Thursday, September 17, 2009

நியூ யார்க் சுற்றுதல்

சனிக்கிழமை, நண்பர்கள் என்னை அழைத்து ஊர் சுற்றி பார்க்க செல்கிறார்கள்...

நியூ யார்க் பற்றி நிறைய படித்ததால், எதோ ஒன்றிவிட்ட ஊர் மாதிரி இருந்தது.

ஒன்று மட்டும் சொல்லவேண்டும்.... திறமை இருந்தால் மதிக்கும் ஊர் இது. அமெரிக்கா. அவர்களும் பஞ்சம் பொழைக்க வந்தவர்கள் தான்?

அப்புறம் என்னுடைய திறமை, முழு கவனத்துடன் வேலை செய்வது, அலாதியாக இருந்தது. பெங்களூரில் சரியான தொந்தரவு இருக்கும், வேலைக்கு டென்சன் தான்! குடைச்சல் பேர்வழிகள், போன்கால், சத்தங்கள்.... இங்கு சத்தம் போட்டு பேசுவதை நீங்கள் பார்க்க முடியாது... அதனால் தான் அமேரிக்காவில் முன்னேற்றம் சூப்பர் போல ( அவனவன் வேலையை நன்றாக பார்த்து கம்பெனிக்கு லாபம் ஈட்டுகிறார்கள் )! இந்திய மாறுமா? எல்லாம் இந்த ஒன்றுக்கு ஐம்பது என்ற கணக்கு தான், விளையாடுது! ( டாலருங்க )... அரசியல், யூனியன், ரவுடியிசம் இப்படி பல சங்கதிகள்...

***

இரவு ஒன்பது முதல் பத்தரை வரை இந்தியாவில் கால் செய்து அங்கு நடக்கும், வேலைகளை கவனித்துவிட்டு... சென் ஹோசெவில் இருக்கும் நண்பரோடு பேசிவிட்டு, எங்கள் சித்தி பய்யன் இருக்கும் டெக்சாசில் ( ஹூஸ்டன் ) ஒரு கால் செய்துவிட்டு... கணினி, இன்டர்நெட்... தூக்கம்.

நான் காலிங் கார்டில் கூப்பிட்டேன், உடனே கட் செய்துவிட்டு, அவர்கள் கூப்பிட்டார்கள்... எல்லோரும் அப்படிதானா?

என் ரூமில் ப்ரிஜ்ஜில் குடி ஐடம்ஸ் வைத்திருக்கிறார்கள். நான் தொடுவதில்லை! கோக் கேன் இரண்டு டாலராம். வெளியில் தெருவில் இருக்கும் வெண்டிங் மெசினில் ஐம்பது சென்ட்ஸ்! ஸ்நேக்ஸ் கூட நான் வாங்கி வந்த குட்டே பிஸ்கட்ஸ் தான்!

பதினோரு மணி வரை கொஞ்சம் இந்த ப்ளாக் டைப் செய்தேன்... காலையில் எழுந்து இன்னும் கொஞ்சம் திருத்திவிட்டு அப்லோட் தான்... தூக்கம் வரும் வரை ....கொஞ்சம் நேரம் பிரபல பதிவர்களின் ப்ளாகை படித்தேன்....

***

ஜெயமோகன் மலாவி ஆனந்திற்கு இப்படி முக்கியத்துவம் கொடுத்து பதிலுரை எழுதுவது ஏனோ எனக்கு பிடிக்கவில்லை. சரி சாருவிற்கு ஆனந்த் மேல் என்ன கோபம்? இருவரையும் படிக்கும் ஓபன் வாசகன் நான்.

ஹம்... இலக்கியம் படிக்க என்னவெல்லாம் செய்து சேர்த்து படிக்கவேண்டும்?

***

நான் எழுதிய நியூ யார்க் பதிவுகளை படித்து நிறைய் பேர் கமன்ட் போடுவார்கள் என்று நினைத்தேன். மூன்றே கமண்ட்ஸ்! :-(

4 comments:

  1. கமெண்ட் போடாம நிறையப்பேர் படிச்சுக்கிட்டுத்தான் இருக்கோம்.

    நம் பணி எழுதுவது மட்டுமேன்னு இருங்க:-))))))

    இந்தியாவில் வேலை நடக்கறது இல்லைதான். வாரம் மூணு பதிவு எழுதிக்கிட்டு இருந்த நான் இப்போ ஒன்னு எழுதுவதே சிரமமா இருக்கு.

    இரைச்சலும், குறுக்கீடுகளும் அதிகமா இருக்கு(-:

    ReplyDelete
  2. Really like your reading - esp all your US trip related posts!

    Srini

    ReplyDelete