நண்பர் ஒருவரிடம் இருந்து வந்த கட்டுரை இது. நான் எழுதியது அல்ல.
அதை அப்படியே தருகிறேன்!
***
இது நெட்டில் சுட்ட கட்டுரை. மதத்தின் பெயரை சென்சார் செய்துவிட்டேன். ஒருவரின் மதத்தின் விடுதலை புரட்சி இன்னொருவருக்கு தீவிரவாதம்!
எழுதியவர் பெயர் வேண்டாமே? அவருக்கு மிக்க நன்றி. அவர் வலைதளத்தின் மிரட்டலுக்கு பயந்து கட்டுரையை எடுத்து விட்டாராம்.
என் சொந்த கருத்துகளையும் சில இடங்களில் இடைச்செருகல் செய்துள்ளேன். எனக்கும் பயமாக தான் இருக்கு. வாழ்க வளமுடன்
***
ஒருவர் யூ டியூப் மட்டும் பார்த்தால்போதும், அந்த மதத்தின் பெயரால் நிகழும் கொடூரங்களை ஆயிரக்கணக்காகப் பார்க்கமுடியும்.
மத புத்தக வரிகள் பின்னணியில் ஒலிக்க கழுத்தை அறுக்கும் காட்சிகள். அவை எதிரிகளால் உருவாக்கப்பட்டவை அல்ல. மதந்ம்பிக்கைக்காக உயிரையும் விடத்துணிபவர்கள் எடுத்து வெளியிடும் உண்மைக்காட்சிகள்!
அது வன்முறை மதம் என்றும் தீவிரவாத மனநிலை கொண்டவர்கள் என்றும் பிறர் அஞ்சச்செய்யும் காட்சிகள் அவையே. பிரச்சாரங்களோ சினிமாக்களோ அந்த எண்ணத்தை உருவாக்கிவிடமுடியாது.
எல்லா மதங்களும், எல்லா கொள்கைகளும், எல்லா பற்றுகளும் வெறியாக மாறும்போது கொலைக்குத்துணிகின்றன. விதிவிலக்கு என்றால் சமண மதம் ஒன்றை மட்டுமே சொல்லவேண்டும் (மஹாவீராய நமஹ, புத்தம் சரணம் கச்சாமி).
ஆனால் இன்னொரு மதத்தின் வேத புத்தக வாசகம் ஒலிக்க ஒருவரின் கழுத்தை அறுக்கும் காட்சியை நாம் காணமுடியாது.
அப்படியென்றால் பிரச்சினை எங்கே இருக்கிறது? நடுநிலை கொண்ட எந்த மதத்தவரும் எளிதில் ஊகித்துவிடக்கூடியதுதான். அந்த மதத்தை தீவிரவாதவெறிக்கு கருவியாக்குபவர்களே அதை செய்கிறார்கள். அதற்கு பிறரை பழி சொல்வதில் பொருளே இல்லை.
அந்த வகை தீவிரவாதத்தை கண்டிப்பதும், அதிலிருந்து தங்கள் ஆன்மீகத்தை பாதுகாத்துக்கொள்வதுமே எந்த மதத்தைச்சேர்ந்தவருக்கும் சவாலாக இருக்கமுடியும். ( பிழை இருந்தால் மன்னியுங்கள் )
ஆனால் அந்த மத அமைப்புகள் அந்த தீவிரவாதத்துக்கு எதிராக குரலை எழுப்புவதில்லை. ஆனால் அவர்கள் ஒருங்கிணைப்பு எல்லோரையும் மிகவும் ஆசிரியப்படுதுகிறது அதற்கு பிறர் நன்றி சொல்லவேண்டும் அந்த பாடம் படிப்பதற்காக!
ஒருவனே தேவன். ஒரே குலம், இது தான் அந்த மதத்தின் கோட்பாடு. இதே மாதிரி பல மதங்களும் அதீச்டுகள் ரேசனளிச்டுகள் போன்றோர் இருக்கிறார்கள். உலகில் ஒரு சதவிகிதம் இருப்பார்களா?
