Tuesday, March 16, 2010

கதம்ப குழப்பங்கள்

என் மனைவியை அவள் வேலை பார்க்கும் ஆபிசில் அவர் பாஸ் தனியாக லஞ்சுக்கு அழைத்து சென்றது அவ்வூர் மரபு. இந்தியாவில் முடியுமா? இருக்கலாம்... சென்னை வேளச்சேரியில் என் நண்பர்கள் செய்யும் அட்டுழியம்... பெண்களோடு சுற்றுதல்... மனைவி இருக்க... பார்க் பீச்! இங்கு முடியாது. ஊரோடு ஒத்து வாழனும். அத்தைக்கு இந்த விஷயம் கஷ்டம்.

***

இன்று உகாதி. அனைவருக்கும் வாழ்த்துக்கள். அரிக்கி என்று ஒரு வகை பூசை, எங்கள் குல தெய்வத்திற்கு படைப்போம். தமிழ் படையல்தான். இங்கு வெல்லம் உண்டு ஆனால், மாங்காய் இலைகள் கருத்தோடு இல்லை. படேல் ப்ரதர்சிடம் இல்லை. அதனால் ரஸ்சியன் ரவுலேட் மர இலைகள் வைத்தோம். சாமி சந்தோசிக்கும். சில தெலுங்கர்கள் வீட்டில் மரம் இருப்பதாக கேள்வி. வேப்பம்பூ கிடைக்காது.

ஆபிசிற்கு செல்லும் வேலை இல்லை இன்று. காலையில் என்னை தேய்த்து குளித்து மாமா அத்தையிடம் ஆசிர்வாதம் வாங்கி - நகையும் உண்டு - இருவருக்கும்.... மனைவியை ஆபிஸ் டிராப் செய்துவிட்டு வந்தேன்.

இனி லஞ்ச சமயம் அழைத்து வர வேண்டும். ஒரு மணி நேரம் எக்ஸ்ட்ரா பர்மிசன். அத்தை ஸ்பெசல் சமையல் வேறு. புது ப்ரோஜக்ட் என்பதால் ஈசி.

இந்துக்களாக வாழ, சில வழி முறைகள் உண்டு. பூஜை புனஸ்காரங்கள் எல்லாம் செய்யாவிட்டால், ஹிந்துக்கள் இல்லை என்னும் சிலர் இருக்கும் உலகம் இது.

போங்கடா கூ... நான் தமிழனே கிடையாது...

***

ஒரு வழியாக நித்தியானந்தா புயல் அடங்கும் வழி தெரியுது. வெற்றி பெறுவார். பெரிய ஆள் பலம் உண்டல்லவா? அப்போதே சொன்னேன் சாருவிடம். வாழ்ந்தாலும், இறந்தாலும் ஆயிரம் பொன் கதை, சாருவிற்கு... குமுதத்தில் ( ரிப்போர்டர்? ) அதை எழுதுகிறார். நல்லது. யாரவது இன்டர்நெட்டில் போட்டால் நல்லது. நான் குமுதம் சைட் சப்ஸ்க்ரைப் பண்ணலே.

***

ப்ளாகர்கள் தங்கள் அனுபவங்களை எந்த பெயரிலும் எழுதலாம். அந்த ப்ளாகர் பெயர் + அந்த தொகுப்பு பெயர்... என்று நினைத்தால் போயிற்று. இதில் காப்புரிமை என்ன? சமாதானம் வேண்டும். அலை என்ன வரிசை என்ன. அதற்கு செலவிடும் நேரத்தை, உருப்படியாக நாடு முன்னேற, அட்லீஸ்ட் வீடு முன்னேற உபயோகிக்கலாம். புள்ள குட்டிகளை படிக்க வைக்கிற வழியப்பாருங்க. படிச்சிருந்தா நல்ல பொண்ணு பையனோ பார்த்து கட்டி வையுங்க.

அவனவன் சினிமாவே ஒரே பெயரில், ஐந்து வருடம் கழித்து வேறு நடிகர்கள் வைத்து வேறு மாதிரி எடுக்கிறார்கள்....

அப்புறம்...

என் கம்பெனியில் சில ஸ்டாக் ஆப்சன்கள் வருகின்றன. எகனாமி இம்ப்ரூவ் ஆகுது. பத்து பேர் மேலும் சேர்த்துள்ளோம், கடந்த ஆறு மாதங்களில். அறுபது பேர் கொண்ட கம்பெனி. ஒய்ட்பீல்ட் அருகில் புது ஆபிஸ் குறைந்த வாடகையில் கிடைக்குதாம். பி.டி.எம்மில் இருக்கும் மக்கள், எங்கு போவார்கள்? வீடு வாடகை எடுக்கணும்...

