ஒரு வால் ஸ்ட்ரீட் கம்பெனி வேலை விசயமாக அடுத்த வாரம் நியூ யார்க் பயணம் செல்லுகிறேன். விசா, டிக்கட் ரெடி.
ஊரிலிருந்து அம்மா இன்றிரவு வருகிறார்கள். தம்பியும் சனிக்கிழமை காலை வருவான். என்னோடு முன் கம்பெனிகளில் வேலை செய்த நண்பர்களை அங்கிருக்கும் போது இரவு சந்திப்பேன்.
ஒரு வாரம் தான் அங்கிருப்பேன் என்றாலும், மூன்று அல்லது நான்கு நாட்களில் வேலை முடியலாம். இது முதல் கட்ட வேலை. எச்டிமேசன். அதன் பிறகு, மீண்டும் ஒரு ட்ரிப் எங்கள் கம்பெனி ஆட்கள் செல்லலாம். இதுவரை எங்கள் கம்பெனி அங்கு கிளை திறக்கவில்லை. இந்த முறை பாஸ் அவர் தம்பி கம்பெனி மூலம், முயற்சிக்கலாம். அவர் தனியாக ப்ரன்ட்லயின் என்று பாடி ஷாபிங் செய்து, பிற்பாடு விசா வாங்குவதில் ப்ளேக் லிஸ்ட் செய்யப்பட்டார் என தெரியுது. அதனால், ஒரு புதிய கிளை நிறுவனம் உருவாகலாம்.
பாஸும், நானும், வரும் சனி இரவு கிளம்புகிறோம். நியூ யார்க்கில் ஞாயிறு காலை பத்து மணியளவில் இறங்குவோம், ப்ரேன்க்பர்ட் வழியாக. லுப்தான்ஸாவில் டிக்கட் புக் செய்துள்ளார்கள். இருவருக்கும் ஒரே க்ளாஸ் தான்! ஹாம்ப்டன் இன்னில் ரூம் உண்டு. அந்த கம்பெனிக்கு நடை தூரம் தான். இந்த ஒன்பதரை மணி நேர ஜெட்லாக் என்பதை முதன்முறை அனுபவிக்கவேண்டும்.
இது வரை நான் சென்ற நாடுகளில் ஆஸ்த்ரேலியாவில் தான் ஜெட்லாக் தொந்தரவு இருந்தது. அதிகாலை சீக்கிரமாகும், தூக்கம் கண் கலங்கும், பிறகு மதியம் லேட்டாக தூக்கம் வரும். சிறிது காலம் அங்கு சென்றாலும், அதிகாலை ஏழு மணிக்கு வேலைக்கு சென்று, மதியம் நான்கு அல்லது ஐந்து மணியளவில் முதல் வாரம் வீடு திரும்பினேன்.... எவ்வளவு கஷ்டம் பாருங்கள்...
நியூ யார்க்கில் இருக்கும் எங்கள் கம்பெனி டைரக்டரும், அப்புறம் ஒரு ஏஜென்ட்டு உடன் வேலை சக்சஸாக முடிக்கக் வேண்டும்! ஒரு ட்ரேடிங் ப்ளேட்பாரம் ப்ராஜக்ட் இந்தியாவிற்கு அவுட்சோர்ஸ் செய்ய வேண்டும்! சிறியதாக இருந்தாலும், நல்லதாக இருக்க வேண்டும். ( மெயின்டெனன்ஸ் - இதுவும் ஒரு பெரிய நிறுவனம் செய்து முடித்து, ஒரு வருடத்தில் வேறு ஒருவருக்கு கொடுக்கப்படுகிறது - காசு உருஞ்சிகிறார்கள் போல! )
:-)
சரி சரி நியூ யார்க்கில் என்னவெல்லாம், சுற்றி பார்க்க வேண்டும் என்று நண்பர்கள் லிஸ்ட் கொடுத்துள்ளார்கள். குறைந்த காலம்... அடுத்த ஞாயிறு இரவு செப்டம்பர் இருபது ஒன்பது மணிக்கு இந்தியா திரும்பி வரும் ப்ளைட். அதனால் இரண்டு நாட்கள் ( சனி, ஞாயிறு ) கொஞ்சம் சுற்றி பார்க்க கிடக்கும். என் பாஸு அவர் தம்பி வீட்டில் ( நியூ ஜெர்சி ) தினமும் சென்று விடுவார். நானும் வெள்ளி, சனி இரவு நண்பர் வீட்டில் இருப்பேன். ஞாயிறு ஐந்து மணிக்கு ஜே.எப்.கே. ஏர்போர்ட்டில் இருப்பேன்.
செவ்வாய் அதிகாலை பெங்களூரு வந்தடைவோம்.
திரும்பி வரும் போது, ஒன்றும் கொண்டு வர இயலாது. எப்பவும் போல சாகலேட்ஸ் தான். லேப்டாப் ஒன்று வாங்கி வர / கொண்டு வர நண்பர் ஒருவர் சொன்னார், முடியாது. ஒன்று தான் அலவ்டு.
***
தம்பியின் பியான்செவை சந்திக்கும் சான்ஸ் கிடைக்கலாம்! ஏற்கனவே எழுதியுள்ளேன்.
***
யாரோ ஒரு புண்ணியவான் எனக்கு ஒரு லிங்க் கொடுத்தார். அதில் சில தமிழ் டாகுமன்ட்ஸ் ( கதைகள், கட்டுரைகள்) உள்ளன.
Congrats on your trip! Enjoy!
ReplyDelete