டு நாள் பசும்பால் தான் குட்டிக சாபிட்டுச்சு. அம்மா பால் அப்புறம் தான்.

அப்பா போலீசிலே இருந்ததாலே... ஒரு குட்டி தவிர மத்த மூணு ப்ரெண்ட்ஸ் எடுத்துகிட்டாங்க.

***

ராஜபாளையம் நாய்கள் குட்டி போடுவது குறைவு. அதுவும் நன்கு வளர்ந்த போட்டிகள் சில சமயம் நான்காவது இடும்.

பெங்களூரில் கோரமங்களா ஏரியாவில் சாயந்திரம் சில வாகிங் செல்லும்....

என் காதலி லதா

இன்று லதாவிற்கு கல்யாணம். என் அருமை காதலி அவள்.

என்னோடு ப்ளஸ் 2 படித்தவள். இருபத்தொன்பது வயதாகிறது!

பதினைந்து வருடம் பழக்கம். ஒரே பள்ளி. இருவரும் ஒன்றாக தான் பள்ளி செல்வோம்.

அவள் கொண்டு வரும் புளிக்காயச்சலும் தயிர் சாதமும், இன்னும் நாக்கில் ஊருகிறது. அம்மா செய்யும் பருப்பு துவையல் அவளுக்கு இஷ்டம்.

அவள் அப்பா ஒரு ப்ரோகிதர். பாவப்பட்ட குடும்பம் என சொல்லும் வீடு. எங்கள் தெரு அருகில் தான்... ஒட்டு உடைசல். புளியோதரை மனம். தேங்காய் வாசம்... என்னை அம்பி என்று அழைப்பார்கள். அவள் அம்மாவிற்கு தெரியும், என் காதல். விதி?

நன்றாக ஸ்லோகம் சொல்லுவாள். நிறைய மந்திரங்கள் எனக்கு கற்றுக்கொடுத்தாள். அதில் பிடித்தது... காயத்ரி மந்திரம்... இப்போ மன நிம்மதிக்கு உகந்த மந்திரம்.

என்னோடு நன்கு பழகியவள்.... மனதோடு ஒன்றியவள்...

படித்தால்... பி.எட் முடித்தவுடன் அரசாங்க பள்ளியில் உத்தியோகம் வந்தது. சில வருடங்களில் பெர்மனென்ட்.

நான் எந்த ஊரில் இருந்தாலும் , வீடு செல்லும் போது அவளை சென்று பார்ப்பேன்...

சென்ற மாதம் கூட அவள் பாடம் நடத்தும் பள்ளிக்கு சென்று பார்த்தேன். அவளுக்கு பிடிக்கும் என்று டர்கிஷ் அல்வா எடுத்து சென்றேன்!

முகம் வாடியிருந்தது... முகம் மலர்ந்தாள்.. "அப்பா எனக்கு கல்யாணம் பிக்ஸ் செஞ்சுட்டார்... மாப்பிள்ளைபிசிக்ஸ் வாத்தியார், பொள்ளாச்சியில். ப்ளஸ் 2 டுசன் வருமானமும் அதிகம்! "...

"டேட் இன்னும் முடிவாகலே.. ஒரு மாசத்திலே இருக்கும்... ஐ.டி. மாபிள்ளை இந்த காலத்திலே வேண்டாம்னு எல்லோரும் சொல்லிட்டா.. இதிலேயும் அப்பா ப்ரோகிதம் பண்றது நின்னுடும், நான் உங்களை கல்யாணம் செஞ்சா..."

விசும்பல்..

"அப்பாவையும் அம்மாவையும் பெங்களூர் அழைச்சுண்டு போவேள். ஆனா எங்க வழக்கங்கள், கலாச்சாரம்... சொந்தங்கள்.. எங்கு போய் நிக்கிறது? தம்பி வேறு வளர்ந்துட்டான். அடுத்த வருஷம் ப்ளஸ் 1. அவன் படிப்பு செலவு மாப்பிள்ளை எத்துண்டார்! "

விசும்பல்....

"நாமோ இனிமே சந்திக்க கூடாது.."

மீண்டும் விசும்பல்...

ஓடிவிட்டாள்.

மல்லிகை மனம் இன்னும் இருந்தது.

மறக்காமல், கையில் நான் கொடுத்த பொட்டலத்தை எடுத்துக்கொண்டு சென்றாள்..

*

ஒரு வாரம் கழித்து என் மொபைல் சிணுங்கியது... லதா தான்.

