Monday, December 14, 2009

காஸ்பல் ஆப் ஜான்

நல்ல பதிவு. இதை படியுங்கள்...

சர்ப்ரைஸ் சந்திப்புகள் – 3 மா. வே. சிவகுமார் என்ற எழுத்தாளரின் வாழ்க்கை பற்றியது.

பிரபலம், ஜால்ரா இவை தான தமிழனின் தலை எழுத்து.

தனி மனித ஒழுக்கமும் சில சமயம் காலை வாரி விடும். சிலருக்கு சிகரெட் வாசம் பிடிக்காது... எங்கப்பா டி.எஸ்.பி யாக இருந்த சமயம், சிகரெட் வாசத்தோடு யாரவது வந்தால், அவர் முகம் கோணலாகி, வந்தவர் காரியம் நடக்காது!

அட்ஜஸ்ட் செய்து அனுசரித்து போகாமல் வாழ்க்கை கிடையாது.

அவர் எழுத்துக்கள் படிக்க ( ஆன்லைனில் ) என்ன வழி? பணம் கொடுத்து வாங்கும் ஈ-புக் வசதி உண்டா?

அவர் தம் குழந்தைகளுக்கு ஆற்ற வேண்டிய கட்டாய சேவைகளை செய்து முடித்த திருப்தி அவர் கடிதத்தில் தென்படுகிறது!

***

காஸ்பல் ஆப் ஜான் - நான் படித்த பள்ளியில் கொடுத்தது இன்னும் நினைவில் உள்ளது... ( ஜான் 3:36 )

ஜான் சொல்லுகிறார் - ஜீசஸ் என்ற மாமனிதரை கடவுளின் மகனாக நினைத்து அவரிடம் வரம் கேளுங்கள். அந்த நம்பிக்கைக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

அதை நமது வாழ்க்கைக்கு ஒப்பிட்டு பார்த்தால், ஒன்றிபோய் என்ன காரியம் செய்தாலும் வெற்றி நிச்சயம் என்ற ஆயுதம் கையில் இருப்பது புலன்படும்.

1 comment: