புத்தகங்களைப் படிப்பதும் நண்பர்களிடம் பேசுவதும் மட்டும் உண்மையான தகவலைத்தராது (உண்மை என்பது என்ன என்பதும் பிரச்சனைக்குரியது)
தமிழகத்தில் இலக்கியவியாதி என்று சொல்லிக் கொள்பவர்கள் அல்லது பின்நவீனத்துவம் என்று பேசுகிறவர்கள் முதலில் தமிழகம் முழுக்க, குறைந்த பட்சம் மாவட்ட தலை நகரம் + ஒரு கிராமம் என்று தான் வாழும் பிரதேசத்தின் இயல்பை அறிய நேரம் செலவிட வேண்டும். அயல்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தத்துவங்களை பேசித் திரிவதில் என்ன பயன்?
தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டங்களுக்கு விஜயம் செய்து இருக்கிறீர்கள்? ஒரு மாவட்டத்தின் தலை நகரில் குறைந்தது ஒரு நாள் தங்கி இருக்கீறீர்களா?
அல்லது எத்தனை கிராமங்களுக்கு விஜயம் செய்து இருக்கீங்க?
என்று அவரவர் கேட்டுக்கொள்ளவேண்டிய விசயம்.
**
வட்டார வழக்கு என்பது அந்த வட்டாரத்திற்கு பொதுவான ஒன்று.
பார்பனர்கள்தான் எங்கு இருந்தாலும் அந்த வட்டாரத்துடன் ஒட்டாமல் தனி மொழி அடையாளம் காப்பார்கள்.
ஒரே வட்டாரத்தில் இருந்தாலும் பல சாதிப்பிரிவுகளுக்குள் சில தனிப்பட்ட பழக்கங்கள் இருக்கும். அந்த பழக்கவழக்கங்களின் தாக்கம் சொற்களில் இருக்கும். இருந்தாலும் , சாதிக் கென்று தனியான வட்டார வழக்கு நானறிந்த அளவில் இல்லை.
***
கொங்கு வட்டாரத்தில் "ஏனுங்க அம்மணி" என்று ஒரு தலித் விவசாயக்கூலி சொல்வதற்கும் , "என்ன அம்மணி" என்று மிட்டாமிராசு சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கும். அது அதிகாரத் தோரணையும் , சாதியப் பெருமையும் கலந்துவரும் ஒன்று.
**
பார்ப்பண மற்றும் நரிக்குறவர்கள் தவிர்த்து சாதி சார்ந்த மொழி வட்டார வழக்கு இருப்பதாக நான் அறியவில்லை. இது அலசப்படவேண்டிய ஒன்று.
No comments:
Post a Comment