ஜெயா டிவியில் அம்மாவிற்கு பிடித்த நிகழ்ச்சி ஒன்று இருக்கிறது. திங்கள் முதல் வெள்ளி வரை நேருக்கு நேர், மதியம் 12 மணிக்கு.
ஜெயா டிவியில் ”நம்ம” பத்தி..
இன்றைய நிகழ்ச்சியில் ப்ளாக்கர்கள் - ப்ளாக் உலகம் பற்றி திரு கேபிள் சங்கர் அவர்கள், பேசியதை அம்மா கேட்டிருக்கிறார்கள். நல்ல விஷயம் போலிருக்கு என்று சொன்னார்கள்.
வாழ்த்துக்கள்!
*****************
அம்மா இரண்டு வாரங்களாக இங்கு தான் இருக்கிறார். ஜூன் 5, வெள்ளி இரவு வந்தார். அவர் இங்கு இருப்பதால், ஹோட்டல் உணவுக்கு டாடா ...அதனால், நானும் சரவணனும் வீட்டிற்கு மதியம் சாப்பிட டானென்று ஒன்றேகாலுக்கு நிற்போம். இரண்டு மணிக்கு மீண்டும் வேலை... வீடு நடக்கும் தூரம் தான்!
இந்த வெள்ளி இரவு அம்மாவை ஊரில் கொண்டு சென்று விட்டு விட்டு... அப்படியே யுரோப் பயணம். தம்பிக்கு எம்.பி.ஏ பரீட்சை... அம்மா இருந்தால் தான், சைபர் கேபெவை சில மணி நேரம் பார்த்துக்கொள்ள முடியும்!
ஞாயிறு மதுரை வழியாக, சென்னை சென்று, இரவு மும்பையில் தங்கி, திங்கள் விசா வாங்கிக்கொண்டு, அன்றிரவே அம்ஸ்டேர்டேம் பயணம். சில வாரங்கள் அங்கு இருப்பேன். பெங்களூரிலிருந்து ஒரு ப்ராஜக்ட் லீட் கூட வருகிறார், ஞாயிறு மதியம் அவர் கிளம்பி, என்னோடு அவர் ஹோட்டலில் தங்கி இருப்பார்.
இருபது கிலோ எடை தான் லக்கேஜ் எடுத்து செல்ல முடியும். அதனால் எனக்கு பிரச்சனை இல்லை. மும்பையில் ஒரு புது சூட்டு வாங்க வேண்டும். ஐடியா கொடுங்கள். ( பாஸ் ரூ. 5000/- மட்டும் கொடுப்பார் )...
(அந்த இன்சூரன்ஸ் பெய்மன்ட் கேட்வே ப்ராஜக்ட் வேலை, அதனால் தான் தினமும் பதிவுகள் பக்கம் கண்ணில் படவில்லை! )
***************
அம்ஸ்டேர்டேம் பற்றி நிறைய கதைகள் சொல்லி இருக்கிறார்கள். இது தான் முதல் முறை செல்கிறேன். வெஸ்டில் துபாயோடு சரி, ஈஸ்டில் ஆஸ்ட்ரேலியா. இன்னும் லண்டன், யு.எஸ்.ஏ, கேனடா, மற்றும் கிழக்கு அமெரிக்க நாடுகள் பாக்கி.
Raju, நானும் அம்மா என்றவுடன், அந்த "அம்மா" பற்றி என்று நினைத்து விட்டேன். நானும் என்னுடைய இன்றைய ஜெனரல் பதிவில் இந்த நிகழ்ச்சி பற்றி எழுதியுள்ளேன். என்ன இருந்தாலும் ஒரு ப்ளாகர் ஜெயா டிவியில் வருவதை வரவேற்போம்!
ReplyDeleteGood luck for your trip!
nice. he cud hv talked more on copyrights!
ReplyDelete