"ஜூலை 23 கல்யாணம் ... ராமேஷ்வரத்திலே. ப்ரோகிதம் பண்ண போறார். பெரிய சாமியாரெல்லாம் வாராலாம். சூரிய கிரகணத்துக்கு அடுத்த நாள். நல்ல நாளாம்... நாங்கோ இருக்குறே லாட்ஜ் அட்ரெஸ் எஸ்.எம்.எஸ் பண்ணிடுறேன்...வரியாடா ஷங்கர்?"

"ஹும்.. பாக்குறேன்.. " என் குரல் கணகணத்தது...

கால் கட்.

*

அடுத்த மாதம் ஊருக்கு போகும் போது பார்க்கவேண்டும்!

அயன் ரேண்ட்

அயன் ரேண்ட் பற்றி நிறைய பேர் இப்போ எழுதுகிறார்கள்.

பி.ஜி.வூதவுஸ், சோமர்செட் மாகம் போன்றவர்களும், இர்விங் வாலஸ் , ஹெரால்ட் ராபின்ஸ், சிட்னி செல்டன் போன்றவர் எழுதிய பாட பாயிலர் ( பக்கம் பக்கமாக திருப்ப வைக்கும் ) நூல்கள் முன், அயன் ரேண்ட் வேறுபட்ட எழுத்தாளர். சொந்த வாழ்க்கையிலும், ஆசைக்கு ஒன்று, ஆஸ்திக்கு ஒன்று என துணை வைத்து, மன நலம் குண்டியதாக இணையத்தில் படிக்கிறேன்.

அவர் எழுதியதில் என்னை மிகவும் தாகிய நூல் தி பவுண்டன் ஹெட்.

நான் படிக்கும் காலத்தில்.... விடலை பருவம், கம்மி விலை பிரிண்ட் கையில் வைத்துக்கொண்டு, நோட்டுக்குள் வைத்து படிப்போம். ஆங்கில எக்சாம் எழுத சென்ற போது, காம்போசிசன் ஆங்கிலத்தில் கொஞ்சம் வழமை வர வைத்தது அது தான்!

சரி என்ன தான் சொல்லுகிறார் அயன் ரேண்ட்?

புதுமை, முயற்சி, பழையதை விட்டு விடு என்பது தானா கோட்பாடு அதில்?

பழையன கழிதலும், புதியன புகுதலும், வரையன கால வரையினானே, என்றார் யாரோ ஒரு பழம் புலவர்.

அது போன்று ஒரு மாற்று சிந்தனை கொடுத்த நூல் அது. எதையும் முயற்சித்து பார். புதிய முறை கையால்... போன்ற தத்துவங்கள்.

நியூ யார்க் - வளர்ச்சி... உயரமான கோபுரங்கள், பணம், புகழ் என்று எல்லாகலவையும் நிறைந்த பின் நவீனத்துவம்! போஸ்ட் மாடர்னிசம்.

பழைய எபிக் மாதிரி இல்லை.

++++++++++++++++++

நம்ம ராமாயாணம் மற்றும் மகாபாரதம் போன்ற காவியங்களில் இருக்கும் எழுத்தாற்றல் - கிளைக்கதைகள் என்னில் அடங்கா புத்தி புகட்டும் வாழ்க்கை சரித்திர நூல்கள்.

Wednesday, July 22, 2009

பொழுது புலர்ந்தது

இன்று பொழுது புலர்ந்தது - சூரிய கிரகணம்.

அந்த நேரம் ஆபீஸில். வேலை இன்னும் ஒரு வாரத்தில் முடிகிறது. ரொம்போ பிசி!

அடுத்த வாரம் ஊருக்கு வருகிறேன். நாக்கு செத்துவிட்டது! சில சமயம் வெளிநாடுகளில் இது நடக்கும். எனக்கு இது கொஞ்சம் எதிர்பாராத லாங் ட்ரிப்.

என்னை விடுவிக்க எங்கள் நண்பர் வருகிறார்!

*****

பதிவுகள் பக்கம் வரவே முடியலே.

டோண்டு ராகவன், நர்சிம், பரிசல்காரன் மற்றும் அப்துல்லா அவர்களின் பதிவுகளை விடாமல் படிப்பேன் - தூங்கும் முன்.

*****

மனசு நோக வைத்த சம்பவம், முன்னாள் இந்திய ப்ரெசிடென்ட் அப்துல் கலாம் அவர்களை செக்கிங் என்ற பெயரில் "துளாவியது" மனதிற்கு பிடிக்கவில்லை.

