Thursday, July 30, 2009

சின்ன புன்முறுவல்

வடகரைவேலன் எழுதுன பதிவு ஒன்னு படிச்சேன். மனசுலே கப்புனு ஒட்டிகிச்சு. ஒரு கமன்ட் போட்டேன்.

"மக்கட் பதர்"

தீரா மாதவராஜ் மாதிரியே எழுதறீங்க. சவுத் சைடு... நல்ல தமிழ். இப்போ தான் அவர் ப்ளாகையும் படிச்சேன்.

கூரியர் ஆட்கள் பத்தி ஒன்னு சொல்லியே ஆகணும். என்னோட எம்.பி.ஏ ப்ராஜக்ட் சென்னையிலிருந்து வந்தது. (எப்படியோ ஐ.ஐ.எம். கனவு கரசிலே முடிந்தது ) எங்க கம்பனியிலே முழு பேர் இருந்தா தான் வாங்குவாங்க. ஷார்ட் பேருலே ( எப்பவும் போல ) கொடுத்திட்டேன். திருப்பி அனுப்பிட்டாங்க. நல்ல வேலை மொபையில் நம்பர் இருந்தாலே, அந்த கூரியர் ஆள் கூப்பிட்டான். நான் வெளியே போய் வாங்கினேன். தேங்க்ச்னு ஒரு இருபது ரூபா கொடுத்தேன். அவன் கண்களில் சந்தோசம். சில சமயம் படிச்ச ஆட்களை விட ( எங்க ரிசப்சனிஸ்டு எப்பவும் யார் கூடையே கடல போட்டுட்டு இருப்பா ) அவீங்க பெட்டர் அண்ணாச்சி. நிலைச்சு நிப்பாங்க ஒரு இடத்திலே.

இன்னொரு விஷயம்... ஆறு மாசம் ஒருக்கா ரெகுலரா ஒரு டென்டிஸ்ட் கிட்டே போவேன். அங்கே வேலை பாக்குறே அக்காவை பார்த்து சிரிப்பேன். தமிழ் தான். நல்ல இருக்கீங்களானு கேப்பேன். ஒரு நாள், சரியான பல் வலி. கருப்பட்டி மிட்டாய் ஊரிலேசாப்டது , கடலை உள்ளே சிக்கிடுச்சு போல. பெங்களூர் வந்து டென்டிஸ்ட் கிட்டே போனா, அவீங்க இல்லே. அந்த அக்கா தான் க்ளீன் பண்ணி வுட்டாங்க. சரி ஆகிடுச்சு. பழக்கம் மட்டும் இல்லாம இருந்திருந்தா, க்ளீன் பண்ணாமே பல்லே போயிருக்கும். டாக்டரும் கரக்டா பண்ணுனே சொன்னாங்க.

ஒரு சைகாலஜி புத்தகத்தில் படிச்சேன், யாருக்கு நாங்க சிம்பத்தி கொடுக்கிறோமோ, அவீங்க இன்னும் நல்ல பேர் வாங்கனும்னு நினைப்பாங்களாம் . நீங்க சொன்ன வரிகள், சின்ன புன்முறுவல், நிச்சயம் தேவைங்க!

Wednesday, July 29, 2009

வில்லத்தனம்

இணையத்தில் எழுதும் எழுத்தாளர்களின் வில்லத்தனம் இன்று தான் தெரியுது.

ஆபாசம், கேனத்தனம் என்று என்னெனவோ வார்த்தைகளில் சங்கமிக்கலாம், இந்த விவாதத்தை. பரமஹம்ஸரெ நேரில் வந்தாலும் எவர்க்கும் புரியாதது.

