Tuesday, September 29, 2009

வரம்

ஒரு இணையத்தில் பிரபலமான எழுத்தாளர் ஒரு சாமியார் பற்றி எழுத ஆரம்பித்தவுடன் எனக்கு தெரிந்துவிட்டது - ஒரு புத்தகம் மொழிபெயர்ப்பில் அல்லது அனுபவத்தில் வரும் என்று. கடவுள் என்பவர் ஏன் ஜிலேபி பையித்யமாக இருக்க வேண்டும்? எங்கள் வீட்டிற்கு சில சமயம் வந்த போது ( அப்பா போலீசில் இருந்தவர் ) கேட்டு சாப்பிட்ட ஒரு பலகாரம்! சுவாமியும் சமாதி நிலையும் அப்படிதானா?

அரசியல்வாதிகளுக்கும் சாமியார்களுக்கும் உள்ள லிங்க் உங்களுக்கு தெரிந்திருக்கும். நல்ல ரியல் எஸ்டேட் பிசினஸ் அந்த ஆசிரம ஏரியாவில் நடக்கும். தங்கம் மற்றும் கணக்கில் டேக்ஸ் கட்டாமல் இருக்கும் பணம் புரளும் ( எல்லாம் பக்தர்கள் கொடுத்தது என்று - அதை மீண்டும் அந்த அரசியல்வாதியின் குடும்பத்திற்கு வெள்ளையாக சென்று சேரும் ) - உதாரணம் - திருமலைகோடி தங்க கோவில்.

ஒருவர் தனக்கு தானே சிலை வடித்துக்கொண்டு, மற்றவர்களை கும்பிட வைப்பது என்ன சூத்திர தர்மம்? மாயாவதியும் அதை தானே செய்தார்? குருக்களிலெல்லாம் குரு தக்ஷிணாமூர்த்தி சொன்னது - உயிருள்ளவர்களை சிலை வடித்து கும்பிடாதே! என்னை பொறுத்தவரை அவர்கள் நார்ஷிஷிச்டிக் சைகொபாத்ஸ்.

மாதா பிதா குரு தெய்வம் என்று சொல்வார்கள். இதை சொல்லியவர், தெய்வத்திற்கு முன்னால் குரு என்பதை - சாமியார்கள் துஷ்ப்ரயோகம் செய்வார்கள் என தெரிந்திருக்காது!

நீங்கள் வேதாத்ரி மகரிஷி சொல்லிக்கொடுத்த குண்டலினி யோகம் பற்றி படியுங்கள், பிடடியில் நடப்பது அதன் ஒரு பாகமே! சரி சாமியாருக்கு எதற்கு பட்டு மெத்தையும், பெரிய பங்களாவும்?

மேலும் வரம் நிகழ்ந்தது என்பது - அற்புதங்களை பரப்பும் ஒரு மாய கட்டுவித்தையே. ஒரு டேடாபேஸ் வைத்து, கேட்ட வரம், நடந்தது என்ன எனபதை விலா வாரியாக யாரும் சொல்ல இயலாது! பைசா இல்லாமல் இந்த உலகில் ஒரு சுண்டைக்காயும் இல்லை, புண்ணாக்கும் இல்லை!

இதையும் படியுங்கள் நின்னைச் சிலவரங்கள் கேட்பேன்...!

என் தம்பியும் மூன்று வருடங்களாக அந்த சாமியாரிடம் சென்று வரம் கேட்கிறான். திருவண்ணாமலை அல்லது பெங்களூரு - பிடடி வந்து செல்ல காசு தான் செலவு. அவர் இஷ்டப்பட்ட மாதிரி வெளி நாட்டு வேலை வரவில்லை... இன்னும் பிற!

ஒன்று தெரியுமா தன்னை சாத்தான் என்று கூறிக்கொள்பவனே தெய்வம்! ஏன்? எந்த மனித பிறவியும் தன தவறை, ஒப்புக்கொண்டதில்லை. ரீசன் இருக்கும்!

சரி வரம் கேட்கும் சூட்சமம் ஒன்று சொல்லட்டுமா?

என் குடும்பத்தில் எப்போதும் சந்தோஷம் நிலவ வேண்டும். அதற்கு தேவையான ஆரோக்கியம், நிரந்தர தொழில் மற்றும் அழகான ஒரு சொந்த வீடு வேண்டும்!

- இதை தான் என் அப்பா எனக்கு சொல்லிக்கொடுத்து, தினம் எனது பிரேயரில் நான் கேட்பது -

No comments:

Post a Comment