Sunday, August 2, 2009

வரும் மழையில்

பன்றி காய்ச்சல் என்பதை யாரும் டெஸ்ட் பண்ணுவதில்லை பெங்களூரு ஏர்போர்ட்டில் . கொடுமை. நாற்பத்தைந்து நாட்கள் கடந்தும், ஒன்றும் கண்டுக்கொள்வதில்லை? ஒரு பாரம் மட்டும் பில் செய்கிறார்கள். யாரவது, சளி, காய்ச்சல் இருந்தால், செக் செய்ய ஒரு ஒரு டாக்டர் இருக்கிறார்.

நேற்று அதிகாலை தான் ஏன் கம்பெனி நண்பர் ரவியோடு வேலை செய்ய இன்னொருவர் வந்தார். அவருக்கு எல்லாம் ஏற்பாடு செய்து வைத்திருந்தேன். உடனே நான் புறப்பட்டேன்.

இன்று காலை தான் வந்து இறங்கினேன். மும்பையில் சில மணி நேரம். மலை தூவானம்! கச்டம்சில் அள்ளுகிறார்கள். லஞ்சமாய் கொட்டுது. சாப்ட்வேர் ஆள் என்று எழுதி ஒட்டியிருக்கும் போல, கேவலமாக பார்கிறார்கள்!

தம்பியும் அம்மாவும் ரூமில் வந்து இருந்தார்கள். பத்து மணிக்கு வீட்டில் அம்மா கையால் உப்புமா. அமிர்தம்! :-)

சரவணனுக்கு வாயெல்லாம் பல். சில பல சீக்ரட் கிப்ட் அவனுக்கு. ( ரூம் மேட் ). டிஜிடல் கேமரா கொஞ்சம் கம்மி விலையில் ( 80 யுரோ ) கிடைத்தது. 10 எம்.பி. 4 GB ஸ்கேன் டிஸ்க் உட்பட. நல்ல விலை தான்! ( இங்கே எழாயிரம்! )

ஆம்ஸ்தெர்டெம்ல் நல்ல பல சாக்லேட்ஸ் கிடைத்தது. நாளை அலுவலகத்தில் அனைவர் வாயிலும் பாலாக (!) இருக்கும்.

களைப்பில் பேசிக்கொண்டே தூங்கிவிட்டேன், இப்போ தான் எழுப்பினார்கள். சிக்கன் குழம்பு கம கமக்குது!

ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய புத்தகம் கிடைக்கபெற்றேன். இப்போது தூங்கி எழுந்தவுடன் படிக்கிறேன்.

"கல்யாண்ஜியின் முன்னுரையோடு “மழை வரும் பாதையில்..”"

புத்தகம் கிடைக்கும் இடம்: (Rs 70/- MO)

vamsi books
19, T.M.saroan
Thiruvannamalai

***

கல்யாணம் ஏகதேசம் முடிவு செய்த மாதிரி தான். பிறகு எழுதுகிறேன். இந்த ஜோதிடம் அல்பாயுசு செவ்வாய் போன்ற விசயங்களை ஆழ்ந்து பார்க்க வேண்டும். அம்மா நம்புகிறார்கள்!

மன ஒற்றுமை தான் முதலில் வேண்டும். இப்போ பார்த்து வைத்திருக்கும் பெண்ணும் என்னை மாதிரி ஹிந்தி தெரியாதவள். ப்றேஞ்சாவது தெரிந்திருக்கவேண்டும். கீழை நாட்டு பின் நவீனத்துவங்கள் படிக்க வசதி.

நன்றி!

3 comments:

  1. சமீபத்துல கற்றதும் பெற்றதும் படிச்சீங்களா? அதே சாயல்..

    ReplyDelete
  2. Welcome back to India! Happy Friendship Day!

    ReplyDelete
  3. கற்றதும் பெற்றதும்? Always!

    Thanks for the wishes!

    ReplyDelete