ஒருவர் மற்றவரை அடித்துக்கொல்வாராம் விவாதத்தில், புராண தண்டனை தருவாராம். நல்ல நிலையில் இருந்துக்கொண்டு உதவி பெற்று தான் வாழ்கிறேன் என்பாராம். இன்னொருவர் அமெரிக்கா சென்றால், வேண்டாம் கசக்கும் என்கிறார். இருந்தாலும் பரவாயில்லை, கீழை நாடுகளில் இருப்போர் ஏரியாவில் தங்கிக்கொள்வேன் என்கிறார். ஆங்கிலத்தில் பிளந்து கட்டும் ஒருவர், தலை சுற்றுகிறது கண்ணையா... ஏன்ட்டி இலாகா ராசியேவு? குறிப்பிட்ட மாதிரி, ஆங்கிலம் படிக்க புரிந்துகொள்ள ஒரு தன்மை வேண்டியதில்லை. எவன் வேண்டுமானாலும், எவன் எழுத்தை படிக்கலாம். காசிருந்தால் புத்தகம் ( புதியதோ, பழசோ ) இல்லாவிட்டால், இணையத்தில் இருக்கவே இருக்கு.

சினிமா ரசிகர்கள் அஜித் 'தல' வெர்சஸ் விஜய் என்பது போல இருக்கு. ஆனாலும் ஆளாளுக்கு போட்டி போட்டு உதவிக்கொள்வார்கள். இங்கேயும் அது தான் நடக்கு. நடக்கட்டும்...

அப்பாடா சாமி, நிறைய டைம் இருக்கு. அம்மா பொழப்ப பார்க்கணும்!

Thursday, July 23, 2009

தாய்மை

லதானந்த் அவர்கள் எழுதிய தாய்மை பதிவு படித்தேன்....

நாங்கள் சிறு வயதில் நாய் வளர்த்தது ஞாபகம் வந்தது.

அந்த பதிவில் நான் இட்ட கமென்ட்....

//உண்ணொரு ஆண் குட்டி பேர் வெக்கிரதுக்கு முந்தியே செத்துப்போச்சு! காரணம் நெம்ப வேதனையானது.//

?? என்ன ஆச்சு?

இப்போவெல்லாம் வெடினரரி டாக்டர் தான் பிரசவம் பாக்குறாங்களா?

எங்க ஊரிலே, குட்டி போட்டப்புறம் தான் வெடினரரி டாக்டர் கிட்டே கொண்டுப்போனோம்!

ரெண்டு நாள் பசும்பால் தான் குட்டிக சாபிட்டுச்சு. அம்மா பால் அப்புறம் தான்.

அப்பா போலீசிலே இருந்ததாலே... ஒரு குட்டி தவிர மத்த மூணு ப்ரெண்ட்ஸ் எடுத்துகிட்டாங்க.

***

ராஜபாளையம் நாய்கள் குட்டி போடுவது குறைவு. அதுவும் நன்கு வளர்ந்த போட்டிகள் சில சமயம் நான்காவது இடும்.

பெங்களூரில் கோரமங்களா ஏரியாவில் சாயந்திரம் சில வாகிங் செல்லும்....

என் காதலி லதா

இன்று லதாவிற்கு கல்யாணம். என் அருமை காதலி அவள்.

என்னோடு ப்ளஸ் 2 படித்தவள். இருபத்தொன்பது வயதாகிறது!

பதினைந்து வருடம் பழக்கம். ஒரே பள்ளி. இருவரும் ஒன்றாக தான் பள்ளி செல்வோம்.

அவள் கொண்டு வரும் புளிக்காயச்சலும் தயிர் சாதமும், இன்னும் நாக்கில் ஊருகிறது. அம்மா செய்யும் பருப்பு துவையல் அவளுக்கு இஷ்டம்.

அவள் அப்பா ஒரு ப்ரோகிதர். பாவப்பட்ட குடும்பம் என சொல்லும் வீடு. எங்கள் தெரு அருகில் தான்... ஒட்டு உடைசல். புளியோதரை மனம். தேங்காய் வாசம்... என்னை அம்பி என்று அழைப்பார்கள். அவள் அம்மாவிற்கு தெரியும், என் காதல். விதி?

நன்றாக ஸ்லோகம் சொல்லுவாள். நிறைய மந்திரங்கள் எனக்கு கற்றுக்கொடுத்தாள். அதில் பிடித்தது... காயத்ரி மந்திரம்... இப்போ மன நிம்மதிக்கு உகந்த மந்திரம்.

