Tuesday, October 23, 2012

Chinmayi and Tamil Tweeting

சின்மயி மற்றும் தமிழ் டவீடுலகம் மாறுதலில் உள்ளது .பொறுப்பாக இனி டைப் அடிக்கும்  தமிழ் டிவிடுலகம் .

நானும் சமாதானமாக மக்கள் இருக்கணும் என்றே முன்னொரு போஸ்ட் போட்டேன் ( சின்மயி அம்மா பத்மாசனி அவர்கள் எழுதிய டிவிட்லான்கர்)

ஒருவரை பொதுவில் எழுத்து மூலம் திட்டுவது நாகநீகம் இல்லாத செயல் !

இன்ப்ளுஎன்ஸ் வைத்து சிலரை அரஸ்ட் செய்ய வைப்பது ( அதுவும் இரண்டு அரசாங்க ஊழியர்களாம்  - அதுவும் ஒருவர் திருப்பூரில் கலக்டரை நன்கு அறிந்தவர் ஆளும் கட்சியின் அதிகார பலம் உள்ளவர், மற்றவர் பெரிய அதிகார கும்பலை அறிந்து வைத்துள்ளவர்  - இணையம் மூலம் அறிந்தது  )   அநியாயம். அம்மா ஆட்சியில் எதுவும் நடக்கும்

அப்புறம் மற்றவர்கள் எல்லாம் யார்? இரண்டு மூன்று யு.எஸ் ஆட்களையும் தடவுயல் நிபுணர்கள் கண்டுபிடிக்கணும் ஆண்டவரே

குஷ்பூவை கிள்ளிய ஆட்களை கண்டுபிடிக்கத போலீஸ்காரர் ஆட்கள் பாவம் எழுத்து தடுக்கி பயில்வான்களை அரஸ்ட் பண்ணி என்ன ஆக போகுது

நான் யாரையும் சப்போர்ட் பண்ணலே . நோட் தா பயின்ட்  ஒபாமா !

கஷ்டகாலம், எங்கப்பன் (போலீஸ்கார் தான் ) இப்போ இல்லே ... ஹி ஹி இன்ப்ளுயன்ஸ் ரொம்ப கீது. யுஎஸ் சிடிசன்ஷிப் சீக்கிரம் வருது .

மறப்போம் மன்னிப்போம் என்பதே உலக நியதி . சின்மயி அம்மா மாறுபட  மாட்டீர்கள்  அல்லவா

எந்த ஜாதியாக மதமாக இருந்தாலும் இது தான் போதனை செய்யப்படுது

வாழ்க வளமுடன்.

பின்குறிப்பு : இது என்னை கவர்ந்த டிவிட்லான்கர்(கள்) !  நன்றி தோட்டாஜி!

ஆல்தோட்டபூபதி (@)

Posted Monday 22nd October 2012 from Twitlonger

ஹாசினி அம்மா, தங்கள் கவனம் தந்தததுக்கு நன்றிகள். ஒரு தாயின் மன நிலையில் இந்த இக்கட்டான நிலைமையை புரிந்து கொண்ட உங்கள் நல்லுள்ளத்திற்கு நன்றி. ரேவதி போன்ற ஒரு புத்திசாலி பெண்ணையும் காண முடியாது. நான் கண்ட வரை பரிசல் அவர்களை போல நாகரீகமானவர் இல்லை, பின்பொரு நாள் எல்லாம் விளங்கும். அவர் பிரச்சனைகளை தீர்க்க அலுவல்களுக்கு இடையே போராடியது நான் நன்கறிவேன். உங்களின் நல்ல உள்ளத்திற்கு மிக்க நன்றிகள். இனி எல்லாம் நன்மையில் நடக்கட்டும். அன்பிற்கும் புரிந்துகொண்டமைக்கும் பெருந்தன்மைக்கும் நன்றிகள். தக்க உதவிகள் செய்யும் ரமேஷ் சாருக்கும் நன்றிகள்.

ஆல்தோட்டபூபதி (@)