எனக்கு இன்னுமொன்றரை வருடங்கள் ப்ராப்ளம் இல்லே. எப்படியாவது எச். 1 பி விசா பண்ணனும். டாகுமன்த்ஸ் ரெடி. ஸ்டேன்ட் பை எல் 2 இருக்கு. அதுவும் என் மனைவி கம்பெனி நம்பி. மேக்சிமம் டாடா கம்பெனியில் இங்கு மூன்று வருடங்கள் இருக்கலாம்.

***

எங்கள் கம்பெனி ஒரேகல் கம்பெனியின் பார்ட்னர் ஆகும் வாய்ப்பு உண்டு. பார்ப்போம்.

Friday, March 5, 2010

நான் கடவுள்

நான் கடவுள்
என்று சொல்லி
விவாதம் செய்கிறார்கள்
பதிவுலக மக்கள்

வரம் கொடுத்தேனா ?
ஊரை ஏமாற்றினேனா?
நடிகைகளோடு சல்லாபித்தேனா?
அரசியல்வாதிகளுக்கு
சொத்து சேர்க்க வழி தான் கொடுத்தேனா?

இல்லை இல்லை
நான் செய்த தவறு
தினமும்
விலை மலிவு என்று
வாங்கிய காட்டிய
காவி வேட்டி செய்யும் வேலை!

( ஆனால் உள்ளே போடும்
கோமணம்
கெல்வின் களையின் தான்
தெரியுமில்லே? )

கடவுளும் வரமும்

என்ன வரம் வேண்டும்?
என்றார் கடவுள்.
அதுகூடத் தெரியாத நீ
என்ன கடவுள்?

ஓர் பி. ஏ வச்சுக்க...
ஆமா...
இல்லே...
நித்தியானந்தர் கிட்டே கேளு
அதான்யா ராஜசேகரன்
புட்டு புட்டு வைப்பான்
கேட்காமல்
வரமும் கொடுக்கலாம்....

பத்திரம்..
அப்புறம் ரம்பா மேனகா ஊர்வசி
எல்லோரும் அவன் பின்னால்
ஓடிப்போயிடுவாங்க...
தமிழ்நாட்டிலே இருந்தில்லே
இந்திரலோகத்திலே இருந்து!

மற்றொன்று...
காசிலைன்னு கவலை வேண்டாம்
சுருட்டற வழி தெரியும்
சொல்லிக்கொடுப்பான்
வேறு கிரகத்திற்கு கொடுக்கலாம்!

சில சமயம் நம் மக்கள் இருக்கும்
வெளிநாட்டு போருக்கு கூட
காசு கொடுக்கலாம் என்பான்
ஹவாலா ரூட்டு
வேண்டாம் கடவுளே
நம் நாட்டை மட்டும் பார்!

கடவுளே
கடவுள்
திருந்த
வரம் கொடு!

Thursday, March 4, 2010

சாமியார்கள் ஏன்? எதற்கு? எப்படி?

சுஜாதா ஏன்? எதற்கு? எப்படி? புத்தகத்தில் காசு பிடுங்கும் சாமியார்கள் மற்றும் குருக்கள் பற்றிய கேள்விக்கு பதில்அளித்துள்ளார். இப்போது நடக்கும் நித்தியானந்தர் பற்றி பார்க்கும் போது மனது வெதும்புகிறது....

இதோ இங்கே பாருங்கள்....
கேள்வியும் பதிலும்...

கேள்வி : ரமண மகரிஷி, ராமகிருஷ்ணர், சத்யசாயி பாபா, ஓஷோ, மாதா அமிர்தானந்தமயி என்று எந்த ஆன்மீக அமைப்பை எடுத்துக்கொண்டாலும் உலகெங்கும் கிளைகள். படிக்காத மற்றும் படித்த டாக்டர்கள், இஞினீயர்கள், வெளிநாட்டவர்கள் போன்ற லட்ச கணக்கான மக்கள் கூட்டம். இதென்ன... மாஸ் ஹிஸ்டீரியாவா அல்லது மாஸ் ஹிப்னாடிஸமா?

