நான் பத்தாம் வகுப்பு படித்த காலத்தில்... 1992 ஜனவரி, அப்பா சம்மர் லீவில் நேபால் மற்றும் பூடான் அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்தார். ஏப்ரல் மாதம் ப்ளான் செய்தோம்.
அப்போதெல்லாம் பாஸ்போர்ட் வர குறைந்தபட்சம் ஆறு வாரங்கள் ஆகும்! குடும்பத்தில் எல்லோரும் அப்பளை செய்தோம். அப்பா போலீசில் இருந்ததால், நேரடியாக சென்னையில் சென்று சப்மிட் செய்தார். அடிக்கடி வேலை விஷயம் செல்வார்.
என்னிடம் அப்போது பர்த் செர்டிபிகேட் இல்லை. ஸ்கூலில் இருக்கும் ரெகார்ட் தான் கொடுக்க வேண்டும். அப்போது பத்தாம் வகுப்பில், தொடக்கத்தில், ஒரு பாரம் தருவார்கள், உங்கள் பிறந்த தேதி, ஊர் எல்லாம் எழுத வேண்டும். கிறிஸ்துவ பள்ளி. நான் பார்மில் தவறுதலாக, நான் பிறந்த கோவைக்கு பதிலாக, திண்டுக்கல் என எழுதி விட்டேன். அப்போது ஸ்கூல் ரெகார்ட் வாங்கி அப்பா அட்டேச் செய்தார். என் அக்காவும், தம்பியும் திண்டுக்கல்லில் பிறந்ததால், அப்பா பார்மில் சரியாக கவனிக்கவில்லை போல. ( யாரோ ஒரு எஜன்ட் வந்து, எழுதிக்கொடுத்து சென்றார்! )
இப்போது ஒரு நெருக்கடி, நான் வொர்க் பர்மிட்டில் ஹாலந்து சில மாதங்கள் செல்ல ஏற்பாடு நடக்கிறது. அதற்கு சர்டிபிட் பர்த் செர்டிபிகேட் வேண்டும். ஜெர்மன் பி.ஆர். விசாவில் சென்று, ட்ரெயின் மூலம் ஆம்ச்டேர்டாமில் வேலை செய்தால் போதும் என்றார்கள். பட், தவறு... திருட்டுத்தனம்...
கோவையில் நான் பிறந்தது கவர்ன்மன்ட் ஆஸ்பத்திரி. இப்போது கார்பரேசன் மூலம், பெர்த் சர்டிபிகேட் வாங்கலாம் தான். ஆனால், அங்கு நான் பிறந்த விவரம் இல்லை. முப்பத்தி இரண்டு வருடம் முந்தைய சமாசாரம்.... ( என் அக்காவிற்கும், தம்பிக்கும் பர்த் செர்டிபிகேட் இருக்கு! சில காலம் முன் தான வாங்கினார்கள்...)
இப்போது அம்மாவின் நோட்டரி விஷயம் வைத்து, வாங்கலாம் என்று சொல்கிறார்கள். ஒரு மாதம் ஆகுமாம்... ( அதற்குள் செங்கன் பிசினஸ் விசாவில், சில வாரங்கள் நான் சென்று வந்துவிடுவேன். )
அப்போ நான் திண்டுக்கல்லில் பிறந்தவன் என்று தான் தூக்கத்தில் யார் எழுப்பி கேட்டாலும், சொல்ல வேண்டும்!
இந்த மாதிரி நிலைமை யாருக்கும் வந்திருக்காது!
:-))
ReplyDeleteBut why?