என்ன இருந்தாலும் வாழும் ஊருக்கு திரும்பி வந்தால் ஒரு தனி திருப்தி தான். நாம் படுக்கும் படுக்கை, ஒரே இடத்தில் வைக்கும் வைக்கும் சாமான்கள், சாப்பிடும் விதம், ஹோட்டல் என...
ரம்ஜான் அன்று இந்திய திரும்பியுள்ளேன்... பிரியாணி சாப்பிடும் பாக்கியம், ப்ளைட்டில் தான்!
லுப்தான்ஸாவில் ( சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ) ப்ரேன்க்பர்ட் வரை... பிறகு அங்கிருந்து பிசினஸ் க்ளாசில் பெங்களூரு. அருமை. அப்க்ரேட்.
சாகலேட்ஸ் தவிர வேறு ஒன்றும் வாங்கவில்லை. ஒரே ஒரு டிஜிடல் காமிரா தம்பிக்கு! வெள்ளி இரவு கிளம்பி சனிக்கிழமை தான் ஊரில். அடுத்த திங்கள் ஊரில், மதுரைக்கும் செல்ல வேண்டும். விஜயதசமி. அக்கா மகள் ஸ்கூலுக்கு சேர்கிறார்கள்!
என்ன நடு இரவில் இறங்கினால்... கஷ்டம் தான். பாஸும் நானும் ஒரே டேக்ஸியில் வீடு வரை பயணம். ரூம் மேட சரவணன், நான் கதவை தட்டியதும், அரை தூக்கத்தில் அதிகாலை இரண்டு மணிக்கு கதவை திறந்தான்...
***
படுத்து தூங்கி பத்து மணிக்கு எழுந்து குளித்து ரெடியாகி, உடுப்பி கார்டனில் டிப்பன் சாப்பிட்டு, ஊருக்கு சில போன் கால் முடித்துவிட்டு...
ஆபிஸ் போய், ப்ராஜக்ட் விசயம் எல்லாம் பார்த்துவிட்டு...
இப்போ லன்ச் டைம் ஆக போகுது! அரை தூக்கம் கண்ணை கலக்குது.... மதியம், சாப்பிட்டு தூங்கிவிட்டு சாயந்திரம் ஐந்து மணிக்கு வர வேண்டும். நியூ யார்க் கால் உண்டு! ( மாயா )
***
நிறைய நியூ யார்க் விஷயம் எழுத வேண்டும். பிறகு!
Excellent. Keep up the good work
ReplyDelete