Thursday, May 21, 2009

படம் பார்த்து கவிதை சொல்லுங்க - 3

இங்கே இருக்குங்க என்னோட இன்னொரு கவிதை...

படம் பார்த்து கவிதை சொல்லுங்க - 3

காதல் சண்டே



உன்னிடம் சண்டைபோடும் நாளா சண்டே?
காதல் மொழி பேசும் நாளா சண்டே?

இன்டர்நெட், சாட் என்று கும்மி அடித்தோம்
ஹோட்டல், பப் என்று சுற்றினோம்

மல்டிப்ளெக்ஸ் அனைத்தும் பார்த்துவிட்டோம்
மால்கள் அனைத்தும் அளந்துவிட்டோம்

அடல்ட்ஸ் என்ன குழந்தை என மொழி பேசி
காதல நினைவுகள் பருகினோம்

வேலை காரணம் நாம் பிரிந்தாலும்
ஊர் மாறினாலும் மறக்கமாட்டேன் என்றாய்

இருந்தாலும் என்னை மறந்துவிட்டாயா தோழி
சண்டே எனக்கு பிறந்த நாள்!

சில கேள்விகள், சில பதில்கள்

என் கேள்விகளுக்கு சில பதில்கள் இங்கே.

"டோண்டு பதில்கள் - 21.05.2009"

Dondu Sir and புரட்சித் தமிழன் Thanks!

I also have a feeling that Vijayakanth will lean towards BJP in teh center, as lots of biz guys are supporting it, and money flow is very key in this world. If UPA+ combine can spend Rs 1000 crores in Tamilnadu + Pondi alone, imagine the money needed for India. (In effect, 2000 crores of black money would have come into Tamilnadu, and stimulated the economy!). Don't you think so?

Also //துணை-இணை-கூடுதல் கமிஷனர்கள், டி.எஸ்.பி, எஸ்.பி, கமிஷனர்// are at the same level and varies on the dept. they are associated with. That is what my dad told me. He retired as SP. Also handled the Traffic Police Training Centre as its "Commissioner" for sometime!

//ஜோதிடம் என்பது ஒரு அரிய கலை. சில தவறhவனர்களின் கைகளில் அது அகப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்போதைய நாடாளுமன்றம் ஒன்னரை ஆண்டுகளுக்குள் கவிழும் என்று தேர்தல் முடிவு வரும் போது சில ஜோதிடர்கள் கூறினார்கள். பார்க்கலாம்.//

Dear Sivakumar, A close friend who does KP System analysis, has predicted the Head of the govt would change within 18 months, but without election, in a Yahoo group.


*********************

உயிருடன் உள்ளார் பிரபாகரன்! - நக்கீரன் கட்டுரை!

(நன்றி - நக்கீரன்)

பேசும் கவிதைகள் - 2

பேசும் கவிதைகள் - 2

என்னோட கவிதை ஒன்னு வந்திருக்குங்கோ!

படிச்சு பாருங்கோ!

என்ஜாய் பண்ணுங்கோ!

***************

மோனிகா இளங்கோவனின் தொல்லை மீண்டும் ஆரம்பம்! சே ஆபிஸ் நேரத்தில் சேட் பண்ண முடியாதுன்னு சொன்னா தெரியாது?

Wednesday, May 20, 2009

விக்னேஷ்வரி - உங்களுக்கு பதில்

நன்றி விக்னேஷ்வரி !

இங்கே பாருங்க... கமன்ட் போட்டிருக்காங்க.

தேர்தல் திருவிழாவும், பெண் பார்க்கும் படலமும்

ஊரு கரெக்ட்! ரெசிப்பி கேட்டு எழுதறேன்.

இது தான் என் முதல் முறை பெண் என்று சென்று பார்ப்பது. அம்மாவின் ஆசை. அப்பா இப்போது இல்லை. எங்கள் ஜாதியில், இந்த சொந்தங்கள் கொடுமை அதிகம். அவர்கள் சொத்து, குளம், கோத்திரம் எல்லாம் விசாரித்து, அப்புறம் தலையில்கட்டுவார்கள். நிறைய செலவு... என்ஜாய் தான்.

