Saturday, September 26, 2009

உன்னை போல் ஒருவன் பற்றி

எப்படியோ இன்று மதியம் உன்னை போல் ஒருவன் ( ரிமேக் ) பார்த்தாகிவிட்டது! ஹிந்திக்கு கொடுத்த முக்கியத்துவம், தமிழில் இல்லை. ஒரு லையின் கதை, ஒரு நாளில் நடப்பது, ஆங்கில படம் மாதிரி சொதப்பி...

தாராளமாய் ஒரு தடவை பார்க்கலாம். மோகன்லால் தான் கதையின் நாயகன். அருமையான நடிப்பு. கமல் சைடு ஆக்டர் போல வந்து போகிறார். ஒரு லெட் டவுன். இந்த காரக்டரை பிரகாஷ் ராஜ் அருமையாக செய்திருப்பார்!

இரா. முருகன் வசனம். எத்தனை ஆங்கிலம் கலக்க முடியுமோ ( இதில் கமல் பேசும் அமெரிக்கன் அக்சென்ட் கொடுமை - உபயம் நியூ யார்க் ) ... ஹிந்தி மூலத்தின் வசனங்கள் டப்பிங் செய்யப்பட்டு உள்ளது என நினைக்கிறேன்!

மூசிக் - சுருதி ஹாசன். சீனுக்கு தேவைக்கேற்ப - செல் போன் - கிர் கிர் உட்பட... முதல் படமா?

லக் தான் முதல் படம் - நடிக்க. :-)

கீழ்நிலை வர்க்கம் ( அதாவது பி அண்ட் சி சென்டர் ) பார்க்க முடியாத படம். புரியாதுங்க!

என்னோடு வந்த நண்பர்களுக்கு படம் முடிந்த ( இன்டர்வெல்லோடு இரண்டு மணி நேரம் ) பிறகு கதை வேறு சொல்ல வேண்டி இருந்தது. :-)

தேவை ஒரு குத்து பாட்டு. அந்த கைதிகளோடு ஒரு நடனம்?

சண்டை காட்சிகள் - ஹிந்தி மூலம் போல இருந்தது. கமழும் ஒரு ப்லேஷ்பேக்கில் தாடி இல்லாமல் ஒரு சண்டை போட்டிருக்கலாம்!

கமல் ( பெயரில்லா ) கேரக்டர்.... கதையில் தீவிரவாதிகள் கொல்வதை, வேறு ஒன்றோடு ஒரு லிங்க் போட்டிருக்கலாம்...

ஆமாம் இதை போலவே ஒரே நாளில் நடக்கும் குடும்ப கதை - சுஹாசினி நடிக்க வந்தது அல்லவா?

எப்படியோ, கமலுக்கு வசூல் மலை. ( அவீங்க தயாரிப்பு )

தெலுங்கு - வெங்கடேஷ் காம்பினேசன் பார்க்கணும். பெங்களூரில் ஓடுது! அதுவும் இப்படியாக இருக்குமா?

1 comment:

  1. இதை போலவே ஒரே நாளில் நடக்கும் குடும்ப கதை - சுஹாசினி நடிக்க வந்தது அல்லவா?

    கல்யாண காலங்கள் !!!

    ReplyDelete