Tuesday, September 15, 2009

நியூ யார்க்: மாயாவும் நானும்

நேற்று பெடேரர் தோற்றார். நானும் நியூ யார்க்கில் ஒரு வாரம் தான் இருப்பேன். ப்ளேன் செய்தது போல வரும் ஞாயிறு இரவு ஒன்பது மணி ப்ளைட்டில் இந்திய திரும்புகிறேன்.

நியூ யார்க் நகரம் வளைந்து நெளிந்து இல்லாமல், நேர் சீர் வரிசையில் இருக்கு. தனியாக டைம்ஸ் ஸ்கொயர் வரை சென்று வந்தேன். செவன்த் அவனியு 42ண்டு வீதியில், ஒரு பர்கர் கிங்கில் சிக்கன் வாபர் கம்போ மீல்ஸ் டின்னருக்கு, ஆறு டாலரில் ஒக்கே. அங்கு தனியாக நடக்க பயம் ஒன்றும் இல்லை. மடியில் கணம் இல்லை. நிறைய கறுப்பின ஆப்ரிக்கன்ஸ். அதுவோ காரணம்?

வேலை செய்வதில் இந்தியாவை கம்பேர் செய்தால் அமேரிக்காவில் சோகம். படு சோம்பேறிகள். எங்கள் ஊரில் பெருமாள் கோவில் ஒன்றில், அருகில் சாப்பிட்டு விட்டு தூங்கும் சிலர் பார்ப்பேன். இங்கே தூக்கத்திர்க்கு பதிலாக ஒரே குறிக்கோள், வேலை மட்டும் தான். மற்றவர்களிடம் பேச்சு இல்லை. அதுவும் கலர் கலரோடு சேர்க்கிறது! எந்நேரமும் வேலையில் இருந்து பயர் ( டிஸ்மிஸ் ) செய்யப்படலாம் என்ற காரணமா தெரியவில்லை.

நேற்று காலை பத்து மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய வேலை பதினோரு மணிக்கு ஆரம்பித்தது. அவர்கள் திங்கள் காலை மீட்டிங் முடித்து விட்டு எங்களை சந்தித்தார்கள். ஒரு வாரம் மட்டும் தான் நான் இங்கு இருப்பேன்...

இன்னொரு வாரத்திற்கு, சார்ஜ் கொடுக்கமாட்டார்கள். அதனால் தான். மாயா மட்டும் தான் இங்கு வந்து செல்லுவார் கொஞ்ச காலம்.... அக்டோபரில் நான் இங்கு வரும் வரை. அது தனி கதை! ( ப்ராஜக்ட் இல்லாவிட்டால் என்ன செய்வது? ).

நான் டெம்ப்ளேட் எல்லாம் ப்ரேபேர் செய்து, அவர்கள் கொடுத்த ப்ராஜக்ட் விஷயங்கள், பகுதி வாரியாக பிரித்து வைத்திருந்தேன். எப்படியெல்லாம் எங்கள் வேலை ( இந்தியாவில் ) அவர்கள் நிலைமையை சுலபமாக்கும் என்று ஒரு மணி நேரம் விவாதம்! நாங்கள் புரிந்துக்கொண்டு ஒரு கோட் கொடுத்தால் தான், இங்கு வந்திருக்கிறோம்!

நான் பேசியதை எல்லாம் காதில் வாங்கினார்களா தெரியவில்லை. லன்ச் டைம் பிட்சா சாப்பிட்டுக்கொண்டு, சைனீஸ் உண்டுக்கொண்டே டிஸ்கசன். நம்ம ஊர் சாம்பார் எல்லாம் இதுக்கு ஒத்து வராது! மே பி அலுமினியம் டப்பாவில் பிசிபேலே பாத் ஒக்கேவா?

மாயா இங்கிருப்பது ஒரு வகையில் எனக்கு வேலை சுலபம் ஆக்குது... ஒரு பெண் வேலையில் இருப்பது கொஞ்சம் வேலையை சுலபமாக்கும். மரியாதையாக, வழிகிறார்கள். மாயா மணமான பெண் அல்லவா? அவர் நன்றாக அமெரிக்கன் அக்சென்ட் போட்டு பேசுகிறார்கள். ஆந்திர பாஸ் சும்மா சொல்லக்கூடாது, பிசினஸ் தெரிந்தவர்! நிறைய கற்றுக்கொள்கிறேன்!

சீனிவாசன் நேரில் வரப்போவதில்லை! தேவையானால் போன் கால் மட்டும் தான்.... எங்களுக்கு ப்ரொஜெக்ட் பிடித்து கொடுத்த பிரதீப் சிங் மட்டும் வந்தார்! ( சர்தார்ஜி, தலைபாகை வைத்திருக்கிறார், அதிகமான பிசினஸ் ஞானம்? ) வெள்ளி மதியம் மூன்று மணிக்கு வேலை முடிந்தவுடன், தங்கியிருக்கும் ஹோட்டலில் இருக்கும் கான்பரன்ஸ் ரூமில் ஒரு மீட்டிங்...

ஐந்து மணி யு.எஸ். ஓபன் பார்க்க எல்லோரும் செல்லலாம் என்றார்கள். எனக்கு டிக்கட் இல்லை. செல்லவில்லை! :-( அதனால் மூன்றரைக்கு கடை சாத்திவிட்டோம். நான்கு மணிக்கு கிளம்பி மாயாவை, பென் ஸ்டேசனில் ட்ராப் செய்து விட்டு ( நடை தூரம் தான் - நியூ ஜெர்சிக்கு அம்ட்ரேக் ட்ரெயின் - நம்ம ஊரு எக்ஸ்பிரஸ் மாதிரி ) ஹோட்டல் திரும்பினேன். மாயா இரு பிள்ளைகளுக்கு அம்மா. நாற்பதை தொடும் வயது... முதல் மகள் இப்போது பதினொன்றாம் வகுப்பு. இரண்டாம் மகள் ஒன்பதாவது... மாயா வீட்டில் இருந்தபடி வேலை செய்கிறார். தேவையானால், க்ளையண்ட் விசிட். வெள்ளி இரவு டின்னர் மாயா வீட்டில் என்று சொல்லியுள்ளார். நண்பர் வீடு பக்கம் தான்.

2 comments: