Sunday, May 31, 2009

இரண்டு முட்டையும் ஒரு வெங்காயமும்

நானும் என் ரூம் மேட் சரவணனும், இந்த சமையல் கலை பழக, சனி / ஞாயிறு தான் எடுத்துக்கொள்வோம். எங்கள் ரூம் என்பதை விட, இது சிங்கிள் போர்சன் வீடு என்றே சொல்ல வேண்டும். ஐந்தாயிரம் வாடகையும், ஐம்பதாயிரம் அட்வான்ஸ். கல்யாணம் செய்த பின், இன்னும் ஒரு நல்ல இடத்திற்கு மாற வேண்டும்!

காலையில் எழுந்தவுடன், இரண்டு கிலோமீட்டர், நடைபயிற்சி ( அதை ஏன் கேக்குறீங்க, குளிர் வேற!) முடித்தவுடன்... சூடாக, ஒரு காபி. அரை லிட்டர் பால் ரூ. 10/- ( காபி தூள், சக்கரை, மாதம் ஒரு தடவை வாங்குவோம்.), பக்கத்து கடைக்காரன், எப்போதும் வைத்திருப்பான்.

இந்த வீடு வந்தவுடன் கேஸ் கனெக்சன், பாரத் கேஸில் இரண்டு சிலிண்டர் வாங்கிவிட்டேன் - பக்கத்து தெருவில் தான். வாடகை அக்ரீமன்ட் காபி ஒன்று போதும்.... பி.டி.எம் பர்ஸ்ட் ஸ்டேஜ். இரண்டு மாதத்திற்கு ஒரு சிலிண்டர் செலவாகுது. இதற்கும் எப்போதாவது தான் சமையல். சிலிண்டர் ஆர்டர் செய்து விட்டு, அதை வாங்க, நடை நடப்பது ஒரு பெரிய கதை - டெலிவரி ஆள், ரொம்ப படுத்துவான் - ஆபீஸில் இருக்கும் சமயம்! ஒரு மாடி படியில் ஏற வேண்டுமாம், பதினாறு ரூபாய் அதிகம் வாங்கிக்கொள்வான். ஊரில் அம்மா இரண்டோ நாலோ கொடுப்பார்கள்..

அம்மா வீட்டிற்க்கு வரும் போது, நன்றாக சமைத்துப்போடுவார்கள். அதுவும் ஒரு அட்வான்டேஜ் தான்!

சரி, இன்றைய பிரேக் பாஸ்ட் இப்படி ... (ஹோட்டல் சாப்பாடு கதை வேறு)

இன்று முட்டை விலை ரூ. 3/-.

வெங்காயம், கிலோ ரூ. 10/-.

மாடர்ன் பிரெட் ஒரு லோப் ரூ. 16/-

சரி எதுக்கு விலை எல்லாம்? ஒரு ஹிஸ்தொரிக்கல் ரெகார்ட் தான். சரியாக இரண்டு வருடத்தில் 50% ஜாஸ்தி.

இரண்டு முட்டையும், ஒரு பெரிய வெங்காயம் 100 கிராம். வாங்கிக்கொண்டு, ரூமை அடைந்த போது, காலை பத்து.

ஸ்டவ்வை பத்த வைத்து , தோசை கல் வைத்தேன்.

கல் காய்ந்தவுடன், முட்டை உடைத்து, கட் பண்ணி வைத்து இருந்த வெங்காயத்தை போட்டு, கொஞ்சம் உப்பு காரம் சேர்த்து கலக்கி ஊற்றினால், ஆம்லெட் ரெடி. என்ன ஒரு ஸ்பூன் எண்ணெய் வேண்டும்!

ப்ரெட் டோஸ்ட் செய்து, சாண்ட்விச்சாக சாப்பிட அருமை. என்ன ஊறுகாய் அல்லது சாஸ் கூட வேண்டும்.

மிச்சம் இருந்த பாலில் மீண்டும் ஒரு காபி!

நல்ல ப்ரேக்பாஸ்ட்.

பக்கத்து ஹோட்டலில், இதே ஐடங்கள், இரண்டு பேருக்கு ஐம்பது ரூபாய் ஆகும்.

******

அடையாறு ஆனந்த பவனுக்கு சென்று மதியம் ப்ளேட் மீல் வாங்கிக்கொண்டோம். கூட இரண்டு ரஸ மலாய். ( இதுக்கு ஒரு பிரியாணியே வெட்டியிருக்கலாம்... )

டின்னருக்கு, ரூமிற்கு ஒரு நண்பர் வருவதால், இரண்டு சிக்கன் பிரியாணி, சிக்கன் கேபாப் வாங்கி வர வேண்டும்!

நாங்கள் சிக்கன் பிரியாணி செய்த கதை ஓர் தனி பதிவாக!

*****

அடுத்த வாரம் அம்மா வருகிறார்கள், சேலம் வரை பஸ், பிறகு, மதியம் 4 மணி ட்ரெயின். எட்டு மணிக்கு கண்டோன்மெண்டில் போய் கூட்டி வர வேண்டும்.

இங்கு இப்போ வெக்கை இல்லாததால், ஒரு வாரம் இருந்து விட்டு போவார்கள்.

1 comment:

  1. ரொம்ப நல்லா இருக்கு. தக்காளி சேர்த்தால் இன்னும், ஆம்லெட் நல்லா வரும். என் ப்ளோகில் எழுதுறேன்.

    ReplyDelete