அடுத்த முறை நான் பெண் பார்க்க போகும் பொது, சொல்லி அனுப்புகிறேன், நீங்கள் வாருங்கள்.

கலர் பற்றி எல்லாம் கவலை இல்லை. நான் முடிவே செய்துவிட்டதாக சுமி நினைக்கிறார். என்ன செய்வது? இரண்டு வருடங்களாக தேடி, முதல் முறை பார்த்து, ஒரு நண்பரிடம் பேசியது மாதிரி. சினிமா எல்லாம் ஏமாற்றுவித்தை.

இன்று ஒரு மெயில் வந்தது, என் மீது காதல் என்று! அட கடவுளே. பவுன், காரு என்றெல்லாம், கொடுத்ததும், காதல் வருமா?

இப்போ இந்த சனி ஞாயிறு பெங்களூர் வராங்க. ஹோசூர் ரோடில் இருக்கும் ஒரு வெஜிடேரியன் இன் தான் தங்குமிடம். ஸ்பா இருக்கலாம், நான்கு பெண்களோடு! நான் ஒரு லஞ்சுக்கு செல்கிறேன். சனி டின்னருக்கு வர சொன்னாங்க. பயங்க... வயசு பையன் வேறு! ஏடாகூடமா எதாவது ஆயிட்டால்...

மே பி ஞாயிறு. அவுங்க வெஜிடேரியன் தான். போச்சுடா. என்னோடு பேட்டிங் ( விக்னேஷ்வரி மாதிரி) தேடி தேடி... ஊர்வன நடப்பன என்று... ஒரு கட்டு கட்டுவேன்.

அப்புறம், ஒரு நல்ல பஞ்சாபி பெண் இருந்தா சொல்லுங்க!

**********

இந்த மோனிகா இருக்காளே, மூணு வார்த்தை பேசினால், நாலாவது வார்த்தை செக்ஸ் - அடல்ட் ஒன்லி பத்தி இருக்கும். பெங்களூர் அவ்வளவு மோசம்னு நினைக்கிறாங்க! ( அதுவும் ஒரு தடவை போன்லே முணங்கஆரம்பிச்சுட்டா)

என்ன செய்யறது, வாடி போடி லெவல் சேட் வேற.

Tuesday, May 19, 2009

சில பதிவுகள்

"இனப்படுகொலைக்கு அடுத்து குணப்படுகொலை!"

விடைகொடுத்தல்

வீரப்பனுக்கு ( சத்தி ராபின் ஹுட்) நடந்தது என்னவாம்?

மீசையை வெட்டினாலே?

வரிகள்

புன்சிரி தாணு கொஞ்சிக்கோ
முந்திரி முத்தம் சிந்திக்கோ
மஞ்சணி வர்ண சுந்தரி வாவே
தங்கினாக
தகதிமி ஆடும் தங்கநிலவே ஒயே
தங்க கொளுசலே
கூர்க்கும் குயிலாலே
ஆடன மயிலலே

ஹே,குருவநிகிளியே
குக்கு குறுகுறு கூகி குறுகி,குன்னிமரத்தில் உயல் அடி
கொடும் ஒரிகே கூட்டு விளிகுன்னே
மரண நின் கூகி குறுகி க்கொடு விளிகுன்னே
தங்க கொளுசலே
கூர்க்கும் குயிலாலே
ஆடன மயிலலே

இவர் எழுதியது அருமை. இங்கே படியுங்க.

அப்புறம் இது பற்றி என்ன நினைக்கிறீங்க.

ஆபிஸ் நேரத்தில் வேலை செய்துக்கொண்டே ப்ளாக் செய்வது கஷ்டமாக தான் இருக்குது. நான் தான் இப்போ ஷேர் ஹோல்டர் ஆயிற்றே. ம.போ. ;-)

Monday, May 18, 2009

தேர்தல் திருவிழாவும், பெண் பார்க்கும் படலமும்

தேர்தல் திருவிழாவும், பெண் பார்க்கும் படலமும் என போனது இந்த வாரம். மகிழ்ச்சி அய்யா? இல்லை. துன்புறுத்தல்.