Posted Monday 22nd October 2012 from Twitlonger
சகோதரி சின்மயி அவர்களுக்கு வணக்கங்கள். உங்களுக்கு என்னை தெரியுமா என தெரியவில்லை. இதுவரை உங்களுடன் பேசியதில்லை, அதனால் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உங்கள் குரலின் இனிமையை ரசிக்கும் ஒரு கடைக்கோடி ரசிகனால் வைக்கப்படும் ஒரு வேண்டுகோளாய் நினைத்து வாசியுங்கள். இந்தச் சமுதாயத்தால் வளர்ச்சி பெற்று வரும் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னால் இயன்ற அளவு சமுதாயம் வளரவும் பங்களிப்பு தரவேண்டும் என்ற நம்பிக்கை உடைய நீங்கள், வெறும் ஒரு தனி மனிதனின் குடும்பத்திற்காகவும் அந்த பச்சிளம் குழந்தையின் புன்சிரிப்புக்காகவும் தயவு கூர்ந்து பெரிய மனதுடனும், பெருந்தன்மையுடனும் அவர்களை மன்னித்தருள வேண்டுகிறேன். ஒரு அன்பான தாயாரால் வளர்க்கப்பட்டு, வார்த்தைக்கு வார்த்தை அவரின் அன்பையும் அரவணைப்பையும் பற்றி புகழ்ந்து சந்தோஷப்படும் ஒரு மகளான உங்களுக்கு நிச்சயம் இந்த பச்சிளம் பெண் குழந்தையின் பரிதவிப்பு புரியும் என நம்புகிறேன். ஒரு விளையாட்டில் ஜெயித்த நான்கு லட்ச ரூபாயை குழந்தைகள் நல அமைப்பிற்கு நன்கொடையாக கொடுக்குமளவு நல்ல நெஞ்சம் இருக்கும் உங்களால் நிச்சயம் இன்னமும் ஒரு பிறந்தநாள் கூட கொண்டாடாத இந்த குழந்தைக்காக ( http://t.co/P7rSUEiT , http://t.co/NH27qc77 , http://t.co/RmhzARw2) மிக மிக பெருந்தன்மையும் நீங்கள் வளர்ந்த உயர்ந்த முறையையும் காட்டி மன்னிதருளலாம். இது போல ஒவ்வொருவர் வீட்டிலும் இன்னமும் உலகத்தை அறியா குழந்தைகள் இருக்கலாம், வயதானவர்களும் இருக்கலாம். ஒருவரின் செயலுக்காக எல்லோரும் பாதிக்கப்பட வேண்டுமா என கொஞ்சமே கொஞ்சம் யோசியுங்கள்.

உங்களின் வார்த்தைகளின் மூலம், உங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் மன உளைச்சலும், பெரும் மன வருத்தமும், இறுக்கமும், கால விரயமும் புரிந்துக்கொள்ள கூடியது. உண்மையில் ஒரு சக மனிதனாக அதற்கு வெட்கமும் வேதனையும் படுகிறேன். நிச்சயமாய் அது மறக்க கூடியது இல்லை, ஆனால் உங்களை போன்ற பெருந்தன்மையான ஆளுமைகளுக்கு அது மன்னிக்க கூடியது தான். புகாரின் பேரில் இருக்கும் அந்த ஐந்து / ஆறு நபர்ககள் செய்ததை நியாயப்படுத்த நான் இதனை எழுதவில்லை. அதில் எந்நாளும் எனக்கு உடன்பாடும் கிடையாது. அதில் சிலருடன் (இருவர்) பழகி இருப்பதாலும் இதனை எழுதவில்லை. ஏன், உங்களின் மனதை புண்படுத்தியதற்கு பொதுவிடத்தில் மன்னிப்பு கேட்கவும் வைக்க கூட எனக்கு தோன்றுகிறது.ஏன், ஒரு ஆணாக நானே கூட கேட்கலாம்.

நான் இந்த வேண்டுகோளை வைப்பதற்கும் எழுதுவதற்கும் காரணம், நானும் ஒரு ஒன்னரை வயது பெண் குழந்தையின் தகப்பன் என்பதால், ஒரு குழந்தையின் தேடலும் ஆசையும் விளையாட்டும் புன்சிரிப்பும் தவிப்பும் எப்படி இருக்கும் எதை நோக்கி இருக்கும் என்று அறிந்த ஒரு சக சகோதரனாய் தான் இந்த வேண்டுகோளை வைக்கிறேன். இந்த வேண்டுகோளை பரிசீலிக்கவும், நிராகரிக்கவும், பதில் அளிக்காமல் விடவும் உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் உங்களின் பெருந்தன்மையால் அவர்களை மன்னித்தால், அது அவர்களை மட்டும் மன்னித்தது இன்றி, அவர்களின் குடும்பத்தையும் காப்பாற்றிய அழியா புகழ் உங்களை வந்து சேரும். இரண்டு நிமிடம் மட்டும் என் வேண்டுகோளுக்கு ஒதுக்கி, நல்ல முடிவை எடுங்கள். உங்களை போன்ற படித்தவர்களுக்கு நிச்சயமாய் தெரிந்திருக்கும் ' இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண / நன்னயஞ் செய்து விடல்'

( இந்த வேண்டுகோளை பற்றி விவாதிக்கவோ, பெரிது படுத்தவோ நான் விரும்பவில்லை. ஏனினில் இது முழுக்க முழுக்க உங்கள் விருப்பத்தையும் உரிமையையும் சார்ந்தது.மீண்டும் சொல்கிறேன், இந்த வேண்டுகோளை பரிசீலிக்கவும், நிராகரிக்கவும், பதில் அளிக்காமல் விடவும் உங்களுக்கு உரிமை உண்டு. இதனை உங்கள் இருவரை ( / ) தவிர யாருடனும் பேசவும் விவாதிக்கவும் நானும் விரும்பவில்லை )

PS : Please dont think that am negotiating with sentiment(s), am just writing this by considering and believing you as a real peace lover. And importantly, am requesting you and not forcing you ;) Blesses and wishes ;)

No comments:

Post a Comment