ஆனால் அந்த மதத்தில் பிரிவுகள் பல உண்டு என்று விக்கிபீடியா மூலம் அறிகிறேன்.
அவர்களின் அடிப்படைவாத நோக்கு ஆன்மீகத்தை ஒரு பொருட்டாக நினைப்பதே இல்லை. மாறாக அவர்கள் தங்களை வேட்டையாடப்படுபவர்களாக கற்பனைசெய்துகொள்கிறார்கள். என்ன விதத்தில் இது நியாயம்?
அமெரிக்கர்கள் எண்ணெய் / கனிம வளம் இருக்கும் இடத்தில பொய்கள் கூறி ஆக்கிரமிப்பு செய்கிறார்கள். ஒரு நாட்டின் தலைவரையும் தூக்கில் இட்டார்கள். யார் இருகிறார்கள் கேட்க அவர்கள் கையில் அணுகுண்டு இருக்கே! அமெரிக்கர்கள் மாதிரி ஒரு பயங்கரவாத நாடு எங்கும் இருக்க முடியாது எவன் கையிலும் துப்பாக்கி சிறு குழந்தைகள் சின்னாபின்னமாக சுட்டு கொள்கிறான் ஒருவன். வேலையை விட்டு தூக்கினால் வீட்டிலிருந்தோ, வெளியில் இரவல் வாங்கியோ வந்து பயர் செய்த ஆபிசரை சுடுகிறான். அதற்கு தான் வேலைகளை மாடு மாதிரி உழைக்கும் இந்திய , சீன, ஆசிய சமுதாயத்திற்கு அவுட்சோர்சிங் என்ற முறையில் அனுப்புகிறார்கள். டாலருக்காக நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு ( மன்னியுங்கள் மீண்டும் ஒரு முறை ) எட்டு மணி நேர வேலைக்கு பதினாறு மணி நேரம் உழைக்கிறார்கள். இதற்கும் அந்த நாட்டில் 1776 தொடங்கி 2008 இல் தான் வேறு நிறத்தவர், அடிமைகளாக இருந்த சமூகத்தை சேர்ந்தவர் (மேலே எழும்பி விட்டார்கள் என்று ஒரு குறியீடாக) ஜனாதிபதி ஆகிறார்!
தொடர்ச்சியாக, அதைக்கொண்டு தங்களுடைய எல்லாவகையான குரூரங்களையும் நியாயப்படுத்திக் கொள்கிறார்கள்.தொடர்ந்து எதிரிகளைக் கண்டுபிடிக்கிறார்கள். அவர்களுக்கெதிராக கொந்தளிக்கிறார்கள்.
அந்த மதத்தின் அமைப்புகளின் தலைவர்கள் தொடர்ந்து தங்கள் சமூகத்திற்கு ஒரு ஃபோபியாவை உருவாக்கியளித்துக்கொண்டிருக்கி
கென்னடி சொன்னதது போல பியர் ஆப் தி பியர்! (பயத்திற்கான பயம்) அவர்களை வழி நடத்துகிறது. 2001 முதல் உலகெங்கும் பிறருக்கு மிகுந்த வலி. சிறு தீவு நாடுகளின் அமைப்புகள், மத சார்பு இல்லாதவர்களை அந்த நாட்டவர்களே அழித்துவிட்டனர். அமைதி வழி எங்கே இருக்கு? காந்தியம் என்பது கேட்ட இங்கிலாந்து ஆட்சியாளர்களை இப்போது பார்க்க முடியாது. அவர்களே பாக்லாண்டு தீவை கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்
அந்த மாதிரி உலக அரசியலின் ஆளுமையின் விளைவே கமல்ஹாசனின் சினிமா விஸ்வரூபத்துக்கு எதிரான சில அமைப்புகளின் போராட்டம். இது லோகல் அரசியல் அல்ல. ஆளும் கட்சியின் சூழ்ச்சி என்கிறார்கள் சிலர். இருக்கவே முடியாது. அவர்களுக்கு ஒருவரின் படத்தை தடை செய்வது தான் வேலையா?