பதில்: இவை அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பது Domino effect என்ற சங்கதி அருகருகே இருக்கும் டாமினோக்களில் ஒன்றை தள்ளிவிட்டால் மற்றது தொடர்ந்து விழுமே... சைக்கிள் ஸ்டாண்டில் கூட பார்த்திருப்பீர்கள். அந்த வகைதான் இந்த இயக்கங்கள் பிரபலமடைவதும்! யாரோ ஒருத்தர் தனக்கு நிகழ்ந்த நல்லதைச்சொல்ல, அவர் மற்றொருவருக்குச் சொல்ல... மெள்ள மெள்ள அது தேச அளவுக்கு ஏன், உலகளவுக்கு விரிகிறது.

இவற்றின் ஆதாரமான இயக்கு சக்தி மனிதன். என்னதான் இஞினீயரோ, டாக்டரோ, வெளி நாடோ, உள் நாடோ, தன் பிறப்பு ‍ இறப்பைப் பற்றி தெளிவில்லாமல் இருப்பதும் மரணத்துக்குப் பின் என்ன? என்கிற கேள்வி ‍ பதில் அளிக்காமலேயே இருப்பதும்தான். இந்த uncertainity - நிச்சயமின்மை அவனை இம்சிக்கிறது. ஏதாவது ஆணியில் தன் நம்பிக்கையை மாட்டிவைக்க விரும்புகிறான். முழுக்க முழுக்க பகுத்தறிவு வாதமும் ஏன் ஏன் என்கிற முடிவில்லாத கேள்விகளும் அவனுக்கு பிடிக்கவில்லை. ஓர் எல்லைக்கு பிறகு, கேள்வி கேட்காமல் நம்பவே விரும்புகிறான். அந்த எல்லை ஆளுக்கு ஆள் மாறுபடும். ஓர் எளிய மனதுக்கு தெருக்கோடி பிள்ளையாரில் துவங்கி, அண்ட சராசரங்களையும் பிரபஞ்ச விசைகளையும் ஆராய்ந்த ஐன்ஸ்டைனுக்கு இறுதியில் God என்ற ஓர் எளிய வார்த்தை தேவைப்பட்டிருக்கிறது. ஸ்டீபன் ஹாக்கின் போன்றவர்கள் கூட Determinism பற்றி பேசும் போது. ஆரம்ப கணத்தில் ஓர் எல்லையற்ற சக்தியைச் சொல்ல வேண்டியிருந்தது. தெருக்கோடி பிள்ளையாரா இல்லை க்வாண்டம் இயற்பியலா இடையில் எத்தனையோ... மகான்கள். எல்லோருக்கும் பகுத்தறிவுக்கான எல்லை உண்டு.

என்னைப் பொறுத்தவரை இந்த நம்பிக்கைகளால் நல்லது நிகழும் வரை போனால் போகட்டும் போகிறது நம்பிவிட்டுப் போகட்டும் என்று விட்டு விட வேண்டியதுதான். ;-)

Wednesday, March 3, 2010

நித்யானந்தரை பற்றி சாரு

நித்யானந்தரை பற்றி சாருவிற்கு நான் எழுதிய கடிதம்

29 September 2009

வணக்கம் சாரு.

நீங்கள் நித்யானந்தர் பற்றி எழுத ஆரம்பித்தவுடன் எனக்கு தெரிந்துவிட்டது - ஒரு புத்தகம் மொழிபெயர்ப்பில் அல்லது அனுபவத்தில் வரும் என்று. கடவுள் என்பவர் ஏன் ஜிலேபி பையித்யமாக இருக்க வேண்டும்? எங்கள் வீட்டிற்கு சில சமயம் வந்த போது ( அப்பா போலீசில் இருந்தவர் ) கேட்டு சாப்பிட்ட ஒரு பலகாரம்! சுவாமியும் சமாதி நிலையும் அப்படிதானா?

அரசியல்வாதிகளுக்கும் சாமியார்களுக்கும் உள்ள லிங்க் உங்களுக்கு தெரிந்திருக்கும். நல்ல ரியல் எஸ்டேட் பிசினஸ் அந்த ஆசிரம ஏரியாவில் நடக்கும். தங்கம் மற்றும் கணக்கில் டேக்ஸ் கட்டாமல் இருக்கும் பணம் புரளும் ( எல்லாம் பக்தர்கள் கொடுத்தது என்று - அதை மீண்டும் அந்த அரசியல்வாதியின் குடும்பத்திற்கு வெள்ளையாக சென்று சேரும் ) - உதாரணம் - திருமலைகோடி தங்க கோவில்.

