Thursday, August 6, 2009

பெங்களூரும் திருவள்ளுவரும்

நான் தமிழ்நாட்டுக்காரன்.

பெங்களூரில் திருவள்ளுவர் சிலை வைப்பது குறித்து மகிழ்ச்சி.

சென்னையில் சர்வஞனா சிலையும் வருகிறது.

இரு மாநில முதல்வர்களும் திறக்கிறார்கள்.

சரி பெங்களூரில், ஏதாவது மொழி பிரச்சனை வேண்டும் என்று திரிந்துக்கொண்டு இருக்கும் வட்டாள் கூட்டம் நினைத்தால் பயம் தான்.

ஊர்வலத்திற்கு தடை போட்டுளார்கள். இருந்தாலும் கலவரம் வரும் அபாயம் இருக்கு.

***

அம்மாவை அழைத்து வந்த தம்பி ஞாயிறு இரவு கிளம்பிவிட்டான். அவனுக்கும் சேட்டிங் செய்த ஒரு பணக்காரி கல்யாணம் செய்துக்கொள்வது பற்றி வருத்தம். இருந்தாலும், டெக்சாசில் இருக்கும் ஒரு பெண்ணோடு, நல்ல பழக்கம் என்கிறான். ஆந்திர பெண்ணாம். ரெகார்ட் செய்த வீடியோ கூட காட்டினான். ஊர் பேர் விலாசம், பொன் நம்பர் எல்லாம் வேறு கொடுத்துள்ளாள். டிடெக்டிவ் ஆள் வைத்து விசாரிக்கலாம்! அவளும் செய்திருப்பாள். எனக்கும் இரண்டு மூன்று முறை, சில பேங்க் கிரெடிட் கார்ட் வேண்டுமா என்று கேட்டு, மொபயிலில் போன் வந்தது. குடும்ப விபரம் எல்லாம் கேட்டார்கள். ஒழுங்காக பதில் சொன்னேன். என் கம்பெனி அட்மின் அக்கவுண்ட் பாஸ்வோர்டு தவிர மற்ற எல்லா விபரம், என் கம்பெனியில் ஷேர் விபரம் உட்பட கூறினேன்! :-) பார்ப்போம்.

***

நண்பர் சரவணோடு நேற்றும் ஒரு பெண், தான் தான் இன்போசிஸ் மூர்த்தியின் மகள் அக்ஷதா என்று சேட்டிங் செய்கிறாளாம்! அவளுக்கு தெரியாது, நிஜ பெண்ணின் கல்யாண நியூஸ். அவளை மடக்க "ஒரு ப்ராப்ளம், சில லட்சங்கள் வேண்டும் என்று கேள்", என்றேன். கேட்டுள்ளான்... அதன் பிறகு சேட்டில் ஆள் காணோமாம்! எஸ்கேப்பு!

திருமண நியூஸ் பேப்பர் லின்க்ஸ் அனுப்ப சொன்னேன். இன்று தெரியும் குட்டு. :-)

***

இன்று காலை எங்கள் கம்பெனியில் இலவசமாக ட்ரெயினி எடுக்கிறோம் என்று சொன்னதற்கு, இரண்டு மூன்று வருட எக்ஸ்பீரியன்ஸ் ஆட்கள் எல்லாம் ( சாப்ட்வேர் தான்! ) வந்திருந்தார்கள் .... என்னை பொருத்த வரை ஒன்றும் தேறவில்லை. இவன் சொந்தம், அவன் சொந்தம், பாஸுக்கு சொந்தம் என ஐந்து ஆட்கள் எடுத்தோம்! இப்படிதாங்க சாப்ட்வேர் கம்பெனிகள் எல்லாம் நடக்குது. :-) அப்புறம் சரியான ட்ரெயினிங் பூட்காம்ப் நடத்தினால் நன்று!

***

நாற்பது லட்சம் அளவில் ஒரு இரண்டு பெட்ரூம் ப்ளேட் வாங்கும் எண்ணம் வந்துள்ளது. அம்மாவிற்கும் அந்த வீடு பிடித்தது, கட்டிமுடிக்கும் தருவாயில் உள்ளது. இன்னும் சில லட்சங்கள் தேவை, அட்வான்ஸ் கொடுக்க. என்ன செய்வது தெரியவில்லை.

***

வெள்ளி மதியம் சேலம் வழியாக ஊருக்கு கிளம்புகிறேன், அம்மாவோடு... இனி அடுத்த செவ்வாய் காலை தான் திரும்புகிறேன். கல்யாணம் நிச்சயம் என்று போகிறது வாழ்க்கை. இன்று வரை நான் ஒரு முடிவும் எடுக்கவில்லை! :-)

1 comment:

  1. என்ன நடக்குது நாட்டிலே?

    ரொம்போ ரொம்போ அருமை ராஜு.

    ReplyDelete