விஸ்வரூபம் அதன் இப்போதுள்ள வகையில் உலக தீவிரவாதத்துக்கு எதிரான படம் என்பதில் ஐயமில்லை. ஆனால் அது கொள்கைவிளக்கப்படம் அல்ல. சாதாரண சண்டை சாகசப்படம். அத்தகைய படங்களுக்கு உலகளாவியப் பொது எதிரி தேவை என்பதனால் தீவிரவாதம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அப்படி தான் தமிழ் படங்களில் உள்ள ரவுடிகள், அரசியல்வாதிகள், காற்பறேட்டுகள் எதிரிகளாக சித்தரிக்கப்ப்படுகிரார்கள்.
ஏன் என்றால் இந்தியாவிலும் , விஸ்வரூபம் திரையிடப்படும் பல நாடுகளிலும் சென்ற காலங்களில் தீவிரவாத அமைப்புகள் நேரடியான தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன. ஆகவே மக்களுக்கு அவ்வமைப்பைப்பற்றி தெரியும். ஜேம்ஸ்பான்ட் படங்களைப்போல வேறு அதிநவீன எதிரிகளை இங்கே முன்வைக்கமுடியாது.ஜனங்களுக்கு
[எதனால் தீவிரவாதம் என்று சொல்கிறேன் என்றால் அந்த தீவிரவாதிகள் அப்படி தங்களை அடையாளப்படுத்திக்கொள்வதனால்தா
நிறம் அல்லது மறைமுக குறியீடாக ஒரு ஜாதி (தமிழ் படங்கள்) அல்லது அதைப்போல தனியடையாளம் கொண்ட ஒரு சாராரையோ எதிரிகளாக காட்டும் வணிகப்படங்கள் வழக்கமாக அந்த தனியடையாளம் கொண்டவர்களில் ஒருவரையே நாயகனாகவோ துணைநாயகனாகவோ வைப்பது வழக்கம்.
அந்த மதத்தின் சேர்ந்தோர் சில கொடுமைக்கூடமைப்புகள் (உதவுபவர் ஒரு இந்திய வம்சாவளியினன் - பெயர் வேறு மதத்தை குறிபிடுகிறது - சூட்கேஸ் ந்யுக்ளியர் பாம் செய்து கொடுக்கிறான்) எதிரிகளாக காட்டும் விஸ்வரூபம் அவற்றை எதிர்த்துப்போராடும் நாயகனையும் அதே மதத்தவனாக காட்டுகிறது. அதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.
அதாவது அவர்கள் மொத்தமாக தீவிரவாதிகள் அல்ல, வெகு சிலரே தீவிரவாதிகள்... ஆக இருக்கக்கூடும் , நல்ல ஆள் அந்த மதத்தவனாக இருந்தாலும் , இந்த கதை மூலம், அவர்களை எதிர்ப்பான் என்கிறது.
ஒரு குழந்தை சுதந்திரமாக டாக்டருக்கு படிக்க ஆசைப்படுகிறான். அதை அவன் தந்தை நிராகரித்து, தீவிரவாதி ஆக வேண்டும் என்கிறான். மூச்சு பிரச்சனை என்று வைத்துக்கொள்வோம். சரி அவர்களின் உடலை பாதுகாக்க சில ஆட்கள் வேண்டுமே? அதில் அவர்கள் மதத்தினர் இருந்தால் நல்லது தானே? கேள்விகள் கேட்கவில்லை படத்தில். மறைமுக குறியீடு தான். மேலும் அமெரிக்கர்கள் பெண்கள் குழந்தைகளை சுடமாட்டார்கள் என்று சொல்லுவது, மனித நேயம். இதில் வேறு வகை அமெரிக்க கிண்டல் குறியீடு தான் என்பவர்கள் கவனிக்க வேண்டும்.