இரண்டு படம் பார்த்தேன். பசங்க. மற்றும். ராஜாதிராஜா.

செம கலக்கல். மீண்டும் ஒரு முறை லாரன்ஸ் படம் பார்க்கணும்.

அது தான் ட்விட்டரில் விவரம் சொல்லிட்டேனே.

************

வியாழன் காலை தான் பெங்களூர் வந்தேன். இரண்டு நாட்கள் வேலை. மண்டை காய்ந்தது. பிறகு, ஒரு வாரம் முன்னதாகவே புக செய்யப்பட்ட ஏசி வண்டியில் ( ஆம்னி தாங்க ) ஊருக்கு சென்றேன்.

இரண்டு வேலைகள். தேர்தல் முடிவுகள் திருவிழாவும், பெண் பார்க்கும் படலமும் ....

சரி சனி காலையில் ஊரில் இறங்கியவுடன், ஒரு தூக்கம். அப்புறம் அம்மா கையால் பணியாரம், தேங்காய் பால்.

பதினோரு மணிக்கு குளித்துவிட்டு, மாமா வீட்டிற்க்கு சென்றேன். நல்ல சாப்பாடு. தேர்தலில் அவர் நின்றார். அப்புறம் தேர்தல் நிலவரம் ஒரு வழியா முடிந்தது.. லட்சம் வோட்டுக்கள். டெபாசிட் காலி. 16.7% வாங்கியிருக்கனுமாம்.

ஐந்து மணிக்கு (சாயந்திரம்) சென்னையில் இருந்து வந்திருந்த ஒரு பெண்ணை அவர்கள் வீட்டில் பார்க்க ஏற்பாடு. முப்பத்தி ஒரு வயதில் ஒரு தயக்கம். என்னை விட மூன்று வயது இளையவர். கடந்த ஐந்து வருடங்களாக வேலை செய்யும் அவர், ஐம்பது மாப்பிள்ளை இது வரை பார்த்துள்ளாராம்...நான் முதன் முறை. பெண் சுமார் தான் என்றாலும், ஐ.டி. வேலை செய்பவர் என்பதில் திறமை போல். நிறைய அவுட் ஆப போர்சன் க்வேச்டியன்ஸ். ப்ரேபேர் செய்யவில்லை. அம்மா பக்கத்தில் இருந்தார்கள், அதனால் நான் ஒன்றும் பெர்சனலாக கேட்கவில்லை.

முக்கியமாக கருதப்பட்ட பாரின், நிலையான வேலை மற்றும் சம்பளம்! ( தேவுடா ) விசாரிக்கப்பட்டது. நானும் ரிப்பீட்டு! ( இது தான் மதியமும் தம்பியிடம், எனக்கு வந்த மெயில் பற்றி அளவளாவினேன்... அதே கேள்விகள்.) கடைசியில் ஒரு கமன்ட் / கேள்வி. ட்ரிங்க்ஸ் யூஸ் பண்ணுவீங்களா? அட ராமா, தொப்பை பியரால் வந்தது இல்லை, சோம்பேறித்தனம் அல்லவா? அம்மா டு த ரெஸ்கியு... சின்ன வயசில் இருந்தே ராஜு அப்படி தான், கொஞ்சம் தாட்டிக உண்டானு.

பெங்களூர் வேலை மாறுவதில் சிரமம் இல்லை என்றார் பெண். பெரிய எம்.என்.சி.

சரி. சரி. ஊருக்கு போய் லெட்டர் ( மெயில்! ) என்று வந்துவிட்டேன். ;-)

வீடு திரும்பும் வரை, அம்மா அந்த பெண் நல்லவள், அருமை என்று ( என் நிறத்தில் பாதி ) பாடிக்கொண்டே இருந்தார்.

