இன்று மதியம் சுமனாவை ( அவர் நண்பர்களுடன் ) ஹோசூர் ரோட்டில் இருக்கும் ஒரு இன்னில் பார்த்தேன். ஐவர். மாபிள்ளை பார்க்க வந்த மாதிரி தெரியுது... என்னை? காலை பதினோரு மணிக்கு சந்திப்பதாக ஏற்பாடு.
நேற்று இரவு ஐ.பி.எல் மேட்ச் பிக்சிங் பார்த்து தூங்கும் போது நடு இரவு. டெக்கான் சார்ஜர்ஸ் கில்க்ரைச்ட் அட்டகசாம் அருமை! இன்று சென்னை சுப்பர் கிங்க்ஸ் வெற்றி பெற்று, நாளை பைனல்ஸில் மோதுவார்கள் என பட்சி சொல்லுது.
நண்பன் - ரூம் மேட சரவணன் ( கொடுமையாக, இரண்டு மணி வரை லைட்டைப்போட்டு கொட்ட கொட்டன்னு நெட்டில் மேய்ந்துக்கொண்டு இருந்தான். தண்ணீர் தாகம்.. டின்னர் டாமினோஸ் பிட்சா சாபிட்டதால் வந்த வினை... எழுந்தேன், அப்போதும், நெட்டில் யாரரோ அமெரிக்க மங்கையுடன் கூகிள் வீடியோ செட்டில் அசிங்கமாக பேசியது மாதிரி இருந்தது. (நல்ல வேலை, வெப் காமிரா என் கட்டில் சைடை படம் பிடிக்காது, அப்படியே எழுந்து, கிச்சன் பக்கம் போய்விட்டேன்..)
காலை எழும் போது எட்டரை மணி. உடனடி மெயில் செக். சில சப்போர்ட் கால் மெயில்ஸ். வீகேண்டிலும் தொல்லை ... அப்புறம் குளியல், அவசரமாக பக்கத்தில் இருக்கும் ஒரு மேன்ஸ் பார்லரில் பேசியல். ( நான் கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ளவன், மாதம் ஒரு முறை தான் பேசியல் செய்துக்கொள்வேன்... ).
பத்து மணிக்கு அப்படியே, உடுப்பி கார்டனில் ஒரு மசால் தோசை அவசரமாக முடித்துவிட்டு, பைக்கை எடுத்தேன். சீரான ரோடு. எலெக்ட்ரானிக் சிடி தாண்டி ( அதுவே இருபது கிலோமீட்டர் இருக்கும் ) மூன்று கிலோமீடேர் தொலைவில், பயோகான் போகும் வழியில் வலது புறம் உள்ளது ஈ-இன். பெரிய ஸ்பா ஹோட்டல். பெரிய ஆட்கள் தங்கும் ஹெல்த் ஸ்பாவாம். கன்னட நடிகர் உபேந்திரா ஒனராம்!
ஐவர் பெண்கள் அணி, எனக்காக வெயிட்டிங். பதினோரு மணிக்கு அங்கு இருந்தேன்.
மரியாதை நிமித்தம், போகும் வழியில் ஆறு பைவ் ஸ்டார் சாகலேட் வாங்கி சென்றேன். கொடுத்தேன்... சுமி எனக்கு ஒரு பெண் ஸ்டாண்ட் அன்பளிப்பாக கொடுத்தார். அங்கு நான் பாக்சை ஓபன் செய்யலே. ஹார்ட் இருந்தது. ஒரு டிஜிடல் வாட்சும் ஒட்டி இருந்தது. இரண்டு கோல்டன் கலர் பெண்'கள். செலக்சன் அருமை. ரொம்ப தேடியிருப்பார்கள் போல. அப்புறம் ஒரு 4 GB தம்ப் ட்ரைவுடன் ஒரு கி செயின்.
கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். சுமிக்கு வாயெல்லாம் பல். இருக்காத பின்னே. ஹீரோ மாதிரி ஒரு மாபிள்ளை. நிஜமாக. நிறைய பேர் என்னை மாடலிங் செய்ய சொன்னார்கள், கொஞ்சம் வெயிட் இறக்கிய பிறகு!