சரி அவர்கள் எந்த தொழில் செய்து சம்பாரிக்கிறார்கள்? அதை சரியாக காட்டவில்லை. இல்லையென்றால் இதுவும் ஒரு மறைமுக குறியீடா? எண்ணெய் / கனிம வளம் இருக்கும் நாடுகள் சேர்ந்த ஆட்சியாளர்கள் / மக்கள் தான் அவர்களுக்கு கப்பம் கட்டுகிறார்கள் என்று வைத்துக்கொள்ள வேண்டுமா
ஆக, வழக்கமான வணிகசினிமா மரபுப்படி எடுக்கப்பட்ட வணிகசினிமாதான் விஸ்வரூபம். அதற்கு அரசியல் நோக்கங்களோ உள்திட்டங்களோ ஏதுமில்லை. கமலுக்கு வேறு வேலை இல்லையா? அவருக்கு 58 வயதாகிறது! அப்படி இருந்திருந்தால் இந்நேரம் ஒரு கட்சியில் இணைந்து பெரிய பதவிக்கு வந்திருப்பார்.
விஸ்வரூபம் ஒரு ‘ஹைடெக்’ இந்திய ஜேம்ஸ்பாண்ட் படம். அவ்வளவுதான். பார்க்கும்போது எதிரி நம்பகமாக இருக்கவேண்டும் என்பதற்கு மேல் அது உத்தேசிக்கவில்லை. இந்த படத்தை தமிழ்நாட்டின் கதை களத்தோடு ஒத்துப்போகாது.
ஆகவே அதற்கு எதிரான இப்போதைய எதிர்ப்பு என்பது மிக நியாயமற்றது என்றே தோன்றுகிறது. அதை முடிவு செய்ய வேண்டியது சென்சார் போர்டும், நாட்டின் ஆட்சியாளர்கள் தான்.
அது ஒரு கருத்துப்பிர்ச்சாரம் என்று கொண்டாலேகூட அக்கருத்தை சொல்லக்கூடாது என தெருவிலிறங்கி போராடுவதும் ‘சட்டம் ஒழுங்கு குலையும்’ என்று அரசையும் மக்களையும் மிரட்டுவதும் மிகத்தவறான முன்னுதாரணங்கள்.
இந்தப்போராட்டத்தின் விளைவுகள் என்ன? விஸ்வரூபம் போன்ற ஒரு படத்தை உண்மையில் தடைசெய்யமுடியுமா என்ன?
இப்போதே பல மொழிகளிலும், தமிழில் வேறு ஊர்களிலும், இணையத்தில் இல்லீகலாக டொரெண்டில் தினம் அதைப்பார்க்கிறார்கள்.
இன்று ஓடும்படம் என்பது மக்கள் அரங்குக்கு வந்து பார்க்கும்படம். ஓடாத படம் என்பது வீட்டில் பார்க்கும்படம். எல்லா படத்தையும் எல்லாரும் பார்க்கிறார்கள். சென்ற வருடத்தில் எத்தனை படங்கள் ஹிட் ஆகின? தியேட்டர் வந்து தானே வசூல் ஆனது? சென்னை தவிர வெளியூர்களில் அதிக பட்ச கட்டினம் 50 ரூபாய் மட்டுமே ஆனால் முதலாளிகள் மூன்று நான்கு மடங்கில் விற்று 50 ரூபாய் டிக்கட் மட்டுமே கையில் கொடுத்து லாபம் பார்கிறார்கள் என்கிறார்கள் சிலர் இணையத்தில். இதுவும் கடந்து போகும்.
விஸ்வரூபத்தை அப்படிப் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? சர்வதேச தீவிரவாதிகளாக சில குழுக்களையும் இந்தியாவில் குண்டுவைத்து நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த பாகிஸ்தானை சேர்ந்த சில குழுக்களையும் எதிரிகளாக காட்டும் ஒரு படத்தை ஏன் அந்த மதத்தவர் எதிர்க்கவேண்டும் என்றே நினைபபர்கள் இல்லையா?