ஒருவர் தனக்கு தானே சிலை வடித்துக்கொண்டு, மற்றவர்களை கும்பிட வைப்பது என்ன சூத்திர தர்மம்? மாயாவதியும் அதை தானே செய்தார்? குருக்களிலெல்லாம் குரு தக்ஷிணாமூர்த்தி சொன்னது - உயிருள்ளவர்களை சிலை வடித்து கும்பிடாதே! என்னை பொறுத்தவரை அவர்கள் நார்ஷிஷிச்டிக் சைகொபாத்ஸ்.

மாதா பிதா குரு தெய்வம் என்று சொல்வார்கள். இதை சொல்லியவர், தெய்வத்திற்கு முன்னால் குரு என்பதை - சாமியார்கள் துஷ்ப்ரயோகம் செய்வார்கள் என தெரிந்திருக்காது!

நீங்கள் வேதாத்ரி மகரிஷி சொல்லிக்கொடுத்த குண்டலினி யோகம் பற்றி படியுங்கள், பிடடியில் நடப்பது அதன் ஒரு பாகமே! சரி சாமியாருக்கு எதற்கு பட்டு மெத்தையும், பெரிய பங்களாவும்?

மேலும் வரம் நிகழ்ந்தது என்பது - அற்புதங்களை பரப்பும் ஒரு மாய கட்டுவித்தையே. ஒரு டேடாபேஸ் வைத்து, கேட்ட வரம், நடந்தது என்ன எனபதை விலா வாரியாக யாரும் சொல்ல இயலாது! பைசா இல்லாமல் இந்த உலகில் ஒரு சுண்டைக்காயும் இல்லை, புண்ணாக்கும் இல்லை!

இதையும் படியுங்கள் நின்னைச் சிலவரங்கள் கேட்பேன்...!

என் தம்பியும் மூன்று வருடங்களாக நித்யானந்தரிடம் சென்று வரம் கேட்கிறான். திருவண்ணாமலை அல்லது பெங்களூரு - பிடடி வந்து செல்ல காசு தான் செலவு. அவர் இஷ்டப்பட்ட மாதிரி வெளி நாட்டு வேலை வரவில்லை... இன்னும் பிற!

உங்கள் குமுதம் குடும்பம் பேட்டியும் அருமை! ஒன்று தெரியுமா தன்னை சாத்தான் என்று கூறிக்கொள்பவனே தெய்வம்! ஏன்? எந்த மனித பிறவியும் தன தவறை, ஒப்புக்கொண்டதில்லை. ரீசன் இருக்கும்!

சரி வரம் கேட்கும் சூட்சமம் ஒன்று சொல்லட்டுமா?

என் குடும்பத்தில் எப்போதும் சந்தோஷம் நிலவ வேண்டும். அதற்கு தேவையான ஆரோக்கியம், நிரந்தர தொழில் மற்றும் அழகான ஒரு சொந்த வீடு வேண்டும்!
- இதை தான் என் அப்பா எனக்கு சொல்லிக்கொடுத்து, தினம் எனது பிரேயரில் நான் கேட்பது -

--
Raju Sundaram
Bangalore
http://pitbuzz.blogspot.com
"Words once spilled cannot be taken back!"

Monday, March 1, 2010

பனி மழை

பனி மழை எங்கும் பொழியுது
குளிரால் மனம் வாடுது
உடலும் நடுங்குது
பச்சை நோட்டுக்களை
தேடி வந்த தமிழார் நாங்கள்
குளிரென்ன பனியென்ன
எதுவும் ஒக்கே
எங்கள் பணி வெள்ளைக்காரருக்கு
பணி செய்து கிடைப்பதே
கூடிய சீக்கிரம் சம்மர் வருமே
ஒரு நாள் விடிவு மலரும்
எங்கள் வாழ்வில் விடிவெள்ளி வரும்
நல்ல பேன்க் பேலன்ஸ்
இருந்தால் வாழ்வு சுபிச்சமாகும்
ஆபிசில் உருப்படியா வேலை
செய்தால் பசியும் மறந்திடும்

Friday, February 19, 2010

ரவுஸ்பாண்டி

சிறு வயது முதல் என் மாமா ( இப்போது மனைவியின் அப்பா ) என்னை அழைத்தது ரவுஸ்பாண்டி. திண்டுகல்லில் இது பிரபலம் ஆன இழிகுரிசொல்.

