Wednesday, June 3, 2009

நான் ரசித்த சிறு சிறு கதைகள்

சுஜாதா எழுதிய 'சிறு சிறு கதைகள்' என்னும் புத்தகத்தில் படித்தது- 2 வார்த்தைகளில் கதை எழுதலாமாம். அவர் சில உதாரணங்களை கொடுத்து உள்ளார். அவை....

தலைப்பு: கரடி வேஷம் போட்டவனின் கடைசி வார்த்தைகள்
கதை: ஐயோ சுட்டுடாதே!

தலைப்பு:2050ல் குழந்தை
கதை: தங்கச்சின்னா என்னம்மா?

தலைப்பு: வசந்தாவின் கணவன்
கதை: சுசீலாவோடு எப்படி?

இது நெட்டில் சுட்டது. இமெயிலில் எனக்கு வந்தது. நண்பர் நாராயணன் அனுப்பியது!

1) தலைப்பு: மாமியாரின் கோபம்
கதை: பொண்ணு பொறந்திருக்கு!

2) தலைப்பு:காதல் கசக்குதய்யா!
கதை: "இந்தாங்க.... invitation."

3) தலைப்பு: முடிவு
கதை: "மச்சி, ஊத்திகிச்சுடா!"

4)தலைப்பு:கனவுகள்
கதை: வேலை போச்சு!

5) தலைப்பு: திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
கதை: "யாரும்மா இவரு?"


------

அட்டகாசம்!

3 comments:

  1. என்னக்கொடுமை இது..! இப்பத்தான் இதோட மூலப்பதிவை காலையில படிச்சு பின்னூட்டம் போட்டேன் :-(((

    அவங்க பதிவு லிங்கை இங்க கொடுத்திருக்கேன். அதையும் உங்க பதிவுல சேர்த்துடுங்க.
    http://enpoems.blogspot.com/2009/06/2.html

    ReplyDelete
  2. //
    இது நெட்டில் சுட்டது. இமெயிலில் எனக்கு வந்தது. நண்பர் நாராயணன் அனுப்பியது!//

    ஆஹா...அதுக்குள்ள பரவிட்டா? இது பன்றி காய்ச்சலவிட ரொம்ப வேகமா இருக்கே! hahaha....:)

    ReplyDelete
  3. ரசிக்கும்படியான சிறு சிறு கதைகள் அனைத்தும்.

    ReplyDelete