இந்த அமைப்புகள் அந்த தீவிரவாத அமைப்புகளுடன் தங்களை அடையாளம் கண்டுகொள்கின்றனவா, அவர்களுக்காக பரிந்துபேசுகின்றனவா என்று எண்ணுவார்கள்? இருக்காது. நல்லவர்கள் என்றும் நல்லவர்களே
இன்று அந்த அமைப்புகள் சொல்வதைப்போல விஸ்வரூபம் அவர்களைப்பற்றி பிறர் தவறாக எண்ண வழிவகுக்கும் என்ற கோணத்தில் பார்த்தால் இந்த எதிர்ப்புப்போராட்டம் அதைவிட பலமடங்கு தீவிரமாக அதை நிகழ்த்திவிட்டது என்பதே உண்மை.
தமிழகத்தில் கோவை குண்டுவெடிப்புக் காலகட்டத்தில் உருவான வெறுப்பை ( எத்தனை சாவுகள் ) விட உக்கிரமான வெறுப்பை இப்போது காண்கிறேன்.
காரணம் தமிழ்மக்கள் பிற அனைத்தையும் விட சினிமாவைக் கூர்ந்து கவனிப்பவர்க்ள்.
தமிழக அரசையே அவர்கள் மிரட்டுகிறார்கள், நிர்வாகத்தை பிணைக்கைதியாக வைத்திருக்கிறார்கள் என்ற எண்ணமே பிற மக்களிடம் உள்ளது. இந்த அவநம்பிக்கையும் காழ்ப்பும் தமிழ்ச்சமூகத்திற்கு நல்லது அல்ல. ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட சமூகம் தான் அந்த கட்சியில் மேலோங்கி நிற்கிறது என்கிறார்கள் சில பத்திரிக்கைகள்.
இன்று அவர்கள் என்ன செய்யலாம்? படம் வெளியாவதை அனுமதிப்பதுதான் முறை. இந்தியாவின் சட்டமும் பொதுத்தணிக்கையும் அதை அனுமதிக்கிறது அதைத்தடுக்க அவர்களுக்கு உரிமை இல்லை. இத்தனை தூரம் பிரச்சினை முற்றிவிட்டதனால் பேச்சுவார்த்தை மூலம் அதற்குரிய சமரச முடிவை எட்டுவது நல்லது. அது தான் கமல் படம் போட்டு காட்டுகிறாரே? தேவையானவற்றை கட் பண்ணுங்கள்
அதன்பின்னரும் இந்தபப்டம் அவர்களைப்பற்றிய தவறான பிரச்சாரத்தை முன்வைக்கிறது என்று எண்ணினால் அதை அம்பலப்படுத்தி அதி தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபடலாம். அவர்கள் பற்றி இப்படம் உருவாக்கும் சித்திரம் எப்படி தங்களுக்கு உவப்பானதாக இல்லை என்பதை விளக்கலாம். அதுதான் ஜனநாயக முறை
அந்த சமூகம் என்றும் நம் சமூகத்தின் பொதுமனதுக்கு அன்னியமானது அல்ல. எல்லோரும் இந்நாட்டு மக்களே. எதோ ஒரு காரணத்தினால் மதம் மாறியுள்ளார்கள். அதற்கு தலை வணங்குவோம் நம்பிக்கை பற்றியது அல்ல இந்த படம்.
கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் இன்று தங்களை அன்னியப்படுத்திக்கொண்டாலும் இந்தியர் அப்படி கருதவில்லை என்பதே உண்மை. இல்லாவிட்டால் மூன்று பங்குகள் ஆகி இருக்குமா பாரத கண்டம்?
இங்கே ஆத்மார்த்தமான ஒரு அந்த மத நண்பர் இல்லாத இந்துக்கள் மிகமிக அபூர்வம். ஒவ்வொருவரும் அந்த நண்பரை அடிப்படையாகக் கொண்டே யோசிக்கிறார்கள்.
தீவிரவாதிகள் ஆப்கனில் குண்டுவைப்பதனாலோ அல்லது இங்கே வந்து குண்டு வைப்பதனாலோ நம்மருகே வாழும் அம்மதத்தினர் நம் எதிரிகளாக ஆவதில்லை. நாளை நம் பிள்ளைகளும் அவர்களின் பிள்ளைகளும் சேர்ந்துதான் இங்கே வாழவேண்டும். அது தான் காலத்தின் கட்டாயம். உலக நியதி.
