Wednesday, July 29, 2009

வில்லத்தனம்

இணையத்தில் எழுதும் எழுத்தாளர்களின் வில்லத்தனம் இன்று தான் தெரியுது.

ஆபாசம், கேனத்தனம் என்று என்னெனவோ வார்த்தைகளில் சங்கமிக்கலாம், இந்த விவாதத்தை. பரமஹம்ஸரெ நேரில் வந்தாலும் எவர்க்கும் புரியாதது.

ஒருவர் மற்றவரை அடித்துக்கொல்வாராம் விவாதத்தில், புராண தண்டனை தருவாராம். நல்ல நிலையில் இருந்துக்கொண்டு உதவி பெற்று தான் வாழ்கிறேன் என்பாராம். இன்னொருவர் அமெரிக்கா சென்றால், வேண்டாம் கசக்கும் என்கிறார். இருந்தாலும் பரவாயில்லை, கீழை நாடுகளில் இருப்போர் ஏரியாவில் தங்கிக்கொள்வேன் என்கிறார். ஆங்கிலத்தில் பிளந்து கட்டும் ஒருவர், தலை சுற்றுகிறது கண்ணையா... ஏன்ட்டி இலாகா ராசியேவு? குறிப்பிட்ட மாதிரி, ஆங்கிலம் படிக்க புரிந்துகொள்ள ஒரு தன்மை வேண்டியதில்லை. எவன் வேண்டுமானாலும், எவன் எழுத்தை படிக்கலாம். காசிருந்தால் புத்தகம் ( புதியதோ, பழசோ ) இல்லாவிட்டால், இணையத்தில் இருக்கவே இருக்கு.

சினிமா ரசிகர்கள் அஜித் 'தல' வெர்சஸ் விஜய் என்பது போல இருக்கு. ஆனாலும் ஆளாளுக்கு போட்டி போட்டு உதவிக்கொள்வார்கள். இங்கேயும் அது தான் நடக்கு. நடக்கட்டும்...

அப்பாடா சாமி, நிறைய டைம் இருக்கு. அம்மா பொழப்ப பார்க்கணும்!

3 comments:

  1. இது மிகவும் வில்லத்தனமாக அல்லவா இருக்கிறது ;)

    ReplyDelete
  2. என்னை பொறுத்த வரை எழுத்தாளர்கள் ஒரு வித மன சஞ்சலத்திற்கு ஆட்பட்டே ஒரு விதமாக எழுதுகிறார்கள். (மன நோயாளி என்று சொல்லவில்லை, வில்லத்தனம் ஆகிவிடும்!)

    They want to be in center of attraction!

    ReplyDelete
  3. சில பேரை சொல்லி திருத்த முடியாது. நான் இதை பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.

    --
    வினிதா

    ReplyDelete