அந்த மாமா என் கல்யாணத்திற்கு பிறகும் என்னை சிலசமயம் ரவுஸ்பாண்டி என்றே கூப்பிடுகிறார். என்ன செய்வது?

சென்ற வாரம் சென்னையில் மாமாவும் அத்தையும் விசா வாங்கிக்கொண்டு அமெரிக்கா ( நியூ ஜெர்சி - நெவார்க் ) வந்து ... சேர்ந்தார்கள். சென்னையிலிருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ். மூன்று மாதங்கள் இருக்க ப்ளேன்.

அவர் அங்கலாயித்துக்கொண்டது "ஒரு தமிழ் நாயும் என்னோடு தமிழில் பேச மாட்டேன்கிறார்களே!". நான் சொன்னேன் "எல்லாம் பாசக்கார நாய்கள். பக்கத்தில் கூட வரமாட்டார்கள். ஆம்வே, எவான் தவிர எந்த ஒரு விசயதிர்க்குமுதவ மாட்டார்கள்.. ". மேலுமவரிடம் சொன்னேன், சில பணக்கார தமிழ் ப்லாகர்களிருக்கிறார்கள். ஆன்லயினில் பேசினால் போச்சு! ( நாய் என்று அவர் விளித்தது ஒரு அன்பு தான் தமிழ் தோழர்களே ).

மிஸ் செய்வது - தினத்தந்தி. அதுவும் இன்டர்நெட்டில் பார்க்கிறார்!

***
ஞாயிறு மதியம் வந்தவர்கள், இரண்டு நாட்களாக தூங்கு தூங்கி எழுந்தார்கள்.

நானும் சுமனாவும் வேலைக்கு சென்று வீடு திரும்பும் வரை எங்கேயும் நகரவில்லை. :-) குளிர் வேறு. சென்னையிலேயே திக்க்லேதர் ஜெகட்ஸ் வாங்கி வந்தார்கள்.

புதன் கிழமை, இரவு மடாவன் மாலுக்கு ( ஷாபிங் சென்டர்) அழைத்து சென்று அங்கு உணவு சாப்பிட்டோம். கமண்ட்ஸ் ஒன்றும் அவர் சொல்லவில்லை. ரொம்ப நிறைய தராங்க என்றார். அதுதான் எல்லாம் வெயிட் அதிகம் போல என்றார். மே மாதம் கடைசி வரை இருப்பார்கள்.

தம்பிக்கும் மே மாதம் 15/16 கல்யாணம். கே விசாவில் வருகிறான். இன்னும் ஒரு மாதம் ஆகுமாம். அவன் டிகிரி வேறு கொஞ்சம் சிக்கலில் இருக்கு.அசைஞ்மன்ட் மார்க்ஸ் என்டராகவில்லை. அலைகிறான். அம்மாவிற்கு விசா எடுத்தாகிவிட்டது. அப்பாடா பெரிய விஷயம். தமிழில் பேசி சாதித்து உள்ளார்கள். மூவருக்கும் பத்து வருடம் மல்டிபிள் என்ட்ரி.

இப்போதெல்லாம் ஈசி போல இருக்கே? இங்கே ரிசெசன், அவிங்க வந்தால் காசு கிடைக்கும்... :-)

***

நானும் சுமனவும் கார் லைசன்ஸ் எடுத்து விட்டோம். பத்து வருடம் பழைய சிறிய கொரொல்லா டொயோட்டா ஒன்று வாங்கியுள்ளேன்.

எப்படியோ மே மாதம் லாங் டிரைவ் போகணும். தம்பியும் டல்லாசில் இருக்க போகிறான். அம்மாவும் ஆறு மாதம் இங்கே இருக்க ப்ளேன். பார்ப்போம் எப்படி போகிறது என்று.

மனைவிக்கு காய்ச்சல். ஒரு நாள் சம்பளம் இருக்காது சொன்னார்களாம். சரி சரி வருடம் சிக் லீவு நாலு நாள் இருக்கே. பெர்சனல் லீவு பத்து நாள். பேசுவோம்.

இன்று நானும் வீட்டிலிருந்தே வேலை செய்கிறேன். அதனால் தான் இன்டர்நெட்டு. ப்ளாக் கலக்கல். டிவிட்டரில் வேறு சில மெச்செஜஸ் போட்டேன்.

கிட்ஸ் தோசை மிக்ஸில் ப்ரேக்பாஸ்ட் தோசை தேங்காய் சட்னி என்று போகிறது...

