Monday, May 18, 2009

தேர்தல் திருவிழாவும், பெண் பார்க்கும் படலமும்

தேர்தல் திருவிழாவும், பெண் பார்க்கும் படலமும் என போனது இந்த வாரம். மகிழ்ச்சி அய்யா? இல்லை. துன்புறுத்தல்.

இரண்டு படம் பார்த்தேன். பசங்க. மற்றும். ராஜாதிராஜா.

செம கலக்கல். மீண்டும் ஒரு முறை லாரன்ஸ் படம் பார்க்கணும்.

அது தான் ட்விட்டரில் விவரம் சொல்லிட்டேனே.

************

வியாழன் காலை தான் பெங்களூர் வந்தேன். இரண்டு நாட்கள் வேலை. மண்டை காய்ந்தது. பிறகு, ஒரு வாரம் முன்னதாகவே புக செய்யப்பட்ட ஏசி வண்டியில் ( ஆம்னி தாங்க ) ஊருக்கு சென்றேன்.

இரண்டு வேலைகள். தேர்தல் முடிவுகள் திருவிழாவும், பெண் பார்க்கும் படலமும் ....

சரி சனி காலையில் ஊரில் இறங்கியவுடன், ஒரு தூக்கம். அப்புறம் அம்மா கையால் பணியாரம், தேங்காய் பால்.

பதினோரு மணிக்கு குளித்துவிட்டு, மாமா வீட்டிற்க்கு சென்றேன். நல்ல சாப்பாடு. தேர்தலில் அவர் நின்றார். அப்புறம் தேர்தல் நிலவரம் ஒரு வழியா முடிந்தது.. லட்சம் வோட்டுக்கள். டெபாசிட் காலி. 16.7% வாங்கியிருக்கனுமாம்.

ஐந்து மணிக்கு (சாயந்திரம்) சென்னையில் இருந்து வந்திருந்த ஒரு பெண்ணை அவர்கள் வீட்டில் பார்க்க ஏற்பாடு. முப்பத்தி ஒரு வயதில் ஒரு தயக்கம். என்னை விட மூன்று வயது இளையவர். கடந்த ஐந்து வருடங்களாக வேலை செய்யும் அவர், ஐம்பது மாப்பிள்ளை இது வரை பார்த்துள்ளாராம்...நான் முதன் முறை. பெண் சுமார் தான் என்றாலும், ஐ.டி. வேலை செய்பவர் என்பதில் திறமை போல். நிறைய அவுட் ஆப போர்சன் க்வேச்டியன்ஸ். ப்ரேபேர் செய்யவில்லை. அம்மா பக்கத்தில் இருந்தார்கள், அதனால் நான் ஒன்றும் பெர்சனலாக கேட்கவில்லை.

முக்கியமாக கருதப்பட்ட பாரின், நிலையான வேலை மற்றும் சம்பளம்! ( தேவுடா ) விசாரிக்கப்பட்டது. நானும் ரிப்பீட்டு! ( இது தான் மதியமும் தம்பியிடம், எனக்கு வந்த மெயில் பற்றி அளவளாவினேன்... அதே கேள்விகள்.) கடைசியில் ஒரு கமன்ட் / கேள்வி. ட்ரிங்க்ஸ் யூஸ் பண்ணுவீங்களா? அட ராமா, தொப்பை பியரால் வந்தது இல்லை, சோம்பேறித்தனம் அல்லவா? அம்மா டு த ரெஸ்கியு... சின்ன வயசில் இருந்தே ராஜு அப்படி தான், கொஞ்சம் தாட்டிக உண்டானு.

பெங்களூர் வேலை மாறுவதில் சிரமம் இல்லை என்றார் பெண். பெரிய எம்.என்.சி.

சரி. சரி. ஊருக்கு போய் லெட்டர் ( மெயில்! ) என்று வந்துவிட்டேன். ;-)

வீடு திரும்பும் வரை, அம்மா அந்த பெண் நல்லவள், அருமை என்று ( என் நிறத்தில் பாதி ) பாடிக்கொண்டே இருந்தார்.

எட்டு மணிக்கு இரண்டு இட்லி சாப்பிட்டு நானும் தம்பியும், பசங்க பார்க்க கிளம்பினோம். வழியில், அப்படியே எங்க ஊர் ஸ்பெசல் பிர்யாணி கால் ப்ளேட் ரெண்டு உள்ளே போனது... அம்மாவுக்கு தெரிந்தால் ஜூட். பொலந்துருவாங்க. அதுவும் சனிக்கிழமை! அட ராமா! ஏழு கொண்டலவாடா!

