என் ப்ளாகை படித்த ஒரு கேனையன் - தெலுங்கு மொழி பேசும் ஆள் என்றால் கேவலம் என்று நினைக்கிறார் போல. ( போலி டோண்டு கோஷ்டியாக இருக்கும்னோ? ) தமிழ்நாட்டில் பிறந்தவன் தமிழன் இல்லையா? இந்தியாவில் பிறந்தவன் இந்தியன் என்கிற மாதிரி. அப்புறம் புதுச்சேரியில் பிறந்தவனை என்னவென்று சொல்லுவது?
இதற்கு தான் என் ப்ளாகின் தலைப்பில் "தமிழனாய் ஒரு பங்களிப்பு!"
அப்போ விஜயகாந்த், நெப்போலியன் , புதுச்சேரி வைத்தியலிங்கம் ( நாயக்கர் இன மக்கள் ) எல்லாம் என்ன தமிழர் கிடையாதா! அவர்களிடம் நேரில் சென்று சொல்லிப்பாருங்கள்... என்ன நடக்கும் தெரியும்!
இசை வேளாளர் கூட தெலுகு தாய்மொழி கொண்டவர்கள் என்று என் அம்மா சொல்லுறாங்க! யாரை குறிப்பிட்டு சொல்கிறேன் என்று தெரிந்திருக்கும்.
ரொம்ப பிரிவினைவாதம் ஜாஸ்தி பார்க்கிற ஊரு, இடம் தமிழ்நாடு தான்.
ஜாதி மதம் இனம் கூட்டம் நண்பர்கள் மொழி என்று பாகுபாடுஎவ்வளவு காலம் ஆனாலும் இந்திய முன்னேற வழி வகுக்காது! மைன்ட் இட்.
இலங்கை இனப்பிரச்னை ஒன்று தான் இப்போ ஒற்றுமையை வழி வகுக்கும் போல இருந்தது. இந்த ப்ளாக் உலகில்..... அதுவும் கெடுத்து விடுவார்கள்... குட்டின பொறப்பு அலாக!
உவ்வே...
இந்த பதிவை யாரும் படிக்கவில்லை போல?
ReplyDeleteமொழியால் பிரிக்காதீர்கள்
காலம் கலி காலம்!
தமிழச்சியாக இருக்க வெட்கப்படுகிறேன்!
நான் மராட்டி.. தமிழ் பெண்ணை கல்யாணம் செய்துள்ளேன். என்னை என்ன சொல்வார்கள்? தூ...
ReplyDeleteஇந்த மாதிரி உங்களை கேவலப்படுத்தி எழுதுபவர்களை கண்டால்.... வெட்கப்படுகிறேன்!
புதுவை குடிகாரர்கள் நிறைந்த ஊர். எல்லோரும் அங்கு அப்படியில்லை. ஆனால் .... சிலர் அப்படிதான் என்ன பேசுகிறோம், எழுதுகிறோம் என்று தெரியாமல் எதாவது சொல்வார்கள். கண்டுக்காதீங்க பிரதர். நான் சுத்த கொங்கு தமிழன். வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு பேச்சு தான்.
ReplyDeleteதமிழ்நாட்டுக்காரன் தான் தமிழன். வேறே எவனும் கிடையாது. மொழி மட்டும் வச்சு பிரிச்சு பார்கிறவங்கள், வேறே நாட்டு பாஸ்போர்ட்டை கிழிச்சு போட்டுட்டு, தமிழ்நாட்டில் வந்து செட்டில் ஆக வேண்டியது தானே? கூவத்தை க்ளீன் பண்ண சொல்லலாம். நல்ல சேவை.
ஸ்ரீலங்கா தமிழ் மக்களின் துயரை நினைத்து ஒவ்வொரு நாளும் வருந்துகிறேன்.
