Tuesday, September 29, 2009

வரம் பற்றிய ஒரு விளக்கம்

இது எனது நூற்றி ஐம்பதாவது பதிவு! ஒன்பது மாதங்களில்... பதிமூன்றாயிரம் வாசகர் பார்வைகள்... நன்றி நன்றி...

வரம் பற்றிய ஒரு விளக்கம் ... இதோ...

வரம் ... என் முந்தைய போஸ்டில் கூறியிருந்த செய்தியை படித்திருப்பீர்கள்!

ஸ்வாமி ஓம்காரும் அருமையான ஒரு பதிவு போட்டுள்ளார்!

நானும் வரம் தரப்போகிறேன்...!

படித்து ரசியுங்கள்!

***

நான் தினம் கேட்கும் வரம்... ( எந்த சாமியாரிடம் கேட்டாலும்... இதை தான் கேட்பேன்! )

என் குடும்பத்தில் எப்போதும் சந்தோஷம் நிலவ வேண்டும். அதற்கு தேவையான ஆரோக்கியம், நிரந்தர தொழில் மற்றும் அழகான ஒரு சொந்த வீடு வேண்டும்!

- இதை தான் என் அப்பா எனக்கு சொல்லிக்கொடுத்து, தினம் எனது பிரேயரில் நான் கேட்பது -

அதற்கு விளக்கம்... எப்போதும் ஆரோக்கியமாக இருந்தால், நல்ல வேலை ( சொந்தமோ, அடிமை தொழிலோ செய்யலாம்! ) அப்புறம் கை / பேங்க் அக்கவுண்ட் நிறைய பணம், ஒரு மனதிற்கு பிடித்த வீடு... அப்படியே குடும்பமும் ( சொந்தம், மற்றும் வருகிறவள்.. வருகிறவன்...) நன்றாக இருக்கும்... எப்போதும் சந்தோஷம் நிலவும்!

அதிக ஆசை இல்லை! :-)

பிளாசிபோ எப்பக்ட் படியும் பார்த்தால், நம் முயற்சியே வெற்றியை அமைத்துக்கொடுக்கும்! நாம் அதை அடைவோம் என்று முன்னிறுத்திக்கொள்ள வேண்டும்!

***

சென்ற வாரம் வெள்ளி முதல் திங்கள் இரவு வரை ஊரில் கழித்தேன். மீண்டும் வியாழன் இரவு ஊருக்கு சென்று செவ்வாய் காலை திரும்ப வேண்டும். திங்களன்று சென்னை கன்சலேடில் ஒரு சிறு வேலை!

அப்போது கோவிலில் ஒரு சிறு விசேஷம்.... குடும்பம் மட்டும்! இன்னும் இருபது நாட்களில் மீண்டும் நியூ யார்க் செல்லும் வேலை இருக்கு. ஒரு வருடம் இருக்க வேண்டி வரும்.

அதனால் நிறைய எழுத முடியாது!

2 comments:

  1. ஒன்னரைச் சதமா?

    இனிய பாராட்டுகள்.

    ReplyDelete
  2. இது எனது நூற்றி ஐம்பதாவது பதிவு! ஒன்பது மாதங்களில்... பதிமூன்றாயிரம் வாசகர் பார்வைகள்... நன்றி நன்றி...

    ReplyDelete