அவருடைய நண்பி ஒருவர், " உங்க மேரேஜ் பிக்ஸ் ஆனதுக்கு வாழ்த்துக்கள்..." என்றார்.
நான் உடனே, உண்மையை, "இன்னும் முடிவாகவில்லை. யோசித்துக்கொண்டு இருக்கிறேன்" என்றேன். சுமியின் முகம் வாடிவிட்டது. " இந்த நவம்பருக்குள் கல்யாணம் நிச்சயம்! அம்மா சீரியஸ்ஸா தேடுறாங்க.." என்றேன்.
அதன் பிறகு சுமி என்னிடம் முகம் கொடுத்து பேசவில்லை. அது சுமி நண்பர்களிடம் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை ... ஏதோவென்று வாடிப்போயிருந்தது... " உங்களுக்கு என்ன கார் பிடிக்கும்? " இது மட்டும் தான் என்னிடம் அவர் கேட்ட கேள்வி. "ஹோண்டா சிடி அல்லது போர்ட் ஐக்கான்" என்றேன். அவர்கள் ஐந்து லட்சம் மதிப்பில் மாப்பிள்ளைக்கு கார் வாங்கி தருகிறார்களாம்!
நானும் ஷாபிங் ஏரியா ( பிரிகேட், எம்.ஜி, கமர்சியல், அலங்கார் பிளாசா... ) பற்றி விளக்கினேன்... இரவு டின்னருக்கு, ஹோட்டலுக்கு திரும்பிவிடுவார்களாம்..
என்னுடைய ஷர்ட் சைஸ் என்ன என்று சுமியின் நண்பர் கேட்டார்! எனக்கு ஒரு கிப்ட் கொடுக்க இருக்கலாம். ;-)
அதன் பிறகு ஒரு மணி வரை வெறும் கடலை தான். கன்னட சினிமா, பெங்களூரில் பெண்களின் டையட் மற்றும் பப் கல்சர் என போனது. மறக்காமல் ஆபிஸ் அட்ரசும், லேந்து லைன் நம்பரும் வாங்கிக்கொண்டார்கள். இன்வெஸ்டிகேசன்?
ஏனோ தானோவென்று, அவர்களின் உபயத்தில் லன்ச் உள்ளே சென்றது. எல்லாம் ஹெல்த் சாப்பாடு. கார்லிக் பிரெட் ரொம்ப பிடித்தது! தலைக்கு நூற்றைம்பது இருக்கும் பப்பே. அருமையாக இருந்தது. அவர்களுக்கு பேகேஜ் டீலாம். விவரம் இணையத்தில் இருக்கும்!
மூன்று மணிக்கு எம்.ஜி. ரோடு செல்ல (மழை வேறு வர ஆரம்பித்தது...) டேக்சி வரவலைத்திருந்தனர். தீபமில் சாரி மற்றும் துணி எடுக்கிறார்களாம், கல்யாணம் அல்லவா? அவர்களோடு நானும் பின்னால் கிளம்பினேன். அப்படியே வீட்டிற்கு கிளம்ப எண்ணினேன். ஹோசூர் ரோடு ட்ராபிக்கில் கார் விரைந்தது....
நான் கொஞ்சம் நன்றாக நடந்துக்கொண்டு இருக்க கூடாதோ என்று தோன்றியது. சுமி என்னை திரும்பி திரும்பி பார்ப்பதாக தோன்றியது. என்ன நினைத்துக்கொண்டு இருப்பார், என்னை பற்றி? எனது "சின்ன" கனவு ( நாடி ஜோசியம் சொன்ன பெண் " யாரோ. சரி சுமனா என்றால் என்ன அர்த்தம் என்று யாராவது சொல்வார்களோ?
சில்க் போர்டு (எம்.ஜி ரோடு நோக்கி )அருகில் அவர்கள் பிரிஜ் ஏற, கையசைத்து காட்டி சென்றனர்... நானும் தலையாட்டி விட்டு, இடது பக்கம், என் ரூமுக்கு திரும்பினேன்.
ரூம் திரும்பி வரும்போது மனம் கனத்துக்கொண்டு இருந்தது.
ஹும்...
No comments:
Post a Comment