*****************

ஞாயிறு விடிந்தது... நான் எழுந்தது எட்டு மணிக்கு. ஒன்பது மணிக்கு குட் மார்னிங் கால் ப்ரொம் பெண். பத்து மணி சினிமாவிற்கு செல்லும் அவசரம், அப்புறமா பேசறேன் என்று கிளம்பினேன். ஐயோ...

ஒரு மணிக்கு வந்து சாப்பாடுமுடித்துவிட்டு, கம்ப்யுட்டர் முன் அமைந்தால், ஒரு பெண்ணின் மெயில். சேம் க்வேச்டியன்ஸ். சரி சரி, ரிப்லைட். பெங்களூர் ஆபிஸ் நம்பரும் கொடுக்கப்பட்டது. இன்வெஸ்டிகேசன் ஏஜன்சி வருமா? ( முழுப்பெயர் சொல்லவில்லை வெப்பில்.. தப்பித்தேன்.) லிங்க்ட் இன் ப்ரோபையில் கொடுத்தேன். அவீங்க லிங்க் செய்வாங்களா? தெலிலெது.

****************

மதியம் நல்ல உறக்கம், அப்புறம்.. எட்டு மணிக்கு மட்டன் குழம்புடன் தோசை.

தம்பி ஊருக்கு டிராப் செய்தான். அம்மாவிர்ற்கு, எப்படா அடுத்த முறை வருவே என்ற ஏக்கம். அடுத்த மாதம் வரை, பத்து போன் கால், இல்லே இல்லே முப்பது வரும்.

"அண்ணே, பாத்து பெண்ணோடு பேசு. மாமா ஏற்பாடு பண்ணினது ... வாய் விட்டுறாதே" என்றான். ஹும்.

*************

நினைவோட்டங்கள்... சில கேள்விகள்...

பேர்? சுமனா... எங்க ஜாதிலே வித்தியாசமா ஒன்னு! அனுஷ்கா சாயல். (அருந்ததி படம் தெரியுமா? நாகர்ஜுனா மகனுக்கு யோகா மாஸ்டராம்... ப்ளோகில் பார்த்தேன்... யோகண்டா அவனுக்கு...) சுமி'னு கூப்பிடுங்க ப்ளீஸ். நல்ல வேலை வைஸ் பரவாயில்லை. கர்ண கொடுரமாக இல்லை. கொஞ்சம் ஜெயா மேடம் சாயல்.

இன்று காலையில் மொபயிலில் மிஸ்டு கால் மற்றும் ஒரு எஸ்.எம்.எஸ். ரீச்டு சென்னை. வில் கால். ப்லேனிங் பார் ட்ரிப் திஸ் வீகென்ட் வித் மை பிரெண்ட்ஸ் டு பெங்களூர் - சுமி.

இந்த வீகென்ட் நான் காலி! இன்னும் ரிப்ளை பண்ணலே.

****************

ஆமாம், நெட்டில் சேட்டில் பிடித்த ப்ரென்ட் மோனிகா பத்தி அடுத்த முறை ப்ளாகில் எழுதனும். ஐ.ஐ.டி மற்றும் யு.எஸ். ரிடர்ண்டு.அவா ஜாதியெல்லாம் பாத்து தான பேசறாங்? என் ரூமை பார்த்தால், கண்றாவி... யாரவது வந்து தொலைக்க போகிறாங்கோ.. தினம் ஒரு பீர் பாட்டில் அடிக்கும் சரவணன், என்ன செய்ய?

1 comment:

  1. எப்படி இருந்தது பெண் பார்க்கும் படலம். எனக்கு யாராவது பெண் பார்க்க போகும் பொது போகனும்னு ஆசை. நான் இது வரை அதை படத்தில் மட்டும் தான் பார்த்திருக்கேன்.

    அம்மா கையால் பணியாரம், தேங்காய் பால். //

    அம்மா கிட்ட உந்து ரெசிபி வாங்கி குடுங்க ராஜு. ;)

    எங்க ஊர் ஸ்பெசல் பிர்யாணி //

    நீங்க திண்டுக்கல்லா...

    ரீச்டு சென்னை. வில் கால். ப்லேனிங் பார் எ ட்ரிப் திஸ் வீகென்ட் வித் மை பிரெண்ட்ஸ் டு பெங்களூர் - சுமி. //

    பொண்ணு இப்படி உங்களை விரட்டுதுல்ல. ஓகே பண்ணிடுங்க ராஜு.

    நெட்டில் சேட்டில் பிடித்த ப்ரென்ட் மோனிகா பத்தி அடுத்த முறை ப்ளாகில் எழுதனும். //

    பொண்ணுங்களைப் பத்தி எழுதுறதுல என்ன சுவாரசியம்....

    ReplyDelete