மதம் என்ற விசப்பாம்பு எப்படி கொல்கிறது மனிதாபிமானத்தை!

எப்படியோ இன்றும் பொழுது பிறந்தது!

David Ogilvy's best advice for business

Read here on http://postcards.blogs.fortune.cnn.com/2009/07/21/david-ogilvys-best-advice-for-business/

David Ogilvy's best advice for business.... (with thanks. )

1. Remember that Abraham Lincoln spoke of life, liberty and the pursuit of happiness. He left out the pursuit of profit.

2. Remember the old Scottish motto: “Be happy while you’re living, for you are a long time dead.”

3. If you have to reduce your company’s payroll, don’t fire your people until you have cut your compensation and the compensation of your big-shots.

4. Define your corporate culture and your principles of management in writing. Don’t delegate this to a committee. Search all the parks in all your cities. You’ll find no statues of committees.

5. Stop cutting the quality of your products in search of bigger margins. The consumer always notices — and punishes you.

6. Never spend money on advertising which does not sell.

7. Bear in mind that the consumer is not a moron. She is your wife. Do not insult her intelligence.

மனுஷ்யபுத்திரனுக்கு ஒரு கடிதம்

அன்பு மனுஷ்யபுத்திரன்

சாருவுக்கு ஒரு கடிதம் படித்தேன். எவ்வளவு உண்மைகள் நிறைந்த ( உங்கள் பார்வையில் எனக்கொள்ளவும் ) கடிதம் அது. நேரு தன மகள் இந்திராவுக்கு எழுதியதை போல, அதுவும் காந்தியின் சத்தியாகிரகம் சொல்லும் உண்மைகள்... மாதிரி இருந்ததாக மனதில் பட்டது - உங்கள் வாழ்க்கை நினைவுகளும், சல்மாவின் வளர்ச்சியும்....

சுஜாதாவை நான் ஒரு ஆசானை போல தான் பார்த்தேன். அது உங்கள் எழுத்துக்களில் இருந்தது.

நான் எல்லாம் இலக்கியம் என்ற பாதையில் வராதவன், ஜஸ்ட் வாசகன். ஒரு வாசகனின் பார்வையில் எழுத்தாளர்கள் ஒருவர் மற்றவரை விவாதம் என்ற பெயரில் தாக்கிகொள்வது ஏன் என்று தெரியவில்லை.

புரியும்படி நீங்கள் ஒரு நீண்ட கடிதம் எழுதலாமே?

வெளிநாட்டில் எல்லாம் எப்படி?

அன்று ஒரு நாள் சென்னையில் லேண்ட்மார்க்கில் கிரண் தேசாயை சந்தித்தேன் - புக்கர் பரிசு வென்றவர். அவர் சொன்னது நினைவில் உள்ளது, அம்மாவும், சல்மான் ருஷ்டியும் நல்ல முறையில் விவாதம் செய்து என் எழுத்தை மெருகேற்றினார்கள்.... என...

மீண்டும் சந்திப்போம்!

சூரிய நிகழ்வு

எல்லோரும் எதிர்பார்த்த
சூரிய கிரகணம் வந்து போயிற்று.
இன்று காலை சீக்கிரம்
எழுந்து குளித்து
டிவி முன்
அதிகாலை ஐந்தரைக்கு ஆஜர்.
சேனல்கள் மாற்றி மாற்றி
பார்த்து ஒரே போர்.

மேகங்கள் மூட்டம்
பெங்களூரில் ரொம்போ
சிறியதாக தான் தெரிந்தது
அறுபத்தைந்து %
தெரியும் என்றார்கள்?

கிரகணம் என்றாலே,
குளியல் என்று அம்மா
சொல்லியுள்ளதால்...
இரண்டாம் முறை
ஏழரைக்கு தலை குளியல்.

அப்புறம் வந்த பாலில்
நானும் ரூம்மேட்டும்
எப்.எம்மில் பட்டு
கேட்டுக்கொண்டே
கன்னடம் பழகி
பேப்பர் பார்த்து,
காபி குடித்து முடித்து...
கில்மா ...
அட எப்போதும் போல
டைம் ஆகிவிட்டது!

அடுத்து கிரகணம்
2132 ஆம் வருடம் தானாம்...
சுனாமி வரவில்லை,
பாம்பே மூழ்கவில்லை...
போங்கையா நீங்களும்
உங்க ஜோசியமும்!