இந்த உணர்வைக் குலைக்கும் அரசியலைப்பற்றிய கவனம் நமக்குத்தேவை. அது தீவிரவாதத்துடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் அடிபப்டைவாதக் குழுக்களின் அரசியல். அவர்களை அந்த சமூகத்தின் அடையாளமாக முன்வைக்கும் ஊடக அரசியல். உலக அளவில் இருந்து எடுத்து வைக்கப்படும் சான்றுகள் மேல் அடிப்படைவாதம் என்ற கொள்கை மூலம் உருவானது தான்.
இந்தவகையான போராட்டம் ஏதோ அவர்கள் தனியாக நடத்துவது மட்டுமே என்ற வகையினால பேச்சுகளும் காதில் விழுந்தன. இந்தியாவில் வாய்ப்பு கிடைத்தபோது மற்ற மதத்தினரும் சில மத அமைப்புகளும் அடிதடியில் இறங்கியிருக்கின்றன. சில மத அடையாள சின்னங்களை அழித்துள்ளனர். 1992 இல் நடந்த கொடுரம் எல்லோருக்கும் இன்றும் பதைபதைப்பு ஏற்படுத்துது!
தீபா மேத்தாவின் வாட்டர் படத்திற்கு எதிராக சில அமைப்புகள் நிகழ்த்திய வன்முறையையும் ( விதவை மறுமணத்தை ஆதரித்து எடுக்கப்பட்ட படம், அந்த பழைய நாட்களின் அதிக கோரங்களை எடுத்துக்காட்டிய படம் ) நாம் முன் நின்று பேசும் அதே மதத்தை சேர்ந்த ஒரு ஓவியருக்கும் எதிரான தாக்குதலையும் நாம் மறந்துவிடமுடியாது. அவர் வேறு நாட்டில் வாழ்ந்து தானே இறந்தார்? அதே மதத்தை சேர்ந்த ஒரு எழுத்தாளரையும் இன்னும் கொள்கிறேன் என்று ஒரு கூட்டம் துரத்துகிறது. சென்ற முறை ஜெய்பூரில் அவர் எழுதிய புதிய புத்தகம் படிக்கப்பட்ட போது நம் டிவி சேனல்கள் மக்கள் கருத்தை கொண்டு எதிர்த்தன அல்லவா அதேபோல மிகச்சில அமைப்புகள் சேர்ந்து டாவின்சி கோட் படத்தை நிறுத்தியதையும் நினைவுகூறலாம். எனேன்றால் அவர்களிடம் மிகுந்த பண பலம் உண்டு. மாற்று கருத்துக்கு இடம் இல்லை. அவர்கள் சொல்லும் விதத்திலேயே கருத்துக்களால் தினிக்கப்படுகிறோம். முக்காவாசிபேர் அவர்கள் மதசாயலில் நடத்தப்படும் பள்ளிகளிலேயே தான் பயில்கிறோம் இன்னமும்?
அன்று அந்த வன்முறைகளைக் கண்டித்த அதே உணர்வுடன்தான் இப்போதும் கருத்துரிமைக்கு எதிரான இன்றைய மிரட்டலையும் கண்டிக்கவேண்டியிருக்கிறது. அது தானே இது? இது தானே அது?
தடைகளை தாண்டி விஸ்வரூபம் தமிழ்நாட்டில் வெளிவரும் என்று நினைக்கிறேன். ( மேலும் ஒரு லேட்டஸ்ட் அப்டேட்: தமிழ்மொழி பேசும் பாண்டிச்சேரியில் தமிழில் வந்துவிட்டது. ) உலகம் எங்கும் சக்கைபோடுபோடுகிறது
சினிமாத்தொழில்நு
ஆம், அதுவும் தமிழின் வெற்றிகளில் ஒன்றுதான்.
ஒன்று கூடி வாழுவோம். நண்பர்களாக இருக்கோம். இனியும் இருப்போம் ஜெய் ஹிந்த்!
No comments:
Post a Comment