***

இந்த நியூ யார்க் ப்ராஜக்ட் முடிந்தவுடன் சூபர்வேல்யு கம்பெனி ப்ராஜக்ட் ஜூனில் டெலிவரி ஆரம்பிக்கும். மூன்று மாதம் சென் ஹோசெவில் இருக்கணும். இப்போதே என் பாஸிடம் பேசி வைத்தேன் ... வாரா வாரா நேவார்கிற்கு ஒரு ரிடர்ன் டிக்கட் வேண்டும். ஐந்து மணி நேர டைரக்ட் ப்ளைட். உங்களுக்கும் மூன்று நாள் ஹோட்டல் பில் கம்மி என்று. ( வீடு எடுக்க சொல்வார், தெரியும் ... ஈசி ) அம்மா சுமனாவோடு இருப்பார்கள். ஜூலை லாங் வீகேன்டிற்கு அவர்கள் இருவரும் அங்கு வர இப்போதே டிக்கட் பார்க்கணும்.

மனைவுக்கு இங்கு இரண்டு வருடம் ப்ராஜக்ட். எனக்கும் அதுவரை டைம். பார்ப்போம், ஏப்ரிலில் எச் ஒன்று பி விசா அப்பளை செய்து, அக்டோபர் ஒன்று ஸ்டார்ட் டேட்டில். எகனாமி பிக்கப் ஆகிவிட்டது என்கிறார்கள். நன்றாக இருந்தால் சரி.

சென்ற வருடம் ஐ.டி. கணக்கு இங்கு சுமணா பையில் செய்ய வேண்டும். மூன்று மாதம் ( சுமார் ) 7 ஆயிரத்து இருநூறு டாலர் டேக்ஸ் கட் பண்ணி, டேக்ஸ் மூன்றாயிரம் என டபிள்யு 2 சொல்லுது ... என நிறைய டேக்ஸ் கட்டாகியுள்ளது. எல்லாம் திரும்பி வருமாம். இருவர் டேக்ஸ் ஐ.டி. போட்டு அனுப்பனும். :-) எல்லாம் புதுசா இருக்குங்க. ( மட்டமான சம்பளங்க டாடா கம்பெனி கொடுப்பது ... பாரீன் என்று வாயை தொறந்தது போட்டு மக்கள் இங்கே கம்மி சம்பளத்திற்கு வருவதால் அவர்கள் இப்படி லாபம் செய்கிறார்கள்... அப்புறம் சம்பளம் இந்தியாவில் தனி ஆயிரம் டாலருன்னு வையுங்க... ஆக மொத்தம் வருடம் அறுபதாயிரம் என்று கணக்கு வேறு!)- அவ்வளவு தான் வாங்கிக்கொண்டு எப்படிங்க இங்கே குடும்பத்தோட இருக்கிறது - ஆண்கள் ஹவுஸ் ஒய்ப்போடு, குழந்தைகளோடு? வாடகையோடு மாசம் ரெண்டு பேருக்கு இரண்டாயிரம் வேண்டும். அதனால் தான் இரண்டு வருடம் மேல் ஒரு ட்ரிப் வராங்க... )

மாதம் டேக்ஸ் போக ( பிக்கா, மெடிகேர், பெடரல், ஸ்டேட் டேக்ஸ் ) எனக்கு ஐந்தாயிரம் டாலர்கள் சம்பள செக் வருது. ஆயிரம் தான் கட். மொத்தம் கட் பண்ண வேண்டிய டேக்ஸ் கட்டே பண்ணலே... எங்கேயோ மிஸ்டேக் இருக்கு. இந்தியாவில் வேறு சம்பளம் உண்டு. கரக்டா இங்கே கட்டனும். இந்தியாவில் யோசிப்போமா?

சம்பளம் பற்றி சொன்னோம். கேட்டுக்கொண்டார். (அவர் வந்தவுடன் என்னிடம் நான்காயிரம் டாலர் கொடுத்து பேங்கில் போட்டு வைக்க சொன்னார் - செலவுக்குஆகும்! நல்ல மாமா ... )

இப்படி எல்லாம் டாலரில் பணம் பார்த்தால் இந்திய வருவது கஷ்டம் என்கிறார் மாமா. அவுரு தான் ரவுஸ்பாண்டி!

( சாரி ரொம்ப நாள் தமிழ் டைப் பண்ணலே ...அது தான்... வெட்டி டைம் )