அந்த ஆள் ப்ளாகை போய் பாருங்கள், ஒரு சினிமா கிறுக்கன் பேட்டியை எல்லாம் போட்டு வைத்திருக்கிறான். நீங்கள் சொன்ன போலி டோண்டு கோஸ்டி உண்மையோ! நிறைய பேர் எழுதுறாங்க. உங்கப்பா ப்ரெண்ட்ஸ் இப்போ டி.எஸ்.பி லெவலில் இருக்கிறவங்களை கூப்பிட்டு, இந்த ஆளை ஒருவழி பண்ணிடுங்க.
very sad to see such lingua divison done. you have the right to call them "shitty a**holes!"
ReplyDeletelet that guy aplogise to you brother.
இசை வேளாளர் கூட தெலுகு தாய்மொழி கொண்டவர்கள் //
ReplyDeleteஇசை வேளாளர்களில் இருபிரிவினர் உண்டு. அவர்களில் ஒருபிரிவினர் கோவிலில் வாசிப்பதோடு, சவரத் தொழிலும் செய்வார்கள். அவர்களே தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். நீங்கள் குறிப்பிடுபவரின் பிரிவினர் வாத்தியமும்,நாட்டியமும் மட்டும் கொண்டவர்கள். நீங்கள் குறிப்பிடுபவரின் தாய்மொழி தமிழ் மட்டுமே. :)
அப்புறம் என்னைப் பொறுத்த அளவில் தமிழகத்தில் வசிக்கும் தெலுங்கு மக்கள் தமிழர்களே. இங்கே வசிக்கும் மற்ற மாநிலத்தவர் இன்றும் தங்கள் மாநிலத்தில் திருமண உறவு, சொத்துகள் போன்றவற்றை கொண்டுள்ளனர். ஆனால் தமிழகத்தில் வசிக்கும் தெலுங்கு மக்களின் திருமண உறவு தமிழகத்துக்குள்ளேயே இருக்கின்றது.வணிகம்,சொத்து தமிழகத்தில்தான் இருக்கின்றது.தங்கள் இல்ல விசேஷங்களுக்கு தமிழில்தான் பத்திரிக்கை அடிக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் போனதலைமுறைகூட தமிழும்,தெலுங்கும் கலந்து தழுங்கு பேசினார்கள் :)ஆனால் தமிழக தெலுங்கு மக்களின் இன்றைய தலைமுறை கிட்டத்தட்ட தெலுங்கை மறந்தே விட்டனர்.
தமிழகத்தில் வசிக்கும் தெலுங்குதாய்மொழி மக்கள் தமிழர்களே.
//ரொம்ப பிரிவினைவாதம் ஜாஸ்தி பார்க்கிற ஊரு, இடம் தமிழ்நாடு தான் //
ஏதோ ஒரு ஆத்திரத்தில் அப்படி எழுதிவிட்டீர்கள் என நினைக்கின்றேன். நிதானமாக அமர்ந்து யோசித்துப் பாருங்கள். வரும் அனைவரையும் வாரி அனைக்கும் பூமி தமிழ்நாடு.
தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட இராமச்சாமி ரெட்டியார், மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்ட தமிழ்நாட்டிலேயே பிறக்காத எம்.ஜி.ஆர் மற்றும் ஜானகி, கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட மைசூரில் பிறந்த ஜெயலலிதா என இங்கு முதல்வர்கள் ஆனதைப்போல வேறு மாநிலங்களில் வேறு யாராவது ஆக முடியுமா??? துவேஷம் இருந்து இருந்தால் தமிழர்கள் இவர்களை முதல்வர் ஆக்கி இருப்பார்களா??
உங்களை தமிழன் என்று நீங்கள் பெருமையோடு சொல்லிக்கொள்கின்றீர்கள்.அப்புறம் நீங்களே தமிழ்நாட்டை தூற்றலாமா?? (இதுமாதிரி வேலையும் தமிழன் மட்டுமே செய்வான்). அந்த ஒரு விஷயத்தில் உங்கள் மேல எனக்கு வருத்தும். இந்தியாவிலேயே துவேஷம் இல்லாத ஒரே மாநிலம் நான் அறிந்தவரை தமிழகம் மட்டுமே.