Sunday, December 27, 2009

சுமனாவும் நானும்

எங்கள் கல்யாண அனுபவம் விசித்ரமானது! சுமனா தான் அக்டோபர் முதல் வாரத்தில் கோவில் மண்டபத்தில் நான் கைபிடித்த பெண். எனக்கு கல்யாண விசயத்தில் மனதளவில் தையிரியம் வரவைத்து அடுத்த அடி எடுக்க உதவிய திவ்யா அவர்களுக்கு நன்றி.

இந்த மாத கடைசியில் அவருக்கு ஒரு செல்லகுட்டி வரபோகிறார்! அட்வான்ஸ் வாழ்த்துக்கள். கிறிஸ்தமஸ் அன்று அவர்களை சென்று பார்த்தோம். ஒரு நாள் முன் வளைகாப்பு நடந்தது. அழைத்திருந்தார், வேலை காரணமாக செல்ல முடியவில்லை. அம்மா, அப்பா, தங்கை குடும்பம் என கோவை தமிழில் இன்றும் பேசும் குடும்பம்...

அவர் ப்ளாகில் வாழ்த்துக்கள் மற்றும் வளைகாப்பு என்ற போஸ்டில் எங்களை பற்றி எழுதியதால், நிறைய பேர் எனக்கு மெயில் / கமன்ட் போட்டார்கள்....

சில விட்டுப்போன விவரங்கள்...

என் கல்யாண நிகழ்வு பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.

தேர்தல் திருவிழாவும், பெண் பார்க்கும் படலமும்
கல்யாணம் கட்சேரி லன்ச் டேட்
மீண்டும் சுமனா

அக்டோபரில் கல்யாணம் முடித்த கையேடு சென்னை சென்று எல் 2 விசா வாங்கி சுமனாவோடு அமெரிக்கா சென்றேன். அங்கு சென்று எம்ப்லோய்மென்ட் கார்ட் வாங்க சிலை வேலைகள் ( பாஸின் தம்பி கம்பெனி ) முடித்துவிட்டு, அப்படியே எங்க நியூ யார்க் ப்ராஜக்ட் விஷயம் பார்த்துவிட்டு இந்திய வந்தேன். அதன் பிறகு இரண்டு முறை இந்தியா சென்று வந்தாகிவிட்டது. இன்னும் பத்து மாதங்கள் இங்கே வேலை இருக்கணும். சிலை சமயம் பெங்களூரு சென்று வர வேண்டும். சுமனாவிர்க்கு ஒரு வருடத்திற்கு மேல் இங்கு இருக்க வாய்ப்பு கிடைத்தால் நல்லது. எதற்கும் நான் அடுத்த அக்டோபர் எச். 1 விசா செய்துகொள்ள வேண்டும்! உதவி எதிர்பார்க்கிறேன்.

மேலும், இங்கு நன்றாக பனியில் ( ஸ்னோ ) அனுபவம் புதுமையாக உள்ளது. நியூ யார்க்கில் வேலை இருந்தாலும், சுமனா வேலையில் இருக்கும் பிரின்ஸ்டன் அருகில் தான் வீடு. ( மடாவன் ஏரியா ). டாக்சிக்கு அதிகம் செலவாகிறது.. சில சமயம் ரைடு கிடைக்கும்! தினமும் நியூ யார்க் ட்ரெயினில் சென்று வந்த வாழ்க்கை... அது ஒரு தனி கதை. நாங்கள் இருக்கும் ஏரியாவில், வாடகை குறைவு. இந்தியர்கள், இந்திய மற்றவர்களை பார்த்தால் முகம் திருப்பிக்கொண்டு செல்கிறார்கள்... இதுவரை பழகாத எந்த இந்தியரும் உதவி என்று ஒன்றும் செய்ததில்லை. அவர்களுக்கு என்ன பயமோ, அவர்கள் வேலையை இவர் எடுத்துக்கொண்டால்? அப்படியா? வெள்ளைத்தோல் தனி இனம், உதவி என்று வரும் போது!

இங்கு ( நியூ ஜெர்சி ) இன்னும் டிரைவிங் லைசன்ஸ் எடுக்கவில்லை. ட்ரெயினிங் சில கிளாஸ்கள் சென்றோம். ஒரு மாதத்தில் லைசன்ஸ் எடுக்க வேண்டும்... இண்டர்நேசனல் பர்மிட்டோடு வாடகை கார் கொடுக்கிறார்கள். சுமனாவும் நானும் இங்கு பழகுகிறோம்... ஸ்னோவில் ஓட்ட தெரியாது... அதனால் ட்ரெயின் மற்றும் பஸ் மூலம் ஊர் சுற்ற வேண்டும். நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள், தம்பி டெக்சாஸ் பியான்சே உட்பட. ( அவர் நவம்பரில் இந்தியா சென்று தம்பியை பார்த்து வந்துள்ளார்... கே விசா வாங்கிக்கொண்டு, அம்மாவிற்கு விசிட்டர் விசாவோடு வாங்கி இங்கு வர முயற்சி எடுக்கிறாங்க. ஜூலையில் கல்யாணம் இருக்கும். ஆந்திராவில் இருந்து சொந்தங்கள் வர வேண்டுமாம்... )

அடுத்த வாரம் முழுதும் லீவு தான். பிட்ஸ்பர்க் கோவில் வரும் வழியில் அப்படியே வாஷிங்க்டன் டிசியில் சுமனாவின் நண்பர் வீட்டில் தங்கிவிட்டு திரும்ப எண்ணம்.

***

சிலை லட்சங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய சிலரை அணுக எண்ணம். இல்லாவிட்டால், பெங்களூரு பிளாட்டிற்கு அட்வான்சாக பணம் கட்ட வேண்டும். வட்டியாவது குறையும். எப்படியும் பெங்களூரில் தான் செட்டில் ஆகும் எண்ணம்.

***

அவதார் இங்கே பார்த்தோம்! நல்ல டிஜிடல் 3 D படம்.

1 comment:

  1. //இந்தியர்கள், இந்திய மற்றவர்களை பார்த்தால் முகம் திருப்பிக்கொண்டு செல்கிறார்கள்... இதுவரை பழகாத எந்த இந்தியரும் உதவி என்று ஒன்றும் செய்ததில்லை. அவர்களுக்கு என்ன பயமோ, அவர்கள் வேலையை இவர் எடுத்துக்கொண்டால்? //

    Ever heard of Amway?

    ReplyDelete