Thursday, May 28, 2009

தமிழன்னை கோவில்

எங்கள் ஊருக்கு அருகில் எங்கள் ஜாதிக்காரர் தமிழன்னை கோவில் ஒன்று கட்டுகிறார் என கேள்விப்பட்டேன்.

நாங்கள் தெலுங்கு பேசும் ஆட்களாக இருந்தாலும், தமிழ்நாட்டில் பிறந்ததால், நாங்களும் தமிழர் தான்! தெலுங்கு எழுத வராது!

அவனவன் ஊரு விட்டு ஊரு போய், பஞ்சம் பொழைக்க போன இடத்தில் எல்லாம், தனி நாடு கேட்டுக்கொண்டு இருக்க ( இரண்டு லட்சம் பேர் சாகவும் காரணமாயிருந்து ) இது நல்ல விஷயம் என்று மனதில் படுது...

வாழ்த்துக்கள் நாயக்கர்வாள்!

*******
தமிழன்னைக்கு தினமும் தமிழின் உயிரெழுத்துக்களால் அர்ச்சனை என்ற வரி என்னை யோசிக்க வைத்தது.

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ,ஓ, ஔ, ஃ என்ற எழுத்துக்களை ராகமாக பாட போகிறார்களாம். அருமை!

அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
ஆதிபகவன் முதலென்றே உணரவைத்தாய் தேவி
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய்
உயிர் மெய் எழுத்தெல்லாம் தெரியவைத்தாய்
ஊமையின் வாய் திறந்து பேச வைத்தாயம்மா பேச வைத்தாய்
எண்ணும் எழுத்தெங்கும் கண் திறந்தாய்
ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்
ஐயம் தெளியவைத்து அறிவு தந்தாய்
ஒலி தந்து மொழி தந்து குரல் தந்தாய்
ஓங்கார இசை தந்து உயர வைத்தாய்
தே ஞானம் பெற்று வாழ்வோம் தேவி!
( நாமளும் தமிழருன்னு காட்டிட்டோமில்லே, ஆங்... )

கடைசி லையின் நம்மளுது...

5 comments:

  1. நல்லா இருக்குங்க ராஜு ... நிறைய எழுதுங்க.

    ReplyDelete
  2. //அவனவன் ஊரு விட்டு ஊரு போய், பஞ்சம் பொழைக்க போன இடத்தில் எல்லாம், தனி நாடு கேட்டுக்கொண்டு இருக்க ( இரண்டு லட்சம் பேர் சாகவும் காரணமாயிருந்து ) //

    ராஜீ அண்ணா நீங்கள் இதை இலங்கையை மனதில் வைத்து எழுதியிருந்தீர்கள் என்றால் உங்கள் கூற்று மிகவும் தவறு.காரணம் யாழ் தமிழர்களின் பூர்விகமே அந்த இடம்தாம். இந்தியாவில் இருந்து பிழைக்கச் சென்ற தமிழர்கள் குடியமர்ந்தது கண்டி,நுவரேலியா என்னும் இலங்கையின் மத்திய மாவட்டங்களில். அங்கு உள்ள தேயிலைத் தோட்டங்களில் கூலிகளாக வேலை செய்த இவர்களில் 90% சதவிகிதம் சிரிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தப்படி 1975 களில் தாயகம் திரும்பிவிட்டனர். இன்று தனிநாடு கேட்டுப் போராடுவது இலங்கையையே பூர்வீக பூமியாகக் கொண்ட யாழ் தமிழர்கள்தானே தவிர இங்கிருந்து பிழைக்கச் சென்ற தமிழர்கள் அல்ல.


    அப்புறம் உங்கள் உறவினர் உண்மையிலேயே பாராட்டுக்குறியவர் :)

    ReplyDelete
  3. அப்துல்லா அண்ணே, ரொம்ப நன்றிங்க.

    ReplyDelete