எட்டு மணிக்கு இரண்டு இட்லி சாப்பிட்டு நானும் தம்பியும், பசங்க பார்க்க கிளம்பினோம். வழியில், அப்படியே எங்க ஊர் ஸ்பெசல் பிர்யாணி கால் ப்ளேட் ரெண்டு உள்ளே போனது... அம்மாவுக்கு தெரிந்தால் ஜூட். பொலந்துருவாங்க. அதுவும் சனிக்கிழமை! அட ராமா! ஏழு கொண்டலவாடா!

*****************

ஞாயிறு விடிந்தது... நான் எழுந்தது எட்டு மணிக்கு. ஒன்பது மணிக்கு குட் மார்னிங் கால் ப்ரொம் பெண். பத்து மணி சினிமாவிற்கு செல்லும் அவசரம், அப்புறமா பேசறேன் என்று கிளம்பினேன். ஐயோ...

ஒரு மணிக்கு வந்து சாப்பாடுமுடித்துவிட்டு, கம்ப்யுட்டர் முன் அமைந்தால், ஒரு பெண்ணின் மெயில். சேம் க்வேச்டியன்ஸ். சரி சரி, ரிப்லைட். பெங்களூர் ஆபிஸ் நம்பரும் கொடுக்கப்பட்டது. இன்வெஸ்டிகேசன் ஏஜன்சி வருமா? ( முழுப்பெயர் சொல்லவில்லை வெப்பில்.. தப்பித்தேன்.) லிங்க்ட் இன் ப்ரோபையில் கொடுத்தேன். அவீங்க லிங்க் செய்வாங்களா? தெலிலெது.

****************

மதியம் நல்ல உறக்கம், அப்புறம்.. எட்டு மணிக்கு மட்டன் குழம்புடன் தோசை.

தம்பி ஊருக்கு டிராப் செய்தான். அம்மாவிர்ற்கு, எப்படா அடுத்த முறை வருவே என்ற ஏக்கம். அடுத்த மாதம் வரை, பத்து போன் கால், இல்லே இல்லே முப்பது வரும்.

"அண்ணே, பாத்து பெண்ணோடு பேசு. மாமா ஏற்பாடு பண்ணினது ... வாய் விட்டுறாதே" என்றான். ஹும்.

*************

நினைவோட்டங்கள்... சில கேள்விகள்...

பேர்? சுமனா... எங்க ஜாதிலே வித்தியாசமா ஒன்னு! அனுஷ்கா சாயல். (அருந்ததி படம் தெரியுமா? நாகர்ஜுனா மகனுக்கு யோகா மாஸ்டராம்... ப்ளோகில் பார்த்தேன்... யோகண்டா அவனுக்கு...) சுமி'னு கூப்பிடுங்க ப்ளீஸ். நல்ல வேலை வைஸ் பரவாயில்லை. கர்ண கொடுரமாக இல்லை. கொஞ்சம் ஜெயா மேடம் சாயல்.

இன்று காலையில் மொபயிலில் மிஸ்டு கால் மற்றும் ஒரு எஸ்.எம்.எஸ். ரீச்டு சென்னை. வில் கால். ப்லேனிங் பார் எ ட்ரிப் திஸ் வீகென்ட் வித் மை பிரெண்ட்ஸ் டு பெங்களூர் - சுமி.

இந்த வீகென்ட் நான் காலி! இன்னும் ரிப்ளை பண்ணலே.

****************

ஆமாம், நெட்டில் சேட்டில் பிடித்த ப்ரென்ட் மோனிகா பத்தி அடுத்த முறை ப்ளாகில் எழுதனும். ஐ.ஐ.டி மற்றும் யு.எஸ். ரிடர்ண்டு.அவா ஜாதியெல்லாம் பாத்து தான பேசறாங்? என் ரூமை பார்த்தால், கண்றாவி... யாரவது வந்து தொலைக்க போகிறாங்கோ.. தினம் ஒரு பீர் பாட்டில் அடிக்கும் சரவணன், என்ன செய்ய?