Thursday, July 23, 2009

அயன் ரேண்ட்

அயன் ரேண்ட் பற்றி நிறைய பேர் இப்போ எழுதுகிறார்கள்.

பி.ஜி.வூதவுஸ், சோமர்செட் மாகம் போன்றவர்களும், இர்விங் வாலஸ் , ஹெரால்ட் ராபின்ஸ், சிட்னி செல்டன் போன்றவர் எழுதிய பாட பாயிலர் ( பக்கம் பக்கமாக திருப்ப வைக்கும் ) நூல்கள் முன், அயன் ரேண்ட் வேறுபட்ட எழுத்தாளர். சொந்த வாழ்க்கையிலும், ஆசைக்கு ஒன்று, ஆஸ்திக்கு ஒன்று என துணை வைத்து, மன நலம் குண்டியதாக இணையத்தில் படிக்கிறேன்.

அவர் எழுதியதில் என்னை மிகவும் தாகிய நூல் தி பவுண்டன் ஹெட்.

நான் படிக்கும் காலத்தில்.... விடலை பருவம், கம்மி விலை பிரிண்ட் கையில் வைத்துக்கொண்டு, நோட்டுக்குள் வைத்து படிப்போம். ஆங்கில எக்சாம் எழுத சென்ற போது, காம்போசிசன் ஆங்கிலத்தில் கொஞ்சம் வழமை வர வைத்தது அது தான்!

சரி என்ன தான் சொல்லுகிறார் அயன் ரேண்ட்?

புதுமை, முயற்சி, பழையதை விட்டு விடு என்பது தானா கோட்பாடு அதில்?

பழையன கழிதலும், புதியன புகுதலும், வரையன கால வரையினானே, என்றார் யாரோ ஒரு பழம் புலவர்.

அது போன்று ஒரு மாற்று சிந்தனை கொடுத்த நூல் அது. எதையும் முயற்சித்து பார். புதிய முறை கையால்... போன்ற தத்துவங்கள்.

நியூ யார்க் - வளர்ச்சி... உயரமான கோபுரங்கள், பணம், புகழ் என்று எல்லாகலவையும் நிறைந்த பின் நவீனத்துவம்! போஸ்ட் மாடர்னிசம்.

பழைய எபிக் மாதிரி இல்லை.

++++++++++++++++++

நம்ம ராமாயாணம் மற்றும் மகாபாரதம் போன்ற காவியங்களில் இருக்கும் எழுத்தாற்றல் - கிளைக்கதைகள் என்னில் அடங்கா புத்தி புகட்டும் வாழ்க்கை சரித்திர நூல்கள்.

2 comments:

  1. //நம்ம ராமாயாணம் மற்றும் மகாபாரதம் போன்ற காவியங்களில் இருக்கும் எழுத்தாற்றல் - கிளைக்கதைகள் என்னில் அடங்கா புத்தி புகட்டும் வாழ்க்கை சரித்திர நூல்கள். //

    பளீர்னு சொல்லிட்டீங்க தல.

    ***

    உங்க பின்னூட்டம் பார்த்து..(ஏதோ எழுதனுமேன்னு எழுதுனாப்ல இருக்கு//) முடிவுல 3 பாயிண்ட் சேர்த்து இருக்கேன்.. இப்பத்தான் நிறைவா இருக்கு.. பொளேர்னு விமர்சனம் சொன்னதுக்கு நன்றி தலைவா.

    ***

    ReplyDelete
  2. அருமையா இருக்கு!

    ReplyDelete