Wednesday, July 22, 2009

சூரிய நிகழ்வு

எல்லோரும் எதிர்பார்த்த
சூரிய கிரகணம் வந்து போயிற்று.
இன்று காலை சீக்கிரம்
எழுந்து குளித்து
டிவி முன்
அதிகாலை ஐந்தரைக்கு ஆஜர்.
சேனல்கள் மாற்றி மாற்றி
பார்த்து ஒரே போர்.

மேகங்கள் மூட்டம்
பெங்களூரில் ரொம்போ
சிறியதாக தான் தெரிந்தது
அறுபத்தைந்து %
தெரியும் என்றார்கள்?

கிரகணம் என்றாலே,
குளியல் என்று அம்மா
சொல்லியுள்ளதால்...
இரண்டாம் முறை
ஏழரைக்கு தலை குளியல்.

அப்புறம் வந்த பாலில்
நானும் ரூம்மேட்டும்
எப்.எம்மில் பட்டு
கேட்டுக்கொண்டே
கன்னடம் பழகி
பேப்பர் பார்த்து,
காபி குடித்து முடித்து...
கில்மா ...
அட எப்போதும் போல
டைம் ஆகிவிட்டது!

அடுத்து கிரகணம்
2132 ஆம் வருடம் தானாம்...
சுனாமி வரவில்லை,
பாம்பே மூழ்கவில்லை...
போங்கையா நீங்களும்
உங்க ஜோசியமும்!

No comments:

Post a Comment