Sunday, December 13, 2009

அப்பா அம்மாவை பார்த்துக்கொள்வது எப்படி?

அப்பா அம்மாவை பார்த்துக்கொள்வது எப்படி? சில பாயிண்டுகள் இங்கே, எங்கிருந்தோ சுட்டது.

1. கோவில்களுக்கு அடிக்கடி போய் வருவதால் கிடைக்கும் புண்ணியத்தைவிட பெற்றோர்களின் அந்திம காலங்களில் அவர்களை கண்கலங்காமல் பார்த்துகொள்வதால் பல மடங்கு புண்ணியம் கிடைக்கும்.

2. அப்பாவை புறக்கணித்தால் சொத்து நாசமாகும்.

3. அம்மாவை புறக்கணித்தால் தனக்கும் மனைவிக்கும் தன்னுடைய குழந்தைகளுக்கும் உடல் நலம் சீர் கெடும்.

4. எனவே அவர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்கள் மனம் கோணாமல் அவர்களை கவனிக்க வேண்டும். மருத்துவம் செய்ய வேண்டும். பணிவிடை செய்ய வேண்டும்.

5. இது அனைத்து மகன்களும் தங்கள் அப்பா அம்மாவுக்கு செய்ய வேண்டிய கடமை.

6. அவர்கள் இருக்கும் போது கவனிக்காமல் விட்டு விட்டு அவர்களின் மறைவுக்கு பிறகு அவர்களுக்கு செய்யும் சடங்குகளால் எந்த நன்மையையும் இல்லை.

7. கோவில் குளம் செல்வதாலும் தான தர்மங்கள் செய்வதாலும் எந்த புண்ணியமும் இல்லை.

***

கடைசி காலத்தில் அப்பா ( உயிரோடு இருந்தால் ) அம்மா ( உயிரோடு இருந்தால் ) கவனிப்பதில் யாருக்கும் ஒரு குறையும் இல்லை. சந்தோஷம் தான்...

சரி சரி இந்த கமன்டும் படியுங்கள்...

நீங்கள் கூறுவது அப்பா அம்மா எப்படி குழந்தைகளை நடத்துகிறார்கள் என்பதை பொருத்து. எனக்கு தெரிந்து, பல கோடி சொத்து உள்ள பெற்றோர், ரிடயார்ட் காலத்தை டிரைவர் வைத்துக்கொண்டு ஊர் ஊராக சுற்றுகிறார்கள். இரண்டு மகள்களுக்கு வெறும் இருபத்தைந்து பவுன் நகை போட்டு ( ஸ்டேடஸ் அளவு ) சாதாரண ஏழை கூலி தொழிலாளியின் மகன்களுக்கு கட்டி கொடுத்துள்ளனர். அவர்கள் இருவரும், கொல்லி போடத்தான் வருவேன் என்று சொல்லி சொந்த உழைப்பில் நன்றாக தான் இருக்கிறார்கள். இதற்கும் அவர்கள் இருவருக்கும் அண்ணன் தம்பி இல்லை.

2 comments:

  1. Missed this?

    தன சொந்த மகனையே கட்டுக்கள் வைக்காத அம்மா பகவான் மற்றவர்களுக்கு அருளுரை வழங்குவது எதற்கு? இதற்கும் பஞ்சாயத்து பண்ண அந்தோணி ராபின்ஸ் வந்து செல்ல வேண்டிஇருந்தது.

    ReplyDelete
  2. reg." சரி சரி இந்த கமன்டும் படியுங்கள்."
    Indiala US style pola...

    ReplyDelete