என்னோடு நன்கு பழகியவள்.... மனதோடு ஒன்றியவள்...

படித்தால்... பி.எட் முடித்தவுடன் அரசாங்க பள்ளியில் உத்தியோகம் வந்தது. சில வருடங்களில் பெர்மனென்ட்.

நான் எந்த ஊரில் இருந்தாலும் , வீடு செல்லும் போது அவளை சென்று பார்ப்பேன்...

சென்ற மாதம் கூட அவள் பாடம் நடத்தும் பள்ளிக்கு சென்று பார்த்தேன். அவளுக்கு பிடிக்கும் என்று டர்கிஷ் அல்வா எடுத்து சென்றேன்!

முகம் வாடியிருந்தது... முகம் மலர்ந்தாள்.. "அப்பா எனக்கு கல்யாணம் பிக்ஸ் செஞ்சுட்டார்... மாப்பிள்ளைபிசிக்ஸ் வாத்தியார், பொள்ளாச்சியில். ப்ளஸ் 2 டுசன் வருமானமும் அதிகம்! "...

"டேட் இன்னும் முடிவாகலே.. ஒரு மாசத்திலே இருக்கும்... ஐ.டி. மாபிள்ளை இந்த காலத்திலே வேண்டாம்னு எல்லோரும் சொல்லிட்டா.. இதிலேயும் அப்பா ப்ரோகிதம் பண்றது நின்னுடும், நான் உங்களை கல்யாணம் செஞ்சா..."

விசும்பல்..

"அப்பாவையும் அம்மாவையும் பெங்களூர் அழைச்சுண்டு போவேள். ஆனா எங்க வழக்கங்கள், கலாச்சாரம்... சொந்தங்கள்.. எங்கு போய் நிக்கிறது? தம்பி வேறு வளர்ந்துட்டான். அடுத்த வருஷம் ப்ளஸ் 1. அவன் படிப்பு செலவு மாப்பிள்ளை எத்துண்டார்! "

விசும்பல்....

"நாமோ இனிமே சந்திக்க கூடாது.."

மீண்டும் விசும்பல்...

ஓடிவிட்டாள்.

மல்லிகை மனம் இன்னும் இருந்தது.

மறக்காமல், கையில் நான் கொடுத்த பொட்டலத்தை எடுத்துக்கொண்டு சென்றாள்..

*

ஒரு வாரம் கழித்து என் மொபைல் சிணுங்கியது... லதா தான்.

"ஜூலை 23 கல்யாணம் ... ராமேஷ்வரத்திலே. ப்ரோகிதம் பண்ண போறார். பெரிய சாமியாரெல்லாம் வாராலாம். சூரிய கிரகணத்துக்கு அடுத்த நாள். நல்ல நாளாம்... நாங்கோ இருக்குறே லாட்ஜ் அட்ரெஸ் எஸ்.எம்.எஸ் பண்ணிடுறேன்...வரியாடா ஷங்கர்?"

"ஹும்.. பாக்குறேன்.. " என் குரல் கணகணத்தது...

கால் கட்.

*

அடுத்த மாதம் ஊருக்கு போகும் போது பார்க்கவேண்டும்!

அயன் ரேண்ட்

அயன் ரேண்ட் பற்றி நிறைய பேர் இப்போ எழுதுகிறார்கள்.

பி.ஜி.வூதவுஸ், சோமர்செட் மாகம் போன்றவர்களும், இர்விங் வாலஸ் , ஹெரால்ட் ராபின்ஸ், சிட்னி செல்டன் போன்றவர் எழுதிய பாட பாயிலர் ( பக்கம் பக்கமாக திருப்ப வைக்கும் ) நூல்கள் முன், அயன் ரேண்ட் வேறுபட்ட எழுத்தாளர். சொந்த வாழ்க்கையிலும், ஆசைக்கு ஒன்று, ஆஸ்திக்கு ஒன்று என துணை வைத்து, மன நலம் குண்டியதாக இணையத்தில் படிக்கிறேன்.

அவர் எழுதியதில் என்னை மிகவும் தாகிய நூல் தி பவுண்டன் ஹெட்.

நான் படிக்கும் காலத்தில்.... விடலை பருவம், கம்மி விலை பிரிண்ட் கையில் வைத்துக்கொண்டு, நோட்டுக்குள் வைத்து படிப்போம். ஆங்கில எக்சாம் எழுத சென்ற போது, காம்போசிசன் ஆங்கிலத்தில் கொஞ்சம் வழமை வர வைத்தது அது தான்!

சரி என்ன தான் சொல்லுகிறார் அயன் ரேண்ட்?

புதுமை, முயற்சி, பழையதை விட்டு விடு என்பது தானா கோட்பாடு அதில்?

பழையன கழிதலும், புதியன புகுதலும், வரையன கால வரையினானே, என்றார் யாரோ ஒரு பழம் புலவர்.

அது போன்று ஒரு மாற்று சிந்தனை கொடுத்த நூல் அது. எதையும் முயற்சித்து பார். புதிய முறை கையால்... போன்ற தத்துவங்கள்.

நியூ யார்க் - வளர்ச்சி... உயரமான கோபுரங்கள், பணம், புகழ் என்று எல்லாகலவையும் நிறைந்த பின் நவீனத்துவம்! போஸ்ட் மாடர்னிசம்.

பழைய எபிக் மாதிரி இல்லை.

++++++++++++++++++

நம்ம ராமாயாணம் மற்றும் மகாபாரதம் போன்ற காவியங்களில் இருக்கும் எழுத்தாற்றல் - கிளைக்கதைகள் என்னில் அடங்கா புத்தி புகட்டும் வாழ்க்கை சரித்திர நூல்கள்.

Wednesday, July 22, 2009

பொழுது புலர்ந்தது

இன்று பொழுது புலர்ந்தது - சூரிய கிரகணம்.

அந்த நேரம் ஆபீஸில். வேலை இன்னும் ஒரு வாரத்தில் முடிகிறது. ரொம்போ பிசி!

அடுத்த வாரம் ஊருக்கு வருகிறேன். நாக்கு செத்துவிட்டது! சில சமயம் வெளிநாடுகளில் இது நடக்கும். எனக்கு இது கொஞ்சம் எதிர்பாராத லாங் ட்ரிப்.

என்னை விடுவிக்க எங்கள் நண்பர் வருகிறார்!

*****

பதிவுகள் பக்கம் வரவே முடியலே.

டோண்டு ராகவன், நர்சிம், பரிசல்காரன் மற்றும் அப்துல்லா அவர்களின் பதிவுகளை விடாமல் படிப்பேன் - தூங்கும் முன்.

*****

மனசு நோக வைத்த சம்பவம், முன்னாள் இந்திய ப்ரெசிடென்ட் அப்துல் கலாம் அவர்களை செக்கிங் என்ற பெயரில் "துளாவியது" மனதிற்கு பிடிக்கவில்லை.

மதம் என்ற விசப்பாம்பு எப்படி கொல்கிறது மனிதாபிமானத்தை!

எப்படியோ இன்றும் பொழுது பிறந்தது!

David Ogilvy's best advice for business

Read here on http://postcards.blogs.fortune.cnn.com/2009/07/21/david-ogilvys-best-advice-for-business/

David Ogilvy's best advice for business.... (with thanks. )

1. Remember that Abraham Lincoln spoke of life, liberty and the pursuit of happiness. He left out the pursuit of profit.

2. Remember the old Scottish motto: “Be happy while you’re living, for you are a long time dead.”

3. If you have to reduce your company’s payroll, don’t fire your people until you have cut your compensation and the compensation of your big-shots.

4. Define your corporate culture and your principles of management in writing. Don’t delegate this to a committee. Search all the parks in all your cities. You’ll find no statues of committees.

5. Stop cutting the quality of your products in search of bigger margins. The consumer always notices — and punishes you.

6. Never spend money on advertising which does not sell.

7. Bear in mind that the consumer is not a moron. She is your wife. Do not insult her intelligence.