Wednesday, July 22, 2009

மனுஷ்யபுத்திரனுக்கு ஒரு கடிதம்

அன்பு மனுஷ்யபுத்திரன்

சாருவுக்கு ஒரு கடிதம் படித்தேன். எவ்வளவு உண்மைகள் நிறைந்த ( உங்கள் பார்வையில் எனக்கொள்ளவும் ) கடிதம் அது. நேரு தன மகள் இந்திராவுக்கு எழுதியதை போல, அதுவும் காந்தியின் சத்தியாகிரகம் சொல்லும் உண்மைகள்... மாதிரி இருந்ததாக மனதில் பட்டது - உங்கள் வாழ்க்கை நினைவுகளும், சல்மாவின் வளர்ச்சியும்....

சுஜாதாவை நான் ஒரு ஆசானை போல தான் பார்த்தேன். அது உங்கள் எழுத்துக்களில் இருந்தது.

நான் எல்லாம் இலக்கியம் என்ற பாதையில் வராதவன், ஜஸ்ட் வாசகன். ஒரு வாசகனின் பார்வையில் எழுத்தாளர்கள் ஒருவர் மற்றவரை விவாதம் என்ற பெயரில் தாக்கிகொள்வது ஏன் என்று தெரியவில்லை.

புரியும்படி நீங்கள் ஒரு நீண்ட கடிதம் எழுதலாமே?

வெளிநாட்டில் எல்லாம் எப்படி?

அன்று ஒரு நாள் சென்னையில் லேண்ட்மார்க்கில் கிரண் தேசாயை சந்தித்தேன் - புக்கர் பரிசு வென்றவர். அவர் சொன்னது நினைவில் உள்ளது, அம்மாவும், சல்மான் ருஷ்டியும் நல்ல முறையில் விவாதம் செய்து என் எழுத்தை மெருகேற்றினார்கள்.... என...

மீண்டும் சந்திப்போம்!

No comments:

Post a Comment