Tuesday, May 26, 2009

தம்பியின் டைரி

என் தம்பி வெங்கி பற்றி அடிக்கடி எழுதறேன். நான் இப்போ கல்யாணம் செய்து லையின் க்ளியர் செய்தால் தான் அவனுக்கு ஏற்பாடு ஆகும்...

பத்தாவது முடித்தவுடன், டிப்ளோமா படித்து விட்டு, எங்கள் ஊரிலேயே சென்ற வருடம் பி.ஈ. முடித்தான். என்னை விட இரண்டு வயது இளையவன்.

அவன் டிப்ளோமா ஜாயின் பண்ணின போது வயது 15, அப்போது தான் நாங்கள் கம்ப்யுட்டர் சென்டர் ஆரம்பித்தோம். வருடம் 1994. இரண்டு கம்ப்யுட்டர் லோனில் வாங்கினோம், ஒரு லட்சம் ஆனது. டிப்ளோமா முடித்தவுடன், சில வருடங்கள் சென்டரில் தான் இருந்தான். இப்போ பிசினஸ் நல்லா தான் போகிறது. மேலும் ஜெராக்சும் ஒரு பிசினஸ் தான்.

மூன்று வருடம் காலேஜ் அட்டன்ட் பண்ணி விட்டு, சாயந்திரம் சென்டர் பார்த்துக்கொள்வான். கில்லாடி. ;-)

அவன் வேறு ஒரு அமெரிக்க தமிழ் பெண்ணை ஆன்லைனில் சைட் அடிக்கிறான், மிசிகன் உனிவர்சிடியில் படிக்கிறாளாம். தம்பி பரதநாட்டியம் டான்ஸ் ஆடி பழகியதில், அவளுக்கு ஒரு ஈர்ப்பு....

இந்தியாவில் பிறந்து அமேரிக்காவில் செட்டில் ஆன குடும்பம். கண்ணாடி எல்லாம் போட்டிருக்கிறாள்.... அவள் சென்னை வந்த சமயம், தம்பி போய் பார்த்துள்ளான்.

என் கல்யாணம் முடிந்தவுடன், அவர்கள் கல்யாணம் தான். தம்பிக்கு விசா ப்ராப்ளம் இல்லாமல் இருந்தால் சரி.

அவனுக்கு ஒரு எச். 1 விசா பண்ணிவிட்டால், அங்கே போய் இருப்பான். யாராவது கொஞ்சம் உதவி புரியுங்கள். காண்டேக்ட் இமெயில் குடுங்கள். சிறு கம்பெனி ஆக இருந்தாலும் தரமான கம்பெனி வேண்டும்.

********

என் ரூம் மேட சரவணனும், ஆண்லயினில் ஒரு பெண்ணை பிடித்து வைத்துள்ளான். அவளை கட்டிக்கொள்ள விருப்பமாம். வெள்ளைக்காரி! எப்படி எப்படி நடக்கும்?

இந்த காலத்தில் ஒண்ணுமே நம்ப முடியாது!

No comments:

Post a Comment